Advertisment

அடித்தாடும் முதல்வர்! அடிபணிந்த ஆளுநர்!

ss

ஐ.பி.எல். கிரிக்கெட் பரபரப்புகளைவிட அதிரடி பரபரப்புக்கான களமாக மாறி வருகிறது தமிழ்நாடு சட்டமன்றம்! தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்தே தனக்கு கொடுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அஜென்டாவை செயல்படுத்துவதில் மிகத்தீவிரம் காட்டிவந்தார். தொடக்கத்தில் ஆளுநரை ஆடவிட்டு பொறுமைகாத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது அடித்தாடத் தொடங்கிவிட்டார்!

Advertisment

cc

தமிழ்நாடு சட்டமன்றம் தான் தமிழ்நாட்டு மக்களின் தேவைகள் குறித்து விவாதித்து, திட்டங்களும் சட்டங்களும் இயற்றப்படும் களம். இங்கே அனைத்துக் கட்சியினராலும் விவாதித்த பின்னர் நிறைவேற்றப்படும் மசோதாக் களைப் பெரிதும் சீர்தூக்கிப்பார்க்கும் அவசியம் ஆளுநருக்கு இல்லை. அப்படியே சீர்தூக்கிப் பார்ப்ப தானாலும் சில நாட்களிலேயே மசோதா குறித்த சந்தேகங் களைத் தீர்த்துக்கொண்டு ஒப்புதல் கொடுக்கலாம். இதுதான் ஒரு ஆளு நரின் ஆக்கப்பூர்வமான செயல்பாடாக இருக்க முடியும். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியோ, தமிழ் நாட்டில் குடைச்சல் கொடுக்கும் வேலையில் வெளிப்படையாகவே இறங்கினார். தனக்கு அனுப்பப்படும் மசோதாக்களை அப்படியே கிடப்பில் போடுவதையே வழக்கமாக வைத் துள்ளார். இப்ப டித்தான் பேரறிவாளன் விடுதலை தொடர்பான தமிழ்நாடு சட்டமன்றத் தின் தீர்மானத்தையும் இரண்டரை ஆண்டு காலமாக ஆளுநர் கிடப்பில் போட, அவரின் செயல் பாட்டைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், பேரறி வாளனை விடுதலை செய் தது. அதன்பின்பும் அடங்கா மல், எங்கெங்கோ சென்று சனாதனத்தைத் தூக்கிப்பிடித்தும், திராவிடத்தை கொச்சைப்படுத்தியும் பேசி வெறுப்பு அரசியலில் ஈடுபட்டார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 9ஆம் தேதி, தனக்கு தரப்பட்ட ஆளுநர் உரையில் சில பத்தி களை நீக்கிவிட்டு வாசித்த ஆளுநருக்கு அதே அவையில் மூக்குடைப்பு தருவதுபோல், அவர் பேசிய உரையை அவைக்குறிப்பில் ஏறாதபடி செய்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால் சட்ட மன்றத்திலிருந்த

ஐ.பி.எல். கிரிக்கெட் பரபரப்புகளைவிட அதிரடி பரபரப்புக்கான களமாக மாறி வருகிறது தமிழ்நாடு சட்டமன்றம்! தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்தே தனக்கு கொடுக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அஜென்டாவை செயல்படுத்துவதில் மிகத்தீவிரம் காட்டிவந்தார். தொடக்கத்தில் ஆளுநரை ஆடவிட்டு பொறுமைகாத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது அடித்தாடத் தொடங்கிவிட்டார்!

Advertisment

cc

தமிழ்நாடு சட்டமன்றம் தான் தமிழ்நாட்டு மக்களின் தேவைகள் குறித்து விவாதித்து, திட்டங்களும் சட்டங்களும் இயற்றப்படும் களம். இங்கே அனைத்துக் கட்சியினராலும் விவாதித்த பின்னர் நிறைவேற்றப்படும் மசோதாக் களைப் பெரிதும் சீர்தூக்கிப்பார்க்கும் அவசியம் ஆளுநருக்கு இல்லை. அப்படியே சீர்தூக்கிப் பார்ப்ப தானாலும் சில நாட்களிலேயே மசோதா குறித்த சந்தேகங் களைத் தீர்த்துக்கொண்டு ஒப்புதல் கொடுக்கலாம். இதுதான் ஒரு ஆளு நரின் ஆக்கப்பூர்வமான செயல்பாடாக இருக்க முடியும். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியோ, தமிழ் நாட்டில் குடைச்சல் கொடுக்கும் வேலையில் வெளிப்படையாகவே இறங்கினார். தனக்கு அனுப்பப்படும் மசோதாக்களை அப்படியே கிடப்பில் போடுவதையே வழக்கமாக வைத் துள்ளார். இப்ப டித்தான் பேரறிவாளன் விடுதலை தொடர்பான தமிழ்நாடு சட்டமன்றத் தின் தீர்மானத்தையும் இரண்டரை ஆண்டு காலமாக ஆளுநர் கிடப்பில் போட, அவரின் செயல் பாட்டைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், பேரறி வாளனை விடுதலை செய் தது. அதன்பின்பும் அடங்கா மல், எங்கெங்கோ சென்று சனாதனத்தைத் தூக்கிப்பிடித்தும், திராவிடத்தை கொச்சைப்படுத்தியும் பேசி வெறுப்பு அரசியலில் ஈடுபட்டார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 9ஆம் தேதி, தனக்கு தரப்பட்ட ஆளுநர் உரையில் சில பத்தி களை நீக்கிவிட்டு வாசித்த ஆளுநருக்கு அதே அவையில் மூக்குடைப்பு தருவதுபோல், அவர் பேசிய உரையை அவைக்குறிப்பில் ஏறாதபடி செய்தார் முதல்வர் ஸ்டாலின். இதனால் சட்ட மன்றத்திலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியி லேயே அசிங்கப்பட்டு கிளம்ப வேண்டியதானது. அதேபோல், பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடு என்று குறிப்பிடாததற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதால் தனது நிலைப்பாட்டை ஆளுநர் மாற்றிக்கொண்டார். இப்படியான சூழலில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை மசோதாவை இரண்டாவது முறையாகவும் கிடப்பில் போட்டார் ஆளுநர். இவ் விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு சட்டமியற்றும் அதிகாரம் உண்டென ஒன்றிய அமைச்சரே நாடாளுமன்றத்தில் தெரிவித்ததும், தமிழ்நாடு மக்களுக்கெதிரான ஆளுநரின் வன்மமான போக்கு வெளிப்பட்டது!

இப்படியான சூழலில், ஏப்ரல் 6ஆம் தேதி, இந்தியக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ஆளுநர், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்தும், சட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவது குறித்தும் பேசிய பேச்சுக்கள் தமிழ்நாட்டில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு சுடச்சுட முதல்வர் ஸ்டாலின் கண்டன அறிக்கையை வெளியிட் டார். அதோடு, தி.மு.க. தலை மையிலான கூட்டணிக் கட்சியினரின் கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அடுத்ததாக, சட்டப்பேரவையில் ஏப்ரல் 10ஆம் தேதி திங்களன்று, ஆளுநருக்கு எதிரான தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரது பேச்சில், "கவர்னர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர, பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. இந்த அரசின் கொள்கை களை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை, இந்த சட்டமன்றத்தின் இறையாண்மையை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களைக் கொச்சைப்படுத்தி பொது வெளியில் பேசுகிறார்.

அவர் கவர்னர் என்ற நிலையைத் தாண்டி அரசியல்வாதியாகப் பேசுகிறார். அதுவும் குறிப் பாக, பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போதோ அல்லது பிரதமரைச் சந்திக்க நான் டெல்லி செல்லும்போதோ, தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆன் லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யும் மசோதாவை இந்த அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், இளைஞர்கள் தற்கொலைகள் தொடரும் நிலையில் கூட அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். அதற்கு மேல் சென்று, "வித் ஹோல்டு' என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என்று கவர்னர் விதண்டாவாதமாக பேசுகிறார். இந்த "வித் ஹோல்டு' அதிகாரத்தை கவர்னருக்கு வழங்கவே கூடாது என்று சர்க்காரியா அறிக்கை கூறியதைக்கூட அறியாதவர் போல் பேசுகிறார்.

"கவர்னரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவைச் சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவிட்டால், அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி கவர்னருக்கு இல்லை' என்ற அரசியல் சட்டம் கவர்னருக்கு தெரியவில்லை என்று நான் கூறமாட்டேன். ஆனால் அவருக்கு இருக்கவேண்டிய "அரசியல் சட்ட விசுவாசத்தை', "அரசியல் விசுவாசம்' அப்படியே விழுங்கி விட்டது என்றே இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். அதனால் தான் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் மீறி, அரசின் அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவுகளை விமர்சித்துப் பொதுவெளியில் பேசுகிறார்.

நாள்தோறும் ஒரு கூட்டம், நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில் ராஜ்பவனை "அரசியல் பவனாக' மாற்றிக் கொண்டிருக்கிறார். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக கவர்னர் செயல்படுகிறார். சட்டமன்ற மாண்புக்கு அரசியல் நோக்கத்தோடு ஆளுநர் இடையூறு செய்தால், கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். கவர்னரை விமர்சிக்கிறோம் என்றால் அவரை தனிப்பட்ட முறையில் அல்ல. கவர்னரின் செயல்பாடுகளைத் தான் விமர்சிக்கிறோம்'' என்றெல்லாம் ஆளுநரின் மோசமான செயல்பாட்டை விளாசித்தள்ளிய முதல்வர், "இப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டுமென்று, கவர்னருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது'' என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.

மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார் கள். கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தனி தீர்மானத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். ஆளுநர் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக் கக்கூடாது என்ற விதியைத் தளர்த்துவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்தார். ஆளுநருக்கு எதிரான தீர்மானத்தின்மீது வாக்கெடுப்புக்காக பேரவைக் கதவுகள் அடைக்கும்படி அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்படி அவைக் கதவுகள் அடைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது. வெளிநடப்பு செய்த அ.தி.மு.க.வினர், பேரவைக்கு வராத உறுப்பினர்களைத் தவிர அனைவரும் வாக்கெடுப்பில் பங்கேற்றனர். அவையிலிருந்த 146 உறுப்பினர்களில் தீர்மானத்துக்கு 144 பேர் ஆதரவு தெரிவித்தனர். பா.ஜ.க. உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, சரஸ்வதி ஆகிய 2 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். தீர்மானத்தை ஆதரிப்போர் எண்ணிக்கை நான்கில் 3 பங்குக்கும் மேல் இருந்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை, ஆளுநரின் செலவுக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து கேள்வியெழுப்ப, அதற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளிக்கை யில், "செயலகம், சென்னை, ஊட்டியில் இருக்கும் ராஜ்பவன் என மூன்று செலவீனங்களுக்கும் தமிழக அரசு நிதி ஒதுக்குகிறது. ஆளுநர் மாளிகைக்கென ஒதுக்கப்பட்ட தொகை 18 கோடியே 38 லட்ச ரூபாய். இதில் 11 கோடி 32 லட்ச ரூபாய் அவர்கள் கணக்கிற்கு மாற்றப்பட்டு எங்கே செலவிடப்பட்டது என்ற விவரம் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட வில்லை. தேநீர் விருந்துக்காக மட்டுமே 30 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை செலவினங்களில் விதிமீறல்கள் தடுக்கப்படும். விதிமுறைகளின்படிதான் செலவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை உடனடியாகக் கொண்டு வருவேன்'' என்று ஆளுநர் மாளிகைக்கு அதிரடி யாக மூக்கணாங்கயிறு போட்டார்!

சட்டமன்றமே தனக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய நிலையில், மிரண்டுபோன கவர்னர், உடனடியாக சூதாட்டத் தடை மசோதாவுக்கான ஒப்புதலை வழங்கினார். அதையடுத்து, அன்று மாலையே சட்டமன்றத்தில் அந்த நற்செய்தியை அறிவித்த முதல்வர், உடனடியாக அரசிதழில் வெளியிட்டார். இதன்மூலம் இவ்விவகாரத்தில் ஆளுநரின் தடையை, கூட்டு முயற்சியோடு வெற்றிகரமாக முறியடித்து ஆளுநரை அடிபணிய வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

___________

தகுதியின் அடிப்படையில்தான்!

ஏப்ரல் 12-14, நக்கீரன் இதழில், "அமைச்சருக்கு அடங்காத அதிகாரி! துருவும் சி.பி.ஐ.!' என்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ள தன் மீதான குற்றச் சாட்டுகளை, கல்வியியல் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் பேராசிரியர் நாகசுப்ரமணி மறுத்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், "பல்கலைக்கழக விதிமுறைப்படியும், யு.ஜி.சி. விதிமுறைப்படியும்தான் பணி நியமனமும், பணி உயர்வும் வழங்கப்பட்டன. 2007ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், அப்போதைய யு.ஜி.சி. விதிமுறைப்படி எம்.ஃபில். தகுதி அடிப்படையில் உதவி பேராசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதையடுத்து, 9 ஆண்டுகால பணி அனுபவம் மற்றும் பி.ஹெச்.டி. தகுதி அடிப்படையில் இணை பேராசிரியர் பொறுப்பு வழங்கப்பட்டது. 3 ஆண்டு களுக்குப்பின் யு.ஜி.சி. விதிமுறைகளின்படி பேராசிரியர் பதவி வழங்கப்பட்டது. தற்போது பல்கலைக்கழக விதிமுறைகளின்படி, முறைப்படி தேர்வுக்கமிட்டி பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படை யில், பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் பதவி எனக்கு வழங்கப்பட்டது. என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், அரசுக்கு கெட்ட பெயரை உண்டாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடும்தான் பொய்யான செய்தியைப் பரப்புகிறார்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

(-ஆர்.)

nkn150423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe