என் கலைப்பயணம் - சில குறிப்புகள்
மிகச் சிறுவனாக பள்ளியில் படித்தபோதே, எங்கள் பகுதி நூலகத்தில் திருக்குறள் மனனப் போட்டி நடத்தப்பட்டது. அதில் அறுநூற்று முப்பது குறள்களை எழுதி இரண்டாவது பரிசை வென்றேன். அடுத்த ஆண்டு அரசடி வைரவர் கோவில் வீதியில் எங்கள் பகுதிக்கான நல்ர்ழ்ற்ள் ஙங்ங்ற்ஐ போலீஸ் I.G. திரு. Van Twest தலைமையில் நடத்தினேன். அதே வருடம் புலித்தேவன் நாட கத்தை எழுதி நடித்து சண்டிலிப்பாய் பள்ளிக்கூட ஹாலில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அரங்கேற்றம் பண்ணினேன். அதே ஆண்டு முடிவில் யாழ்ப்பாணம் டவுன்ஹாலில் இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி பொறுப்பாளர் சண்முக நாதன் தலைமையில் "ரத்தக்கறை' என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்தேன். அப்போதிருந்தே இலங்கை வானொலி நாடகங்களில் நடித்து வந்தேன்.
நாலாம் வகுப்பு வரை சிவப்பிரகாச வித்தியாசாலையில் படித்த என்னை ஐந்தாம் வகுப்பில் ஜப்னா காலேஜ் ஜுனியர் ஸ்கூலில் சேர்த்து விட்டனர். அங்கு தொடர்ந்து இரண்டு வருடங்கள் 100 Yardsஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றேன். ஐந்தாம் வகுப்பிலிருந்து G.C.E. (ordinary level)பாஸாகும் வரை யாழ்ப்பாணக் கல்லூரியில் தான் படித்தேன். கல்லூரி Juniors Teamல் கால்பந்து விளையாடி நல்ல பெயர் வாங்கியுள்ளேன். அந்த சமயத்தில் சில காலம் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் படங்கள் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. என் பாதையும் மாறியது.
அடுத்து கொழும்புவாசம். தஞ்சாவூரைச் சேர்ந்தவர்களின் சலூன் கடையில் ஏற்பட்ட நட்பு. தமிழக சினிமா உலகைப் பற்றி தெரிந்து கொண் டது... நாடக நடிகராக கொழும்பிலிருந்த எஸ்.எஸ். சந்திரன்... திரைநீதி செல் வம் ஆகியோரின் பழக்கம். விமான நிலையத்தில் நடிகை பத்மினியுடன் கைகுலுக்கியது. அங்கு வரும் நாடக மன்றங்கள், நாதஸ்வர தவில் வித்வான்கள் நாட்டியக் குழுக்கள், இசைக்கலைஞர
என் கலைப்பயணம் - சில குறிப்புகள்
மிகச் சிறுவனாக பள்ளியில் படித்தபோதே, எங்கள் பகுதி நூலகத்தில் திருக்குறள் மனனப் போட்டி நடத்தப்பட்டது. அதில் அறுநூற்று முப்பது குறள்களை எழுதி இரண்டாவது பரிசை வென்றேன். அடுத்த ஆண்டு அரசடி வைரவர் கோவில் வீதியில் எங்கள் பகுதிக்கான நல்ர்ழ்ற்ள் ஙங்ங்ற்ஐ போலீஸ் I.G. திரு. Van Twest தலைமையில் நடத்தினேன். அதே வருடம் புலித்தேவன் நாட கத்தை எழுதி நடித்து சண்டிலிப்பாய் பள்ளிக்கூட ஹாலில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அரங்கேற்றம் பண்ணினேன். அதே ஆண்டு முடிவில் யாழ்ப்பாணம் டவுன்ஹாலில் இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி பொறுப்பாளர் சண்முக நாதன் தலைமையில் "ரத்தக்கறை' என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்தேன். அப்போதிருந்தே இலங்கை வானொலி நாடகங்களில் நடித்து வந்தேன்.
