தலை இருக்கும்வரை தலைவலி இருக்கும் என்பதுபோல அ.தி.மு.கவில் செங்கோட்டை யன் மூலமாக எழும் பிரச்னைகளுக்கு முடிவே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. டி.டி.வி. தினகரனை அ.மலை சந்தித்தது ஏதோ மேலிட அனுமதியின்றி நடந்த சந்திப்பு அல்ல. அ.மலை யும் தினகரனும் மிக நெருங்கிய நண்பர்கள். அ.மலையின் வெளிநாட்டு முதலீடுகளை கண்காணித்து உதவுபவர் தினகரன். தினகரன் தொடர்பான, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள லண்டன் ஹோட்டல் வழக்கு ஆகியவற்றை முடித்துத் தரும் வேலையைச் செய்பவர் அ.மலை. கடந்த பாராளு மன்றத் தேர்தலில் இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் டி.டி.வி.யின் அ.ம.மு.க.வை போட்டியிட வைத்து அதற்கு பல கோடி ரூபாய் தேர்தல் நிதி வாங்கிக் கொடுத்தவர் என இருவரின் நட்பும் ஆழமானது. எடப்பாடி இதுவரை சந்தித்துள்ள பத்து தேர்தல் தோல்விகளில் ஏழு தேர்தல் தோல்விகளுக்கு தினகரனும் அ.மலையும்தான் காரணம் என்கிற அளவில் நகமும் சதையுமாக பின்னிப்பிணைந்த இருவரது நட்பையும் தாண்டி, இந்த சந்திப்பில் ப
தலை இருக்கும்வரை தலைவலி இருக்கும் என்பதுபோல அ.தி.மு.கவில் செங்கோட்டை யன் மூலமாக எழும் பிரச்னைகளுக்கு முடிவே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. டி.டி.வி. தினகரனை அ.மலை சந்தித்தது ஏதோ மேலிட அனுமதியின்றி நடந்த சந்திப்பு அல்ல. அ.மலை யும் தினகரனும் மிக நெருங்கிய நண்பர்கள். அ.மலையின் வெளிநாட்டு முதலீடுகளை கண்காணித்து உதவுபவர் தினகரன். தினகரன் தொடர்பான, இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள லண்டன் ஹோட்டல் வழக்கு ஆகியவற்றை முடித்துத் தரும் வேலையைச் செய்பவர் அ.மலை. கடந்த பாராளு மன்றத் தேர்தலில் இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் டி.டி.வி.யின் அ.ம.மு.க.வை போட்டியிட வைத்து அதற்கு பல கோடி ரூபாய் தேர்தல் நிதி வாங்கிக் கொடுத்தவர் என இருவரின் நட்பும் ஆழமானது. எடப்பாடி இதுவரை சந்தித்துள்ள பத்து தேர்தல் தோல்விகளில் ஏழு தேர்தல் தோல்விகளுக்கு தினகரனும் அ.மலையும்தான் காரணம் என்கிற அளவில் நகமும் சதையுமாக பின்னிப்பிணைந்த இருவரது நட்பையும் தாண்டி, இந்த சந்திப்பில் பல விசயங்கள் அலசப்பட்டன. எடப்பாடி இல் லாத அ.தி.மு.கவை உருவாக்குவது, சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்குவது, செங்கோட்டை யனை முதல்வர் வேட்பாளராகக் கொண
்டுவரு வது, டி.டி.வி.யை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் கொண்டுவருவது போன்ற விசயங்கள் விவாதிக்கப்பட்டன.
அதில் முக்கியமாக, “எடப்பாடியால் முதல் வராக பரிணமிக்க முடிந்தது. ஆனால் தமிழகத் தில் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அதேபோல் பா.ஜ.க. தமிழகத்தில் அ.தி.மு.கவில் நடத்திய அனைத்து பரிசோதனைகளும் தோல்வியில்தான் முடிந்தன. ஓ.பி .எஸ்.ஸை அ.தி.மு.கவிலிருந்து நீக்கிப் பார்த்தார்கள். எடப் பாடியை தவிர்த்துவிட்டு தேர்தலை சந்தித்துப் பார்த் தார்கள். அனைத்தும் தோல்வி தான். அதனால் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் வெற்றிபெற முடியும். அதே நேரத்தில் ஆட்சியில் உட்கார வைத்து அழகு பார்த்த பா.ஜ.க. வையே கூட்டணியிலிருந்து தூக்கியெறிந்து நீ யார்? என கேள்வி கேட்ட எடப்பாடிக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். அதற் காக முதலில் எடப்பாடியின் உறவினர் கள் மீதான வழக்குகளை காட்டி அவர்களை சிறையில் அடைப்பேன் என மிரட்டி எடப்பாடியை கூட் டணிக்குள் கொண்டுவந்தார்கள். அதன்பிறகு செங்கோட்டையனை வைத்து அ.தி.மு.கவில் கலகம் விளைவித்தார்கள். இப்பொழுது எடப்பாடியை முதல்வர் வேட்பாளர் என்கிற நிலையிலிருந்து நீக்கினால் கொங்கு வேளாளர் சமூகம் கூட பா.ஜ.க.வுக்கு எதிராகத் திரும்பாது. அந்த சமூகத்தைச் சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணனை துணை ஜனாதிபதியாக கொண்டுவந்துவிட்டது பா.ஜ.க. செங் கோட்டையனை முதல்வர் வேட் பாளராக்கினால், கொங்கு வேளாளர் சமூகம் அதை ஆதரிக்கும். இதுதான் பா.ஜ.க.வின் மூவ். இந்த மூவ் செங் கோட்டையனுக்கு சொல்லப்பட்டிருக் கிறது. தன்னை முதல்வர் வேட்பாள ராக கொண்டுவருவார்கள் என்கிற நம்பிக்கையுடன் செங்கோட்டையன் சுற்றிவருகிறார். டி.டி.வி.தினகரன், சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன்.
ஆனால், செங்கோட்டையனின் இந்த அசைவுகளை தெரிந்து கொண்ட எடப்பாடி, அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். தினகரனையும் சசிகலாவையும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்வ தற்கு கடுமையான எதிர்ப்பை எடப்பாடி பா.ஜ.க. மேலிடத்தில், குறிப்பாக அமித்ஷாவிடம் தொடர்ந்து பதிவுசெய்து வருகிறார். அமித்ஷா அவரிடம் பொறுமையாக இருங்கள் என சொன்னதால், செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்காமலிருக்கிறார். தினகரன் -செங்கோட்டையன் சந்திப்பு பற்றி கேள்விப்பட்டவுடன் செங்கோட்டையனை கட்சியை விட்டு நீக்கும் ஆலோசனைகள் எடப்பாடி முகாமில் வேகம் பெற்றுள்ளன. தினகரன், சசிகலா, ஓ.பி.எஸ்., பா.ஜ.க. இணைந்த ஒரு அணியை உருவாக்கலாம் அதில் எடப்பாடி இடம்பெற மாட்டார். எடப்பாடி இல்லாத அந்த அணி செங் கோட்டையனை முதல்வர் வேட்பாளராக அறி வித்தாலும் வெற்றி பெறாது என்பது எடப்பாடியின் நிலையாக இருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்திற்குள் இந்த விவகாரத்தில் இறுதி நிலை எடுக்கவேண்டும் என்கிற நிர்பந்தத்தை சசிகலா தரப்பு, பா.ஜ.க.விடம் செலுத்திவருகிறது. டெல்லியில் முகாமிட்டுள்ள சசிகலா உறவினர்கள் இதற்கு அழுத்தம் தர, தமிழகத்தில் அதற்கான அசைவுகள் வேகம் பெற்றுள்ளன.
“நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க டி.டி.வி. தினகரன் பேச்சுவார்த்தை நடத்தியபோது , கூட்டணி என்றால் ஒரு பெரிய தொகை தரவேண்டும் என விஜய் தரப்பு வைத்த கோரிக்கையை கேட்டு டி.டி.வி.தினகரனே அசந்துபோயிருக்கிறார். எப்படி யாவது நடிகர் விஜய்யை பா.ஜ.க. -அ.தி.மு.க. கூட்டணிக்கு கொண்டுவர வேண்டும் என்கிற முயற்சிகள் வேகம் பெற்றுள்ளன. நடிகர் விஜய் ஒன்றரைகோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை, வருமான வரித்துறை செயல்படுத்துவதில் தயக்கம்காட்டி வரு கிறது. மக்கள் நலனுக்காக நான் எந்த ஒரு முடிவையும் எடுப்பேன் என அறிவித்துள்ள விஜய், தி.மு.க.வைத் தோற்கடிக்க பா.ஜ.க.வுடன் சேருவார் என எதிர்பார்த்து பா.ஜ.க. காத்திருக்கிறது.
இப்படி தமிழகத்தில் குறுக்கும் நெடுக்குமாக ஏகப்பட்ட நகர்வுகளை அமைத்து காத்திருக் கும் பா.ஜ.க., இலவு காத்த கிளியாக மாறுமா அல்லது பழம் தின்னுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது, இதுபோன்ற விவாதங் களை முன்வைத்து ஆலோசித்திருக்கிறார் கள் என்கிறது அ.தி. மு.க. தலைமைக் கழக அரசியல் வட்டாரம்.