கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது. இங்கு கெமிக்கல், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழிற்சாலைகள் 2,600 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ளன. தொழில் வளர்ச்சியில் பங்கெடுத்த இந்த வளாகம், கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு, குடிநீர் மாசு உள்ளிட்ட பல்வேறு சீர்கேடுகளை சந்தித்து வருகிறது. சிப்காட் பகுதியை சுற்றியுள்ள மக்கள் பல வகையான புற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இதற்கெதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்த நிலையில், கடலூரை ஒட்டியுள்ள குடிகாடு, தியாகவல்லி, நடுத்திட்டு, நொச்சிகாடு ஆகிய கிராமப் பகுதிகளில் வெட்டிவேர், மணிலா, சவுக்கு, நெற்பயிர்கள், தென்னை, முந்திரி உள்ளிட்டவை பயிரிடப்படும் பல்வேறு விவசாய விளைநிலங்களில் 1000 ஏக்கரை கையகப்படுத்தி சிப்காட் வளாகம் அமைப் பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அரசாணை யையும் வெளியிட்டுள்ளது. இது விவசாயிகள், விவசாயக் கூலித
கடலூர் அருகே சிப்காட் வளாகம் கடந்த 1982ஆம் ஆண்டு தொடங்கியது. இங்கு கெமிக்கல், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழிற்சாலைகள் 2,600 ஏக்கருக்கு மேல் அமைந்துள்ளன. தொழில் வளர்ச்சியில் பங்கெடுத்த இந்த வளாகம், கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு, குடிநீர் மாசு உள்ளிட்ட பல்வேறு சீர்கேடுகளை சந்தித்து வருகிறது. சிப்காட் பகுதியை சுற்றியுள்ள மக்கள் பல வகையான புற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் இதற்கெதிராக பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
இந்த நிலையில், கடலூரை ஒட்டியுள்ள குடிகாடு, தியாகவல்லி, நடுத்திட்டு, நொச்சிகாடு ஆகிய கிராமப் பகுதிகளில் வெட்டிவேர், மணிலா, சவுக்கு, நெற்பயிர்கள், தென்னை, முந்திரி உள்ளிட்டவை பயிரிடப்படும் பல்வேறு விவசாய விளைநிலங்களில் 1000 ஏக்கரை கையகப்படுத்தி சிப்காட் வளாகம் அமைப் பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அரசாணை யையும் வெளியிட்டுள்ளது. இது விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பொதுமக்கள் என அனைத்துத்தரப்பு மக்கள் மத்தியிலே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கூறுகையில், "கடலூர் சிப்காட் வளாகத்தில் அபாயகரமான ரசாயனங்களை கையாளக்கூடிய மிகப்பெரிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பூச்சிக்கொல்லி மருந்து, பெயிண்ட், சாயப்பட்டறை, மருந்து, மாத்திரைகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளை சுற்றியுள்ள கிராமப் பகுதியில் ஏழை எளிய மக்கள், தினக்கூலி மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள்.
சிப்காட் தொழிற்சாலைகளிலிருந்து வெளி யேறும் நச்சு வாயுக்களால் கண் எரிச்சல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற உடனடி பாதிப்புகள் இருப்பதாக பொதுமக்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் தான் கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய மாசு வாயுவால் அருகிலுள்ள பகுதியில் வசித்துவந்தவர்களில், 2 கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் உட்பட 93 பேர் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக இவர்களை மீட்ட தால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் இது வெறும் நீராவி மட்டும் தான், ரசாயனம் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இது ரசாயனமா? இல்லையா? என்பதை அரசுத்துறை இதுவரை அறிவிக்கவில்லை. தற்போது வேளாண் நிலங்கள் மீது தொழிற்சாலைகளை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் கேல்விக்குறியாகும் சூழ்நிலை வேதனையளிக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/17/sipcot-land1-2025-11-17-16-44-37.jpg)
அச்சுறுத்தி வரும் பருவநிலை மாற்றத்தை கருத் தில்கொண்டு சுற்றுச்சூழலுக்கு எதிரான எந்த திட்டத்தையோ, நிறுவனங்களையோ விரிவாக்கம் செய்ய கூடாது. எனவே தமிழக அரசு, குடிகாடு, தியாகவல்லி ஆகிய பகுதிகளில் சிப்காட் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். இதற்கான அரசாணையை திரும்பப்பெற வேண்டும்'' என்றார்.
தமிழ்தேசிய பேரியக்க மாநிலத் துணைத்தலைவரும் இயற்கை வேளாண் விவசாயியுமான முருகன் கூறுகையில், "இந்த நடவடிக்கை, விவசாய நாட்டை, தொழிற்துறை நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கை. இதனால் உணவுப் பற்றாக்குறை இல்லாத தமிழகம், உணவுப் பற்றாக்குறையுள்ள மாநிலமாக மாறும். கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தொழில்துறையை வரம்புடன் இயக்குகின்றன. ஆனால் தமிழகத்தில் ஒட்டுமொத்த உலகிற்கு மான தொழிலும் நடைபெறுகிறது. இதனால் விவசாயம், விவசாய நிலங்கள் அழியும் நிலை ஏற்படும். திட்டக்குடி அருகே பில்லூர் கிராமத்தில் 400 ஏக்கரில் இதேபோன்று சிப்காட் அமைக்க முயற்சித்தார்கள். அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தி வைத்துள்ளனர். இதனை தமிழக அரசு வாபஸ் பெறவேண்டும், இல்லையேல் பொதுமக்களையும், விவசாயிகளையும் ஒன்றுதிரட்டி போராடுவோம்'' என்றார்.
கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மருதவாணன் கூறுகையில், "தொழிற்சாலைகளிலிருந்து கழிவு நீரை சுத்திகரித்து வெப்பநிலையை மாற்றி குளிர்வித்த பிறகு தான் கடலில் வெளியேற்ற வேண்டும். ஆனால் அதற்கு ஆகும் செலவைக் கணக்கில் கொண்டு இவர்கள் கடல் வெப்பத்தை விட 10 டிகிரி வரை கூடுதலான வெப்ப நிலையில் வெளியேற்றுகின்றனர். இப்படி ரசாயனக்கழிவு நீர் கலப்பதால் இங்குள்ள கடல் மீன்கள் என்ன ஆகும்? மீன்களை உண்ணும் மனிதர்களின் நிலை என்னவாகும்? அனுமதி பெறும்போது அனைத்தையும் சரியாகச் செய்கிறோம் எனக்கூறி அனுமதி பெற்றுவிட்டு இஷ்டத்துக்கு செயல்படுகிறார்கள். கடலூரை சுற்றி சுமார் 75 செ.மீ அளவுக்கு நிலம், நீர், காற்று, கடல் மாசுபட்டு மிகப்பெரிய சுற்றுச்சூழல் கேடு உருவெடுத்துள்ளது. கடலூர், புதுச்சேரி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட புற்றுநோய் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து இதன் தீவிரத்தை புரிந்து கொள்ளலாம். எனவே விவசாய நிலங்களை அழித்து சிப்காட் வளாகங்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு இதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்'' என்றார்.
விவசாயிகளின் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்குமா?
-காளிதாஸ்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us