Advertisment

சிக்குவாரா அமைச்சர்! குவியும் மோசடிப் புகார்கள்

dd

"வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துவிட்டார், வாரிய சொத்துக்களை அதிகாரத்தை பயன்படுத்தி மோசடி நபர்களுக்கு விற்க துணைபோகிறார்' என பெண் அமைச்சர் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்து புகாராகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதியிலிருந்து 2016-ல் ஜெயித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார் நிலோபர் கபில். இவரது அரசியல் உதவியாளர் எனச் சொல்லிக்கொண்டு அவரின் வலதுகரமாக வலம்வந்தவர் முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் மாவட்ட பிரதிநிதியுமான பிரகாசம். இவர்மீது கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி மாலை வாணியம்பாடி தாலுகா, வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயசுதா ஒரு புகார் தருவதற்காக காவல் நிலையம் முன்பு தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் காத்திருந்தார். அங்கு வந்த செய்தியாளர்களிடம், ""ஜூனியர் அசிஸ்டென்ட் வேலை வாங்கித் தருகிறேன் என அமைச்சர் நிலோபர் பெயரைச் சொல்லி 2017-ஆம் ஆண்டு, 15 லட்சம் ரூபாய்

"வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துவிட்டார், வாரிய சொத்துக்களை அதிகாரத்தை பயன்படுத்தி மோசடி நபர்களுக்கு விற்க துணைபோகிறார்' என பெண் அமைச்சர் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்து புகாராகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதியிலிருந்து 2016-ல் ஜெயித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார் நிலோபர் கபில். இவரது அரசியல் உதவியாளர் எனச் சொல்லிக்கொண்டு அவரின் வலதுகரமாக வலம்வந்தவர் முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் மாவட்ட பிரதிநிதியுமான பிரகாசம். இவர்மீது கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி மாலை வாணியம்பாடி தாலுகா, வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த ஜெயசுதா ஒரு புகார் தருவதற்காக காவல் நிலையம் முன்பு தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் காத்திருந்தார். அங்கு வந்த செய்தியாளர்களிடம், ""ஜூனியர் அசிஸ்டென்ட் வேலை வாங்கித் தருகிறேன் என அமைச்சர் நிலோபர் பெயரைச் சொல்லி 2017-ஆம் ஆண்டு, 15 லட்சம் ரூபாய் பணம் வாங்கினார். வேலை வாங்கித் தரவில்லை. பணத்தை திருப்பிக் கேட்டபோது, 7 லட்ச ரூபாய் மட்டும் திருப்பித் தந்தார். மீதி 8 லட்சத்துக்கு 6 லட்சத்துக்கு ஒரு காசோலை, 2 லட்சத்துக்கு ஒரு காசோலை என இரண்டு காசோலைகளை வழங்கினார் பிரகாசம். பணத்தை திருப்பித் தந்துவிட்டு செக் ரிட்டன் வாங்கிக்கொள்வதாக கூறினார். இன்றுவரை பணத்தை திருப்பித் தரவில்லை.

Advertisment

minister

பணத்தைக் கேட்டபோது முதலில் தருகிறேன் என்றவர், இப்போது அலட்சியப்படுத்திப் பேசுகிறார். அவர் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் செல்போன் உரையாடல்களாக உள்ளது'' என்றார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே இந்தத் தகவல் அறிந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர் அங்குவந்து ஜெயசுதா மற்றும் குடும்பத்தாரிடம் பேசி "புகார் எதுவும் வேண்டாம், பணத்தை ஒரு வாரத்தில் ரிட்டன் வாங்கித் தருகிறோம்' என்றதால் புகார் தருவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு திரும்ப சென்றுள்ளார்.

