பத்திரப்பதிவுத் துறையில் முதல்வர் அதிரடி!

st

மிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளங்களை ஆக்கிரமிக்கும் ஒரு கும்பலை எதிர்த்து முதல்வர் மு.க. ஸ்டாலினே நேரடியாகக் களத்தில் இறங்கிய ஒரு சம்பவம் தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரப் பகுதியைச் சேர்ந்த பார்ப்பக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த, அரசுக்கு சொந்தமான இரண்டு குளங்களை யும் அதைச்சுற்றி அமைந்துள்ள ஏக்கர்கணக்கான நிலங்களையும், தனியார் ஒருவருக்கு பதிவு செய்து தந்திருக்கிறார் முரப்பநாடு பகுதி யைச் சேர்ந்த சார்பதிவாளர் குமரேசன். அவரை முதல்வர் ஸ்டாலினின் நேரடி உத்தரவைப் பெற்று, முதல்வரின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நேரடியாகத் தலையிட்டு சஸ்பெண்ட் செய்துள் ளார். தலைமைச் செயலக வட்டாரங் களையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்த சம்பவம் பற்றி பேசுபவர்கள் இதுபோல ஒரு சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்வதற்கு முதல்வரே களத்தில் இறங்குவது ஒரு அபூர்வமான நிகழ்வு என்கிறார்கள்.

stalin

திருநெல்வேலி பார்ப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் மற்றும் வி.பட்சிராஜன். இரண்டுபேரும் உறவினர்கள். இருவருக்கும் பரம்பரை

மிழகம் முழுவதும் ஆறு, ஏரி, குளங்களை ஆக்கிரமிக்கும் ஒரு கும்பலை எதிர்த்து முதல்வர் மு.க. ஸ்டாலினே நேரடியாகக் களத்தில் இறங்கிய ஒரு சம்பவம் தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி பாளையங்கோட்டை நகரப் பகுதியைச் சேர்ந்த பார்ப்பக்குளம் என்ற ஊரைச் சேர்ந்த, அரசுக்கு சொந்தமான இரண்டு குளங்களை யும் அதைச்சுற்றி அமைந்துள்ள ஏக்கர்கணக்கான நிலங்களையும், தனியார் ஒருவருக்கு பதிவு செய்து தந்திருக்கிறார் முரப்பநாடு பகுதி யைச் சேர்ந்த சார்பதிவாளர் குமரேசன். அவரை முதல்வர் ஸ்டாலினின் நேரடி உத்தரவைப் பெற்று, முதல்வரின் முதன்மைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். நேரடியாகத் தலையிட்டு சஸ்பெண்ட் செய்துள் ளார். தலைமைச் செயலக வட்டாரங் களையே பரபரப்புக்குள்ளாக்கிய இந்த சம்பவம் பற்றி பேசுபவர்கள் இதுபோல ஒரு சார்பதிவாளரை சஸ்பெண்ட் செய்வதற்கு முதல்வரே களத்தில் இறங்குவது ஒரு அபூர்வமான நிகழ்வு என்கிறார்கள்.

stalin

திருநெல்வேலி பார்ப்பக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் மற்றும் வி.பட்சிராஜன். இரண்டுபேரும் உறவினர்கள். இருவருக்கும் பரம்பரை சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் தகராறு. அது ஒரு சிவில் வழக்காக மாறியது. அந்த சிவில் வழக்கானது, வழக்கு சமரச மையமான லோக் அதாலத் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கே இருவரும் சமரசமாக போவதாகச் சொன்னார்கள். அதை ஏற்று அந்தக் கோர்ட் ஒரு சமரச அறிவிப்பைத் தீர்ப்பாக வெளியிட்டது. ஜோசப் என்கிற ஓய்வுபெற்ற நீதிபதி லோக் அதாலத் அமைப்பின் தலை வராக இருந்தார். அவரும் இரண்டு லோக் அதாலத் உறுப்பினர்களும் இணைந்து ஒரு தீர்ப்பை 2016ஆம் ஆண்டு வழங்கினார்கள். அதில் ரெங்கநாச்சியாருக்கு ஒரு பகுதி நிலத்தையும் பட்சிராஜனுக்கு ஒரு பகுதி நிலத்தையும் வழங்குவதாகவும், ஒருவருக்கு வழங்கப்பட்ட நிலத்தில் இன்னொருவர் தலையிட மாட்டோம் எனவும் இருவரும் மனப்பூர்வமாக சம்மதித்து எழுதிக் கொடுத்துள்ளனர் என்று நிலங்களை சர்வே எண் அடிப்படையில் பிரித்து இருவருக்கும் வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பில் சர்வே எண் 229/1,244. இவை பட்சிராஜனுக்கு வழங்கப்பட்ட நிலங்களில் இடம் பெற்றிருந்த சர்வே எண்கள். இந்த இரண்டு சர்வே எண்களும் சிவலார்குளம், பாப்பாகுளம் ஆகிய அரசுக்கு சொந்தமான குளங்களின் சர்வே எண்கள்.

திருநெல்வேலி நகரத்தின் மையப்பகுதியில் நூற்றுக்கணக்கான கிரவுண்டுகள் பரப்பில் அமைந்துள்ள இந்த இரண்டு குளங்களின் மார்க்கெட் மதிப்பு நூற்றுக்கணக்கான கோடிகள். இதை வெறும் நான்கு லட்சத்து ஐம்பது ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் என லோக் அதாலத்தில் தங்களுக்குச் சொந்தம் என ஒரு தந்திரமான தீர்ப்பைப் பெற்று அரசுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள சொத்துக்களை தங்களுக்குச் சொந்தமானது என பட்சிராஜன் உரிமை கொண் டாடி வந்தார். அப்பொழுது அந்தப் பகுதிக்கு பதிவாளராக வந்த குமரேசனிடம், “இந்த நிலங்கள் எனக்குச் சொந்தமா னது என லோக் அதாலத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை என் பேருக்கு பதிவு செய்து தாருங்கள்” என ஒரு வியாபாரத்தை தொடங் கினார் பட்சிராஜன்.

ஒரு நிலத்தை ஒருவர் பெயரில் பதிவு செய்து தரவேண்டு மென்றால் அந்த நிலம் தொடர்பான மூலப் பத்திரங்களை பதிவாளர் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அத்துடன் அந்த நிலம் தொடர்பான வருவாய்த் துறை ரெக்கார்டுகளை பரிசீலிக்க வேண்டும் என தி.மு.க. ஆட்சி வந்தபிறகு கடுமை யான உத்தரவுகள் பத்திரப் பதிவுத்துறையில் பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதை மீறும் அதிகாரி கள் பலர் நடவடிக்கைக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால், ஒரு சில அதிகாரிகள் தவறு செய்தாலும் மேலிடங்களில் உள்ள செல்வாக்கால் தப்பித்து விடுகிறார்கள். லோக் அதாலத் கோர்ட்டில் வழங்கப்பட்ட சமரச உத்தரவின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள அரசு நிலத்தை பதிவு செய்த முரப்பநாடு சார்பதிவாளர் குமரேசன், அந்தக் குளத்தை அரசு குளப் புறம் போக்கு என்றே ssபட்சிராஜனுக்கு பதிவு செய்து கொடுத்திருக்கிறார். பட்சிராஜன் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் துணையுடன் அந்தக் குளத்தை விற்க ஆரம்பித்தார். இது பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. சார்பதிவாளர் குமரேசனுக்கு எதிராக பெட்டிஷன்கள் பறக்க ஆரம்பித்தன. கோட்டையில் உள்ளவர்கள் துணையுடன் அந்தப் பெட்டிஷன்களை முறியடித்தார் குமரேசன்.

இந்த விவகாரத்தில் திருநெல்வேலி தொடங்கி கோட்டை வரை கோடிக்கணக்கான பணம் புரண்டது. திருநெல்வேலியில் மிகப்பெரிய புகாராக வெடித்த இந்த குள விவகாரம், முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்குச் சென்றது. சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளைத் தாண்டி முதல்வரின் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்.சை இந்த விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி முதல்வர் கேட்டுக் கொண்டார். அவர் அளித்த அறிக்கைப்படி தவறிழைத்த சார்பதிவாளர் குமரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, அவர் அரசு குளத்தை பதிவு செய்ததும் ரத்து செய்யப் பட்டது.

இதேபோல சென்னை கொரட்டூர் பகுதியில் நெடுஞ் சாலைக்குச் சொந்தமான நிலங்களை விற்றதைப் பதிவு செய்ததாக சென்னை நகரப் போலீசுக்குப் புகார் வர, அவர்கள் பத்திரப் பதிவுத் துறையைச் சேர்ந்த உயரதிகாரி கே.கே.மஞ்சுளா, சார்பதிவாளர்கள் செல்வவிநாயகம், பி.கணேசர், ஸ்ரீதர்ராஜேஷ் ஆகியோர் மீது போலி ஆவணங்களைத் தயாரித்து பத்திரப்பதிவில் ஊழல் செய்ததாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. முதல்வரின் இந்த அதிரடியால் பத்திரப்பதிவுத் துறையே கதிகலங்கி நிற்கிறது. கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பிய கதையாக அரசின் குளத்தை நெடுஞ்சாலைத் துறையின் நிலங்களை போலியாகப் பத்திரப்பதிவு செய்தவர்களின் பட்டியல் முதல்வர் அலுவலகத் தில் குவிந்து வருகிறது என்கிறார்கள் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிகள்.

nkn210224
இதையும் படியுங்கள்
Subscribe