Advertisment

ராங்கால் நெகட்டிவ் இமேஜை உடைத்தெறிந்த முதல்வர்! அதிர்ச்சியில் அதிகாரிகள் தரப்பு! குட்டையைக் குழப்பும் சசி! எரிச்சலில் எடப்பாடி! கோட்டையில் கடித முற்றுகை! பா.ம.க.வின் அரசியல் மூவ்!

rr

"ஹலோ தலைவரே தி.மு.க. தரப்பு மீது அண்ணாமலை சுமத்திய ஊழல் குற்றச் சாட்டு, இப்ப அவரையே தாக்க ஆரம்பிச் சிடுச்சே?''

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வுக்கு எதிரான சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்ட சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியது. ஆனால் அண்ணாமலையே எதிர்பார்க்காத வகையில், அவருக்குப் பதிலடி தரும் வகையில் முதல் கட்டமாக அவருக்கு வக்கீல் நோட்டீஸை அனுப்பி வைத்தது தி.மு.க. இந்த நிலையில், தி.மு.க. தரப்பில் அவர் யார் மீதெல்லாம் குற்றச்சாட்டுக்களை வைத்தாரோ, அவர்கள் எல்லோரும் அண்ணாமலை மீது தனித்தனியாக வழக் கைப் பதிவு செய்யக் களமிறங்கிட்டாங்க. பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு கள் பதிவு செய்யப்பட இருக்கின்றன. இதற்கிடையே, சொத்துப் பட்டியலில் அண்ணாமலை சுட்டிக்காட்டிய தொழில் நிறுவனங்களும், தங்கள் சார்பில் வழக்குகளைப் பதிவு செய்து, அண்ணாமலையை அலறவிடக் காத்திருக்கின்றன.''”

Advertisment

uu

"ஏற்கனவே இதுபோன்ற நோட்டீஸ்கள் அண்ணாமலைக்குப் போயிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, மின்சார வாரியத்தோடு பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனம் மேற்கொண்ட வர்த்தகத் தொடர்புடன், கலைஞர் குடும்பத்தைத் தொடர்புபடுத்தி, கடந்த 2021ஆம் ஆண்டே அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி இருந்தார். அந்த நிறுவனமும் இது பொய்க்குற்றச்சாட்டுன்னு சொல்லி, அப்போதே அதற்காக 500 கோடி ரூபாயை நட்ட ஈடாத் தரணும்னு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் தூண்டுதலால்தான் அந்த நிறுவனம் இப்படியொரு நோட்டீஸை அனுப்பியது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படலை. அதேபோல் அரசுமுறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றது பற்றி விருதுநகர் பொதுக்கூட்டத் தில் அவதூறாகப் பேசினார் அண்ணாமலை. இதற்கு தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கக் களமிறங்கிய ஆர்.எஸ்.பாரதி, 24 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்கணும். இல்லை யேல் கிரிமினல் வழக்கு தொடரப் படும்னு சொன்னதோடு, அவரும் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரணும்னு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர் மீது வழக்கு எதுவும் போடப்படலை.''”

"தன் மீது நோட்டீஸோடு விட்டுவிடு வார்கள். வழக்கு எதுவும் போடமாட்டார்கள் என்று அண்ணாமலை இஷ்டத்துக்கும் புகார்களை அடிச்சிவிட்டாரா?''”

stalin

"ஆமாங்க தலைவரே, நம்ம மீது தி.மு.க. தரப்பு வழக்கு எதுவும் போடாது என்கிற நம்பிக்கையில் இருந்தார் அண்ணாமலை. ஆனால், இந்த முறை தி.மு.க. தரப்பு அவரை லேசில் விடுவதாக இல்லை. தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில், அண்ணாமலை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்றும், இல்லை யேல், அவர் மீது உறுதியாக வழக்கு என்ற முடிவில் இருக்கிறது தி.மு.க. அண்ணா மலையோ, என் மீது வழக்கைப் போடும் தைரியம் தி.மு.க.வுக்கு இல்லைன்னு எல்லோ ரிடமும் கிண்டலாகச் சொல்லி வந்தார். இதுவும் அறிவாலயத்த

"ஹலோ தலைவரே தி.மு.க. தரப்பு மீது அண்ணாமலை சுமத்திய ஊழல் குற்றச் சாட்டு, இப்ப அவரையே தாக்க ஆரம்பிச் சிடுச்சே?''

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க.வுக்கு எதிரான சொத்துப் பட்டியலை அண்ணாமலை வெளியிட்ட சம்பவம் தமிழக அரசியலில் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியது. ஆனால் அண்ணாமலையே எதிர்பார்க்காத வகையில், அவருக்குப் பதிலடி தரும் வகையில் முதல் கட்டமாக அவருக்கு வக்கீல் நோட்டீஸை அனுப்பி வைத்தது தி.மு.க. இந்த நிலையில், தி.மு.க. தரப்பில் அவர் யார் மீதெல்லாம் குற்றச்சாட்டுக்களை வைத்தாரோ, அவர்கள் எல்லோரும் அண்ணாமலை மீது தனித்தனியாக வழக் கைப் பதிவு செய்யக் களமிறங்கிட்டாங்க. பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் வழக்கு கள் பதிவு செய்யப்பட இருக்கின்றன. இதற்கிடையே, சொத்துப் பட்டியலில் அண்ணாமலை சுட்டிக்காட்டிய தொழில் நிறுவனங்களும், தங்கள் சார்பில் வழக்குகளைப் பதிவு செய்து, அண்ணாமலையை அலறவிடக் காத்திருக்கின்றன.''”

Advertisment

uu

"ஏற்கனவே இதுபோன்ற நோட்டீஸ்கள் அண்ணாமலைக்குப் போயிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, மின்சார வாரியத்தோடு பி.ஜி.ஆர். எனர்ஜி நிறுவனம் மேற்கொண்ட வர்த்தகத் தொடர்புடன், கலைஞர் குடும்பத்தைத் தொடர்புபடுத்தி, கடந்த 2021ஆம் ஆண்டே அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்தி இருந்தார். அந்த நிறுவனமும் இது பொய்க்குற்றச்சாட்டுன்னு சொல்லி, அப்போதே அதற்காக 500 கோடி ரூபாயை நட்ட ஈடாத் தரணும்னு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அமைச்சர் செந்தில்பாலாஜியின் தூண்டுதலால்தான் அந்த நிறுவனம் இப்படியொரு நோட்டீஸை அனுப்பியது. ஆனால் அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படலை. அதேபோல் அரசுமுறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றது பற்றி விருதுநகர் பொதுக்கூட்டத் தில் அவதூறாகப் பேசினார் அண்ணாமலை. இதற்கு தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கக் களமிறங்கிய ஆர்.எஸ்.பாரதி, 24 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்பு கேட்கணும். இல்லை யேல் கிரிமினல் வழக்கு தொடரப் படும்னு சொன்னதோடு, அவரும் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரணும்னு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர் மீது வழக்கு எதுவும் போடப்படலை.''”

"தன் மீது நோட்டீஸோடு விட்டுவிடு வார்கள். வழக்கு எதுவும் போடமாட்டார்கள் என்று அண்ணாமலை இஷ்டத்துக்கும் புகார்களை அடிச்சிவிட்டாரா?''”

