க்ரைம் புரோக்கர்களால் பிச்சை எடுக்கும் சிறார்கள்! -அண்ணாமலை நகரை அதிரவைக்கும் பிஸ்னஸ்!

cc

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதிலும் பௌர்ணமி நாள் என்றால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி எனப் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணமலையில் குவிவார்கள். 14.5 கி.மீ தூரமுள்ள கிரிவலப் பாதையில் வலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டு பரவசம் அடைகின்றனர்.

இங்குவரும் பக்தர்களை நம்பி, ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தள்ளுவண்டி, உணவு வணிகம், பொம்மை விற்பது, ஜூஸ் கடை, ஐஸ்கிரீம் வண்டி, இளநீர் கடை, பெண்களுக்கான ஆபரண விற்பனை என திரண்டுவந்து வியாபாரம் செய்கின்றனர். இதுதான் இவர்களின் வாழ்வாதாரம்.

cc

இந்தப்பகுதியில் உள்ள ஒருசில பள்ளி, கல்லூரி மாணவர்களும், படிப்புச்செலவை சமாளிக்க, மாலை நேரங்களில் கற்பூரம் விற்பது, டீ விற்பது என்றெல்லாம் வரு மானத்தைத் தேடு வதும் வழக்கம். இவர்கள் உழைப்பை நம்புகிற ரகம் என்றால், அங்கேயே இன்னொரு ரகத்தி னர், சூழலை மிரட்டி வருகின்றனர்.

அவர்கள் உழைக் காமல் உடம்பை வளர்க்கும் ரகத்தினர். கிரிவலப் பாதையில் சாதுக்கள் மற்றும் சன்னியாசிகள் என்ற பெயரில், சாலை ஓரம் அமர்ந்துகொண்டு பக்தர்களிடம் இவர்கள் யாசகம் பெறுகின்றனர். இவர்களுக்கு மூன்று வேளையும் தேடிவந்து அன்னதானம் வழங்குகிறார்கள் ஆன்மீக அறக்கட்டளையினர். இதனால் இவர்கள் எங்கும் செல்லாமல் கிரிவலப்பாதை நடை பாதையை தங்களது வாழ்விடமாக மாற்றி வாழ்ந்து வருகின்றனர். சாதாரண நாட்களில் சாராசரியாக 800 சன்னியாசிகள் வரை இ

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அதிலும் பௌர்ணமி நாள் என்றால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி எனப் பல பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணமலையில் குவிவார்கள். 14.5 கி.மீ தூரமுள்ள கிரிவலப் பாதையில் வலம் வந்து அண்ணாமலையாரை வழிபட்டு பரவசம் அடைகின்றனர்.

இங்குவரும் பக்தர்களை நம்பி, ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தள்ளுவண்டி, உணவு வணிகம், பொம்மை விற்பது, ஜூஸ் கடை, ஐஸ்கிரீம் வண்டி, இளநீர் கடை, பெண்களுக்கான ஆபரண விற்பனை என திரண்டுவந்து வியாபாரம் செய்கின்றனர். இதுதான் இவர்களின் வாழ்வாதாரம்.

cc

இந்தப்பகுதியில் உள்ள ஒருசில பள்ளி, கல்லூரி மாணவர்களும், படிப்புச்செலவை சமாளிக்க, மாலை நேரங்களில் கற்பூரம் விற்பது, டீ விற்பது என்றெல்லாம் வரு மானத்தைத் தேடு வதும் வழக்கம். இவர்கள் உழைப்பை நம்புகிற ரகம் என்றால், அங்கேயே இன்னொரு ரகத்தி னர், சூழலை மிரட்டி வருகின்றனர்.

அவர்கள் உழைக் காமல் உடம்பை வளர்க்கும் ரகத்தினர். கிரிவலப் பாதையில் சாதுக்கள் மற்றும் சன்னியாசிகள் என்ற பெயரில், சாலை ஓரம் அமர்ந்துகொண்டு பக்தர்களிடம் இவர்கள் யாசகம் பெறுகின்றனர். இவர்களுக்கு மூன்று வேளையும் தேடிவந்து அன்னதானம் வழங்குகிறார்கள் ஆன்மீக அறக்கட்டளையினர். இதனால் இவர்கள் எங்கும் செல்லாமல் கிரிவலப்பாதை நடை பாதையை தங்களது வாழ்விடமாக மாற்றி வாழ்ந்து வருகின்றனர். சாதாரண நாட்களில் சாராசரியாக 800 சன்னியாசிகள் வரை இங்கு இருக்கிறார்கள். அதுவே பௌர்ணமி மற்றும் திருவிழா நாட்களின்போது இவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்து விடுகிறது.

