தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த டிசம்பர் 30-ம் தேதி தஞ்சாவூர், திருச்சி நகரங்களுக்கு வருகை தந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்றைய தினம் காலையில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், அமைக்கப்பட்ட பிரம்மாண்ட விழா மேடையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மொத்தம் ரூ.1231.75 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.237 கோடி மதிப்பில், 43 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் 18 கோடியே 61 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட இராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தையில் அமைக்கப்பட்டுள்ள 309 புதிய கடைகளைத் திறந்துவைத்தார். மேலும், வேளாண்மை பொறியியல் துறை, கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, அறநிலையத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாகக் கொண்டுவரப்பட்ட திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்தார்.
தஞ்சாவூர் நிகழ்ச்சியை முடித்துகொண்டு, பிற்பகலில் திருச்சிக்குச் சென்ற முதல்வருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சியில், கேர் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.1,084.80 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். புதிதாகக் கட்டப்பட்ட சத்திரம் பஸ் ஸ்டாண்ட், கால்நடை மருந்தகக் கட்டடங்கள், மாணவியர் விடுதி உட்பட ரூ.153 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நிறைவடைந்த பணிகளை மக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தார். திருச்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த டிசம்பர் 30-ம் தேதி தஞ்சாவூர், திருச்சி நகரங்களுக்கு வருகை தந்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்றைய தினம் காலையில் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில், அமைக்கப்பட்ட பிரம்மாண்ட விழா மேடையில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மொத்தம் ரூ.1231.75 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.237 கோடி மதிப்பில், 43 ஆயிரம் பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தஞ்சாவூர் மாநகராட்சியில் 18 கோடியே 61 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட இராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தையில் அமைக்கப்பட்டுள்ள 309 புதிய கடைகளைத் திறந்துவைத்தார். மேலும், வேளாண்மை பொறியியல் துறை, கல்வித்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, அறநிலையத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாகக் கொண்டுவரப்பட்ட திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்தார்.
தஞ்சாவூர் நிகழ்ச்சியை முடித்துகொண்டு, பிற்பகலில் திருச்சிக்குச் சென்ற முதல்வருக்கு வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்சியில், கேர் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல், மேடை அமைக்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.1,084.80 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். புதிதாகக் கட்டப்பட்ட சத்திரம் பஸ் ஸ்டாண்ட், கால்நடை மருந்தகக் கட்டடங்கள், மாணவியர் விடுதி உட்பட ரூ.153 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நிறைவடைந்த பணிகளை மக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தார். திருச்சி விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னின்று கவனித்துக்கொண்டார். தஞ்சாவூர், திருச்சி நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஏற்பாடு செய்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "கலைஞரைத் தலைவராக்கிய திருச்சியில் நடைபெறும் விழாவுக்கு, நான் வந்திருக்கிறேன். இங்கு நான் தங்கியிருந்த இடத்திலிருந்து விழா மேடைக்கு வர சில நிமிடங்களே போதும். ஆனால், இங்குவர 2.30 மணி நேரம் ஆகிவிட்டது. சாலையின் இருபுறமும் அதிகளவிலான பொதுமக்கள் திரண்டிருந்தனர். இவர்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்று வோம். திருச்சியில், மனு வாங்கும் சோழனாக வலம் வரும் வாய்ப்பு, எனக்கு கிடைத்துள்ளது. அமைச்சர்கள் கே.என்.நேருவும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இரட்டையர்களாகச் செயல்பட்டு மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களிடமிருந்து 78,582 மனுக்களைப் பெற்றுள்ளனர். அவற்றில் 45,088 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. தமிழகத்தில் எந்த தனி மனிதனும் அரசிடம் கோரிக்கை வைக்க மனு இல்லாத ஒரு நிலையை உருவாக்குவதே எனது லட்சியம்.
தமிழகத்தில், ஈ.வெ.ரா., விரும்பிய சமூக நீதி ஆட்சியாகவும், அண்ணாதுரையின் மாநில சுயாட்சியாகவும், கருணாநிதியின் நவீன மேம்பாட்டு ஆட்சியாகவும், காமராஜரின் கல்வி வளர்ச்சி ஆட்சியாகவும், ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியாக இருக்கும் என்று சட்டசபைத் தேர்தலுக்கு முன் திருச்சி மாநாட்டில் தெரிவித்தேன். அத்தகைய ஆட்சியைத்தான் இப்போது நடத்திக் கொண்டிருக்கிறோம். நாட்டில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களிலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலிடம் என்பதைவிட, தமிழகம் முதலிடம் என்ற நிலை வந்தால்தான் எனக்கு மகிழ்ச்சி ஏற்படும்'' என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க.பொன்முடி, எஸ்.ரகுபதி, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி, எஸ்.எஸ்.சிவசங்கர், சிவ.வீ.மெய்யநாதன், அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.
