கே.பாக்யராஜின் வாரிசு சாந்தனுவுக்கு ஜோடியாக ‘சித்து+2’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி யானவர் சாந்தினி தமிழரசன். சென்னை பெண்ணான இவர், அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் டூயட் பாட சான்ஸ் வரும் என எதிர்பார்த்திருந்தார். தமிழ் பேசத் தெரிந்த நடிகை, தமிழ் சினிமாவில் எதிர்பார்த்தது நடக்குமா என்ன?

"மன்னர் வகையறா' படம்தான் இவர் நடித்ததிலேயே கொஞ்சம் பெரிய படம். ஆந்திர தேசத்துப் பக்கமும் போய் பார்த்தும் பெரிதாக பலன் இல்லை. காஸ்ட்யூம் கம்மியாக ஃபோட்டோ ஷூட் நடத்தி, அதை சில டைரக்டர்களுக்கு அனுப்பியும் பிரயோஜனமில்லை.

பார்த்தார் சாந்தினி, இனிமே சினிமா செட்டாகுமோ, ஆகாதோ என்ற சோக ஃபீலிங்குடன் "ஜீ' தமிழ் டி.வி.’யில் ஒளிபரப்பாகும் "இரட்டை ரோஜா' சீரியலில் நாயகி, வில்லி என டபுள் ரோலில் நடிக்க கமிட்டாகிவிட்டார். சீரியல் ஏரியாவில் சீரியஸாக சான்ஸ் பிடிக்கும் சாந்தினி தமிழரசனுக்கு கமலின் "பிக்பாஸ்-4' சான்ஸ் கிடைத்தாலும் கிடைக்கும் போல.

vv

Advertisment

சினிமாதான் செட்டாகும்!

சாந்தினிக்கு "இரட்டை ரோஜா' சீரியல் சான்ஸ் கிடைப்பதற்குக் காரணமே ஷிவானி நாராயணன்தான். அந்த ஹிஸ்டரியைத் தெரிந்துகொள்வதற்கு முன் ஷிவானி ஹிஸ்டரியையும் அவரின் சூப்பர் க்ளாமர் ஹிஸ்டரியையும் தெரிந்துகொண்டால், தமிழர்களுக்கு ஊரடங்கிலிருந்து தளர்வுகள் கிடைத்த உற்சாகத்தைவிட அதிகம் உற்சாகத்தைத் தரும். இப்போது 19 வயதுதான் ஆகும் ஷிவானிக்கு சொந்த ஊர் சாத்தூரில் தொடங்கி, காரைக்குடி, சென்னை, பஞ்சாப் வரை பல ஊர்களை சொல்றாக.

ஷிவானியின் அப்பா பெயர் நாராயணன், அம்மா பெயர் அகிலா. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஒரே பொண்ணு என்பதால் ஷிவானியை பாப்பா, செல்லம், குட்டி என்றுதான் அப்பாவும் அம்மாவும் கூப்டுவாகளாம்.

தனது 16 வயதினிலேயே, ‘விஜய் டி.வி.’யில் ஒளிபரப்பான "பகல் நிலவு' சீரியல் மூலம் கேமரா கண்களுக்குள் விழுந்தார். அதன்பின் சன் டி.வி.’யில் டான்ஸ் புரோக்ராம் ஒன்றில் செம கலக்கு கலக்கினார். மீண்டும் ‘விஜய் டி.வி.’யின் ‘சரவணன்-மீனாட்சி’, ‘காதல் சடுகுடு’ சீரியல்கள் ஷிவானியை டாப் லெவலுக்கு கொண்டுபோனது.

சீரியல்களில் மட்டுமல்ல ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்களிலும் பார்ப்பவர் மனசு பஞ்சராகும் அளவுக்கு கிளாமர் தூக்கலான ஆக்டிவ்வில் இருப்பவர்.

அவரது வீட்டில் பாப்பா என கூப்பிடுவதாலோ என்னவோ, குட்டியூண்டு பாப்பா போடும் காஸ்ட்யூம்களையெல்லாம் குதூகலமாய் போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராமையே தெறிக்க விட்டு லட்சக்கணக் கான லைக்குகளை அள்ளிக்கொண்டிருக்கிறார். அவருக்கு க்ளாமர் செம ஃபிட்டாகிறது. ஆபாசமாகத் தெரிவதில்லை என்கிறார்கள் பார்வையாளர்கள். இப்ப வயசு 19 ஆகுது. சினிமா வுக்குள்ள என்ட்ரியாவதற்கு இதுதான் நல்ல பருவம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டதால் சீரியல்களுக்கு "நோ' சொல்லிவிட்டார் ஷிவானி. அதனால் தான் இப்போது நாயகியாகவும் வில்லியாகவும் ‘ஜி-5 டி.வி.’யில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா சீரியலிலிருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். அதேபோல் ‘விஜய் டி.வி.’யின் "தாழம்பூ' சீரியலையும் ஆரம்பத்திலேயே மறுத்துவிட்டார்.

‘பணம் முக்கியமில்ல. பெரிய பேனர், பெரிய ஹீரோதான் முக்கியம்’ என்ற முடிவுடன் பெரிய டைரக்டர்களுக்கு, பெரிய பி.ஆர்.ஓ.க்கள் மூலம் தூது விட்டுக்கொண்டிருக்கிறார். "சினிமா எனக்கு செட்டாகும், சினிமாவுக்கு நான் செட்டாவேன்' என்பது ஷிவானியின் ஸ்டெடி & கூல் பாலிஸி. ஷிவானியை நோக்கி ‘பிக்பாஸ்-4’ சான்ஸும் வந்துக்கிட்டிருக்காம்.

செட் ஆனா ஓ.கே.தான்

2017-ல் ‘மக்கள் தொலைக்காட்சி’ மூலம் டி.வி. ஏரியாவில் என்ட்ரியானவர் சித்ரா. அதன்பின் ‘விஜய், ஜெயா, வேந்தர், ‘கலர்ஸ் தமிழ்’, ‘ஜி.தமிழ்’ சேனல்களில் வீடியோ ஜாக்கியாக ஒரு ரவுண்ட் வந்தார். கோலிவுட் ஏரியாவுக்குள் என்ட்ரி யாகும் ஆசை சித்ரா வுக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனா ‘28 வயசுல, அதிலும் கல்யாணம் கன்ஃபார்ம் ஆகிருச்சுன்னு தெரிஞ்சா அக்கா, அண்ணி கேரக்டர் கொடுத்து 30 வயதில் அம்மாவாக்கிவிடுவார்களோ’(அட... கேரக்டர்தாங்க) என ஃபீல்பண்ணும் சித்ரா, அதையும் மீறி சினிமா செட்டானால் ஓ.கே.தான்’ என்கிறார்.

இன்ஸ்ட்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சித்ராவும் அடிக்கடி குளுகுளு ஸ்டில்களில் தரிசனம் தருவார். சமீபத்தில் குசும்புக்கார ரசிகசிகாமணி ஒருவர், ‘இன்னும் கொஞ்சம்…’ என ரிக்வெக்ஸ்ட் கொடுக்க, “அத 19 வயசுக்காரிகிட்டதான் எதிர்பார்க்கணும் என ஷிவானியை சீண்டியிருக்கார்.

-ஈ.பா. பரமேஷ்வரன்