இவர்களில் சிலர், கோவில் கட்டுகிறோம், கும்பாபிஷேகம் செய்யப்போகிறோம், அன்னதானம் செய்யப்போகிறோம் என்கிற பெயரிலும் பக்தர்களை ஏமாற்ற முயல்கின்றனர். இந்த நிலையில், பொதுஇடங்களில் சிறார்கள் யாசகம் கேட்டுக் கையேந்தும் காட்சிகளையும் அங்கே பார்க்க முடிகிறது. சிறுவர்கள் என்றால் பொதுமக்கள் மனம் இரங்குவார்கள் என்பதால், கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு மற்றும் வெளிமாநில சிறுவர்களையும், மாற்றுத் திறனாளிகளையும் அழைத்து வந்து கிரிவலப் பாதையில் புரோக்கர்கள் சிலர் பிச்சை எடுக்க வைக்கின்றனர். இதுகுறித்து சில சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார் கூறினர்.

இதைத் தொடர்ந்து கிரிவலப்பாதையில் கடந்த 28 ஆம் தேதி, மாவட்ட சமூகநலத் துறை, காவல்துறை அலுவலர்கள் இணைந்து ஆய்வு செய்தனர்.

அது பௌர்ணமி நாள். பிச்சை கேட்டு கையேந்திக்கொண்டு பரிதாபமாக நின்று கொண்டிருந்த சிறுவர்களை அதிகாரிகள் மடக்கினர். இதில் 9 சிறுமிகள், 5 சிறுவர்கள் என 14 சிறார்கள் இருந்தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது, சேலம், கள்ளக்குறிச்சி, மதுரை, செய்யாறு, மோரணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது. பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறு வர், சிறுமிகளை அலுவலர்கள் விசாரிப்பதைப் பார்த்த புரோக்கர்கள், அங்கிருந்து எஸ்கேப் ஆனார்கள். இதனைத் தொடர்ந்து 14 சிறுவர் களையும் அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

cc

இதைப்பற்றி சமூக நலத்துறையைச் சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் நல அலுவலர் எலிசபெத்திடம் கேட்டபோது, "எங்கள் ஆய்வில் பிடிபட்ட சிறார்களை விசா ரித்த போது, பல பகீர் தகவல்கள் கிடைத்தன. குறிப்பாக, மதுரையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 குழந்தைகள். அதில் ஒரு குழந்தைக்கு மன நலம் சரியில்லை. குடும்பம் நடத்தவும், மருத்துவம் பார்க்கவும் அவர்களுக்கு வருமான மில்லை. அதனால் வருமானத்துக்காக அங்கி ருந்து திருவண்ணாமலை வந்து பிச்சை யெடுத்தோம் என்றார்கள். இப்படி ஒவ்வொரு வரும் ஒரு காரணத்தைச் சொன்னார்கள். அரசு தரும் நலத்திட்டங்கள் குறித்து அவர்களிடம் விளக்கமாகக் கூறினோம். பிச்சையெடுத்த பிள்ளைகளை சம்பந்தப்பட்ட மாவட்டங் களுக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள சமூகநலத்துறையின் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அமைப்பின் வழியாக விடுதியில் தங்கவைத்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வெளிமாநிலங்களைச் சேர்ந்த சிறுவர்கள் கூட அதிகளவில் கிரிவலப்பாதை யில் இருந்தனர். அவர்கள் ஏதாவது பொருள் விற்றுக்கொண்டு இருக்கின்றனர். விழாக் காலத்தில் மட்டும் விற்கிறோம் எனச் சொல்கிறார்கள், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அவர்களுடனே இருக் கிறார்கள். சிறார்கள் பிச்சையெடுப்பதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகிறோம்'' என்றார் அக்கறையாய்.

திருவண்ணாமலை சமூக செயற் பாட்டாளர் பாஸ்கர் ஆறுமுகமோ, "திருப்பதியில் விபச்சாரம் அதிகளவில் நடந்தது. அதனைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசாங்கம் பெரியளவில் முயற்சியெடுத்துத் தடுத்தது. திருவண்ணாமலையிலும் ஒரு காலத்தில் அப்படி நடந்தது. பாலியல் தொழில், போதைப்பொருள் விற்பனை, சிறார்களின் பிச்சை என்று இப்போதும் இங்கே நடக்கிறது. சில குழந்தை களின் பெற்றோர்களே இதனைச் செய்வதைப் பார்க்க முடிகிறது. காரணம், அவர்களின் வறுமை நிலைதான். இந்தியாவில் சில சமூக மக்கள் இன்றளவும் கணக்கெடுப்பில் கொண்டுவரப்படவில்லை. இதனால் அவர்களுக்கு ஆதார் இல்லை, ரேசன் அட்டை இல்லை, வாக்காளர் அடையாள அட்டை இல்லை. பெரும்பாலும் பட்டியலினம், பழங்குடியினம் மற்றும் நாடோடி சமூக பிரிவைச் சேர்ந்தவர்கள் தான் இவர்கள். வருமானத்துக்காக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு மாறிக்கொண்டே இருப்பார்கள். பௌர்ணமி அன்று திரு வண்ணாமலையில் இருந்தால், அமாவாசை யன்று மேல்மலையனூர் போய்விடுவார்கள். பிறகு தஞ்சாவூர், மதுரை, மேல்மருவத்தூர், பாண்டிச்சேரி என இடம்மாறிக்கொண்டே இருப்பார்கள். இதனால் அவர்கள் எவ்வளவு பேர் உள்ளார்கள் என்கிற கணக்கு அரசாங்கத்திடம் இல்லை.

தமிழ்நாட்டுக்கு இப்போது கரும்பு வெட்டும் தொழிலாளர்களாக அதிகளவில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் வருகிறார்கள். வேலை முடிந்ததும் வேறு இடத்துக்கு வேலைக்கு போகிறார்கள். பிறகு திரும்பவும் ஊருக்கு போகிறார்கள். வேலையே கிடைக் காதபோது சிலர் பிச்சையெடுக்கிறார்கள். எப்படியிருந்தாலும் இவர்களின் வாழ்விடம் சாலையோரங்களாகவே இருக்கிறது, இவர் களின் பிள்ளைகளும் அப்படியே வளர்கின்றனர். பீகார், உ..பி. போன்ற மாநில கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் செய்தபோது அம்மக்களின் வாழ்வியலை பார்த்திருக்கிறேன். பீகாரில் நாளந்தாவில் இருந்து ராஜ்புர் என்கிற இடம் 20, 25 கி.மீ. தூரம் இருக்கும். 5 பேருக்கு ஆட் டோவில் மொத்தமே 150 ரூபாய் தான் வாங்கு கிறார்கள். குழந்தைகளுக்கு செலவு செய்வது என்பது அங்கு குறைவு. பொம்மை, புல்லாங் குழல் போன்ற பொருட்களை இங்கே தினமும் 10 விற்பனை செய்தால் அங்கே ஒன்று விற்பதே பெரிது. வறுமையால் இடம்மாறி வருபவர்கள் தென்னிந்திய மக்களிடம் உள்ள பணப்புழக் கத்தை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். இங்கு ஏதாவது ஒரு வேலை செய்து பிழைத்துக் கொள்ள முடியும் என நம்பு கிறார்கள். அதனால்தான் சமீப மாக பொம்மை, பந்து, பானிபூரி, புல்லாங்குழல், பாதாம்பால் என்று விற்பதற்கு அதிகளவில் வருகின்றனர். இங்கு வந்தபின்பு சிலர் பிச்சையெடுக்கவும் செய்கிறார்கள். அதனால் முதலில் சிறார்களின் பெற்றோர்களைக் கணக்கெடுப்பில் கொண்டுவந்து, அரசின் திட்டங்கள் மூலம் அவர் களுக்கு நாம் உதவினால் படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்படும்''’என்றார் ஆலோசனையாக.

இன்னொரு திடுக்கிட வைக்கும் தகவல் என்னவென்றால்...

வருமானத்துக்காக பெற்றோர்களே குழந்தைகளை குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறார்கள். குழந்தைகளை வைத்து திருடும் பெற்றோர்களும், திருடுவதற்கு பயிற்சி தந்து, திருட்டு கும்பலுக்கு குழந்தைகளை குத்தகைக்கு தரும் கிராம மக்களும் இந்த மண்ணில் இருக்கிறார்கள். குழந்தைகளைக் கடத்திச்சென்று பாலியல் தொழிலில் ஈடு படுத்தும் கும்பல்களும் இங்கே இருக்கின்றன.

யார் அவர்கள்?

(தொடரும்...)

-து. ராஜா

nkn041123
இதையும் படியுங்கள்
Subscribe