நாலாம் வகுப்பு வரை சிவப்பிரகாச வித்தியாசாலையில் படித்த என்னை ஐந்தாம் வகுப்பில் ஜப்னா காலேஜ் ஜுனியர் ஸ்கூலில் சேர்த்து விட்டனர். அங்கு தொடர்ந்து இரண்டு வருடங்கள் 100 Yardsஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்றேன். ஐந்தாம் வகுப்பிலிருந்து G.C.E. (ordinary level)பாஸாகும் வரை யாழ்ப்பாணக் கல்லூரியில் தான் படித்தேன். கல்லூரி Juniors Teamல் கால்பந்து விளையாடி நல்ல பெயர் வாங்கியுள்ளேன். அந்த சமயத்தில் சில காலம் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அந்தக் காலகட்டத்தில்தான் படங்கள் பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. என் பாதையும் மாறியது.
அடுத்து கொழும்புவாசம். தஞ்சாவூரைச் சேர்ந்தவர்களின் சலூன் கடையில் ஏற்பட்ட நட்பு. தமிழக சினிமா உலகைப் பற்றி தெரிந்து கொண் டது... நாடக நடிகராக கொழும்பிலிருந்த எஸ்.எஸ். சந்திரன்... திரைநீதி செல் வம் ஆகியோரின் பழக்கம். விமான நிலையத்தில் நடிகை பத்மினியுடன் கைகுலுக்கியது. அங்கு வரும் நாடக மன்றங்கள், நாதஸ்வர தவில் வித்வான்கள் நாட்டியக் குழுக்கள், இசைக்கலைஞர்கள், தியேட்டர்களுக்கு தங்கள் படங்கள் ஓடும் போது வரும் நடிகையர், நடிகர்கள் அத்தனைபேரையும் தவறாமல் போய்ப் பார்ப்பேன். அத்தோடு என் மனதில் குடியேறிவிட்ட எம்.ஜி.ஆருக்கு அடிக்கடி லெட்டர் எழுதுவேன். அவர் சார்பில் குமாரசாமி என்பவர் பதில் எழுதுவார். சில கடிதங்களில் எம்.ஜி.ஆரே கையெழுத்திட்டிருப்பார். இறுதியில் சினிமாதான் என் எதிர்காலம் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். ஆனால் எங்கே போவது... எப்படி ஆரம்பிப்பது என்பது புரியாமல் தவித்தேன். ஊருக்கு போன சமயங்களில்... தனியாக உட்கார்ந்து அழுவேன். அதை என் பாட்டி பல தடவைகள் பார்த்திருக் கிறார். இனி எல்லாம் கொஞ்சம் விபரமா புரியணும்னா பாட்டியிலிருந்து ஆரம்பிக்கணும்.
என் பாட்டியோட பேர் தங்கம்மா. அவங்களுக்கு மூணு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். ஒரு இளைய சகோதரர் சிறு வயதிலேயே இறந்திட்டார். இன்னொரு சகோதரர் செல்லையா... இவர் மலேசியாவில் ஸ்டேஷன் மாஸ்டராக வேலை செய்தார். இவரது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரும் சிங்கப்பூர் குடிமக்களாகி, அங்கேயே செட்டில் ஆயிட்டாங்க. இன்னொரு சகோதரர் வஜ்ரவேலு... சென்னை பிரசிடெண்ட் கல்லூரியில் போஸ்ட் கிராஜுவேசன் முடித்த பின்னால் காவல்துறை அதிகாரியாக ராமநாதபுரம், சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் பணியாற்றினார். இவருக்கு நாலு பெண்கள், ஒரு மகன். ராஜராஜேஸ்வரி, கோமு, மீனா, லீலா... இந்தப் பெண்களில் மீனா இலங்கையிலிருந்த அத்தை மகன் துரை சுந்தரத்தை திருமணம் செய்திருந்தார். கோமு பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்த சின்னத்தம்பி (இவர் என் தாயாருக்கு மாமா ஆவார்) அவர்களின் மகன் கல்யாண சுந்தரத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் குடும்பத்தில் மூன்று பெண்கள். மூவரும் மருத்துவர்கள். இரு மகன்கள். இருவருமே என்ஜினியர்கள். லீலா ஆன்டியின் மகன் மஸ்கட்டிலும், அமெரிக்காவிலும் பெரிய, பல கிளைகளுள்ள கம்பெனி நடத்துகிறார். பச்சையப்பன் பிரின்சிபல் சின்னத்தம்பி, பேரறிஞர் அண்ணாவின் ஆசிரியர்... இ.ஆ. (ஐர்ய்ள்) படிக்கும்போது இன் னொரு தாத்தா ராவ்பகதூர் மாசிலா மணி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர். இவர் பல தர்ம காரியங்கள் செய்தவர். மிகப்பிரபலமாக இருந்தவர். என் பாட்டி இதையெல்லாம் சொல்லி... என்னை தாயகம் அனுப்பி வைத்தார். என் பாட்டி பெயரளவில் தங்கம்மா அல்ல. அவர் செயல்கள், சிந்தனைகள் அனைத்தும் தங்கம்தான். இங்கு வந்தபின்தான் தெரிந்து கொண்டேன். என் பாட்டியின் உறவினர்கள் அத்தனை பேருமே மெத்தப் படித்தவர்கள். மிகவும் நல்லவர்கள்.
என் பெரியம்மாவின் மகன் ராஜசிங்கம் அண்ணாதான் என் பொறுப்பை ஏற்றுக்கொண்டு என்னை நல்வழி நடத்தி... படிப்பையும் முடிக்க வைத்து, நாடகங்களில் நடிக்க வைத்து, சிரமங்களை நான் அனுபவிக்காமல் திரையுலகில் நுழையும் வரை பத்திரமாக பாசத்துடன் பார்த்துக் கொண்டார். என் நாடகங்கள், என் படங்கள் அனைத்தையும் உறவினர்கள் அனைவரையும் பார்க்க வைப்பார். இங்கிருக்கும் என் உறவினர்கள் அத்தனை பேரும் என் மீது மிகுந்த பாசம் காட்டினார்கள். இலங்கை கலவரத்தின் ஆரம்ப காலத்திலேயே, என் தாயார், தங்கை, தம்பி இங்கே வந்துவிட்டனர். அவர்கள் வந்த பின்னால் குடும்பங்கள் இணைந்தன. வெளிநாடுகளில் வாழும் என் தம்பிகளும் உறவுகளும் இங்கு வந்து போக ஆரம்பித்தனர். எல்லாமே எனக்கு ஒரு வரம் போல் அமைந்தன. திரை உலகில் என் வளர்ச்சி... அனைவராலும் பாராட்டப்பட்டது.
படிக்கும் போதே காஞ்சியில் பேரறிஞர் அண்ணாவின் தொடர்பு... அவர் தலைமையில் நாடகம் நடிக்கும் வாய்ப்பு. காஞ்சி பச்சையப்பன் கிரிக்கெட் அணியின் கேப்டன், கால்பந்தாட்ட அணியின் துணை கேப்டன். நல்ர்ழ்ற்ள் ஐந்து விதமான பந்தயங்களில் முதல் பரிசு பெற்று கல்லூரியின் ஹற்ட்ங்ப்ங்ற்ண்ஸ்ரீ சாம்பியன். சென்னை பச்சையப்பன் கல்லூரி வந்ததும் மாணவர் தலைவன். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் அய்யாவை அழைத்து வந்து கூட்டம் நடத்தியது. கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் முன்னிலையில் "வள்ளல் பச்சையப்பன்' நாடகத்தில் நடித்தது. இந்திப் போராட்டத்தில் தொடர்ந்து கலந்துகொண்டு ஜெயிலுக்குப் போனது. படிக்கும் காலத்திலேயே புரசை கிட்டப்பா கலையரங்க நாடகங்களில் நாயகனாக நடித்தது. போட்டி நாடகங்களில் பெரியார் திடலில் சிறந்த நடிகருக்கான பரிசை அய்யா சி.பா.ஆதித்தனார் கரங்களில் பெற்றது. கலாக்ஷேத்திராவில் ஹாலிவுட் நடிகர் பால் ஸ்டார்ம் என்பவரிடம் ஒரு வருட காலம் நடிப்புப் பயிற்சி பெற்றது. பின்னர் அவ்வை அய்யா டி.கே.சண்முகம் அவர்களின் சிபாரிசினால் சென்னை நாட்டிய சங்கம் மசஊநஈஞ ஆதரவுடன் நடத்திய நாடக பயிற்சி பள்ளியில் ஒரு வருடம் பயின்று, நாடகங்களில் நடித்து பரிசுகள் பெற்றது.
எம்.ஜி.ஆர். மூலம் முதல் படம் எழுதும் வாய்ப்புப் பெற்றது. ஏ.வி.எம்.மில் கதாசிரியரானது. என்.டி.ராமாராவுக்கு கதை எழுதி... அது வெள்ளி விழா கண்டதனால் தெலுங்கு கதைகள் பல எழுதும் வாய்ப்பு பெற்றது. எம்.ஜி.ஆர். சிபாரிசினால் திலீப் குமாரோடு இந்திப் படத்தில் வேலை செய்யும் வாய்ப்பு இயக்குநர் தாபி.சாணக்கியாவால் கிடைத் தது. தொடர்ந்து பல மொழிகளில் கதை எழுதும் வாய்ப்பு. ஏ.வி.எம். ஆசியினால் தயாரிப்பாளர் ஆக்கப்பட்டது. ஐந்து அரசு விருதுகள் கிடைத்தது. சிவாஜி ஸார் அழைத்து, எனக்கு கால்ஷீட் தந்து என்னை "ராஜபார்ட் ரங்கதுரை' என்ற காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை எடுக்க வைத்தது.
அந்தப் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டிய கர்மவீரர் காமராசர், அதன்பின் அடிக்கடி அவரை சந்தித்துப் பேசத் தொடங்கியது. அவர் பிறந்தநாள் விழாக்களில் பேசும் பாக்கியம் கிடைத்தது. ஈழப் பிரச்சினைக்கு ஆதரவு தெரிவிக்க ஒரு அமைப்பை என் செயலில் ஆரம்பித்து, கவிஞர் மு.மேத்தா தலைவராகவும், சுப.வீரபாண்டியன் அமைப்பாளராகவும், நான் செயலாளராகவும் பல ஆதரவு நிகழ்ச்சிகளை நடத்தினோம். வீரவணக்க ஊர்வலம், தமிழ் நாட்டில் முதல் மனிதச்சங்கிலி போராட்டம், கன்னியாகுமரிவரை எழுச்சிப் பயணம், எத்தனையோ உண்ணாவிரதப் போராட்டங்கள், இப்படி தொடர்ந்த காலத்தில் எங்களோடு கைகோர்த்து நின்ற பல இளைஞர்கள் இன்று ஆளுக்கொரு கட்சியை ஆரம்பித்து வெற்றிகரமாக அரசியல் செய்துவருவது பாராட்டுக்குரியது. எமது இயக்கத்தை தொடர்ந்து நடத்தி அரசியலில் ஈடுபடலாம் எனப் பலர் அறிவுரை வழங்கினர். எனக்கு அதில் விருப்பமில்லை. நான் சினிமாவில் தொடர்ந்தேன். தயாரிப்பாளர் சங்கம், சேம்பர், கில்டு எல்லா அமைப்புகளிலும் பதவிகள் வகித்தேன். தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் துணைப் பொருளாளராக பொறுப்பில் இருந்தேன். திரைப்பட மற்றும் ப.ய. இயக்குநர்கள் சங்க தலைவர் ஆனேன். எழுத்தாளர் சங்க செயலாளர் ஆனேன். "பெப்சி' தலைவரானேன். அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன செயலாளர் ஆனேன். நல வாரியம், கூட்டுறவு சங்கம், "பெப்சி' அறக்கட்டளை, அமைப்பாளராக, தலைவராக பணியாற்றினேன். "பெப்சி' தொழிலாளர்களே நடத்தும் ஸ்டூடியோவுக்கு நிலம் பெற்று, அதில் சகல சட்டவிதிகளையும் பெற்று ஒரு பெரிய படப்பிடிப்புத் தளத்தைக் கட்டினேன். கலைஞர் வழிகாட்டுதலின் பேரில் அதையெல்லாம் செய்தேன். அவர் பதவிக்கு வராதபோது நான் என் பதவிகளை எல்லாம் ராஜினாமா செய்தேன். ஆனால் படங்கள் எழுதுவதையோ, தயாரிப் பதையோ நிறுத்தவில்லை. எனக்கு கிடைத்த பரிசுகள், பாராட்டுகள், பட்டங்கள் எண்ணற்றவை.
என் முதல் சினிமா கதை மக்கள் திலகத்திற் காக புதிய பூமி படமாக ஆனது. மக்கள் திலகம் கையாலேயே 1977-ல் என் கலைப்பயணத்திற்கான முதல் அரசு விருதான கலைமாமணி விருதைப் பெற்றேன். என் ஒவ்வொரு பெருமைக்கும் காரணகர்த்தா... எம்.ஜி.ஆர்.
(திரை வளரும்)