Advertisment

தலைமைச் செயலக சங்க தேர்தல்! உற்று கவனிக்கும் தி.மு.க. அரசு!

ss

செப்டம் பர் 23-ந் தேதி நடக்கவிருக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலக சங்கத்திற்கான தேர்தல் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

Advertisment

சங்கத்தின் சிட்டிங் தலைவரான பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் வின்னர்ஸ் அணி, வெங்கடேசன் தலைமையில் அகரம் அணி, தமிழ்ஜோதி தலைமையில் டீம் அணி, கார்த்திகேயன் தலைமையில் அச்சீவ்வர்ஸ் அணி ஆகிய 4 அணிகள் களத்தில் மோதுகின்றன.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தவிர்த்து, லிப்ட் ஆப்ரேட்டர்கள் முதல், அரசின் கூடுதல் செயலர்கள் வரை பதவியில் இருக்கும் அலு வலர்கள், அதிகாரிகள் அனைவரும் வாக்களிக்கத் தகுதிபெற்றவர்கள்.

ss

Advertisment

தமிழக அரசின் கொள்கை முடிவுகள், திட்டங்கள், உத்தரவுகள் என அனைத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டியது தலைமைச் செயலகம் என்பதால், தலைமைச் செயலக சங்கத்தின் தேர்தலை உற்றுக் கவனித்து வருகிறது தமிழக அரசு. அந்த வகையில் இந்த சங்கத்தின் தேர்தல் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.

களத்தில் குதித் துள்ள 4 அணிகளும் வாக்குகளைப் பெற பம்பரமாக சுற்றி வருகின்றன. சங் கத்தின் சிட்டிங் தலைவரும் வின்னர்ஸ் அணியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவருமான பீட்டர் அந்தோணிசாமி, தி.

செப்டம் பர் 23-ந் தேதி நடக்கவிருக்கும் தமிழக அரசின் தலைமைச் செயலக சங்கத்திற்கான தேர்தல் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

Advertisment

சங்கத்தின் சிட்டிங் தலைவரான பீட்டர் அந்தோணிசாமி தலைமையில் வின்னர்ஸ் அணி, வெங்கடேசன் தலைமையில் அகரம் அணி, தமிழ்ஜோதி தலைமையில் டீம் அணி, கார்த்திகேயன் தலைமையில் அச்சீவ்வர்ஸ் அணி ஆகிய 4 அணிகள் களத்தில் மோதுகின்றன.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தவிர்த்து, லிப்ட் ஆப்ரேட்டர்கள் முதல், அரசின் கூடுதல் செயலர்கள் வரை பதவியில் இருக்கும் அலு வலர்கள், அதிகாரிகள் அனைவரும் வாக்களிக்கத் தகுதிபெற்றவர்கள்.

ss

Advertisment

தமிழக அரசின் கொள்கை முடிவுகள், திட்டங்கள், உத்தரவுகள் என அனைத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டியது தலைமைச் செயலகம் என்பதால், தலைமைச் செயலக சங்கத்தின் தேர்தலை உற்றுக் கவனித்து வருகிறது தமிழக அரசு. அந்த வகையில் இந்த சங்கத்தின் தேர்தல் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.

களத்தில் குதித் துள்ள 4 அணிகளும் வாக்குகளைப் பெற பம்பரமாக சுற்றி வருகின்றன. சங் கத்தின் சிட்டிங் தலைவரும் வின்னர்ஸ் அணியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவருமான பீட்டர் அந்தோணிசாமி, தி.மு.க.வை சேர்ந்தவர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் நன்மதிப்பைப் பெற்றவர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போதே இவரது தலைமையிலான வின்னர்ஸ் அணி மகத்தான வெற்றியைப் பெற்றது.

தேர்தல் குறித்து பீட்டர் அந்தோணி சாமியிடம் பேசியபோது, ”"கடந்த காலங்களில் நாங்கள் வைத்த கோரிக்கைகளில் பலவற்றை பணியாளர்களுக்கு பெற்றுத் தந்திருக்கிறோம். பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது எங்களின் இலக்கு. அதனை மீண்டும் பெற அனைத்து முயற்சி களையும் எடுப்போம். 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த வீட்டு மனை திட்டம், எங்களின் முயற்சியால் இறுதி வடிவம் பெற்றுள்ளது. இதற்காக, தலைமைச்செயலக பணியாளர்கள் வீட்டுவசதி கூட்டுறவு சங்கம் அமைத்து, அதற்கான அரசாணை வெளியிட வைத்திருக்கிறோம்.

எங்களின் முயற்சியால் 600 பணியாளர்கள் பிரிவு அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றதுடன், மாற்றுப்பணிகளுக்கு அலுவலர்களை அனுப்புவதிலிருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன. ஒரு பணியாளர் சங்கம், அரசாங்கத்தை எதிர்த்து போராட்டம் நடத்தினால் மட்டும்தான் சாதிக்க முடியும் என்ற பிம்பத்தை உடைத்து, அரசுடன் இணக்கமாகச் சென்று கொரோனா உள்ளிட்ட அசாதாரண காலத்தில் பல விசயங்களை எங்கள் சங்கம் சாதித்துள்ளது.

