த்தரப்பிரதேச மாநிலம் கேரி மாவட்டம் லக்கிம்பூரில் மாநில உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் சென்ற வாகனம் வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டக்காரர்களின் மீது ஏறியதில் 4 விவசாயிகள், பத்திரிகையாளர் ஒருவர் உட்பட 9 பேர் இறந்துள்ளனர். மேலும் 15 பேர் மிக மோசமாகக் காயம்பட்டுள்ளனர்.

hh

உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் மௌரியா, உள்துறை அமைச்சர் மிஸ்ராவின் தொகுதியைச் சேர்ந்த பன்வாரியில் திட்டம் ஒன்றை தொடங்கிவைக்க வருவதாக இருந்தது. துணை முதல்வர் இப்பகுதிக்கு வருவதையறிந்த போராட்டக்காரர்கள் அவருக்கு எதிராக வலுவான போராட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு இருந்தனர்.

சமீபத்தில் உத்தரப்பிரதேச விவசாயிகளின் போராட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா, "பத்துப் பதினைந்து பேர் நடத்தும் போராட்டம். இதனைச் சரிசெய்வதற்கு இரண்டு நிமிடம் போதும்'’ என போராட்டத்தை மட்டம்தட்டிப் பேசியிருந்தார். எனவே விவசாயிகள் தங்களது பலத்தைக் காண்பிக்க திகுனியா- பன்பீர்புர் சாலையில் கறுப்புக் கொடியுடன் திரண்டிருந்தனர். துணைமுதல்வர் மௌர்யாவின் ஹெலிகாப்டர் இறங்குமிடத் தில் அவருக்கெதிராக கோஷம் போடுவதற்காக விவசாயிகள் கூடியிருந்தனர். கோஷங்கள் எழுப்பிவிட்டு திரும்பும்போது, போராட்டக்காரர்கள் மீது திட்டமிட்டே அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் வந்த கான்வாய் வண்டி மோதியதாக போராட்டக்காரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

Advertisment

up

அஜய் மிஸ்ராவோ சம்பவம் நடந்த இடத்தில் தன் மகன் இல்லை எனவும், மேடையில்தான் இருந்தான் எனவும் கூறுகிறார். மேலும், கார் மோதியதற்கு அடுத்து நடந்த வன்முறைச் சம்பவத்தில் அவரது கார் டிரைவரும் மூன்று பா.ஜ.க. கட்சியினரும் இறந்ததாக குற்றம்சாட்டுகிறார். எனினும், ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 15 பேர் மீது கொலைமுயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளது. காரால் மோதப்பட்டு 9 பேர் இறந்த நிலையில், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், மூன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீவைத்துக் கொளுத்தினர். நிலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை தடியடியில் இறங்கியது. தகவல் மேலும் பரவி போராட்டக்காரர்கள் வந்து குவிவதைத் தடுக்க, இன்டர்நெட் துண்டிக்கப்பட்டதோடு, அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என உ.பி. முதல்வர் யோகி தெரிவிக்க, விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட வந்த காங்கிரஸின் பிரியங்கா காந்தி போராட்ட இடத்தை வந்தடையும் முன்னே கைதுசெய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்திக்கக் கிளம்பிய சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவும் தடுக்கப்பட, தன் வீட்டுமுன்பே தர்ணாவைத் தொடங்கினார்.

உ.பி. விவகாரம் ஒருபுறமிருக்க, அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாக் வேளாண் போராட்டம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருக் கிறார். “போராடும் விவசாயிகளுக்கு எதிராக கட்டைகளை எடுங்கள்” என அவர் பேசும் வீடியோ ஒன்று நாடெங்கும் வைரலாகி வருகிறது.

Advertisment

அரியானாவில் விவசாயிகள் போராட்டம் ஒன்றில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், "போராடும் விவசாயிகளின் தலைகளை உடையுங்கள்' என பேசிய வீடியோ ஒன்று வெளிப்பட்டு அரியானா முதல்வருக்கு தலைவலியைக் கொடுத்தது. இப்போது முதல்வரே பேசியிருக்கும் வீடியோ வெளியாகியிருப்பதால் தர்மசங்கடத்தில் சமாளிப்புகளை மேற் கொண்டுவருகிறது பா.ஜ.க.

ii

தனது வீட்டில் வைத்து நடந்த கட்சி உறுப்பினர்களின் கூட்டமொன்றில், "வடக்கு மற்றும் மேற்கு அரியானாவில் பா.ஜ.க. உறுப்பினர்கள் 500 அல்லது 1000 தன்னார் வலர்களைக் கொண்ட குழுவை உரு வாக்குங்கள். பழிக்குப் பழி என்பது போல் கட்டைகளை கையிலெடுங்கள். கொஞ்ச காலத்துக்கு சிறைக்குச் செல்லவேண்டி வரலாம். அதற் கெல்லாம் பயப்படக் கூடாது. ஆனால் வெளியே வரும்போது நீங்கள் நாயகர்களாக வெளியே வருவீர்கள். பெரிய தலைவர்களாக உருவெடுப்பீர்கள்'' என்று வீடியோவில் பேசியிருக்கிறார்.

அரியானா பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான வரீந்தர் சௌகான், “"முழுமையான வீடியோவில் ஒரு பகுதி மட்டுமே வெளியாகி, அதற்கு தவறான அர்த்தம் கற்பிக்கப்படுகிறது''’என சமாளிக்கிறார்.

ஹரியானா கொடூரம் பற்றி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி, நடவடிக்கையை வலி யுறுத்தியுள்ளனர் விவசாயிகள் சங்கத்தினர்.

-சூர்யன்