முதல்வர் விழா! சர்ச்சையில் அமைச்சர்! திருச்சி திகுதிகு!

ss

மிழகத்தின் ஒவ்வொரு செயல் பாட்டையும் ஒன்றிய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. அதிலும் தமிழகத்திலுள்ள பலம் வாய்ந்த அமைச்சர்களை மிகவும் நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது. அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் ஒன்றிய அரசு, டெல்டாவில் பலம் வாய்ந்த அமைச்சராக வலம்வரும் கே.என்.நேரு வீட்டில் சமீபத்தில் அமலாக்கத்துறையைக் கொண்டு அதிரடி காட்டியுள்ளது.

கே.என்.நேருவின் வீட்டில் மட்டு மல்லாமல், அவருடைய சகோதரர் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பெரம்பலூர் தொகுதி எம்.பி.யும், அவருடைய மகனு மான அருண் நேருவின் வீட்டிலும், அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிரடியாக நுழைந்த

மிழகத்தின் ஒவ்வொரு செயல் பாட்டையும் ஒன்றிய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. அதிலும் தமிழகத்திலுள்ள பலம் வாய்ந்த அமைச்சர்களை மிகவும் நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது. அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் ஒன்றிய அரசு, டெல்டாவில் பலம் வாய்ந்த அமைச்சராக வலம்வரும் கே.என்.நேரு வீட்டில் சமீபத்தில் அமலாக்கத்துறையைக் கொண்டு அதிரடி காட்டியுள்ளது.

கே.என்.நேருவின் வீட்டில் மட்டு மல்லாமல், அவருடைய சகோதரர் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் பெரம்பலூர் தொகுதி எம்.பி.யும், அவருடைய மகனு மான அருண் நேருவின் வீட்டிலும், அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தியது.

trichy

பழைய வழக்கை தூசி தட்டிப் புத்துயிர் கொடுத்து பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், இந்த ரெய்டு நடந்து முடிந்து சில வாரங்கள் ஆன நிலையில், தற்போது திருச்சி தி.மு.க.வில் மீண்டும் ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

அதில் அமைச்சர் நேருவுக்கு மிகவும் நெருக்கமான நிர்வாகியும், மாமன்ற உறுப்பினரும், திரை உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகரின் பெயரைக் கொண்ட வருமான அவர், மாமன்றக் கூட்டங் களில் தொடர்ந்து மேயர் மீது குற்றம் சாட்டுகிறார்.

தனக்கு எந்த ஒப்பந்தமும் வழங்குவதில்லை என்றும், எல்லா ஒப்பந்தமும் தனக்கு வரவேண்டும் என்றும் மாமன்றக் கூட்டத்திலேயே கொஞ்சம் சவுண்டை உயர்த்திப் பேசும் இவர் செய்த வேலைதான், இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பஞ்சப்பூரில் மிகப்பிரமாண்டமாகக் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், வருகின்ற மே 9ஆம் தேதி, தமிழக முதல்வரால் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் நேரு கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் வருகையை யொட்டி மாபெரும் விழா மேடை அமைப்பதற்கான பணிகள் மிக சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. விழா மேடை போடுவதற்கு அங்குள்ள அகண்ட குழியை மேடாக மாற்றி அதன் பின்தான் மேடை அமைக்க முடியும். எனவே இந்த குழியை மூடுவதற்கான ஒப்பந்தத்தை 3 ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொருவருக்கும், 80 மீ அளவுள்ள பள்ளம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. 1200 லோடு மண் அடிக்க 2 கோடிக்கு ஒப்பந்தம் விடப் பட்டது.

trichy

அதில் எஸ்.எம்.மூர்த்தி, எஸ்.ஆர்., நடிகர் பெயரை கொண்டவருக்கும் எனப் பகிர்ந்த நிலையில், இரண்டு ஒப்பந்ததாரர்களும் முறையாக சுரங்கத்துறைக்கு பணம் செலுத்தி குவாரிகளில் இருந்து கிராவல் மண் எடுத்து வந்து நிரப்பிவருகின்றனர். அதேசமயம், நடிகர் பெயரைக்கொண்ட ஒப்பந்ததாரர் இரவு 9 மணிக்கு மேல் புங்கனூர் அருகே தேசிய நெடுஞ்சாலை போடுவதற்காக வும், (அமைச்சர் எ.வ.வேலு கவனத்திற்கு) பாலம் அமைப்பதற்காகவும் குவித்து வைத்துள்ள கிராவல் மண்ணை ஆட்டை யைப் போட்டு அந்த குழியை நிரப்பி வருகிறார். இதுதொடர்பாக தி.மு.க.வினரே மாநில நெடுஞ்சாலைத்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மாநில நெடுஞ்சாலைத்துறையும் என்ன செய்வது என்று தெரியாமல் யாரைப் பகைத்துக் கொள்வது என்பது புரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

ஏற்கெனவே அமைச்சர் நேரு வீட்டில் சோதனை முடிந்து சில வாரங்கள் ஆன நிலையில், அதற்குள் அடுத்த சர்ச்சையை கட்சி நிர்வாகி உருவாக்கியுள்ளார்.

இன்னும் பலர், இது அமைச்சருக்கு தெரிந்து நடக்கிறது என்றும், அமைச்சர் சொல்லாமலா அவர் செய்திருப்பார் என்றும் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.

nkn230425
இதையும் படியுங்கள்
Subscribe