முதல்வர் எச்சரிக்கை! நெல்லை உ.பி.க்கள் பதட்டம்!

ss

சுமார் 9,368 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பணிகளையும் நெல்லை மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கிற வகையிலும், கள ஆய்விற்காகவும் இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இதற்காக பிப்ரவரி 6 அன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதல்வர், பின்பு நெல்லைக்குப் புறப்பட்டார். தொகுதியின் பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு, மா.செ.க்களான டி.பி.எம்.மைதீன் கான், ஆவுடையப்பன் தலைமையில் கட்சித் தொண் டர்கள் வழிநெடுகத் திரண்டிருந்தார்கள். கங்கை கொண்டானில் 4,400 கோடியில் பிரபல தொழில்

சுமார் 9,368 கோடி மதிப்பிலான திட்டங்களையும், பணிகளையும் நெல்லை மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கிற வகையிலும், கள ஆய்விற்காகவும் இரண்டு நாள் பயணமாக நெல்லை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

இதற்காக பிப்ரவரி 6 அன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதல்வர், பின்பு நெல்லைக்குப் புறப்பட்டார். தொகுதியின் பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு, மா.செ.க்களான டி.பி.எம்.மைதீன் கான், ஆவுடையப்பன் தலைமையில் கட்சித் தொண் டர்கள் வழிநெடுகத் திரண்டிருந்தார்கள். கங்கை கொண்டானில் 4,400 கோடியில் பிரபல தொழில் முன்னணி நிறுவனமான டாட்டா குழுமத்தின் டாட்டா சோலார் பேனல் உற்பத்தித் தொழிற்சாலையையும், உணவுப் பூங்காவையும் தொடங்கிவைத்தார். புதிதாக அமைக்கப்படுகிற விக்ரம் சோலார் பேனல் பசுமைத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

ss

அடுத்து, பாளையின் மார்க்கெட் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.40.62 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட 413 புதிய கடைகளைக் கொண்ட மகாத்மா காந்தி மார்க்கெட் வளாகத்தைத் திறந்து வைத்தார்.

கலைஞரின் திட்டப்படி தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்பு வெள்ள நீர் கால்வாய்த் திட்டம் உருவாகியிருக்கிறது. பாதி வேலைகள் முடிந்த நிலையில் கலைஞர் ஆட்சி மாறி “ஜெ.“ ஆட்சியில் வந்தமர்ந்தார். அவர் ஆட்சியில் திட்டம் முடக்கப்பட்டது. ஸ்டாலின் ஆட்சிக்குவந்ததும் சபாநாயகர் அப்பாவு இத்திட்டத்தை அவரிடம் நினைவுபடுத்தவே ரூ.1060 கோடியில் இத்திட்டம் தற்போது முற்றுப்பெற்றிருக்கிறது.

பாளை, நாங்குநேரி, ராதாபுரம், திருச்செந்தூர் தொகுதி மக்களின் குடிதண்ணீர் பஞ்சம் தீர்க்கும் இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இப்போது மக்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார். கலைஞரின் கனவுத் திட்டமான வெள்ள நீர் கால்வாய்த் திட்டம் தி.மு.க.வை தென்மாவட்டத்தில் உயர்த்திப் பிடிக்கும் என்கிறார்கள் உ.பி.க்கள்.

மாலையில் பாளை மார்க்கெட் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கடைகளை திறப்பதற்காக சர்க்யூட் ஹவுசிலிருந்து கிளம்பிய முதல்வர், வழியில் மக்கள் திரண்டிருப்பதைக் கண்டு 3 கி.மீ. தொலைவு நடந்தே சென்றிருக்கிறார். இருபுறமும் வழிநெடுகத் திரண்டிருந்த பெண்கள் முதல்வரை ஆரவாரமாக வரவேற்றிருக்கிறார்கள்.

அடுத்து, அனுமதிக்கப்பட்ட மாவட்ட கட்சிப் பொறுப்பாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள் முதல், பகுதி செயலாளர்கள் வரையிலான நிர்வாகி களின் கூட்டத்தில் கலந்துகொண்டார். பலரின் செயல்பாடுகளின் மீது அதிருப்தியாயிருந்த முதல்வர், "மானூர் கிழக்கு ஒன்றியம், மானூர் தெற்கு ஒன்றி யம், மேற்கு ஒன்றியச் செயலாளர்கள் சரியா செயல் படலை. ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. திருநெல் வேலி டவுண், தச்சை பகுதி செயலாளர்களின் செயல்பாடுகளும் சரியில்லை. இது எச்சரிக்கைதான். தொடர்ந்தால் அடுத்த தடவை நடவடிக்கை நிச்சயம்'' என்று எச்சரித்துவிட்டு வந்திருக்கிறார்.

-ப.இராம்குமார்

nkn120225
இதையும் படியுங்கள்
Subscribe