stalin

"ஆமாங்க தலைவரே, நம்ம மீது தி.மு.க. தரப்பு வழக்கு எதுவும் போடாது என்கிற நம்பிக்கையில் இருந்தார் அண்ணாமலை. ஆனால், இந்த முறை தி.மு.க. தரப்பு அவரை லேசில் விடுவதாக இல்லை. தி.மு.க.வினரின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில், அண்ணாமலை மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்றும், இல்லை யேல், அவர் மீது உறுதியாக வழக்கு என்ற முடிவில் இருக்கிறது தி.மு.க. அண்ணா மலையோ, என் மீது வழக்கைப் போடும் தைரியம் தி.மு.க.வுக்கு இல்லைன்னு எல்லோ ரிடமும் கிண்டலாகச் சொல்லி வந்தார். இதுவும் அறிவாலயத்தின் கவனத்துக்குப் போனது. இந்த நிலையில், தி.மு.க.வின் வழக்கறிஞர்கள் டீம், அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டுகளையும், அதில் உள்ள அபத்தங்களையும் ஆராய்ந்து வருகிறதாம். அதனால் அண்ணாமலைக்கு சட்ட ரீதியான ஆப்பு இருக்கிறது என்கிறார்கள் தி.மு.க.வினர். முதற்கட்டமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை எழுப்பிய அவதூறுப் புகாருக்கு நஷ்ட ஈடாக, 50 கோடி ரூபாய் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி இருக்கார். இதேபோல் அடுத்தடுத்து நோட்டீஸ்களும் தயாராகி வருகின்றன. இந்த விவகாரத்தை மற்ற அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.''”

"மாஜி அ.தி.மு.க. மந்திரி ராஜேந்திர பாலாஜி, சசிகலா பக்கம் தாவப் போகிறார்ன்னு செய்தி கிளம்புச்சே?''”

"ராஜேந்திர பாலாஜி, ஒரு காலத்தில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். அவர் மூலம்தான் கடந்த ஆட்சியில் அமைச்சராக ஆனார். சசிகலாவுடன் எடப்பாடி தரப்புக்கு உரசல் வந்த காலத்தில் கூட, பாலாஜி சசிக்கு எதிராக அதிகம் வாய் திறந்ததில்லை. அதனால் எடப்பாடி அவரை சந்தேகக் கண்ணோடு தான் பார்ப்பார். தி.மு.க. ஆட்சி வந்த வேகத்திலேயே, முதல்வர் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், அவர் மோசடி வழக்கில் கைதானார். அப்போது கூட அவருக்காக பெரிய அளவில் கண்டனம் தெரிவிக்காமல் எடப்பாடி சைலண்ட்டையே கடைப்பிடித் தார். இந்த நிலையில் பாலாஜியின் தந்தையார் தவசிலிங்கம், இரண்டு நாட்களுக்கு முன் தன் 93 ஆவது வயதில் மரணமடைந்தார். உடனே சசிகலா, ‘அன்புச் சகோதரர் என பாலாஜியைக் குறிப்பிட்டு, அவர் தந்தையின் மரணத்திற்கு இரங்கல் செய்தி வெளியிட்டிருக் கிறார். இது எடப்பாடி தரப்புக்கு பெரும் நெருடலை ஏற்படுத்தி இருக்கிறது. அஞ்சலி செலுத்த அ.தி.மு.க. புள்ளிகளான தமிழ்மகன் உசேன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் சென்ற நிலையிலும், அந்தத் துக்க வீட்டிலேயே ராஜேந்திர பாலாஜி சசி பக்கம் தாவலாம் என்ற டாக் அடிபட் டது. இது குட்டையைக் குழப்பும் நோக்கில், திட்டமிட்டே சசிகலா நிகழ்த்தும் திருவிளை யாடல் என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.''”

"சரிப்பா, சசி தரப்பில் மீண்டும் திவாகரன் மகன் அரசியலில் பரபரப்பு காட்ட ஆரம்பிச்சிருக்காரே?''”

dd

"ஆமாங்க தலைவரே, சசிகலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், முன்பு அரசியலில் தீவிரம் காட்டி வந்தார். தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்த போது, ஜெய் ஆனந்த்தும், சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஒரு இயக்கத்தைத் தொடங்குவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் பின்னர் அவர் தரப்பில் எந்த நடவடிக்கையும் பெரிய அளவில் இல்லாத நிலையில்தான், தற்போது மீண்டும் செய்தி வளையத்திற்கு வந்திருக்கிறார். ஜெ.வை முதல் குற்றவாளியாகவும் சசிகலாவை இரண்டாம் குற்றவாளியாகவும் ஆக்கிய பெருமை எங்கள் தி.மு.க. வழக்கறிஞர்களுக்கே உரியது என்று அண்மையில் உதயநிதி குறிப்பிட்டதற்கு, அ.தி.மு.க. தரப்பில் இருந்து எவரும் பதில் சொல்லாத நிலையில், தற்போது ஜெய்ஆனந்த், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் எதிர்ப்பு தெரிவித் திருக்கிறார். இதன்மூலம் பரபரப்பு அரசியலில் தன் பெயரை அடிபட வைத்திருக்கிறார் ஜெய்ஆனந்த்.''

"அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மறு படியும் ஆன்மீக சர்ச்சையில் சிக்கி இருக்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, கடந்த 19ஆம் தேதி சட்டப் பேரவையில் அறநிலையத்துறையின் மானிய கோரிக்கை நடந்தது. இதனையொட்டி, கலைஞரின் நினைவிடத்தை, துறை சார்பில் மலர்களால் அலங்கரித்திருந்தார் அமைச்சர் சேகர் பாபு. அதேசமயம், தனது துறையின் மானிய கோரிக் கையை நினைவுபடுத்தும் வகையில் கலைஞரின் நினைவிடத்தில் கோயில் கோபுர வடிவில் சிறப்பு அலங்காரம் செய்து, அதன் மேல் புறத்தில் இந்து சமய அறநிலையத்துறை என பொறிக்கப்பட்ட அலங்காரத்தையும் அவர் செய்திருந்தார். இந்த கோபுர அலங்காரம் பலராலும் ரசிக்கப்பட்ட போதும், தி.மு.க.வில் உள்ள பகுத்தறிவாளர்களிடம் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.''

"வன்னியர் சமூகத்திற்கான உள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றும்படி, பா.ம.க. தரப்பு கடிதங்களால் கோட்டையை முற்றுகையிட்டிருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, வன்னியர் சமுகத்திற் காக 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை கடந்த அ.தி.மு.க. அரசு, போகிற போக்கில் போட் டுவிட்டுப் போனது. இதை எதிர்த்து போடப்பட்ட வழக்கில், அந்த சட்டத்தை ரத்து செய்தது நீதிமன் றம். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் வன்னியர்கள் தனிப்பிரிவாக பார்க்கப்பட வேண்டும் என்பதற்கான தரவுகளை தமிழக அரசு கொடுக்கத் தவறி விட்டது என்றும், உடனடியாக புள்ளி விபரங்களைச் சேகரித்து தனி இட ஒதுக்கீடு சட்டத்தை இயற்றவேண்டும் என்றும் உத்தரவிட் டது நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் பா.ம.க. வழக்கு தொடர்ந்த நிலையில், இடஒதுக்கீட்டை ரத்து செய்தது செல்லும் என்று உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்தது. எனினும், வன்னியர் சமூகத்தின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில், இது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப் படும் என தி.மு.க. அரசு உறுதியளித்திருந்தது.''”

"ஆமாம்ப்பா, ஆனால் அதற்கு எதிர்ப்பும் கிளம்புச்சே?''”

"ஆமாங்க தலைவரே, மற்ற சில சமூகத்தினரும் ‘அவங்களுக்குக் கொடுத்தா எங்களுக்கும் கொடுங்கள்னு இதே கோரிக்கையை வச்சாங்க. எனி னும், இந்த விவகாரத்தில் உரிய தீர்வு காணப்பட வில்லை என பா.ம.க.வுக்கு ஆதங்கம் இருந்தது. எனவே, மே 31-க்குள் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு சட்டத்தை தி.மு.க. அரசு உரிய வகையில் நிறைவேற்ற வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தபால் மூலம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி. இது தவிர, தான் அனுப்பிய கடிதம் போல, பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தில் இருக்கும் நிர்வாகிகளும், வன்னியர் சமூ கத்தினரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்ப வேண் டும் என்று முடுக்கிவிட்டி ருக்கிறார். இதன் அடிப் படையில் ஒரு கோடி கடிதமாவது கோட்டையை முற்றுகையிட வேண்டும் என்பதுதான் அன்புமணி வைத்திருக்கும் இலக்கு. அதனால், இப்போது அவர்கள் தரப்பின் கடிதங்கள், கோட்டையை முற்றுகையிட்டு வருகின்றன.''”

"சென்னை மாநகரை பார்க்கிங் விவகாரம் நெருக்கடிக்கு உள்ளாக்கிச் சங்கடப்படுத்துதே?''”

rr

"ஆமாங்க தலைவரே, சென்னையில் அனுமதிக்கப்படாத இடங்களில் கார் பார்க்கிங் இருக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டி ருக்கிறது. ஆனால், சென்னையிலுள்ள வர்த்தகப் பகுதிகளில் அனுமதிக்கப்படாத இடங்களில் கார்கள் பார்க்கிங் செய்வது தொடர்ந்து நடக்கிறது. இதனால் பொதுமக்களும் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சியில் புகார்கள் குவியுது. நீதி மன்ற உத்தரவை அமல்படுத்த சென்னை மாநக ராட்சி அதிகாரிகளும் போக்குவரத்துத் துறையின ரும் நடவடிக்கை எடுக்க முயற்சிக்கும் போது, லோக் கல் கவுன்சிலர்களின் தலையீட்டால் நடவடிக்கை எடுக்க முடிவதில்லையாம். இதனால், சென்னையின் வர்த்தக பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத பார்க் கிங்கை தடுக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள். கவுன்சிலர்களின் அடா வடிகளை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் மனது வைத்தால் தான் நடக்கும் என்கிறார்கள்.''”

"முதல்வரின் அதிரடி நடவடிக்கைகள் அதிகாரி கள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்குதே?''”

"உண்மைதாங்க தலைவரே, அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங், விசாரணைக்கு ஆளானவர்களின் வாய்க்குள் கருங்கல்லைக் கொண்டு தாக்கியதும், பற்களை உடைத்ததும் பெரும் விவகார மாக மாறியது. இதைத் தொடர்ந்து பல்வீர் சிங்கைக் காத்திருப்போர் பட்டியலுக்கு அரசு அனுப்பிவைத்தது. இந்த நிலையில் பல்வீர் சிங்கைக் காப்பாற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் தரப்பு தீவிரமாகக் களமிறங்கியது. எனினும் முதற்கட்டமாக கடந்த 29ஆம் தேதி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்த முதல்வர் ஸ்டாலின், அடுத்த கட்டமாக, ஊரக வளர்ச்சித்துறையின் முதன் மைச் செயலாளரான அமுதா ஐ.ஏ.எஸ்.ஸை ஸ்பாட்டிற்கு அனுப்பி விசாரிக்கவும் செய்தார். இதைத் தொடர்ந்து அமுதா விசாரித்தபோது, பல்வீர் சிங், கண்காணிப்பு கேமரா ஒன்றை உடைத்ததாகவும், ஒரு பிரிவு சமூகத்தினரை மட்டும் அழைத்து வந்து தாக்கினார் என்று தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர், இந்த விவகாரத்தை சி.பி. சி.ஐ.டி.யின் விசாரணைக்குப் பரிந்துரைத்தார். இதனால் மேலும் ஷாக்கான அதிகாரிகள் தரப்பு, பல்வீர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டாம் என்று கடும் அழுத்தம் கொடுத்தது. ஆனால் இதற்கும் மசியாத முதல்வர் நேர்மை யான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினார். எனவே, பல்வீர் சிங் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அதிகாரிகள் சொல்வதை மட்டுமே முதல்வர் செய்வார் என்று நிலவிவந்த நெகட்டிவ் இமேஜை உடைக்கும் வகையில், சி.பி.சி.ஐ.டி. பிரிவின் விசாரணைக்கும் முதல்வர் உத்தரவிட, அதிகாரிகள் தரப்போ இப்போது பேரதிர்ச்சியில் இருக்கிறதாம்.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். கடந்த இதழில் ஒரு நிதி நிறுவன மோசடி குறித்து விசாரித்த, பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ஒருவருக்கு 5 கோடி ரூபாய் கை மாறியது என்றும், இது குறித்து அவர்மீதான நடவடிக்கை காவல்துறையின் மேலதிகாரியால் தடுக்கப்பட்டிருக்கிறது என்றும் நாம் சம்பந்தப்பட்ட அதிகாரியின் பெயரை மறைத்து பேசிக்கொண்டோம். இந்த இதழ் வெளியானதுமே காவல்துறையே பெரும் பரபரப்பில் மூழ்கியது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யான கபிலன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். நம் நக்கீரனின் செய்தி ஏற்படுத்திய அழுத்தமே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணம் என காவல்துறையினரே பாராட்டுகிறார்கள்.''