திருச்சியில் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்துள்ள முதல்வர் ஸ்டாலினிடம், திருச்சியருகே அமைக்கப்பட்டுள்ள ஆசியாவி லேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கான சாலை வசதிகளை மேம்படுத்தும் படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில், மேலூர் நடுக்கரை கிராமத்தில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளுக்கிடையே 27 ஏக்கர் பரப்பளவில். 8 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவை ஜெயலலிதா திறந்து வைத்தார். இந்த பூங்கா, உள்ளுர் மக்களின் பொழுது போக்கிற்கு மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆராய்ச்சி மற்றும் சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
தமிழ்நாடு அரசின் வனத்துறையால் பராமரிக்கப்பட்டுவரும் இந்த பூங்காவில், 50க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகளின் வகைகள் உள்ளன. வண்ணத்துப்பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்காக முன்னூறுக்கும் மேற்பட்ட பல்வேறு வகை தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த பூங்காவிற்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 2500-க்கும் மேற்பட்டோரும், வார நாட் களில் 1000 பேருக்கு மேலும் வந்து செல்கின்றனர். நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், சிறியவர்களுக்கு 5 ரூபாயும் வசூலிக்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. திருமண போட்டோ ஷூட் என்றால் போட்டோ கேமராவிற்கு 500 ரூபாயும், வீடியோ கேமராவிற்கு 1,000 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திருச்சியில் கோவில்களைத் தவிர, முக்கொம்பூர், கல்லணை, வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகிய இவை மூன்றும்தான் திருச்சி மக்களின் பொழுதுபோக்கிற் கென உள்ளன. முக்கொம்பூர் மற்றும் கல்லணைக்குச் செல்வதற்கு போதிய அளவில் சாலை வசதிகள் இருக்கின்றன. ஆனால், வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு சரியான சாலை வசதி இல்லை. இந்த பூங்காவிற்கு, திருச்சி ஜங்சனிலிருந்து 15 கி.மீ தூரமும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 13 கி.மீ. தூரமும் உள்ளது. இதற்கான சாலை, ஒரேயொரு பேருந்து மட்டுமே போகுமளவுக்கு குறுகலாக உள்ளது. அரசு பேருந்துகள் மிகவும் குறைவாகவே இயக்கப்படுகின்றன. மேலும், இந்த வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு செல்லும் வழி குறித்த விவரங்கள் அடங்கிய அறிவிப்புகள் இதற்கான வழித்தடங்களில் வைக்கப்படவில்லை. எனவே இதுகுறித்த விழிப்புணர்வு வெளிநாட்டுப் பயணிகளுக்கு பெரிதும் இல்லாததால், இங்கு வருகைதரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, இங்குள்ள சாலையை விரிவுபடுத்தி இருவழிச் சாலையாக மாற்ற வேண்டும். திருச்சியின் முக்கிய இடங்களில் வழிநெடுக ஆங்காங்கே வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கான அறிவிப்புகள், தமிழ், ஆங்கில மொழிகளில் வைக்கப்பட வேண்டும். ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்காவாக இருந்தாலும், அந்த பூங்காவுக்கு எங்கிருந்து, எப்படிச் செல்ல வேண்டும் என்பதைத் தெரியப்படுத்தாமல் இருப்பது சற்று வேதனைக்குரியதாக உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்து காணப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாகத் திறக்கப்பட்ட இந்த பூங்காவுக்கு, வீடுகளில் அடைந்துகிடந்த மக்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் மீண்டும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டதால் அடுத்த அறிவிப்பு வரும்வரை பூங்கா மூடப்பட்டது. எனவே இந்த காலகட்டத்தில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்து, எதிர்வரும் காலங்களில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்படி செய்யவெண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய பழனியாண்டி, பல இடங்களுக்கு செல்கிறார். இளைஞர் களோடு கபடி விளையாடுகிறார். ஆனால் இந்த பூங்காவின் மேம்பாடு குறித்து மட்டும் கவனம் செலுத்தியது இல்லையென்று பொதுமக்கள் வருந்துகின்றனர். இந்த சுற்றுலாத்தலத்திற்கான பாதையை மேம் படுத்தினால் அரசுக்கு வருமானமும் அதிகரிக்கும். எனவே இத்தொகுதியின் எம்.எல்.ஏ. கவனிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது ஜெயலலிதாவால் தொடங்கப்பட் டது என்றாலும், பாரபட்சம் பார்க்காமல் ஆட்சி நடத்திவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த பூங்காவுக்கான மேம்பாட்டுப் பணிகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.