சங்கத்தில் இணைந்துள்ள அனைத்து பணி யாளர்களின் கோரிக்கைகளையும் பாகுபாடின்றி கேட்டறிந்து நிறைவேற்றியதுடன் அவர்களுக்கு நம்பிக்கையை நாங்கள் தந்திருக்கிறோம். உலகையே அச்சுறுத்திய கொரோனா காலத்தில், பொருளாதாரம் வீழ்ச்சியுற்ற நிலையில் அரசுப் பணியாளர்களின் சம்பளத்தை தமிழக அரசு குறைத்தபோது, முன்களப் பணியாளர்களின் தியாகத்தைச் சுட்டிக்காட்டி சம்பளக் குறைப்பை தடுத்து நிறுத்தியதுடன், சுமார் 15,000 பணியாளர்கள், ஓய்வூதியர்கள், முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் இம்யூனி பூஸ்டர், ஆர்சானிக் ஆல்பம் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் வழங்கியதுடன், 2 முறை தடுப்பூசி முகாம்களையும் நடத்தி, கோவிட் அச்சத்திலிருந்து பணியாளர்களை மீட்டது எங்கள் சங்கம்.

ss

அதே நெருக்கடி காலத்தில் தலைமைச் செயலகத்துக்கு பணியாளர்கள் தடையின்றியும் அச்சமின்றியும் வந்து செல்ல போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்தையும் செய்து கொடுத்திருக் கிறோம். விளையாட்டுப் போட்டிகளில் நம் பணியாளர்கள் திறமையானவர்கள் என்பதை நிரூபிக்க, கிரிக்கெட் போட்டிகள் நடத்தி 2 முறை மாநில சேம்பியன்ஷிப்பை வென்றுள்ளோம்.

பிரிவு அலுவலர் நிலையில் இருப்பவர்கள் சார்பு செயலாளர்களாக பதவி உயர்வு பெறாமல் இருக்கும் தேக்கநிலையைக் களைந்து, அவர்களுக்காக 150 பணியிடங்களை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதவி பிரிவு அலுவலர், சார்பு செயலாளர், துணைச் செயலாளர் உள்ளிட்டவர்களுக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மீண்டும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்''’என்று விவரிக்கிறார் பீட்டர் அந்தோணிசாமி.

"பணியாளர்களின் கோரிக்கைக்காக நாங்களும் பல விசயங்களை செய்திருக்கிறோம். தி.மு.க.வின் நன்மதிப்பை பெற்ற சங்கமாக இப்போதைய சங்கம் இருப்பதால், அவர்களால் சாதிப்பது கடினம் என்கிற கருத்தினை முன்வைத்து களமாடி வருகிறோம். வெற்றி எங்களுக்குத்தான்'' என்கிறார்கள் வின்னர்ஸ் அணியை எதிர்த்து களத்தில் குதித்துள்ள மற்ற 3 அணியினரும்.

இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு சூடு பிடித்திருப்பதால் ஏகத்துக்கும் பரபரப்பாக இருக்கிறது தலைமைச் செயலக வளாகம்.

-இளையர்

___________

இறுதிச்சுற்று!

விலகுகிறாரா சுப்புலட்சுமி ஜெகதீசன்?

dd

தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாள ரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீரென கட்சிப் பதவியை ராஜினாமா செய்து தலைமைக்கு கடிதம் அனுப்பிய தகவல் செப்.19, திங்கள் காலை வெளியாகி, தி.மு.க. வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்ற சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமியின் தோல்விக்கு அத்தொகுதியிலுள்ள கொடுமுடி ஒன்றியச் செயலாளர் சின்னகுட்டி மற்றும் மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் குணசேகரன் இருவரும்தான் முக்கிய காரணமென பேசப்பட்டது. இந்த இருவரும் மாவட்டச் செயலாளராக உள்ள அமைச்சர் முத்துச்சாமியின் ஆதரவாளர்கள். என்னைத் தோற்கடிக்க முத்துச்சாமி பயன்படுத்திய நபர்கள்தான் இவர்களுக்கு மீண்டும் ஒன்றியச் செயலாளர் பொறுப்பு வழங்கக்கூடாது என கட்சித் தலைமையிடம் வேண்டுகோள் வைத்திருந்தார்.

இதனால் இருவருக்குமான ஒ.செ. பதவி நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்ற வாரம் இருவரையும் ஒன்றியச் செயலாளர்களாக தலைமை அறிவித்தது. இதனால் வருத்தமடைந்த சுப்பு லட்சுமி கட்சியின் துணை பொதுச்செயலாளர் பதவி யை செப்டம்பர் 15-க்கு முன்பே ராஜினாமா செய்து தலைமைக்கு கடிதம் அனுப்பிவிட்டார். கட்சித் தலைமை இந்த விவகாரத்தை எப்படி அணுகப்போகிறது?

-ஜீவாதங்கவேல்

nkn210922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe