சினிமா கொட்டகை டைரக்டர் -ரைட்டர் வி.சி.குகநாதன் (14)

aa

cc

காஞ்சிபுரத்தில் பி.யூ.சி. படித்தபோது, சின்னக் காஞ்சியில் அண்ணாவின் வீட்டருகே தங்கி, அவரின் பேச்சைக் கேட்டேன்; அவரின் அபிமானத்திற்குரியவனு மானேன். காஞ்சியில் போட் டியிட்ட அண்ணாவுக்காக, கலைஞருடன் தேர்தல் பிரச்சாரம் செய்தேன்; கலைஞரின் பேச்சைக் கேட்டு மலைத்துப் போனேன்.

அண்ணாவுக்காக எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்ய வந்தபோது.... அவரை நேரில் பார்த்த பரவசத்தைச் சொல்கிறேன்.

"தேர்தல் பிரச்சாரத்திற்காக எம்.ஜி.ஆர். இன்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்' என தகவல் வந்ததும், ஒட்டுமொத்த காஞ்சியுமே எம்.ஜி.ஆரை காணும் ஆர்வத்தில் இருப்பதைப்போல; எதிர்ப்பட்ட முகங்களிலெல்லாம் சந்தோஷம்.

ஒரு பெரிய மைதானத்தில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கு எம்.ஜி.ஆர் வரவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரை அருகே நின்று பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக... மூன்று மணிக்கு மேலிருந்தே மைதானத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது.

நான் கல்லுரி முடிந்து, நேரே மைதானத்திற்குத்தான் போனேன். அப்போதே... மேடையின் அருகிலிருந்து கிட்டத்தட்ட முக்கால்வாசி மைதானம் நிரம்பியிருந்தது. நான் கூட்டத்துக்குள் புகுந்து, மெல்ல மெல்ல முன்னேறி.... நசுங்கி, பிதுங்கி, கிட்டத்தட்ட மேடையின் அருகே ஒரு சிறிய மேடுபோல் இருந்த இடத்தில் ஏறி நின்றுகொண்டேன். இத்தனைக்கும் காரணம்.... என் மனம் கவர்ந்த மலைக்கள்ளனை, தேவதூதனை பார்க்க வேண்டும் என்கிற பேரார்வம்தான்.

cc

"அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவார்னு சொன்னாங்க, மணி ஆறாகப் போகுதே... இன்னும் காணோமே' என நினைத்தாலும், அந்த காத்திருப்பு எனக்கு சுகமாகவே

cc

காஞ்சிபுரத்தில் பி.யூ.சி. படித்தபோது, சின்னக் காஞ்சியில் அண்ணாவின் வீட்டருகே தங்கி, அவரின் பேச்சைக் கேட்டேன்; அவரின் அபிமானத்திற்குரியவனு மானேன். காஞ்சியில் போட் டியிட்ட அண்ணாவுக்காக, கலைஞருடன் தேர்தல் பிரச்சாரம் செய்தேன்; கலைஞரின் பேச்சைக் கேட்டு மலைத்துப் போனேன்.

அண்ணாவுக்காக எம்.ஜி.ஆர் பிரச்சாரம் செய்ய வந்தபோது.... அவரை நேரில் பார்த்த பரவசத்தைச் சொல்கிறேன்.

"தேர்தல் பிரச்சாரத்திற்காக எம்.ஜி.ஆர். இன்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்' என தகவல் வந்ததும், ஒட்டுமொத்த காஞ்சியுமே எம்.ஜி.ஆரை காணும் ஆர்வத்தில் இருப்பதைப்போல; எதிர்ப்பட்ட முகங்களிலெல்லாம் சந்தோஷம்.

ஒரு பெரிய மைதானத்தில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை ஐந்து மணிக்கு எம்.ஜி.ஆர் வரவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரை அருகே நின்று பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் காரணமாக... மூன்று மணிக்கு மேலிருந்தே மைதானத்தில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது.

நான் கல்லுரி முடிந்து, நேரே மைதானத்திற்குத்தான் போனேன். அப்போதே... மேடையின் அருகிலிருந்து கிட்டத்தட்ட முக்கால்வாசி மைதானம் நிரம்பியிருந்தது. நான் கூட்டத்துக்குள் புகுந்து, மெல்ல மெல்ல முன்னேறி.... நசுங்கி, பிதுங்கி, கிட்டத்தட்ட மேடையின் அருகே ஒரு சிறிய மேடுபோல் இருந்த இடத்தில் ஏறி நின்றுகொண்டேன். இத்தனைக்கும் காரணம்.... என் மனம் கவர்ந்த மலைக்கள்ளனை, தேவதூதனை பார்க்க வேண்டும் என்கிற பேரார்வம்தான்.

cc

"அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவார்னு சொன்னாங்க, மணி ஆறாகப் போகுதே... இன்னும் காணோமே' என நினைத்தாலும், அந்த காத்திருப்பு எனக்கு சுகமாகவே இருந்தது. எனக்கு மட்டுமல்ல... அக்கிருந்த மக்களுக்கும்தான்.

மணி... ஏழு!

மணி... எட்டு!

"இனிமே எங்க எம்.ஜி.ஆர்., வரப்போறாரு? இந்நேரம் கூட்டம் கலைஞ்சு போய்க்கிட்டிருக்கும்....' எனத் திரும்பிப் பார்த்தேன். வந்த ஜனம் போகவில்லை. மேலும் மேலும் ஜனங்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

மணி... இரவு ஒன்பது... கடந்து... பத்துமணியை நெருங்குகிற நேரத்தில்... ஒருவித பரபரப்பு!

தங்க நிறத்தில் மின்னல் ஒன்று தோன்றியது போல... மேடையில் தலைவன்.

"நிஜமா?' என என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டிருந்தேன். திறந்த கண்ணும், திறந்த வாயும் மூடாமல், அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

மேடையில் இடமும் வலமுமாக வந்து மக்களைப் பார்த்து கையசைத்தார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர்., தொப்பி -கண்ணாடி அணிந்திருக்கவில்லை. கிராப் வைத்து, வெள்ளைச் சட்டை வேஷ்டியில் மப்ளர் போன்ற ஒரு வகை சிறு துண்டு அணிந்திருப்பார்.

அவர் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாலும் சலிக்காது. அப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பேச்சு என்பது ஒரு கலை. அதிலும் மேடைப் பேச்சு என்பது இன்னும் நுணுக்கமான கலை. "பேசியே ஆட்சியப் புடிச்சவங்க தி.மு.க.காரங்க'’ என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் அளவுக்கு ‘பேச்சையும், எழுத்தையும் கண்ணெனக் கொண்டது’ திராவிடம்.

இந்தப் பேச்சுக் கலையும், எழுத்துக் கலையும் அண்ணா, கலைஞர் போன்றோருக்கு கைவந்த கலை. அப்படியே மயங்கி நிற்பார்கள் மக்கள் அந்த சொற்பொழிவில். ஆனால் எம்.ஜி.ஆருக்கு அலங்காரமாக மேடைப் பேச்சு பேச வராது. ஆனால் பாமர மக்களுடன் நேரடியாகப் பேசுவதுபோல இண்ட்ராக்ட் செய்வார்.

சிறிது நேரம் பேசிவிட்டு, எம்.ஜி.ஆர் கிளம்பிவிட்டார். கூட்டம் மெல்ல மெல்ல மைதானத்தை விட்டு கலைந்து சென்றது. ஆனால், நான் எம்.ஜி.ஆரைப் பார்த்த இன்ப அதிர்ச்சியில் விழுந்து, அதிலிருந்து மீண்டபோது... பந்தல் பிரிப்பவர்களும், மைக் செட்காரர்களும் மட்டுமே இருந்தார்கள். அப்படியொரு பரவசத்தில் மூழ்கிப் போயிருந்தேன் எம்.ஜி.ஆரைப் பார்த்து.

மக்களைப் பொருத்தவரைக்கும் எம்.ஜி.ஆர் பேசவேண்டும் என்பதில்லை. அவரை நேரில் பார்த்தால் போதும்.

மக்களின் இந்த மனநிலையைப் புரிந்துதான் எம்.ஜி.ஆரிடம் கால்ஷீட் கேட்டார் அறிஞர் அண்ணா.

ஆமாம்....

1967 தேர்தலையொட்டி...

சென்னைத் தீவுத்திடலிலிருந்து, விருகம்பாக்கம் மாநாட்டு பந்தலுக்கு ஊர்வல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தி.மு.க.வால். அந்தச் சமயம் என் தம்பி வரதன் இலங்கையிலிருந்து வந்திருந்தான். நானும், அவனும் ஊர்வலம் தொடங்குமிடத்திலிருந்து, மாநாட்டு பந்தல் வரை ஊர்வலத்துடனேயே செல்வோம் என எண்ணி, ஜெமினி ஸ்டுடியோ இருந்த இடத்திலிருந்து, தீவுத்திடலை நோக்கி நடந்தோம். ஆனால் எல்.ஐ.சி. அருகே நாங்கள் செல்லும் போதே ஊர்வலம் அங்கு வந்துவிட்டது. ஒருவர் பின் ஒருவராக இரண்டு வரிசையில் தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர். பின்னால் மைல் கணக்கில் ஊர்வல வரிசை வந்துகொண்டிருந்தது.

ஒரு மாட்டு வண்டியில் ஸ்டெப் ஸ்டெப்பாக அலங்காரம் செய்யப்பட்டு, உச்சிப் படியில் அண்ணா உட்கார வைக்கப்பட்டிருந்தார். அடுத்த படியில் கே.ஏ.மதியழகன், அதற்கடுத்த படியில் என்.வி. நடராஜன், கீழ்ப்படியில் கலைஞர் உட்கார்ந்திருக்க, அந்த மாட்டு வண்டி, ஊர்வல வரிசையில் நடுவில் மெல்லமாக வந்துகொண்டிருந்தது. நானும், என் தம்பியும் ஊர்வல வரிசைக்குள் புகுந்து, மாட்டு வண்டியின் பின்னே சென்று வண்டியில் கடைப் பகுதியை பிடித்துக்கொண்டே, விருகம்பாக்கம் மாநாட்டுத் திடலுக்கு வந்து சேர்ந்தோம். தலைவர்கள் சிறப்பு வாயில் வழியாக அழைத்துச் செல்லப்பட்டனர். தொண்டர்கள் டிக்கெட் எடுத்துத்தான் மாநாட்டுப் பந்தலுக்குள் நுழைய வேண்டும். அது கட்சிக்கான நிதி; செலவுக்கு பயன்படுத்தப்படும்.

