Advertisment

சிறுவர்களுக்கு பாலியல் கொடுமை! கத்தோலிக்க கார்டினலுக்கு 6 ஆண்டு சிறை! -டாக்டர். அண்ணாமலை மகிழ்நன், PhD, ஆஸ்திரேலியா

ss

ன்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியவர்களில், யாரேனும் ஒருவனுக்காவது எவனாவது துன்பம் விளைவித்தால், அப்படித் துன்பம் இழைத்தவனின் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துவதே அவனுக்கு நலம் பயக்கும் செயலாக அமையும்'’-மத்தேயு 18:6, விவிலியம்.

Advertisment

குழந்தைகளை உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், மத குருமார்கள் ஆகியோரின் பாலியல் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பது என்பது இப்பொழுது நம் முன் நிற்கும் ஒரு மகத்தான பணியாகவும், சுமை யாகவும் இருக்கிறது. குழந்தைகளைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கு பவர்களை என்ன செய்ய வேண்டும் என்று மேலே குறிப்பிட்டுள்ள விவிலிய வசனம் மத்தேயு 18:6 கூறுகிறது.

ppp

கத்தோலிக்க திருச்சபை உலகெங்கும் நடத்தும் தலைசிறந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இந்த சாத்தான் பிடித்த பாதிரிகள் கூட்டம் பாலியல் இம்சைகளுக்கும், வன்புணர்வு களுக்கும் ஆளாக்கி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்குகின்றது.

மிக அதிகக் கல்விக் கட்டணம் வசூலிக்கும் கத்தோலிக்கப் பள்ளிகள், தனித்திறமை வாய்க்கப் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி அவர்களைத் தங்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளும். இந்த மாணவர்களுக்கு கல்வி, தங்குமிடம், உணவு அத்தனையும் இலவசம்.

Advertisment

கார்டினல் பெல்லுக்கு 6 ஆண்டு சிறை

தங்களின்

ன்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியவர்களில், யாரேனும் ஒருவனுக்காவது எவனாவது துன்பம் விளைவித்தால், அப்படித் துன்பம் இழைத்தவனின் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துவதே அவனுக்கு நலம் பயக்கும் செயலாக அமையும்'’-மத்தேயு 18:6, விவிலியம்.

Advertisment

குழந்தைகளை உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், மத குருமார்கள் ஆகியோரின் பாலியல் கொடுமைகளிலிருந்து பாதுகாப்பது என்பது இப்பொழுது நம் முன் நிற்கும் ஒரு மகத்தான பணியாகவும், சுமை யாகவும் இருக்கிறது. குழந்தைகளைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கு பவர்களை என்ன செய்ய வேண்டும் என்று மேலே குறிப்பிட்டுள்ள விவிலிய வசனம் மத்தேயு 18:6 கூறுகிறது.

ppp

கத்தோலிக்க திருச்சபை உலகெங்கும் நடத்தும் தலைசிறந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இந்த சாத்தான் பிடித்த பாதிரிகள் கூட்டம் பாலியல் இம்சைகளுக்கும், வன்புணர்வு களுக்கும் ஆளாக்கி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்குகின்றது.

மிக அதிகக் கல்விக் கட்டணம் வசூலிக்கும் கத்தோலிக்கப் பள்ளிகள், தனித்திறமை வாய்க்கப் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி அவர்களைத் தங்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளும். இந்த மாணவர்களுக்கு கல்வி, தங்குமிடம், உணவு அத்தனையும் இலவசம்.

Advertisment

கார்டினல் பெல்லுக்கு 6 ஆண்டு சிறை

தங்களின் பாடும் திறமைக்காக கல்வி உதவித் தொகை கிடைத்து, தேவாலயங்களில் தேவனுக்கான தேவ கீதத்தை இசைக்கும் இசைக் குழுவில் (Choir) இருந்த மாணவர்களை வன்புணர்வு செய்ததற் காகத்தான், உலக கத்தோலிக்க திருச்சபையின் மூத்த தலைவர்களில் மூன்றாவது நிலையில் இருக்கும் 78 வயதான, கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு ஆறாண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப் பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கார்டினல் ஜார்ஜ் பெல் (Cardinal George Pell) மெல்பேர்ன் நகரிலிருந்து 115 கி.மீ. தொலைவிலுள்ள பலராட் (Balarat) என்னும் ஊரில் 1941ஆம் ஆண்டு பிறந்தவர். பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பலராட்டைச் சுற்றி பல தங்கச் சுரங்கங்கள் இருந்தன. இப்பொழுதும் சில தங்கச் சுரங்கங்கள் உள்ளன. கார்டினல் பெல் சிறந்த விளையாட்டு வீரர்.

கார்டினல் பெல் 1960-ல் கத்தோலிக்க மத போதகர்களுக்கான கல்லூரியில் சேர்ந்து 1966-ல் பாதிரியாரானார். தொடர்ந்து படித்து 1971-ல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் ‘தேவாலய வரலாற்றில்’ (Church History) Ph D பட்டம் பெற்றார். 1983-ல் கல்வியியலில் முதுகலைப் பட்டம் (M Ed) பெற்றார். இவ்வளவு கல்வித் தகுதிகளைக் கொண்டதனாலும், சிறப்பான சேவையைச் செய்ததனாலும் படிப்படியாக திருச்சபையில் உயர்ந்து 1996-ல் மெல்பேர்ன் ஆர்ச் பிஷப் ஆனார். பின்னர் 2003-ல் போப்பாண்டவருக்கு அடுத்த நிலையிலுள்ள கார்டினல்களில் ஒருவர் ஆனார். மாணவர்களை வன்புணர்வு செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட பொழுது கார்டினல் பெல், கத்தோலிக்கத் தலைமையகமான வாடிகன் நகரில் போப்பாண்டவரின் நிதித்துறைச் செயலாளராக இருந்தார்.

pp

ஆர்ச் பிஷப்பின் திருவிளையாடல்கள்

மெல்பேர்ன் ஆர்ச் பிஷப்பின் ஆளுகையின் கீழேதான் கத்தோலிக்க திருச்சபை நடத்தும் அனைத்துப் பள்ளிகளும் உள்ளன. அந்தப் பள்ளிகளில் இருந்து சிறப்பாகப் பாடக்கூடிய மாணவர்கள் தேவாலயப் பிரார்த்தனைக் கூட்டங்களின்போது தேவ கீதம் பாடுவதற்காக மெல்பேர்னின் புகழ் வாய்ந்த புனித பேட்ரிக் தேவாலயத்திற்கு வருவார்கள். இந்த மாணவர் களிடம்தான் இன்றைய கார்டினலும் அன்றைய ஆர்ச் பிஷப்புமான ஜார்ஜ் பெல், பிரார்த்தனைக் கூட்டம் முடிந்த பிறகு பாலியல் கொடுமையைச் செய்துள்ளார்.

காவல்துறை புலன் விசாரணை

குழந்தைகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதைப் பற்றி அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷனில், கிறித்துவப் பாதிரியார்கள் சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவதைப் பற்றிய கடுமையான புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதையடுத்து விக்டோரிய மாநில காவல் துறையினர் 2013-ல் ஒரு புலன் விசாரணையைத் (Operation Tethering) தொடங்கினர். அப்பொழுது கார்டினல் பெல், 1978 முதல் 2001 வரையிலான கால கட்டத்தில், தன் ஆளுகையின் கீழ் இருந்த 16 வயதிற்குக் குறைவான சிறுவர் களில், 5 முதல் 10 பேரை பாலியல் வன்புணர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. காவல்துறையினர் கார்டினல் பெல்லைத் தங்கள் புலன் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவரின் மரணம்

1996-ல் மெல்பேர்ன் நகரத்தின் புகழ் வாய்ந்த புனித பேட்ரிக் (St Patrck’s Cathedral) தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் முடிந்ததன் பின்னர் 13 வயதே நிரம்பிய, கல்வி உதவித்தொகையில் படிக்க வந்திருந்த மாணவர் த’என்பவரை கார்டினல் பெல் வன்புணர்வு செய்திருக்கிறார். அதேபோல் மாணவர் ஓ’என்பவரையும் வன்புணர்வு செய்திருக்கிறார். ஒரு மாதகால இடைவெளியில் இவர்களைப் பலமுறை தன் காம இச்சைக்குப் பலியாக்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒரு மாணவனின் முன்னிலையில் இன்னொரு மாணவனை வன்புணர்வு செய்திருக்கிறார்.

மாணவன் R’’மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகி, தன் 14-ஆம் வயதில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கி, 2014-ஆம் ஆண்டு அளவிற்கதிகமாக ஹெராயின் என்கிற போதைப் பொருளை உட்கொண்டு மரணித்து விட்டார். இவர் இறக்கும் பொழுது வயது 31.

மாணவர் J காவல் துறையில் புகார்

மாணவர் ‘R-ன் மரணத்தால் நிலை குலைந்த அவர் நண்பர் ‘J,’ 2015-ஆம் ஆண்டு தன்னையும் தன் நண்பர் மாணவர் R-ஐயும் கார்டினல் பெல் 1996-ஆம் ஆண்டு புனித பேட்ரிக் தேவாலயத்தில் வன்புணர்வு செய்தார் என்று புகாரளித்தார். 2016-ல் இதேபோல் கார்டினல் பெல்லால் சீரழிக்கப்பட்ட மற்றொரு மாணவர் உடல் நலிவுற்று மரணமடைந்தார். இதனால், காவல் துறையின் புலன்விசாரணை கார்டினல் பெல்லைச் சுற்றி இறுகியது. 2017 ஜூன் மாதத்தில் கார்டினல் பெல் சிறுவர்களை வன்புணர்வு செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

வழக்கு விசாரணையும் தீர்ப்பும்

கார்டினல் பெல் மீதான முதல் வழக்கு விசாரணை இரத்து செய்யப்பட்டது. பின்னர் இரண்டாம் விசாரணை 2018-ல் நான்கு வாரங்களுக்கு நடைபெற்றது. கார்டினல் பெல் குற்றவாளி என்று நீதிமான்கள் ஒருமித்த தீர்ப்பை வழங்கினார்கள்.

ஒரு போப்பாண்டவர் மறைகிற பொழுது, அடுத்த போப்பாண்டவர், கார்டினல்கள் என்கிற மத குருமார்களில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுவார். போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் நோய்வாய்ப்பட்டதன் காரணமாக 2013-ஆம் ஆண்டு போப்பாண்டவர் பதவியைத் துறந்தார். அப்பொழுது போப்பாண்ட வரைத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில் ஆஸ்திரேலியக் கார்டினலாக உள்ள ஜார்ஜ் பெல் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அர்ஜெண்டைனா வைச் சேர்ந்த போப்பாண்டவர் ஃப்ரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். நல்லவேளை கார்டினல் பெல் போப்பாண்டவராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் போப்பாண்ட வருக்கே சிறைத்தண்டனையா என உலகம் வாயைப் பிளந்திருக்கும்.

nkn300819
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe