தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எளிமையான செயல்பாடுகளால் தனக்கான தனித்துவத்தை அவ்வப்போது வெளிப்படுத்திவரு கிறார். தினமும் நடைப் பயிற்சி செய்யும் ஸ்டாலின், தனது பாதுகாப் பினைத் தளர்த்திக் கொண்டு, எதிர்ப்படும் பொதுமக்களோடு இயல்பாகக் கலந்துரையாடுவது வைரலாகிப் பாராட்டப்பட்டது. பொதுமக்களிடம் முதல்வரின் செயல்பாடுகளுக்கும் அணுகுமுறை களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதே நேரத்தில், கட்சித் தொண்டர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில்... தன்னிடம் உதவி கேட்டுக் கடிதமெழுதிய தனது கட்சியின் முன்னாள் நிர்வாகிக்கு, உடனடியாக அவர் கேட்ட உதவியைச் செய்துகொடுத்து நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார் முதல்வர்.
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியத்தின் முன்னாள் ஒன்றிய இளைஞரணி அமைப் பாளரான வி.கே.என்.தமிழரசு வின் குடும்பமே தீவிர தி.மு.க. பற்றுள்ள குடும்பமாகும். இவ ருக்கு தமிழரசு என்ற பெயரை வைத்தது, 1968-ம் ஆண்டில் பொதுப்பணித்துறை அமைச்ச ராக இருந்த கலைஞர். அதே போல இவரது மகளுக்கும் கலை யரசி என்று பெயர் சூட்டியவர் கலைஞர். கல்லல் ஒன்றியத்தில் தி.மு.க.வின் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட குடும்பத்திலிருந்து வந்த கலையரசி, கடந்த +2 தேர்வில் 91% மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைந்தார். கல்லூரிப் படிப்புக்குப் பின்னர் ஐ.ஏ.எஸ். ஆகவேண்டுமென்ற லட்சியக் கனவோடு இருக்கும் கலையரசி, சென்னையிலுள்ள பிரபல தனியார் கல்லூரியில் பி.சி.ஏ., படிக்க வேண்டுமென விருப் பப்பட்டார். அதற்காக அங்கே விண்ணப்பித்தவருக்கு, உட னடியாக சீட் கிடைக்கவில்லை.
கலையரசியோடு நேரில் வந்து கல்லூரி முதல்வரைச் சந்திக்க முயற்சி செய்துள்ளார் தமிழரசு. ஆனால் கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. நல்ல மதிப்பெண் இருந்தும், விரும்பிய கல்லூரியில் இடம் கிடைக்காத தால் மனமுடைந்த கலையரசி, "முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் உதவி கேட்டுப் பாருங்கள்' என்று கண்ணீர் விட்டுள்ளார். அதையடுத்து, முதல்வருக்கு விரிவான கடிதமெழுதி, தனது மகளுக்கு அக்கல்லூரியில் இடம் வாங்கித் தந்தால், கண்டிப்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உருவெடுப்பார் என்றுகூறி, தனது மகளுக்கு உதவும்படி கேட்டிருந்தார்.
அவர் கடிதம் அனுப்பிய மறுநாளே முதல்வரின் இல் லத்திலிருந்து அவரது உதவியாளர், தமிழரசுவைத் தொடர்புகொண்டு பேசியிருக் கிறார். "உங்களது கடிதம் கிடைத்தது. நீங்கள் விரும்பிய படி உங்கள் மகளுக்கு கல்லூரி யில் இடம் கிடைப்பதற்கு முதல்வர் பரிந்துரை செய்துள் ளார். உங்கள் மகளை அக் கல்லூரியில் சேருங்கள்' என்று கூறியதும் அவர்களால் அதனை நம்பவே முடிய வில்லை. உடனடியாக முதல்வ ருக்கு நன்றி தெரிவித்து பதில் கடிதம் எழுதியவர், முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரி விப்பதற்கும் அனுமதி கேட்டி ருந்தார். அதன்படி, முதல்வரை நேரில் சந்தித்து ஆசிபெற்ற தமிழரசு, "என்னைப் போன்ற சாதாரண தொண்டனின் வீட்டுக் குழந்தைக்கும் உயர்ந்த கல்வி கிடைக்கவேண்டுமென்ற எண்ணத்தோடு முதல்வர் செய்த இந்த உதவியை எந்நாளும் மறக்க மாட்டோம். என் மகள், படித்து முடித்தபின், ஐ.ஏ.எஸ். பயிற்சியிலும் சேர்ந்து அதிகாரியாக வருவாள்'' என் றார் எதிர்கால நம்பிக்கையுடன்!
-ஆதவன்