கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மதுரையில் வரவேற்ற பிரமுகராக ஊடகக் கவனத்தை ஈர்த்த மிளகாய்ப்பொடி வெங்கடேசனை, கட்டப்பஞ்சாயத்து, துப்பாக்கி காட்டி மிரட்டிய குற்றங்களுக்காக உள்ளே தூக்கி வைத்துள்ளது தமிழக போலீஸ்!
கடந்த ஜூன் 7-ஆம் தேதி மதுரைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு தலைவர் மிளகாய்ப்பொடி வெங்கடேசன் வரவேற்றார். அந்த புகைப்படத்தை, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி சுடச்சுட தமிழக காவல்துறை, ஆந்திர காவல்துறை, தெலுங்கானா காவல்துறை, பா.ஜ.க. பிரபலங்கள், தி.மு.க. ஐ.டி. பிரிவு என பல இடங்களுக்கும் வெங்கடேசன் டேக் செய்து, தேசிய அரசியல் கட்சியில் நான் எந்தளவுக்கு உயரத்தில் இருக்கிறேன், என்னை கைதுசெய்ய முடியுமா? என காவல்துறைக்கே சவால்விட்டு பலரையும் தெரிந்தே வம்புக்கு இழுத்தார்.
மிளகாய்ப்பொடி வெங்கடேசன் (வெங்க டேஷின் தாயார் மிளகாய்ப்பொடி வியாபாரம் செய்துவந்துள்ளார். அதனால் மிளகாய்ப்பொடி வெங்கடேசன் என ஏரியாக்களில் இவர் பெயர் பிரபலமானது) மேல் தமிழகத்தில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஆந்திரா, தெலுங்கானாவிலும் இவர் மீது 40 வழக்குகள் வரை உள்ளன. சில மாதங்களுக்கு முன் தமிழக போலீசால் குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார் இந்த வெங்கடேசன்.
இத்தகைய நபர், போலீஸை டேக் செய்து புகைப்படம் போடுவதா எனப் பார்த்தது காவல்துறை. தக்க பாடம் புகட்ட அவர்மீதான முக்கிய வழக்குகளை எல்லாம் தூசிதட்டியது. ரியல் எஸ்டேட் அதிபரான கண்ணன் என்பவரை துப்பாக்கி காட்டி மிரட்டியது போன்ற பல வழக்குகள் அவர்மீது இருந்தன.
கூடவே நுங்கம்பாக்கத்திலுள்ள பானசோனிக் நிறுவனத்தில் துணைமேலாளராக இருக்கும் தீபன்

கூடவே நுங்கம்பாக்கத்திலுள்ள பானசோனிக் நிறுவனத்தில் துணைமேலாளராக இருக்கும் தீபன்சக்கரவர்த்தி என்பவரை மிரட்டிய வழக்கும் இருந்தது. பாடியநல்லூரைச் சேர்ந்த கணபதிலால் என்பவருக்கு 48 லட்சத்துக்கு எலெக்ட்ரிக் சாதனங்களை விநியோகம் செய்துள்ளார் தீபக். ஆனால் வாங்கிய பொருட்களுக்கு கணபதி பணம்தராத நிலையில், பணத்தை திரும்பவாங்க வெங்கடேசனை அணுகியுள்ளார் தீபக். ஒரு தொகை பேசி, முதலில் 1 லட்சம் அட்வான்ஸ் கேட்டுள்ளார் வெங்கடேசன். அட்வான்ஸ் கொடுத்தும், கணபதியிடமிருந்து பணத்தை வாங்கித்தராத நிலையில் கொடுத்த பணத்தை தீபன் சக்கரவர்த்தி கேட்க, தீபக்குக்கு வெங்கடேசனும், கணபதிலாலும் சேர்ந்து கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த வழக்கையும் சேர்த்து கையிலெடுத்த செங்குன்றம் காவல்துறை, நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து, வெங்கடேசனையும் அவரோடு சேர்ந்து தீபனை மிரட்டிய கணபதிலால், கோகுலவாசன் மூவரையும் கைதுசெய்து சிறையிலடைத்துள்ளது.
போலி ஆவணங்கள் தயாரித்து அதன்மூலம் நிலத்தை அபகரிக்க முயன்றதாக ஆவடி காவல் ஆணையரகத்தில் பதிவுசெய்யப்பட்ட எஃப்.ஐ. ஆரில் மிளகாய்ப்பொடி வெங்கடேசன் கைதுசெய்யப்பட்டார். இதுதவிர மற்றொரு எஃப்.ஐ.ஆரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.18 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாகவும் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் பதிவான குற்றச்சாட்டில் கே.ஆர்.வெங்கடேசனும், சீனிவாசனும் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஏ1 ஆன வெங்கடேசனிடமிருந்து இரு கைத்துப்பாக்கி களும், ஏ2 ஆன சீனிவாசனிடமிருந்து ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளன. வேறுபல வழக்குகளையும் தமிழக காவல்துறை தூசிதட்ட ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து பா.ஜ.க. அவசர அவசரமாக வெங்கடேசனை, பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு மாநிலச் செயலாளர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியுள்ளது.
யார் இந்த மிளகாய்ப்பொடி வெங்கடேசன்?
பர்மாவிலிருந்து தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தது வெங்கடேசனின் குடும்பம். ஆரம்பகாலத்தில் வறுமையால் சவுதி அரேபியாவில் ஒட்டகம் மேய்க்கப்போன வெங்கடேசன், சில காலம் மட்டுமே இங்கிருந்தார். தனது தாயார் இறந்ததால் தமிழகம் திரும்பினார். அதன்பிறகுதான் அடிதடி, மோசமான நண்பர்களின் பழக்கம் என வாழ்க்கை திசைமாறியது.
இந்தக் காலகட்டத்தில்தான் இவருக்கு செம்மரக் கடத்தலும் அதனால் ஏற்படும் ஆதாயமும் பற்றித் தெரியவந்தது. சில பர்மா நண்பர்களின் துணையோடு, ஆந்திராவிலிருந்து செம்மரக் கடத்தலில் ஈடுபடத் தொடங்கினார். இதனால் ஆந்திர காவல்துறை இவர்மீது ஒரு கண் வைத்திருந்தது. சந்திரபாபு நாயுடுவின் முந்தைய ஆட்சிக்காலத்தில், செம்மரக் கடத்தல் பேர்வழிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் 2015-ல் செம்மரக் கடத்தல் வழக்கில் சிறைபிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டார்.
செம்மரக் கடத்தலில் மிகப்பெருமளவில் சேர்த்த சொத்தில் மிகப்பெரிய சொகுசு பங்களா கட்டியதோடு, உள்ளேயே தியேட்டர், நீச்சல் குளம், பார் என அவரது வாழ்க்கையின் தரமே மாறியது. அந்தக் காசில் சக ரௌடிகளுக்கு சில்லறைகளை விட்டெறிந்து அவர்களைத் தன் பக்கம் வைத்துக்கொண்டதோடு, போலீஸ் உயரதிகாரிகளையும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் அழைத்து விருந்துவைத்து தன் கைக்குள் வைத்துக்கொள்வதில் கில்லாடி எனவும் பெயர்பெற்றார். இதுவும் போதாது என்றுதான் அரசியல் பக்கம் பார்வையைத் திருப்பினார். முதலில் அ.தி.மு.க. பக்கம் சென்ற பார்வை, தன் மீது தெலுங்கானா, ஆந்திராவிலும் வழக்கிருப்பதால் பா.ஜ.க.வின் கரிசனம் தனக்குக் கிடைத்தால் தேசிய அளவில் உதவியாக இருக்கும் என்றுதான் பா.ஜ.க.வுக்குக் குறிவைத்தார்.
செம்மரக் கடத்தலில் சம்பாதித்த பணத்தில், கே.ஆர்.வி. ரியல் எஸ்டேட், கே.ஆர்.வி. கம்பெனி, பைனான்ஸ் உள்பட பல நிறுவனங்களும், 5-ஆம் வகுப்பு வரையான மெட்ரிக்குலேசன் பள்ளியையும் தொடங்கி நடத்திவந்துள்ளார். இது கட்டப் பஞ்சாயத்துத் தொழிலில் கிடைத்த வரவுகளுக்கு கணக்குக் காட்டுவதற்கும், எல்லாம் சட்டரீதி யாகத்தான் சம்பாதிக்கப்படுகிறது என்று காட்டுவதற்குமான ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது.
