தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றக்கோரி கிறிஸ்தவ வன்னியர்கள் போர்க்கொடி தூக்கிவருகிறார்கள்.
தமிழகத்திலுள்ள கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப் பட்டோர் (எம்.பி.சி.) பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று கிறிஸ்தவ வன்னியர்கள் மாநில மாநாடு திண்டுக்கல் மேட்டுப்பட்டி சர்ச் முன்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், திண்டுக்கல், தேனி. மதுரை, கடலூர், திருவண்ணாமலை, கரூர், கள்ளக்குறிச்சி, வி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றக்கோரி கிறிஸ்தவ வன்னியர்கள் போர்க்கொடி தூக்கிவருகிறார்கள்.
தமிழகத்திலுள்ள கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப் பட்டோர் (எம்.பி.சி.) பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று கிறிஸ்தவ வன்னியர்கள் மாநில மாநாடு திண்டுக்கல் மேட்டுப்பட்டி சர்ச் முன்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டில், திண்டுக்கல், தேனி. மதுரை, கடலூர், திருவண்ணாமலை, கரூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ வன்னியர்கள் பெரும்திரளாகக் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டுக்கு திண்டுக்கல் மறை மாவட்ட ஆயரும். தமிழக ஆயர் பேரவையின் பி.சி., எம்.பி.சி., டி.என்.சி. பணிக்குழு தலைவருமான தாமஸ் பால்சாமி தலைமை தாங்கினார்.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பங்குத்தந்தை ஜோசப்ராஜ் பேசும்போது, "கடந்த 2021 தேர்தலின்போது வேடசந்தூர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த ஸ்டாலின், தேர்தலில் வெற்றிபெற்றால் கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்.பி.சி. பட்டியலில் இடமளிக்கப்படும் எனக் கூறினார். ஆனால் தற்போதுவரை வாக்குறுதியை மறந்துவிட்டு, நீங்கள் கிறிஸ்தவர்கள் எனப் பிரித்துப் பார்க்கிறார். கிறிஸ்தவ வன்னியர்களின் வாக்கு மட்டும் இனிக்குது, சலுகை கேட்டால் கசக்குதா? அனைத்தையும் பெற்றுக்கொண்டு எனது உரிமையை மட்டும் கேட்டால் நீங்கள் கிறிஸ்தவர்கள் எனக்கூறி நடந்து கொள்வது சரியா? எங்களுக்கு பிச்சைபோடத் தேவையில்லை. போனமுறை நாங்கள் ஓட்டு போட்டதால்தான் ஜெயித்தீர்கள். தற்போது பி.ஜே.பி., அ.தி.மு.க. ஒருபுறமிருக்க, தி.மு.க. கூட்டணி ஒருபுறமிருக்க, நடுவில் ஜோசப் விஜய் என்று கிறிஸ்தவர் ஒருவர் வருகிறார்... புரிந்து கொள்ளுங்கள்'' என முதல்வர் ஸ்டாலினை மிரட்டும் தோரணையில் பேசி, நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இறுதியாக மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி பேசும்போது, "தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் கிறிஸ்தவ வன்னியர்கள் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களுக்கு கிடைக்கவேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமை மறுக்கப்படுகிறது. வரும் தேர்தலுக்கு முன்பாக கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும். இல்லையென்றால் எங்கள் செயற்குழுவைக் கூட்டி யாருக்கு வாக்களிக்க வேண்டு மென்பதை முடிவெடுப்போம்'' என்றார்.
ஆக, ஆளுங்கட்சிக்கெதிராக வன்னிய கிறிஸ்தவர்கள் களமிறங்கவிருப்பதாக இந்த மாநாடு சுட்டிக்காட்டியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-சக்தி