தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து செயலாற்றி வரு கிறது தி.மு.க! அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கு சாதகமானதை உடைக்க ஒரு வியூகமும், விஜய் நம்பும் வாக்குகளை வீழ்த்த ஒரு வியூகமும் என தனது அரசியல் யுக்திகளை வேகமாக வகுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதுகுறித்து தி.மு.க.வின் மூத்த மா.செ.க்களி டம் பேசும்போது, "இளைஞர்களின் ஆதரவையும் கிறிஸ்துவ சமூகத்தினரின் வாக்குகளையும்தான் மிகவும் நம்புகிறார் நடிகர் விஜய். இளைஞர்களை பொறுத்தவரை வ
தேர்தல் களத்தில் எதிரிகளை வீழ்த்த பல்வேறு வியூகங்களை வகுத்து செயலாற்றி வரு கிறது தி.மு.க! அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கு சாதகமானதை உடைக்க ஒரு வியூகமும், விஜய் நம்பும் வாக்குகளை வீழ்த்த ஒரு வியூகமும் என தனது அரசியல் யுக்திகளை வேகமாக வகுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இதுகுறித்து தி.மு.க.வின் மூத்த மா.செ.க்களி டம் பேசும்போது, "இளைஞர்களின் ஆதரவையும் கிறிஸ்துவ சமூகத்தினரின் வாக்குகளையும்தான் மிகவும் நம்புகிறார் நடிகர் விஜய். இளைஞர்களை பொறுத்தவரை விஜய் குறிவைப்பது கல்லூரி மாணவ, மாணவியர்களை. ஆனால், இவர்களில் பெரும்பான்மையினரை தங்கள் கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்துள்ளது தி.மு.க.
அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் சுமார் 30 லட்சம் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கிய முதல்வர், "நான் முதல்வன்' திட்டம் வாயிலாக அவர்களுக்கு மாதா மாதம் கல்வி உதவித்தொகையும் வழங்கிவருகிறார். இதெல்லாம் கல்லூரி மாணவ -மாணவியர், முதல் தலைமுறை வாக்காளர்கள், கல்லூரி முடித்து பணிக்குச் செல்லும் இளம் தலை முறையினர்களிடம் தி.மு.க. மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் அடுத்த நம்பிக்கை ‘கிறிஸ்துவ வாக்கு வங்கி. இதற்கு தி.மு.க.வில் உள்ள கிறிஸ்துவ நிர்வாகி கள் மூலமாகவே செக் வைத்துவருகிறார் ஸ்டாலின். இதற்காக, தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் முடுக்கிவிடப்பட்டுள்ளனர், முதல்கட்டமாக, நீலகிரி மாவட்டத்திலிருந்து வேகமெடுத்துள்ளது இந்தப் பணி. ஊட்டி நகரச் செயலாளரும், அம்மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான ஜார்ஜ் சமீபத்தில், கிறிஸ்துவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் தலைமையில் ‘"அற்புத பெருவிழா'’ ஒன்றை ஊட்டியில் நடத்தி னார். இரு நாட்கள் நடந்த இந்த நிகழ்வில், சுமார் ஒரு லட்சம் கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு தி.மு.க.வை உயர்த்திப்பிடித்தனர். இந்த சம்பவம், முதல்வரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த அற்புத பெருவிழா கிறிஸ்துவ ஒன்று கூடல் கூட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்த ஜார்ஜுக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டி ருப்பதால், மாவட்ட வாரியாக அதனை நடத்தி வருகிறார். இத்தகைய கிறிஸ்துவ விழாக்களில் மைனாரிட்டி மக்களின் நண்பனாக ஸ்டாலின் அரசு செய்துவரும் நன்மைகள் பட்டியலிடப்படுகிறது. இப்படி, விஜய்யின் வாக்கு வங்கிக்கு வேட்டு வைத்துவருகிறார் முதல்வர் ஸ்டாலின்''’என்று விவரிக்கின்றனர். இதுகுறித்து ஜார்ஜிடம் கேட்டபோது, "சிறுபான்மை மக்களின் நண்பன் எப்போதும் தி.மு.க.தான். குறிப்பாக, கிறிஸ்துவ மக்களின் செல்லப்பிள்ளைதான் தலைவர் ஸ்டாலின்''’என்கிறார்.
சி.பி.ஐ. விசாரணை, ஜனநாய கன் ரிலீஸ் சிக்கல் என நொந்துபோயி ருக்கும் விஜய்யின் கிறிஸ்துவ வாக்கு வங்கியில் ஓட்டையை போட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க.
-இளையர்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us