ஆபத்தை தடுத்த முதல்வர்! நிரந்தரமா? தற்காலிகமா? -follow-up!

fact

காவிரி டெல்டா மாவட்டங்களில் பேர ழிவை ஏற்படுத்தக்கூடிய மீத்தேன்,ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு எடுக்கும் பேரழிவுத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதியளித்ததை எதிர்த்து, காவிரி டெல்டா விவசாயிகளும், தி.மு.க., கம்யூனிஸ் டுகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி யதையடுத்து, ஒன்றிய அரசு பின்வாங்கியது. அதன்பின்னர், 2020ம் ஆண்டில், காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து டெல்டா விவசாயிகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

factory

இந்நிலையில், நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம் சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அதனுடன் துணைத் தொழிற்சாலைகள் ஏற்படுத்துகிற நோக்கத்தில் சிட்கோ என்று சொல்லக்கூடிய சிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் தொழிற்பூங்கா அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான பணிகளை அதிகாரிகள் துவங்கினர். திருமருகல் ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ

காவிரி டெல்டா மாவட்டங்களில் பேர ழிவை ஏற்படுத்தக்கூடிய மீத்தேன்,ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு எடுக்கும் பேரழிவுத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதியளித்ததை எதிர்த்து, காவிரி டெல்டா விவசாயிகளும், தி.மு.க., கம்யூனிஸ் டுகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி யதையடுத்து, ஒன்றிய அரசு பின்வாங்கியது. அதன்பின்னர், 2020ம் ஆண்டில், காவிரி டெல்டா பகுதியை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து டெல்டா விவசாயிகளும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

factory

இந்நிலையில், நாகப்பட்டினம் அருகிலுள்ள நரிமணம் சி.பி.சி.எல். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அதனுடன் துணைத் தொழிற்சாலைகள் ஏற்படுத்துகிற நோக்கத்தில் சிட்கோ என்று சொல்லக்கூடிய சிறு, குறு தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் தொழிற்பூங்கா அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான பணிகளை அதிகாரிகள் துவங்கினர். திருமருகல் ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்ததோடு, அதற் கான வரைவுத்திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு, 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளியையும் தொழில் நிறுவனம் ஒன்று கோரியிருந் தது.

இந்த அறிவிப்புக்கு எதிராக விவசாயிகள் சங்கம் சார்பில் அப் பகுதி விவசாயிகளைத் திரட்டி உண்ணா விரதப் போராட் டத்தை வரும் நவம்பர் 16-ம் தேதி நடத்துவ தாக அறிவித்திருந்த னர். இதுகுறித்து நமது நக்கீரனில் "டெல்டா வில் மீண்டும் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள், போராட்ட களத் தில் விவசாயிகள்' என்கிற தலைப்பில் மூன்று பக்கச் செய்தி யாக வெளிட்டிருந்தோம். அதைத்தொடர்ந்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், போராட் டக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, "விரைவில் அறிவிப்பாணையை அந் நிறுவனம் திரும்பப்பெறும், அதற்கான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்'' என்றார். ஆட்சியரின் உத்தரவாதத்தை தொடர்ந்து போராட்டத்தையும் ஒத்தி வைத்தனர்.

factory

இந்தச் சூழலில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்குப் பருவ மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த முதல்வர், இதுகுறித்து கேட்டறிந்தார். விவசாயிகள் அளித்த மனுக்களில் அந்த திட்டம் குறித்தான மனுக்களே அதிகமாக இருந்தது. மறுநாளே, பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெறுவதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதை திரும்பப் பெறுவதாகவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தின் அறிவிப்பாணை வெளியிட்டு பத்திரிகையில் விளம்பரப்படுத்தியுள் ளனர். இதையடுத்து பெருமகிழ்ச்சியடைந்த மக்கள், தமிழக முதல்வருக்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பி.ஆர்.பாண்டியன் கூறுகை யில், "இந்த திட்டத்தின் ஆபத்து, அதன் வீரியம் குறித்து உணர்ந்த முதல்வர், விரைந்து செயல்பட்டிருக்கிறார். வெள்ள பாதிப்புகளைச் சந்தித்துள்ள இக்கட்டான சூழலில்... விவசாயி களின் வலியை உணர்ந்து, எங்களின் குரலுக்கு மதிப்பளித்துள்ள முதல்வருக்கு மிகுந்த நன்றி'' என்றார்.

நரிமணத்தை உள்ளடக் கிய நாகை தொகுதியின் எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ், "தமிழக முதல்வர், மக்களின் கோரிக்கையையும், விவசாயி களின் கோரிக்கையையும் முதன் மையாகக் கருதி மதிப்பளிப்பவர் என்பதற்கு இதுவே சான்று. எந்தத் திட்டமும் மக்களின் ஒத்துழைப்போடு வரணும் என்பதை முதல்வர் விருப்ப மாகக் கொண்டிருக்கிறார். புதிய திட்டங்களைக் கொண்டு வர வேண்டும், அதே நேரத்தில் மக்களைப் போராடவிட்டு ஒரு வளர்ச்சி தேவை இல்லை என்று முதல்வர் கருதுகிறார். பழைய அ.தி.மு.க. அரசில், மக்க ளைப் போராட வைத்து, நீதிமன்றத் திற்கு அலைக்கழித்து, வழக்குகளைப் பாய்ச்சி, கைது செய்து, போராடுபவர்களைத் தேசத் துரோகியாகவும், சமூக விரோதிகளாகவும் கொச்சைப்படுத்துவது அவர்களின் வாடிக்கையாக இருந்தது. ஆனால் இந்த அரசு மக்கள் மீது எந்தவித வழக்கும் போடவில்லை. போராட்டத்தை கொச்சைப்படுத்தவும் இல்லை. இதுவரை எந்த போராட்டமும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை'' என்றார்.

fffactory

மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கூறுகையில், "இந்த திட்டத்தை கைவிட்ட தமிழக அரசுக்கும், முதல்வருக்கு மிகுந்த நன்றி. அதே நேரம், ஆட்சி மாறியிருக்கிறதே தவிர, ஒன்றிய அரசுக்கு மதிப்பளிக்கும் அதிகாரிகள் மாறவில்லை. தமிழக அரசின் பார்வைக்கு வராமலேயே அதிகாரிகளும், பெருநிறுவனங்களும் இதுபோன்ற அபாயகரமான அறிவிப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஆகவே தமிழக அரசு மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. தற்போதைய அரசு, தமிழ்நாடு முழுவதும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னது. அதோடு பாதிப்புகளையும் ஆய்வு செய்ய குழுவை நியமித்தது. அந்தக் குழு கதிராமங்கலம் வந்து ஆய்வு செய்தது. அந்த குழுவினர், பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்துவிட்டு, மிகுந்த கவலையோடு சென்றனர். இனி மக்களுக்கு எதிரான எந்த திட்டமும் வராது என முதல்வர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஆக, முதல்வருக்குத் தெரியாமலேயே அதிகாரிகள் வாயிலாக பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்ட அறிவிப்பு வெளியாகியிருக்கலாம். தமிழக முதல்வர் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டிய தருணம் இது. அவருக்கு தமிழக மக்கள் எப்போதும் துணை நிற்பார்கள்'' என்றார்.

nkn201121
இதையும் படியுங்கள்
Subscribe