__________________

இறுதி சுற்று

கொடநாடு கொலை வழக்கு! வேலுமணியிடம் விசாரணை?

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தீவிரமான விசாரணை நடத்திவரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 20-ஆம் தேதி வியாழன் அன்று முன்னாள் முதலமைச்சர் இ.பி. எஸ்.ஸின் பாதுகாவலராக பணியாற்றிய ஆயுதப்படை ஏ.சி. ஒருவரை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வியாழனன்று விசாரித்து உள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாவலராக பணியாற்றிய ஆயுதப்படை ஏ.சி. கனகராஜை (சென்னை ஆவடி ஆயுதப்படை உதவி ஆணையர்) அவரது மந்தைவெளி இல்லத்தில் காலை 7:30 துவங்கி, 11 மணிவரை விசாரணையை நடத்தியுள்ளனர் கோவை மாநகர சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான குழுவினர்.

விசாரணையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு யார் மூலம் பாதுகாவலராக நியமிக்கப்பட்டார் என்பது குறித்தும் வேலுமணி குறித்தும் குறிப்பிட்டுள்ளதாக கூறுகின்றனர் விசாரணைக் குழு வில் உள்ள அதிகாரிகள். இதனால் அடுத்து முன்னாள் அமைச்சர் வேலுமணி விசாரிக் கப்படலாம் என்பது உறுதியாகி யுள்ளது.

-நாகேந்திரன்

வியாழன்கிழமை (20-ந் தேதி) கூடிய தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது, சமூகநீதி காவலர், மறைந்த முன்னாள் முதல்வர் வி.பி.சிங் அவர்களின் நினை வைப் போற்றும் வகையில், விதி எண் 110-ன் கீழ் உரை நிகழ்த்திய முதல்வர் ஸ்டாலின், "பெரியாரை உயிரினும் மேலான தலைவராக வி.பி.சிங் ஏற்றுக்கொண்டார். கலைஞரை சொந்த சகோதரரை போல மதித்தவர் வி.பி.சிங். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒன்றிய அரசு பணியிடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியவர்.

வி.பி.சிங். தமிழ்நாட்டை தனது ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக நினைத்தவர். கொள்கைக்காக லட்சியத்துக்காக என்னோடு இருந்த மாபெரும் தலைவர் கலைஞர் என்று வி.பி.சிங் பாராட்டினார். வி.பி.சிங் நினைவை போற்றும் வகையில் சென்னையில் அவரது முழுஉருவ சிலை அமைக்கப்படும்"என்று வி.பி.சிங்கிற்கு பெருமை சேர்த்தார் முதல்வர் ஸ்டாலின்.

-இளையர்

nkn220423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe