Advertisment

குழந்தை திருமணங்கள்... பாலியல் வன்கொடுமைகள்! - புதுக்கோட்டை மாவட்ட பகீர்!

dd

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பேசிய கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத் துரை, "நம்ம கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் கடந்த 2 மாதங்களில் 11 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற குற்றங்கள் இல்லாத தொகுதியாக மாற்ற முன்னாள் மாணவர்களான நாம் தொடர்ந்து செயல்பட வேண்டியுள்ளது" என்று கூறியது அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

cc

அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சதாசிவம், "புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 மாதங் களில் 31 குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இந்த குற்றங்கள், அறந்தாங்கி, பொன்னமராவதி, விராலிமலை, அன்னவாசல், கந்தர் வக்கோட்டை பகுதிகளில் தான் அதிகம் நடந்துள் ளது'' என்ற குண் டைத் தூக்கிப்போட் டார். அதேபோல், புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து வழங்கிய 5

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பேசிய கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத் துரை, "நம்ம கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் கடந்த 2 மாதங்களில் 11 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பது வேதனை அளிக்கிறது. இது போன்ற குற்றங்கள் இல்லாத தொகுதியாக மாற்ற முன்னாள் மாணவர்களான நாம் தொடர்ந்து செயல்பட வேண்டியுள்ளது" என்று கூறியது அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

cc

அதேபோல, மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சதாசிவம், "புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 மாதங் களில் 31 குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தி இருக்கிறோம். இந்த குற்றங்கள், அறந்தாங்கி, பொன்னமராவதி, விராலிமலை, அன்னவாசல், கந்தர் வக்கோட்டை பகுதிகளில் தான் அதிகம் நடந்துள் ளது'' என்ற குண் டைத் தூக்கிப்போட் டார். அதேபோல், புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா கடந்த ஒரு மாதத்தில் அடுத்தடுத்து வழங்கிய 5 தீர்ப்புகள் அனைவ ராலும் பேசப்பட்டு வருகிறது.

கீரனூர் பகுதியில் 15 வயதுள்ள பெற்ற மகளையே கர்ப்பமாக்கி ஆண் குழந்தை பிறந்து இறந்த சம்பவத்தில், பாலியல் தாக்குதலுக்கு தான் காரணமில்லை என்று மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்த தந்தைக்கு ஆகஸ்ட் 29ம் தேதி சாகும் வரை ஆயுள் தண்டனையும், அபராதமும் வழங்கப் பட்டது. விராலிமலை அருகே மே.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் கண்ணன் என்பவர் 15 வயது சிறுமியைக் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், செப்டம்பர் 2ம் தேதி ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. பொன்னமரா வதி காவல் சரகம், வார்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கணேசன், 16 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்து திருமணம் செய்துகொண்ட சம்பவத்தில், சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், செப்டம்பர் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப் பட்டது. அதே வார்ப்பட்டு கிராமத்தில், செல்வம் மகன் துரை (எ) அப்பாத்துரை, 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தாக்குதல் நடத்தித் திருமணம் செய்து கொண்டதாக சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில், செப்டம்பர் 28ந் தேதி வழங்கிய தீர்ப்பில் ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது. விராலிமலை காவல் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தாக்குதல் செய்ததாக சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கவரப்பட்டி குழந்தைவேல் கைது செய்யப்பட்டு, 29ம் தேதி சொல்லப்பட்ட தீர்ப்பில், ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

Advertisment

cc

தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட் டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை என்ற செய்திகள் தினசரி பத்திரிகைகளில் வந்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து ஒரு ஆய்வறிக்கையில், 2022 ஜனவரி 1 முதல் செப்டம்பர் 30 வரை 9 மாதங்களில் 59 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. 27 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. 25 குழந்தைகள் வீட்டை விட்டு ஓடி மீட்கப்பட்டுள்ளனர். 3 சிறுமிகள் கர்ப்பமாகி குழந்தை பிறந்து தனித்தனியாகக் காப்பகங்களில் உள்ளனர். 258 ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாப்பு, பராமரிப்பில் உள்ளனர். 3 பிச்சை எடுத்த குழந்தைகள், 3 கொத்தடிமைக் குழந்தைகள் மீட்கப் பட்டுள்ளனர். மாற்றுப் போதைக்கு அடிமையாகிக் கொண்டிருந்த 55 மாணவர் கள் மீட்கப்பட்டு பாதுகாப்பும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றனர். கணக்குக்கு வராத வற்றையும் சேர்த்தால் எண்ணிக்கை இருமடங்காகலாம்.

cc

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் சதாசிவம், "சிறார் குற்றங்களைக் குறைப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சமூகப் பாதுகாப்புத்துறையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட குழந்தைகள் நலக் குழுமம், சிறார் நீதிக்குழுமம், சைல்ட் லைன் ஆகிய அமைப்புகள் உள்ளன. சிறார் குற்றங்கள் நடக்கும்போது முதலில் 1098-க்கு தகவல் கிடைத்த உடன் சைல்ட் லைன் துரிதமாகச் செயல்பட்டு, முதலில் பாதிக்கப்படும் குழந்தையை மீட்டு பாதுகாப்பு அளித்து ஆலோசனைகள் வழங்குவார்கள். அதன் பிறகு மற்ற அமைப்புகள் தேவையான ஆலோ சனைகள் வழங்குவோம். இது சரியான முறையில் செயல்பட்டதாலேயே குழந்தை திருமணங்களைத் தடுக்க முடிந்தது, போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. மேலும், போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான தீர்ப்பு வருவதால் குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது.

மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தொடர்ந்து நல்ல தீர்ப்புகளை வழங்குவதால் இது போன்ற போக்சோ குற்றங்கள் குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது. குழந்தைப்பருவக் குற்றச் செயல்களைத் தடுக்கும் பேராயுதம், அக்குழந்தைகளை ஓவியம், பேச்சு, நடனம் உள்ளிட்ட தனித்திறன்களில் ஈடுபடுத்துவது தான். அதேபோல பள்ளிகளிலேயே இலைமறை காயாக பாலியல் கல்வியையும் குழந்தைகளுக்குச் சொல்லித்தர வேண்டும்'' என்றார். சிறார் குற்றங்களைத் தடுக்க புதுக் கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, மாவட்ட மனநலத் திட்டத்தை இணைத்து அரண் என்ற அமைப்பையும் உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறார்.

nkn081022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe