Advertisment

குழந்தை திருமணங்கள்! முட்டுக் கொடுத்த கவர்னர்! வெளியான ஆதாரங்கள்!

dd

தீட்சிதர்களின் அடாவடி யான செயல்பாடுகளால் அவ்வப் போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் சிதம்பரத்தில், தீட்சிதர்களின் வீட்டுக் குழந்தை களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக திருமணம் செய்துவைத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிதம்பரத்தில் கடந்த ஆண்டில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக புகார் எழுந்ததையடுத்து சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறை விசா ரணை நடந்துவருகிறது.

Advertisment

இந்நிலையில், கோயில் வழக்குர

தீட்சிதர்களின் அடாவடி யான செயல்பாடுகளால் அவ்வப் போது தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் சிதம்பரத்தில், தீட்சிதர்களின் வீட்டுக் குழந்தை களுக்கு சட்டத்துக்குப் புறம்பாக திருமணம் செய்துவைத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சிதம்பரத்தில் கடந்த ஆண்டில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக புகார் எழுந்ததையடுத்து சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து காவல்துறை விசா ரணை நடந்துவருகிறது.

Advertisment

இந்நிலையில், கோயில் வழக்குரைஞர் சந்திரசேகர், "தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு குழந்தைத் திருமணமே நடைபெற வில்லை'' என்று செய்தியாளர் களுக்கு பேட்டியளித்தார். இன் னொருபுறம், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தீட்சிதர்களின் குழந்தைகளிடம் சட்டவிரோதமாக இருவிரல் சோதனை நடத்தப்பட்டது என்றும், தீட்சிதர்கள் மீது பொய் யான குற்றச்சாட்டு வைத்து கைது செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டி யிருந்தார். மேலும், தனக்கு நடந் ததே ஒரு குழந்தைத் திருமணம் தான் எனக்கூறி குழந்தைத் திருமணத் துக்கு ஆதரவு தெரிவிப்பது போலவும் கருத்து வெளியிட்டார்.

Advertisment

ff

இதையடுத்து, தீட்சிதர்கள் வீட்டுக் குழந்தைகளிடம் இருவிரல் சோதனை நடத்தப்பட்டதா என்பதை அறிய, கடந்த புதன்கிழமையன்று, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மருத்துவர் ஆனந்த், சிதம்பரத்துக்கு வந்து தீட்சி தர்கள், தீட்சிதர்களின் குழந்தைகள், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் மற்றும் மருத்துவர் களிடம் விசாரணை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசியவர், "தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோத னை நடைபெறவில்லை, அவர்களின் குழந்தைகளுக்கு குழந்தைத் திருமணம் நடைபெறவில்லை, போலீசார் வற்புறுத்த லால் அப்படி ஒப்புக்கொண்டனர்'' என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா கூறுகை யில், "நடராஜர் கோவிலில் தீட்சி தர்கள் தொடர்ந்து குழந்தை திருமணம் செய்துவருகிறார்கள். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் கூறியது முற்றிலும் தவறானது. தமிழகத் தில் பதற்றத்தை ஏற்படுத்த தவ றான கருத்தைக்கூறும் ஆளுநர் மீது குடியரசுத்தலைவர் நடவடிக் கை எடுக்க வேண்டும்'' என்றார்.

இந்த நிலையில் தீட்சிதர் கள், அவர்களின் குழந்தை களுக்கு குழந்தை திருமணம் செய்து வருகிறார்கள் என்பதை யும், ஆளுநரின் குற்றச்சாட்டுகள் பொய் என்றும் நிரூபிக்கும் வகையில், சமூக வலைத்தளங் களில் நடராஜர் கோவில் தீட்சி தர்கள், அவர்களின் குழந்தை களுக்கு குழந்தை திருமணம் செய்த புகைப் படங்கள் வெளி யாகி வைரலாகி வருகின்றன. இன்றைய காலகட்டத்திலும் குழந்தை திருமணத்தை நடத்தி வரும் தீட்சிதர்களின் வழக்கத் துக்கு முற்றுப்புள்ளி வைப்ப தோடு, சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

-காளிதாஸ்

nkn310523
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe