"பெற்றோர்களுக் கும் மேலாக பொறுமையாகக் கவனித்துக் கொள்ள வேண்டிய காப்பகப் பொறுப்பாளர்கள், அதீத குறும்புத்தனம் செய்த ஆண்டவனின் குழந்தை எனச் சொல்லப்படும் மனநலம் பாதிக்கப்பட்ட 22 வயது இளைஞனை அடித்தே கொன்றுள்ள னர். இந்த பயங்கரம் அரங்கேறியது பொள் ளாச்சியில்!
மே 15-ஆம் தேதியன்று ஆழியாறில் சிறப்பு குழந்தைகளுக்கான "சிறப்பு மனிதர்கள்" எனும் புத்தாக்கப் பயிற்சி நடை பெறவுள்ளது. தங்களது குழந்தைகளின் மனநலனுக்கு ஏற்றது என அறிவித்த கையோடு, தங்களது காப்ப கத்தில் தங்கி சிகிச்சை எடுத்துவந்த குழந்தைகள் 23 பேரை ஆழியாருக்கு அழைத் துச்சென்றிருக்கின்றது பொள்ளாச்சி மகாலிங்க புரத்தில் இயங்கிவரும் யுதிரா சாரிடபிள் ட்ரஸ்ட். மாற்றுத்திறன் கொண்ட மனிதர்களுக்கான மறுவாழ்வு மையமாகச் செயல்பட்டு வரும் இந்த தனியார் காப் பகத்தினை நடத்திவருவது ஷாஜி, கவிதா லெட்சுமணன், கிரிராம் ஆகியோர். சுற்றுலா சென்றுவந்த அன்றே, "சுற்றுலா அழைத்துச்சென்ற பொழுது தங்களது மகனான வருண்காந்த், ஹைபர் ஆக்டிவ் காரணமாக எங்களிடமிருந்து பிரிந்து எங்கோ விலகிச் சென்றுவிட்டான். நீங்கள் வாருங்கள். காவல்துறையில் புகார்செய்வோம்'' என வருண்காந்த் பெற்றோர் ரவி- பானுமதிக்கு தகவல் அனுப்பியிருக்கின்றனர். வருண்காந்தின் தந்தையும் காப்பகப் பொறுப்பாளர் களுடன் இணைந்து புகாரளித்துவிட்டு மகனைத் தேடத்தொடங்கினார்.
கோவை சோமனூர் அருகேயுள்ள கரவளிமாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவன் வருண்காந்த். (அப்பா பெயர் ரவி (எ)அங்கமுத்து) சற்று பேச்சுத் திறன் குறைந்தவர். கடந்த வாரம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு பகுதிக்குச் சென்றபோது காணாமல் போயுள்ளான். இந்தச் சிறுவனை எங்காவது பார்த்தாலோ அல்லது தகவல்தெரிந்தாலோ உடனடியாகத் தகவல் தெரிவிக்கவும்! என ஊர் ஊராக போஸ்டர் ஒட்டிக் காத்திருந்தனர் வருண்காந்தின் உறவினர்கள். தகவல் தெரிந்தால் தெரிவிக்கவேண்டிய அந்த போஸ்டரில் போடப்பட்டிருந்த எண் காப்பக நிர்வாகி கிரிராமின் எண் என்பது குறிப்பிடத்தக்கது.
வருண்காந்தின் உறவினரான சம்பத்குமாரோ, "மனநலம் பாதிக்கப்பட்ட வருண்காந்தை நல்ல நிலைமைக்குக் கொண்டு வரவேண்டும் என்று உறவினர்கள், நண்பர்கள் சொன்னதன்பேரில் இந்தக் காப்பகத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி சேர்த்தோம். ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தவேண்டும் எனக் கூறினார்கள். மூன்று தவணைகளாக அந்த பணம் செலுத்தப்பட்டது. மே 17-ஆம் தேதி பிறந்தநாள் என்பதால் பார்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட போதும் ஆறு மாதத்திற்குப் பிறகுதான் பார்க்கமுடியும் எனக் கூறிவிட்டனர். இந்த நிலையில்தான் கடந்த 15-ஆம் தேதி ஆழியார் சுற்றுலா அழைத்துச்சென்ற போது காணவில்லை எனத் தகவல்தெரிவித்தார்கள். அதை நம்பி நாங்களும் புகார்கொடுத்தும், துண்டுப் பிரசுரங்கள் ஒட்டியும் பல்வேறு இடங்களில் தேடிவந்தோம். தேடும்போதெல்லாம் எங்களுடன் சேர்ந்து தேடுவதுபோல் காப்பகத்தைச் சேர்ந்த கிரிராம் உள்ளிட்ட நபர்கள் தேடியதுதான் கொடுமையே. ஆழியாறையே அலசிப்பார்த்தோம். காப்பக நிர்வாகிகள் காண்பித்த சி.சி.டி.வி.யைப் பார்த்தோம். அதில் தெரிந்தது வருண்காந்த் இல்லை. ஒருகட்டத்தில் உள்ளூரிலுள்ள எம்.பி. ஈஸ்வரமூர்த்தியிடமும், மா.செ. தளபதி முருகேசனிடமும் உதவி கேட்டோம். அதன்பின் வெகுவேகமாக விசாரணை நடந்தது'' என்றார் அவர்.
