முதல்வர் ஸ்டாலினின் மூன்றாவது செயலாளர் அனுஜார்ஜ் ஐ.ஏ.எஸ்., நீண்ட விடுமுறையில் சென்றிருக்கும் சூழலில், அவருக்குப் பதிலாக மற்றொரு அதிகாரி நியமிக்கப்படாததால், தமிழக ஐ.ஏ.எஸ்.களிடம் அதிருப்திகள் வெடிக்கின்றன.

இந்த விவகாரம் கோட்டையில் பரபரப்பாக விவாதிக்கப்படுவதால் இது குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி கள் தரப்பில் விசாரித்தபோது, "முதல்வருக்கு உமாநாத், சண்முகம், அனுஜார்ஜ் ஆகிய 3 செயலாளர்களும், லட்சுமிபதி இணைச் செயலாளராகவும் இருக்கிறார் கள். இவர்களின் நிலைகளுக்கு ஏற்ப அரசு துறைகள் பிரித்துத்தரப்படும். அந்த வகையில், அனுஜார்ஜிடம் 11 துறைகள் இருந்தன.

Advertisment

ss

குடும்பச் சூழல் காரணமாக 36 நாள் லீவ் எடுத்துள் ளார் அனுஜார்ஜ். அவரது விடுமுறையை வெளிப்படை யாக தமிழக அரசு அறிவிக்கவில்லை. பொதுவாக, முதல்வரின் செயலாளர் ஒருவர் நீண்ட லீவில் சென்றால் அந்த இடத்துக்கு வேறு ஒரு ஐ.ஏ.எஸ். நியமிக்கப்படு வார். ஆனால், அனுஜார்ஜ் நீண்ட விடுமுறையில் சென்றுள்ள சூழலிலும், வேறு ஒரு அதிகாரி நியமிக்கப் படவில்லை. மாறாக, அவர் கவனித்து வந்த 11 துறை களும் மற்ற 3 செயலாளர்களிடம் பிரித்து ஒப்படைக் கப்பட்டுள்ளன. இதனால் அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு துறைகளிலும் நிறைய பணிகள் தேக்கமடைந்துள்ள நிலையில், முதல்வரின் செயலாளர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டால் நிர்வாகப் பணிகள் மேலும் தேக்கமடையும்.

கடந்த வருடமும் இப்படித்தான் நீண்ட லீவில் சென்றார் அனுஜார்ஜ். லீவ் முடிந்து அவர் திரும்பியதும் மீண்டும் அவருக்கே செயலாளர் பதவி கொடுக்கப் பட்டது. தற்போதும், லீவ் முடிந்து அனுஜார்ஜ் திரும்பியதும் அவரையே செயலாளராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதனால்தான், அவருக்குப் பதிலாக புதிதாக ஒரு அதிகாரி நியமிக்கப்படவில்லை.

Advertisment

சட்டமன்றம் நடக்கும்போது முதல்வரின் செயலாளர்களும் சபையில் இருக்க வேண்டும். காரணம், முதல்வருக்குத் தேவையான குறிப்புகளை செயலாளர்கள்தான் தர வேண்டும். இதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கான்ட்ரவெர்சியான கேள்விகளுக்குரிய பதில்களுக்கான குறிப்புகளையும் சம்பந்தப் பட்ட துறையை கவனிக்கும் முதல்வரின் செயலாளர்தான் கொடுத்து உதவுவார்.

அதனால் சட்டமன்றம் நடக்கும் நாட் களில் செயலாளர்களும் சபையில் இருப்பதோடு, அன்றைய நாட்களில் லீவ் எடுக்கவும் மாட்டார்கள். ஆனால், கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது விடுமுறையில் செல்ல அனுஜார்ஜ் அனுமதிக்கப்பட்டார். அப்போதும் இதுகுறித்த சர்ச்சை எழுந்தது. அதனை முதல்வருக்குத் தெரியாமல் அமுக்கி விட்டனர்.

தற்போதும் நீண்ட லீவில் சென்றுள்ள அனுஜார்ஜுக்காக, முதல்வரின் செயலாளர் பதவியை வேறு யாருக்கும் தராமல் பாதுகாத்து வருகின்றனர். அனுஜார்ஜுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள்? அனுஜார்ஜை தவிர திறமையான அதிகாரிகளே இல்லையா? தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் இதெல்லாம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது'' ’என்கிறார்கள் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

Advertisment

இந்த நிலையில், மாலதி ஹெலன், ரவிக்குமார், மிருணாளினி ஆகிய மூன்று அதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது ஒன்றிய அரசு. அவர்களுக்கான பணி நியமனம், பயிற்சிகள் உள்ளிட்ட உத்தரவை தலைமைச் செயலாளர் முருகானந்தம் தனியாக பிறப்பிப்பார்.

தமிழக அரசில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகிய 2 வழிகளில் ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மேற்கண்ட 3 அதிகாரிகளுக்கும் சீனியாரிட்டிபடி ஐ.ஏ.எஸ். அந்தஸ்து கிடைத்திருக்கிறது. இந்த மூவரை தேர்வு செய்ய 15 அதிகாரிகள் கொண்ட பட்டியலை ஒன்றிய அரசின் மத்திய பணியாளர் தேர்வாணைய கமிட்டிக்கு கடந்த மாதம் தி.மு.க. அரசு அனுப்பி வைத்த நிலையில், அவர்களிடம் நேர்காணல் நடத்தி 3 பேரை தேர்வு செய்தது கமிட்டி.

இந்த தேர்வு குறித்து நாம் விசாரித்த போது,”"தமிழக கேடர் ஐ.ஏ.எஸ். பணியிடங் களின் எண்ணிக்கையில் 90 சதவீதம், யூ.பி.எஸ்.சி. நடத்தும் சிவில் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். மீதமுள்ள 10 சதவீதம் வருவாய்த்துறை மற்றும் மற்ற துறைகளிலிருந்து சீனியாரிட்டிபடி தேர்வு (கன்ஃபார்ட்) செய்யப்படுகிறார்கள்.

கன்ஃபார்ட் ஐ.ஏ.எஸ்.களைப் பொறுத்த வரை யூ.பி.எஸ்.சி. இண்டர்வியூ மூலம் தகுதியுள்ள அதிகாரிகள் தேர்வு செய்யப்படுவ தாகச் சொல்லப்பட்டாலும், தமிழக அரசின் சிபாரிசுகளின்படியே செலக்ட் செய்யப் படுகிறார்கள். அந்த வகையில், தற்போது 3 ஐ.ஏ.எஸ். தேர்வின் பின்னணியில் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளின் சிபாரிசுகள் இருந்துள்ளன''” என்கிறார்கள் அரசின் பணி யாளர் நிர்வாக சீர்திருத்தத் துறையினர்.

இது குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, ‘’கன்ஃபார்ட் ஐ.ஏ.எஸ்.களின் (பதவி உயர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவது) தேர்வில் அரசின் சிபாரிசு இருப்பது இயல் பானதுதான். முந்தைய ஆட்சிக் காலங்களில் இத்தகைய சிபாரிசுகள் இருந்தன.

ஆனால், தற்போது தேர்வு செய்யப் பட்டுள்ள 3 ஐ.ஏ.எஸ். விவகாரத்தில், தி.மு.க. அரசின் தலையீடோ, சிபாரிசோ இருக்க வில்லை. 15 பேர் கொண்ட பட்டியலை அனுப்பிவைத்ததோடு மாநில அரசின் வேலை முடிந்துவிட்டது. அந்த 3 பேரை தேர்வுசெய்தது முழுக்க முழுக்க யூ.பி.எஸ்.சி. தேர்வு கமிட்டி தான்''’என்கிறது கோட்டை வட்டாரம்.