வெங்கடேசன் கார் பிரியரும்கூட. வீட்டில் பெராரி, பி.எம்.டபிள்யூ உள்பட 7 கார்கள் உண்டு. ஒவ்வொரு சமயத்துக்கும் ஒரு காரைப் பயன்படுத்துவார். வெறுமனே ஆடம்பரத்துக்காக மட்டுமின்றி, பாதுகாப்பு நோக்கத்திலும் இதைக் கடைப்பிடித்துவந்தார். தற்போது அவரிடமிருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு துப்பாக்கி பெரட்டா வகையைச் சேர்ந்தது. மற்றொரு துப்பாக்கி, லாமா வகையைச் சேர்ந்தது. இந்த துப்பாக்கியை வைத்துத்தான் கண்ணனை மிரட்டியுள்ளார் என போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
எல்.முருகன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்தபோதே, 2021-ல் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர் வெங்கடேசன். அந்தக் காலகட்டத்தில் கட்சியில் சேர்ந்ததும் கட்சி நிதியாக ரூ.50 லட்சம் கொடுத்ததாக பரபரப்பாக பேச்செழுந்தது. அன்று அவர் கட்சியில் சேர்க்கப்பட்டபோதே அவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளிதான். செம்மரக் கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. இத்தனையிருந்தும் குற்றப் பின்னணியுடைய வெங்கடேசுக்கு ஓ.பி.சி. பிரிவு மாநிலச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இவர், வரவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மாதவரம் தொகுதியில் போட்டியிடும் திட்டத் தோடு செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காகவே கோவில் திருவிழாக்கள், கட்சி நிகழ்ச்சிகள் என அனைத்திலும் பணத்தை தாராளமாக செலவழித்து வந்துள்ளார்.
தேசிய அளவிலான கட்சியில் பதவியில் சேர்ந்தபின்னும் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் இல்லை. மாறாக, தனது பதவியை, தனது செயல்களுக்கு ஒரு கவசமாகப் பயன்படுத்திக் கொண்டு வழக்கமான செயல்பாடுகளைத் தொடர்ந்துவந்தார்.
இத்தகைய குற்றப் பின்னணியுடைய நபரை, ஒன்றிய உள்துறை அமைச்சருக்கு பொன்னாடை போர்த்துவதற்கான பட்டியலில் எப்படி இடம்பெறச் செய்தனர் என்ற சர்ச்சை எழுந்தது. இதையொட்டி பா.ஜ.க. தலைமை, வெங்க டேசன் பெயரை வரவேற்புக் குழுவில் சேர்த்தவர்கள் யார் என்ற விசாரணையை மேற்கொண்டுவருகிறது.
பா.ஜ.க.வின் அந்த விசாரணை முடிவதற்கு முன்பாகவே, தமிழக காவல்துறை மிளகாய்ப்பொடி வெங்கடேசன், மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான மின்ட் ரமேஷ் ஆகியோரை அடுத்தடுத்து கைதுசெய்துள்ளது.
வழக்குகள் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை பெறுவதற்குக்கூட வாய்ப்பிருக்கிற மிளகாய்ப்பொடி வெங்கடேசன், பா.ஜ.க.வின் அனுராக் தாக்கூர், நயினார், தமிழிசை, எல்.முருகன், ஆடுமலை, வினோத் பி.செல்வம், கேசவவிநாயகம் உள்ளிட்ட தலைவர்களோடு இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் காணப்படுகின்றன. இத்தனை தலைவர்களில் ஒருவருக்குக்கூடவா வெங்கடேசன் சரித்திரப் பதிவு குற்றவாளி என்று தெரியாமல் போயிருக்கும்?
ஆக, குற்றவாளி எனத் தெரிந்துமே, கட்சியை வளர்ப்பதற்காக இத்தகைய கிரிமினல் நபர்களை கட்சியில் அனுமதித்து இடம்கொடுத்தார்களா என்ற கேள்வியெழுகிறது. பா.ஜ.க. தங்களுக்கான கவசமாக இருக்கும் என நினைத்து கட்சியில் சேர்ந்த பல கிரிமினல்கள், வெங்கடேசனின் கைதால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.