ஆழியார் சுற்றுலா சென்றுவந்த பிறகு, காப் பகத்திலுள்ள குழந்தைகளை அவரவர் வீட்டிற்கு கூட்டிச்செல்லுங்கள் எனப் பெற்றோர் களுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர் காப்பக நிர்வாகிகள். பாதிக்குமேல் பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்துச்சென்றிருக்கின்றனர். மீதமுள்ள குழந்தைகள் காப்பகப் பொறுப்பாளரான ஷாஜியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் ஷாஜியின் தந்தை செந்தில்பாபு, சூபர்வைசர் ரித்தீஷ், காப்பக நிர்வாகி கிரிராம், பணியாள் ரங்கநாயகி ஆகியோர் போலீஸின் சந்தேக வளையத்திற்குள் வந்திருக்கின்றனர். அப்பொழுதுதான் சம்பவம் வெளிப்பட்டிருக்கின்றது. "வருண்காந்த் ஹைபர் ஆக்டிவான பையன். துறுதுறு வென இருப்பான். யார் பேச்சையும் கேட்கமாட்டான். இதைச் செய்யாதே என்றால் அதனை மட்டும்தான் செய் வான். அதீத குறும்புத்தனம் அவனுக்கு. கையில் கிடைத்ததை எடுத்து எறியும் பழக்கமும் உண்டு. கடந்த 12-ஆம் தேதி மாலைவேளையில் இதுபோல் நடந்து கொண்டிருக்கையில் காப்பக சூப்பர் வைசர் ரித்தீஷிடம் அவன் கடுமையாக நடந்துகொண்டான். அப்பொழுது ரித்தீஷ் வருண்காந்தை கடுமையாகத் தாக்கி காயம் ஏற்படுத்தி மயக்கமடை யச் செய்தான். சில மணி நேரம் கழித்துத்தான் தெரிந்தது வருண்காந்த் உயிருடன் இல்லையென்பது. வெளியில் தெரிந்தால் வருமானம் போய்விடும் என் கின்ற காரணத்தால் அவனை காப்பக நிர்வாகி கவிதா லெட்சுமணனுக்குச் சொந்த மான தோட்டத்தில் புதைத்தோம்'' என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் கஸ்டடியில் இருந்த மூவரும்.
கடந்த 12-ஆம் தேதி காப்பகத்திலிருந்து அடித்துக் கொலைசெய்யப்பட்ட வருண்காந் தின் சடலம் தமிழ்நாடு கேரளா பார்டரிலுள்ள நடுப்புணி- பி நாகூரிலுள்ள கவிதா லெட்சு மணனுக்குச் சொந்தமான தனியார் தோட்டத் திற்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றது. விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் மரம் வைத்தால் நல்லது. ஆதலால் மரம்நடுவதற்காக 9 குழிகள் தோண்டிக்கொடுங்கள் என ஜே.சி.பி.யை வரவழைத்து குழி தோண்டி யிருக்கின்றனர் காப்பக நிர்வாகிகள்.
முன்னதாக கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட கவிதாவின் காரின் மூலம் பொள்ளாச்சியிலிருந்து வருண்காந்தின் சடலம் நடுப்புணிக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது. ஜே.சி.பி. வேலைமுடித்துச் சென்றவுடன் உடலை பாலிதீன் கவரில் பேக்கிங் செய்து சாணத்தை நிரப்பி சாக்குப் பையில் மூட்டை கட்டி வருண்காந்தின் சட லத்தை ஒரு குழிக் குள் இறக்கிப் புதைத் திருக்கின்றனர். அதன் மீது அடை யாளத்திற்காக பாதாம் மரத்தை வைத்திருக்கின்றனர் ஆண்டவன் குழந் தையை கொலை செய்த காப்பகத்தார்.
உடல் புதைக் கப் பட்டதாகச் சொல்லப்பட்ட இடத்தில் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோத னை செய்யத் திட்ட மிட்ட போலீசார், சனிக்கிழமை பிற் பகல் ஏ.எஸ்.பி. சிருஷ்டி சிங் தலைமையில் பலத்த பாதுகாப்பு டன் கிரி ராமை காவல் வாகனத்தில் நடுப்புணி தோட்டத்திற்கு அழைத்துவந்தனர். சார் ஆட்சி யர் (பொறுப்பு) விஸ்வநாதன், வட்டாட்சியர் வாசுதேவன், காவல்துறை உதவிக் கண்காணிப் பாளர் சிருஷ்டி சிங் ஆகியோர் முன்னிலையில் உடலை தோண்டியெடுக்கும் பணி தொடங்கி யது. தோண்டியெடுக்கப்பட்ட உடல் வருண் காந்த் என்பதை அவரது தந்தை ரவிக்குமார் உறுதிசெய்தார். இதனையடுத்து கோவை இ.எஸ்.ஐ. மருத்துவ குழுவினர் சம்பவ இடத்தி லேயே உடற்கூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். முன்னதாக தி.மு.க. மா.செ. தளபதி முருகேசனும், பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரமூர்த்தியும் சம்பவ இடத்திற்கே வந்து வருண்காந்தின் தந்தை ரவிக்கு ஆறுதலளித்தனர்.
வருண்காந்தின் ஊரான கரவெளி மாதாப்பூரைச் சேர்ந்தவர்களோ, "சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர் குற்றவாளி ள கைதுசெய்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட வர் என்றுகூடப் பார்க்காமல் கடுமையாகத் தாக்கி அவரை கொலை செய்து புதைத்துள்ள னர் காப்பக நிர்வாகிகள். எங்கள் குழந்தையை இழந்தாலும் இந்த சம்பவத்தின் மூலம் அங்கி ருந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டவனின் குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சிக் குரியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய யாராக இருந்தாலும் தமிழக முதல்வர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றது குறிப்பிடத்தக்கது.
"துவக்கத்திலிருந்தே மனநல காப்பகமான யுதிரா சாரிடபிள் ட்ரஸ்ட்மீது பல புகார்கள் வந்திருக்கின்றன. குறிப்பாக, நாகராஜ் என்பவரின் உறவினர் குழந்தை இந்த காப்பகத்தில் தங்கியிருந்தபொழுது, அந்தக் குழந்தை மீதும் வெறித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர் இந்த காப்பக நிர்வாகிகள். ஒருகட்டத்தில் எதுக்கு வம்பு? நம்ம குழந்தை உயிரோடு இருந் தால் போதும் என்கின்ற மனநிலையில் குழந் தையை மீட்டுச்சென்றிருக்கின்றனர். இதுகுறித் தும் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கின்றது. வாய் திறக்கவில்லை போலீஸ்.
வருண்காந்த் மீதும் தாக்குதல் நடந்திருக்குமோ.? என ஏ.எஸ்.பி. யிடம் நாகராஜ் ரகசியத் தகவல் தர, வருண்காந்த் கொலை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. "இந்த காப்பகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தற்கு ஒரே காரணம் காப்பக நிர் வாகிகளில் ஒருவரான கவிதாவின் செல்வாக்கு. கவிதாவின் கணவரான லெட்சுமணனின் அண்ணன் மணிபாரதி, பொள் ளாச்சி நகர 28-வது வார்டு அ.தி.மு.க. பொறுப்பாளர். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் விசுவாசி. இதுதான் காப்பகத்தைக் காப்பாற்றி வந்தது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் எப்படி அ.தி.மு.க. பின்புலமாக இருந்ததோ?, அதுபோல் வருண்காந்த் கொலையிலும், காப்பக அத்துமீறலிலும் அ.தி.மு.க. இருப்பதுதான் நிதர்சனம்." என்கின்றனர் பொள்ளாச்சி வாசிகள்.
காவல்துறை இன்னும் ஆழமாக விசாரித்தால், வருண்காந்த் போன்று பாதிக்கப்பட்ட இன்னும் பலரை யும் கண்டறிய லாம்.
_____________
இறுதிச் சுற்று!
உயர்கல்வித்துறையின் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட் டங்களே இருக்கக்கூடாது என்கிற திட்டத்தில் சீரியஸ் காட்டி வருகிறது தி.மு.க. அரசு. நடப்பு நிதியாண்டில் 11 கல்லூரிகள் திறக்க முடிவுசெய்யப்பட்டிருந்தது. 11 கல்லூரிகளின் கட்டடப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அந்த வகையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் 26.05.2025 திங்கட்கிழமை, காணொலிக் காட்சி வழியாக, உயர்கல்வித் துறை சார்பில், சென்னை ஆலந்தூர், கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், திண்டுக் கல் மாவட்டத்தில் நத்தம், விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர், சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டத்தில் கொளக்காநத்தம், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டிலிருந்து மாணவ-மாணவியர் சேர்க்கை நடக்கும் என்கின்றனர் உயர்கல்வித் துறையினர்.
-இளையர்
படங்கள்: விவேக்