இதுபற்றி வாணியம்பாடி அ.தி.மு.க. பிரமுகர் களிடம் கேட்டபோது, ""அமைச்சர் தரப்பின் டீலிங் எல்லாம் பிரகாசம் மூலமாகத்தான் நடக்கும். அமைச்சர் வீரமணி ஏற்படுத்திய தடங்கல்களால் அமைச்சர் நிலோபரால் பலருக்கும் வேலை வாங்கித்தர முடியவில்லை. பணம் தந்த 15-க்கும் மேற்பட்டவர்கள் அமைச்சர் மற்றும் பிரகாசத்தை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். அதில் ஒருவர் புகார் தர வந்த அந்தப் பெண்மணி. அமைச்சரே அந்தப் பெண்ணிடம் செல்போனில் பேசி கன்வின்ஸ் செய்து, புகார் தராமல் தடுத்தார்'' என்றார்கள்.

வேலை மோசடிப் புகார் மட்டுமல்ல, தனது இஸ்லாமிய சமுதாயத்துக்குச் சொந்தமான வக்போர்டு வாரிய சொத்துக்களையும் அமைச்சர் என்கிற அதிகாரத்தை வைத்து தனிநபர்களுக்கு விற் பனை செய்யத் துடிக்கிறார் என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. வேலூர் மாநகரம் கொணவட்டத் தில் உள்ளது நாஜீக்ரத்தன் தர்கா. இதன் முத்தவல்லி யாக இருப்பவர் ஜாபர்பாஷா. இவர் அமைச்சர் மீது காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். அது குறித்து அவரிடம் நாம் கேட்டபோது, ""மசூதிக்குச் சொந்தமான சொத்து 12.5 ஏக்கர் உள்ளது. இந்த இடம் எங்களுடையது என வாணியம்பாடியை சேர்ந்த தன்வீர் என்பவரின் குடும்பம் பிரச்சினை செய்து புகார் தந்தது. இதுபற்றி வருவாய்த்துறை விசாரணையில், "இடம் மசூதிக்குச் சொந்தமானது' என உத்தரவு வழங்கினார்கள். அதன்பின் "எங்கள் பூர்வீகச் சொத்தை மசூதிக்குத் தந்துள்ளார்கள் எங்கள் முன்னோர்கள், அதனால் எங்களை முத்தவல்லியாக நியமிக்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய, வழக்கு நிலுவையில் உள்ளது.

minister

இந்நிலையில் கடந்த 7-ஆம் தேதி, அமைச்சர் நிலோபர்கபில் தலைமையில் 25 பேர் கொண்ட கும்பல் மசூதிக்குச் சொந்தமான இடத்தில் புகுந்து அளந்தார்கள். நிர்வாகத்திடம் அனுமதி வாங்கா மல் எப்படி உள்ளே வரலாம் எனக் கேட்டதற்கு, சுத்திப் பார்க்க வந்தேன் என அமைச்சர் நக்கலாக பதில் தந்தார். கேள்வி கேட்டதற்கு என்னையும், மற்றொருவரையும் அமைச்சருடன் இருந்தவர்கள் அடித்தார்கள். மசூதிக்குச் சொந்தமான இடத்தில் அத்துமீறி நுழைந்ததோடு, எங்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் தந்தபோது, போலீஸ் அமைச்சர் பெயர் இருப்பதால் புகாரை வாங்க மறுத்துவிட்டார்கள். அமைச்சர் பெயர் இல்லாமல் தந்த புகாரை வாங்கி எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளார்கள்'' என்றார்.

"வக்போர்டு வாரியத் தலைவராக நிலோபர் கபில் கொஞ்ச காலம் இருந்தார். அப்போது பிரச்சனைக்குரிய இடங்களைக் கேட்பவர்களுக்கே திருப்பித் தரச்சொல்லி வாய்மொழி உத்தரவு போட்டார். இதில் நிறைய டீலிங் உண்டு. இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரிலும் மசூதிக்குச் சொந்தமான இடத்தை தனிநபருக்கு குத்தகைக்கு விடச்சொல்லி மிரட்டினார். அதில் அமைச்சர் தரப்பு கோடிகளில் லாபம் பார்த்துள்ளது' என்கிறார்கள் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

இதுபற்றி விளக்கம் பெற அமைச்சர் நிலோபர் கபிலைத் தொடர்புகொண்டபோது, அவரது செல் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. அவர் விளக்கம் சொன்னால் வெளியிடத் தயாராகவுள்ளோம்.

nkn170421
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe