ஏற்கனவே இந்திய-சீன எல்லைப்பகுதிகளில் ராணுவ நடவடிக்கை, அருணாச்சல பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு என இந்தியாவோடு மோதல் போக்கிலிருக்கும் சீனா, தற்போது கட்டவுள்ள அணையால் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
வட இந்தியாவில் பாயும் பிரமாண்ட நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா நதி, திபெத்தில் உருவெடுத்து இந்தியாவிலுள்ள அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் வழியாக பங்களாதேஷை அடைந்து இறுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. இந்தியாவில் பிரம்மபுத்திரா என்றழைக்கப்படும் ஆறு, சீனாவிலுள்ள தன்னாட்சிப் பகுதியான தி
ஏற்கனவே இந்திய-சீன எல்லைப்பகுதிகளில் ராணுவ நடவடிக்கை, அருணாச்சல பிரதேசத்தில் ஆக்கிரமிப்பு என இந்தியாவோடு மோதல் போக்கிலிருக்கும் சீனா, தற்போது கட்டவுள்ள அணையால் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
வட இந்தியாவில் பாயும் பிரமாண்ட நதிகளில் ஒன்றான பிரம்மபுத்திரா நதி, திபெத்தில் உருவெடுத்து இந்தியாவிலுள்ள அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம் வழியாக பங்களாதேஷை அடைந்து இறுதியில் வங்கக்கடலில் கலக்கிறது. இந்தியாவில் பிரம்மபுத்திரா என்றழைக்கப்படும் ஆறு, சீனாவிலுள்ள தன்னாட்சிப் பகுதியான திபெத்தில், யார்லுங் சாங்போ என்றும், இதுவே வங்கதேசத்தில் ஜமுனா நதியென்றும் அழைக்கப் படுகிறது.
சுமார் 2,900 கிலோமீட்டர் தூரத்துக்கு பாயக் கூடிய மிகநீளமான ஆறான யார்லுங் சாங்போ, திபெத்திலுள்ள நம்சா பர்வா என்ற மலையை சுற்றி வரக்கூடிய பகுதியில், இந்திய மதிப்பில் சுமார் ரூ.14.46 லட்சம் கோடி (167 பில்லியன் அமெரிக்க டாலர்) செலவில், மோடு நீர்மின் திட்டம் எனப் படும் புதிய அணையைக் கட்ட சீனா திட்டமிட் டுள்ளது. இது, த்ரீ கோர்ஜஸ் அணையைவிடப் பெரிய அளவில், உலகின் மிகப்பெரிய அணையாக, ஐந்தடுக்கு நீர்மின் நிலையங்களுடன் அமையவுள் ளது. கடந்த சனிக்கிழமையன்று, இந்த அணைக் கட்டுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் சீன பிரதமர் லீ கியாங் கலந்துகொண்டார்.
இந்த நதிநீர்த் திட்டம், சீனாவுக்கு மிகப் பெரிய பலனளிக்கும் சூழலில், இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் சேதாரத்தை ஏற்படுத்துமென்ற அச்சம் எழுந்துள்ளது. பிரம்மபுத்திரா நதியை அணையின் மூலமாகத் தடுப்பதன் காரணமாக பிரம்மபுத்திரா நதியின் கணிசமான பகுதி வறண்டு போகவும் வாய்ப்புள்ளதாக அருணாச் சலபிரதேச முதலமைச்சர் பெமா காண்டு கவலை தெரிவித்துள்ளார். அதேபோல, மழை வெள்ளச் சூழலில் அணையில் தேக்கப்படும் தண்ணீர் மொத்தமாகத் திறந்துவிடப்படும்போது, ஏற் படும் வெள்ளப்பெருக்கு, வடகிழக்கு மாநிலங் களில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தவும் வாய்ப் புள்ளது. அதேபோல், பிரம்மபுத்திரா ஆற்றை தனது கட்டுக்குள் சீனா வைத்துக்கொள்வதன் மூலம், இந்தியாவுக்கான தண்ணீர்த்தேவைக்கு சீனாவை எதிர்பார்க்கும் சூழலுக்கு இந்தியா தள்ளப்படுமென்றும், இந்தியப் பொருளா தாரத்திலேயே சீனா தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்றும் அஞ்சப்படுகிறது.
இந்தியத் தரப்பிலிருந்து சீனாவுக்கு கடிதமெழுதிய போதும் அதை சீனா கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. அதேவேளை, இத்திட்டம், சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, உள்ளூர்த் தேவையை நிறைவுசெய்யும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. மேலும், பிரம்மபுத்திரா வில் அணை கட்ட சீனாவுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளதென்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், சீனாவின் புதிய அணையி லிருந்து வெள்ள நீர் திறக்கப்பட்டால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க, இந்தியாவும் ஓர் புதிய அணையைக் கட்டலாமா என ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது.