திகாரிகளுக்கு 2,400 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்காக முட்டை, சத்துமாவு, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சப்ளை செய்யும் "கிறிஸ்டி ஃபிரைடுகிராம் இண்டஸ்ட்ரி' நிறுவனம்.

crist-egg

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிப்பாளையத்திலுள்ள இந்நிறுவனம், அரசுப்பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் ஏழை எளிய குழந்தைகள் சாப்பிடும் முட்டையில் மாபெரும் ஊழல் செய்ததாக கடந்த 2018 ஏப்ரல்-19 நக்கீரன் இதழில் "எடைக்குறைவு! விலை அதிகம்! சத்துணவு முட்டையில் ரூ.1100 கோடி ஊழல்!' என்ற தலைப்பில் ஆர்.டி.ஐ. ஆதாரங்களுடன் எக்ஸ்க்ளூஸிவாக அம்பலப்படுத்தியது. அதன்பிறகு 76 இடங்களில் அதிரடி ரெய்டை நடத்தியது வருமானவரித் துறை. 2018 ஜூலை 5-ந்தேதி நடத்தப்பட்ட ரெய்டில்தான் சத்துணவு ஊழலை கண்டுகொள்ளாமல் இருக்க அதிகாரிகளுக்கு 2400 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக ஆவணத்தை கைப்பற்றியுள்ளது வருமான வரித்துறை.

Advertisment

இதுகுறித்து, நாம் மேலும் விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் ஆவணப்பூர்வமான தகவல்கள் கிடைத்தன. 2013 முதல் 2018 வரையிலான ஐந்து வருடங்களுக்கும் சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ், நேச்சுரல் ஃபுட் புராடெக்ட்ஸ், கிசான் பௌல்ட்ரி ஃபார்ம்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே சத்துணவுப் பொருட்களை சப்ளை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ. தகவல் மூலம் ஆதாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. இந்த மூன்று நிறுவனங்களுமே முட்டை உற்பத்தி செய்யாத குமாரசாமியின் ‘"கிறிஸ்டி ஃபிரைடுகிராம்' இண்டஸ்ட்ரி’ நிறுவனத்தின் துணைக் கம்பெனிகள்தான்.

crist - egg

Advertisment

நாம் மேலும் விசா ரித்தபோதுதான், இந்தியா முழுவதும் முட்டை விலையை நிர்ணயிக்கும் என்.இ.சி.சி. எனப்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின் கோல்மால்களும் வெளிச்சத் துக்கு வருகின்றன. தனியார் முட்டை உற்பத்தியாளர்களைக் கொண்ட சொசைட்டி ஆக்டில் பதிவு செய்யப்பட்ட என்.இ.சி.சி. தனியார் ட்ரஸ்ட்டுக்கு முட்டை யின் விலையை நிர்ணயிப்பதற்கான எந்த அதிகாரமும் இல்லை.

இதுகுறித்து, டெல்லியிலுள்ள மத்திய அரசின் ‘காம்பட்டிஷன் கமிஷன் ஆஃப் இண்டியா’ எனப்படும் தொழில் முறையீட்டு ஆணையத்தில் வாதிட்ட உச்சநீதிமன்ற பிரபல வழக்கறிஞர் பொ.சோமசுந்தரம் நம்மிடம், “""என்.இ.சி.சி. எனப்படும் தனியார் அறக்கட்டளை நிர்ணயிக்கும் விலையில் கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்திடமிருந்து முட்டை கொள்முதல் செய்ததிலேயே ஊழல் ஆரம்பித்துவிடுகிறது.

2013 முதல் ஒருங்கிணைந்த முட்டை கொள்முதல் டெண்டரை அறிவித்துவிட்டது ஜெ. அரசு. அப்போது "அரசுக்கு 100 கோடி ரூபாய் உணவுப்பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனமே தகுதி பெறும்' என்று டெண்டரில் புதிய விதி முறையை சேர்த்து கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்துக்கே கொள்முதல் டெண்டரை கொடுத்துவிட்டார்கள் சமூகநலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் அதிகாரிகள்.

crist-egg

ஒவ்வொரு வருடமும் முட்டை கொள்முதல் டெண்டர் விடும்போது விலையை கூட்டிவிடும் என்.இ.சி.சி. உடனே அந்த ரேட்டுக்கு கொடுப்ப தாக கணக்கு காட்டிவிடும் கிறிஸ்டி ஃபுட் நிறு வனம். உதாரணத்துக்கு, 55 கிராம் எடைகொண்ட 3 ரூபாய்க்கு விற்கப்படும் முட்டையானது டெண்டரின்போது 3 ரூபாய் 60 பைசாவாக உயர்த்திவிடும் என்.இ.சி.சி.

உடனே, 3 ரூபாய் 60 பைசாவுக்கு கொள் முதல் செய்ததாக கணக்கு காண்பித்து 4 ரூபாய் 34 பைசாவுக்கு (கிறிஸ்டி ஃபுட் நிறுவனம் அரசுக்கு இந்த வருடம் நிர்ணயித்த முட்டை விலை ரூ 4.34) விற்கும் கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்தின் கம்பெனி கள்... இப்படி, ஒவ்வொரு முட்டையிலும் ஊழல் செய்து சப்ளை செய்யும் கிறிஸ்டி ஃபுட் நிறுவனம் 55 கிராம் எடையுள்ள முட்டையை பள்ளி மற்றும் அங்கன்வாடி பிள்ளைகளுக்கு விநியோகிப்பதில்லை என்பதுதான் மற்றொரு மாபெரும் ஊழல். என்.இ.சி.சியால் விலை நிர்ணயமே செய்யப்படாத 46 கிராம் எடை கொண்ட சிறிய சைஸ் முட்டைகளைத்தான் வினி யோகிக்கிறார்கள். இந்த 46 கிராம் எடை குறைவான சின்ன சைஸ் முட்டைகள் சுமார் 1 ரூபாயிலிருந்து 1.75 பைசா விலைக்குத்தான் வாங்கியிருக்கிறது கிறிஸ்டி ஃபுட் நிறுவனம். அப்படியென்றால், 1.75 பைசாவுக்கு வாங்கிய முட்டையை கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்தின் ஏற்ற இறக்கக்கூலி உள்ளிட்ட செலவினங்கள் போக சுமார் 2 ரூபாய் கூடுதலான விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் சமூகநலத்துறை அதிகாரிகள். நீதிமன்றத்தில் இதுகுறித்து நாமக்கல் சந்திரன் என்பவர் வழக்கு தொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் சமூகநலத்துறை அதிகாரிகள். இதுதான், லஞ்சப் பின்னணி'' என்கிறார் அவர்.

-மனோசௌந்தர்