நாங்கள் பொதுக்கூட்டத்தில் அமருவதுபோல் நினைத்துவிட்டோம். டிக்கெட் எடுக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால்... முன் வரிசைக்கான கட்டணச் சீட்டு எடுத்திருப்போம். பணம் கொண்டு வராததால், கையிலிருந்து ரூபாய்க்கேற்ப கட்டணச் சீட்டு வாங்கி, மணல் நிரப்பப்பட்ட தரையில் உட்கார்ந்து, தலைவர்களின் பேச்சைக் கேட்டோம்.

அந்த மாநாட்டில் பேசும்போது தான், ‘"தம்பி எம்.ஜி.ராமச்சந்திரன் தேர்தல் செலவுக்காக பெரும் நிதி தருவதாகச் சொன்னார். ஆனால் நிதி தேவையில்லை. தேர்தலுக்காக ஒரு முப்பது நாட்களை ஒதுக்கு. நீ உன் முகத்தைக் காட்டினால் ஒவ்வொரு தொகுதியிலும் முப்பதாயிரம் ஓட்டுகள் நமக்குக் கிடைக்கும்'’என்று பேசினார்.

இதுதான் எம்.ஜி.ஆரிடம் அண்ணா கேட்ட தேர்தல் கால்ஷீட்.

அண்ணாவின் சொல்லைத் தட்டாமல் எம்.ஜி.ஆரும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தேர்தலில் தி.மு.க. பெரும் வெற்றி பெற்றதும் அண்ணா என்ன சொன்னார் என்கிற... தலைவர்கள் சிலர் மட்டுமே அறிந்த ரகசியத்தை, அருகிருந்து கவனித்த நான் சொல்கிறேன்.

அதற்கு முன்... இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறேன்...

(திரை விரியும்)

படம் உதவி: ஞானம்

______________

திராவிட நாணயம்! என் இனிய தமிழ்ச் சொந்தங்களே...!

ss

லைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயம் ஒன்றிய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்நாத்சிங் அவர்களால் வெளியிடப் பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்த நாணயத்தில் பொறிக் கப்பட்டுள்ளவரின் நாணயத்திற்கு முதல் சொந் தக்காரர்கள் முத்துவேலரும் -அஞ்சுகத் தாயாரும். இந்த நாணயம் உருவாக்கப்பட்டது பெரியார் பாசறையில். இந்த நாணயம் பட்டைதீட்டப்பட்டது அண்ணாவின் பல்கலைக் கழகத்தில். இந்த நாணயம் புகழ்பெற்றது திரைப்படத் துறையில். இந்த நாணயம் மக்கள் மனதில் இடம்பெற்றது; தனது ஓயாத உழைப்பினாலும், உலகமே வியந்து பார்க்கும் அற்புதமான பல திட்டங்களினாலும்.

இந்த நாண யத்தின் உயிர் மூச்சே தமிழ்நாடும், தமிழ் மொழியும், தாழ்ந்துகிடந்த தமிழர்களின் தலைநிமிர்வும் தான். தென்கோடியிலே உருவான இந்த நாணயம், பல சூட்சுமமான தருணங்களில் தேசியத்தைத் தாங்கிப் பிடித்து, அதன் தரம் தாழ்ந்துவிடாமல் காப்பாற்றி யதை அரசியல் விற்பன்னர்கள் பாராட்டினார்கள். இந்த நாணயத்தின் மெருகு குலையாமல் காப்பாற்றி வருகின்ற மாண்புமிகு முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்களும், மாண்புமிகு உதயநிதி ஸ்டா லின் அவர்களும், அன்பு மகள் கனிமொழி அவர் களும், தயாநிதிமாறன் அவர்களும் வணக்கத்திற் குரியவர்கள். அத்தனைக்கும் மேலாக கழகத்தின் உடன்பிறப்புகள் தங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடுவதைச் சொல்லாமல் இருக்க முடியுமா? இந்த நாணயம் ஏற்டுத்தியிருக்கும் தர மதிப்பீட்டை ஒட்டுமொத்த தமிழர்களும் உணர்ந்துகொண்டு, 2026-ல் சட்டசபை தேர்தலில் 234-ஐயும் வெற்றிக் கனியாக பரிசளித்தால், ஒட்டுமொத்த இந்தியா விலும் திராவிட அரசியல் பட்டொளி வீசிப் பறப்பதை நமது காலத்திலேயே நாம் பார்த்துவிட முடியும்.

nkn240824
இதையும் படியுங்கள்
Subscribe