சின்னம்ப்பமட்டி டூ சிட்னி... யார்க்கர் நடராஜன் வெற்றிப் பயணம்!

nat

ர் ஆர்வத்தில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து, அதையே லட்சியக் கனவாக வரித்துக்கொண்டு, இந்திய அணிக்குள் நுழைந்து விடவேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான பேர் முயற்சித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களில் இருபது, முப்பது பேர்தான் இந்திய அணிக்குள் நுழைவார்கள். அதில் ஏழெட்டுப் பேர்தான் தாக்குப்பிடித்து நட்சத்திர வீரராக ஜொலிப்பார்கள்.

இந்த முப்பது பேரில் ஒருவராக இந்திய அணிக்குள் நுழைந்திருக்கிறார் தமிழகத்தின் கிராமம் ஒன்றிலிருந்து வந்த நடராஜன். "ஏழெட்டு பேர்களில் ஒருவராக ஜொலிப்பார்' என பிரட் லீ, ஷேவாக், கபில்தேவ் உள்ளிட்ட ஏகப்பட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள் நடராஜனுக்காக ஆருடம் சொல்கிறார்கள்.

natarajan

நடராஜின் சொந்த ஊர் சேலம் மாவட்டத்தின் சின்னப்பம்பட்டி. அப்பா நெசவுக் கூலி. அம்மா வீட்டு முன்பு சில்லி சிக்கன் போட்டு விற்பவர். வீட்டிலோ ஐந்து பிள்ளைகள். நடராஜன்தான் மூத்தவர். மூத்தபிள்ளை குடும்ப பாரத்தைத் தாங்கவேண்டும் என்ற எதிர்பார்ப் பில்லாத குடும்பத்தைக் காண்பது அரிது.

""எனது மகனை பன்னிரண்டாம்

""எனது மகனை பன்னிரண்டாம் வகுப்பு வரைதான் படிக்கவைக்க முடிந்தது. கல்லூரியில் சேர்த்தபோது, பேருந்துக்கு ஐந்து ரூபாய்கூட கையில் கொடுக்கமுடியாத நிலையில்தான் குடும்பம் இருந்தது. ஆனால் அவனுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்தது. ஆர்வம் என்றால், ஒருமுறை அவனது கையொடிந்த நிலையிலும்கூட, விளையாட்டைப் பார்க்கவும் பந்து வீசவும் செல்லும் தணியாத ஆர்வம். அவனது ஆர்வத்தைப் பார்த்துவிட்டுதான், ஒருகட்டத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டுப் போகட்டுமென விட்டுவிட்டோம்''’என்கிறார் அவனது தாயார் சாந்தா.

பக்கத்து ஊருடன் விளையாடிக்கொண்டிருந்த நடராஜன், தனது திறமையால் டி.என். பி.எல்.லில் திண்டுக்கல்லுக்காக விளையாடிய போது கவனிக்கப்பட்டு ஐ.பி.எல்.லுக்குத் தேர்வானார். ஆனாலும் அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டிவிடவில்லை. பஞ்சாப் அணியில் அவர் பெரிதாகக் கவனிக்கப்பட வில்லை. 2018-ல் சன்ரைசர் ஹைதரா பாத்துக்காகத் தேர்வான நடராஜனை அன்றைய ஹைதராபாத் அணியின் பயிற்சியாளர் டாம்மூடி அத்தனை நம்பிக்கையாகப் பார்க்கவில்லை. பத்தோடு ஒருவராக இருந்துவிட்டு வந்தார்.

2020 ஐ.பி.எல். ஆட்டத்தின் தற்போதைய பயிற்சியாளருக்கு, நடராஜனின் பந்துவீச்சில் இருந்த அனல் கண்ணில் பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் தேர்ந்தெடுத்தார். அணித் தலைவரான ஆஸ்தி ரேலியாவின் டேவிட்வார்னரும் தட்டிக்கொடுத்து அனுப்ப ஆட்டத்துக்கு ஆட்டம் தனது துல்லியமான இடது கை யார்க்கர் பந்துவீச்சால், அணியையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டார்.

natarajan

பெங்களூரு அணிக்கு எதிரான ஹைதராபாத்தின் முதல் ஆட்டத்தில் நடராஜன் முதலில் வீழ்த்தியது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட். தவிரவும் சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனும் இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனுமான தோனியின் விக்கெட்டை இரண்டு முறை யும் வீழ்த்தி சபாஷ் வாங்கினார். அப்போது எழுந்த, "சபாஷ் நடராஜன்' என்ற குரல் இன்னும் நிற்கவில்லை.

ஐ.பி.எல். முடிந்ததும் ஆஸ்திரேலியாவில் ஒருநாள், டி 20, டெஸ்ட் போட்டிகளை ஆடப்போன அணியில் எதற்கும் இருக்கட்டும் என எக்ஸ்ட்ரா வீரர்களுள் ஒருவராகத்தான் நடராஜனும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆனால் அதிர்ஷ்டம் அவரை ஆட்டக்களத்துக்குள் அனுப்புவதற்கு துணைநின்றது. வருண் சக்கரவர்த்திக்கு, சைனி ஆகியோரின் காயம் டி.20, ஒருநாள் போட்டிகளுக்கு நட்டுவுக்கு கேட் பாஸ் வாங்கித் தந்தது. தனக்கு வாய்ப்பு வழங்கிய அதிர்ஷ்டத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தாமல் விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் சென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, தனது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறப்பதைக் காரணம் காட்டி தனது வாரிசைப் பார்க்க இந்தியா திரும்பிவிட்டார். இந்திய அணிக்கு முதன்முறை யாகத் தேர்வான நடராஜன் ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றின்போதே தந்தையானார். கொரானோ காரணமாக இம்முறை அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். நடத்தப்பட்டதால், அங்கிருந்தே ஆஸ்திரேலியா சென்ற அணி வீரர்களில் ஒருவராக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார்.

டி-20, ஒருநாள் போட்டிகளுக்குத் தேர்வான நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக மட்டுமே தங்கவைக்கப்பட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளெல்லாம் முடிந்த பிறகுதான் அவர் தன் குழந்தையை நேரில் பார்க்கமுடியும். இதை இந்திய அணியின் முன் னாள் கேப்டன்களில் ஒருவரான கவாஸ்கர் சாடியிருக்கிறார்.

“"இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒரு வீரருக்கு ஒரு விதி, மற்றொரு வீரருக்கு இன்னொரு விதியென தனித்தனி விதியிருக்கிறதா?'’என்ற கேள்வி இந்திய அளவில் பேசு பொருளாயிருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டுக்கு தமிழகத்திலிருந்து தேர்வான வீரர்களில் பிராமணர் அல்லாத பிற சமூகத்தைச் சேர்ந்த வீரர் என்ற வகைப்பாட்டில் வெகுநாளைக்குப் பிறகு தேர்வாகியிருக்கும் நடராஜன், இந்த பாகுபாட்டைக் கடந்து தனது வெற்றிப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.

அதைப் பொறுக்க முடியாதவர்கள், நடராஜன் சிட்னியில் கூலிங்கிளாசுடன் இருக்கும் போட்டோவை சமூக வலைத்தளங்களில் பரப்பி கிண்டல் செய்கிறார்கள்.

கிண்டல்களையும் சவால்களையும் மிடில் ஸ்டம்ப்பை குறி வைக்கும் தனது பந்து போல எகிற வைத்து, சராசரி தமிழர்களில் ஒருவனாக, கிரிக்கெட் ஆடும் ஒவ்வொரு இளைஞருக்கும் நம்பிக்கை தருகிறார்.

-க.சுப்பிரமணியன்

nkn020120
இதையும் படியுங்கள்
Subscribe