உற்சாகமாகக் கூடிய போலீஸ் அதிகாரிகளின் பார்ட்டி ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் கண்ணைப் பறித்துவிட்டது என்கிற தகவல் மிக மிக ரகசியமாக காவல்துறை வட்டாரங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஏன் என்பதறிய களத்தில் குதித்தோம்.
சென்னை மாநகர காவல்துறையில் கொடிகட்டிப் பறந்தவர் அந்த அதிகாரி. அந்த அதிகாரியை பார்த்தால் அரசு வட்டாரமே அலறும். அந்த அதிகாரியின் உறவினர் எடப்பாடி அமைச்சரவையில் சீனியர் அமைச்சர். சமீபத்தில் கூட எடப்பாடி இங்கிலாந்துக்கும் அமெரிக்காவிற்கும் சுற்றுப்பயணம் செய்தபோது அந்த அமைச்சர் இன்னொரு ஐரோப்பிய நாட்டில் பியானோ வாசித்தார்.
அந்தப் படங்கள் கூட இந்த அதிகாரி மூலம்தான் ஷேர் ஆனதாம். "அந்த'க் கட்சிக்கும் மிக நெருக்கமானவர்.
"அந்த'க் கட்சி ஆட்சியில் "போன் டேப் புகழ்' காக்கி அதிகாரியுடன் இந்த அதிகாரிக்கு நல்ல நெருக்கம்.
தன் மீதான "அந்த'க் கட்சி ஆதரவு முத்திரையை புத்திசாலித் தனமாக மாற்றிய போன் டேப் அதிகாரி, சமீபகாலமாக எடப் பாடிக்கு நெருக்கமானார். நடந்து முடி
உற்சாகமாகக் கூடிய போலீஸ் அதிகாரிகளின் பார்ட்டி ஒன்று தமிழகத்தைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரியின் கண்ணைப் பறித்துவிட்டது என்கிற தகவல் மிக மிக ரகசியமாக காவல்துறை வட்டாரங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஏன் என்பதறிய களத்தில் குதித்தோம்.
சென்னை மாநகர காவல்துறையில் கொடிகட்டிப் பறந்தவர் அந்த அதிகாரி. அந்த அதிகாரியை பார்த்தால் அரசு வட்டாரமே அலறும். அந்த அதிகாரியின் உறவினர் எடப்பாடி அமைச்சரவையில் சீனியர் அமைச்சர். சமீபத்தில் கூட எடப்பாடி இங்கிலாந்துக்கும் அமெரிக்காவிற்கும் சுற்றுப்பயணம் செய்தபோது அந்த அமைச்சர் இன்னொரு ஐரோப்பிய நாட்டில் பியானோ வாசித்தார்.
அந்தப் படங்கள் கூட இந்த அதிகாரி மூலம்தான் ஷேர் ஆனதாம். "அந்த'க் கட்சிக்கும் மிக நெருக்கமானவர்.
"அந்த'க் கட்சி ஆட்சியில் "போன் டேப் புகழ்' காக்கி அதிகாரியுடன் இந்த அதிகாரிக்கு நல்ல நெருக்கம்.
தன் மீதான "அந்த'க் கட்சி ஆதரவு முத்திரையை புத்திசாலித் தனமாக மாற்றிய போன் டேப் அதிகாரி, சமீபகாலமாக எடப் பாடிக்கு நெருக்கமானார். நடந்து முடிந்த சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் உளவுத்துறை அதிகாரியாக இருந்தபோது அறிந்து கொண்ட அந்தக் கட்சியினரின் பலகீனங்களை வைத்து எடப்பாடிக்கு தேவையான இடங்களில் வெற்றிபெற வைத்தார். இந்த உளவுத்துறையை எடப்பாடியுடன் நெருங்க வைத்தது... முதலில் குறிப்பிட்ட அதிகாரிதான். குதிரை போல பாய்ச்சலுடன் கடமையை செய்வதால் இந்த அதிகாரியை புரவி என்கிறார்கள்.
இனி ஓவர் டூ பார்ட்டி
ஒரு முக்கிய புள்ளிக்கு சென்னையின் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒரு வீடு உண்டு. தமிழக உயர் போலீஸ் அதிகாரிகளின் கேளிக்கை கூத்தெல்லாம் அங்கேதான் அரங்கேறும். ஒட்டுக் கேட்பு உளவுத்துறை அதிகாரி டி.ஜி.பி. அந்தஸ்தை பெற்றதற்கும் சீன அதிபர் விசிட்டில் சில குளறுபடிகளை செய்து அதில் எழும் புகார்களை வைத்து போன் டேப் அதிகாரி சென்னை நகர கமிஷனராகவும், புரவி அவருக்கு உதவியாக வலுவான பதவியில் அமர்வதற்கும் திட்டம் தீட்ட ஒரு பார்ட்டி நடத்தப்பட்டது.
இருபது நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த பார்ட்டியில் டேப் அதிகாரியின் நண்பர்களும் புரவியின் நண்பர்களும் ஆஜரானார்கள். கூடவே இருவருக்கும் நல்ல தொடர் பில் உள்ள அரசியல்வாதி களும் ஆஜரானார்கள். ஐ.பி.எஸ். அதிகாரிகள், அர சியல்வாதிகள், புரோக்கர்கள் என குழுமிய கூட்டத்தில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இறக்குமதி செய்யப்பட்ட பானங்களும் தாராளமாக இருந்தன.
ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி உடைத்து உபசரித்துக் கொண்டிருந்தார் புரவி. சீன அதிபர் விசிட்டில் என்ன குளறுபடி செய்யலாம், இப்போதிருக்கும் கமிஷனரை எப்படி மாற்றலாம் என ஆலோசித்துக் கொண்டிருக் கும் போது ஒரு ஐ.பி.எஸ். அதி காரி, ""சார் நிச்சயம் கமிஷன ராக வருவார். அவர் டி.ஜி.பி. யாக வந்திருக்க வேண்டியது. அமித்ஷா வேண்டாம் என சொல்லிவிட்டார். அவர் கமி ஷனர் ஆவது எடப்பாடியின் கையில்; எடப்பாடி சாரின் பாக்கெட்டில். பின்ன என்ன ஷாம்பெயின் உடையுங்க கொண்டாடலாம்'' என்றார்.
புரவிக்கு ஷாம்பெயின் பாட்டிலை எப்படி திறப்பது எனத் தெரியவில்லை. கிரிக் கெட் வீரர்கள் கோப்பையை வென்றதும் ஷாம்பெயின் பாட்டில் நுரைக்க மைதானத் திலேயே கொண்டாடுவார்கள்.
கார்க்கால் மூடப்பட்ட ஷாம்பெயினை திறப்பதற் கென்ற ஓப்பனர்கள் உண்டு. திறந்தவுடன் பீர் பாட்டில் போல் பொங்கும். திறப்பதற்கு முன் அதனை குலுக்கக் கூடாது. திறந்தபின் குலுக்கி னால் நுரை பீறிட்டு அடிக்கும். இதையறியாமல் சாதாரண பாட்டிலைப் போல நன்றாகக் குலுக்கித் திறந்தார் புரவி.
பாட்டில் வெடித்து சிதறியதில், ஒரு கண்ணாடித் துண்டு நேராக புரவியின் கண்ணைத் தாக்கியது. கண்ணின் கருவிழியை துளைத்துச் சென்ற மதுபாட்டில் துண்டு முகம் முழுக்க இரத் தத்தை பரப்பியது. "ஐயோ அம்மா' என்ற அலறல் சத்தத்துடன் புரவி கீழே விழ உடனடியாக பார்ட்டி கலைக்கப்பட்டது.
கண்ணில் அடிபட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தயாரானபோது, அந்த மரண வலியிலும் அந்த விருந்து தொடர்பான சி.சி.டி.வி. புட்டேஜ்களை அழிக்கச் சொன்னதோடு, அவை அழிக்கப்பட்டனவா? என ரத்தம் வழியும் கண்ணில் உறுதி செய்து கொண்டார்.
அதன்பிறகு அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். "இந்த கண்ணை குணப்படுத்த முடியாது' என அப்பல்லோ கைவிட்டது. தொடர்ந்து பிரபல கண் மருத்துவமனையான சங்கர நேத்ராலயாவிற்கு கொண்டு சென்றனர். அங்கும் முடியாது என சொல்லிவிட்டனர். முதல்வர் எடப் பாடியையே மருத்துவமனை யிடம் பேச வைத்தார் போன் டேப் அதிகாரி.
முதலமைச்சரின் தலையீட்டுக்குப் பிறகு வெளி நாட்டிலிருந்து கருவிழி ஒன்று கொண்டு வரப்பட்டு புரவி அதிகாரிக்கு பொருத்தப்பட்டது. அந்த ஆபரேஷன் முடிந்ததும் 16 மணி நேரம் படுத்திருக்க வேண்டும். எதற்கும் அசையக் கூடாது.
பழைய பார்வை திரும்ப கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புடன் இருக்கிறது காவல்துறை வட்டாரம். நேர்மையான அதிகாரிக்கு இந்த சோகம் நடந்து இருக்கக்கூடாது. அவர் மீண்டும் அந்த மலர்ந்த முகத்துடன் பணிக்கு திரும்ப வேண்டும் என நாமும் வேண்டுகிறோம்.
இத்தனைக்கு பிறகும் சீன அதிபர் விசிட்டில் சில குளறுபடிகளை செய்தது போன் டேப் அதிகாரிக்கு விசுவாசமான காவல்துறை அதிகாரிகள் வட்டாரம். அதுபற்றி ஆராய விசாரணைக் கமிஷன் போன்ற ஒரு விசாரணை காவல்துறையில் நடந்து வருகிறது என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். டெல்லியும் இதுபற்றி விசாரிக்கிறதாம்.
-தாமோதரன் பிரகாஷ்