Advertisment

முதல்வர் வெளிநாடு பயணம்! ஆட்சி -கட்சி, யார் பொறுப்பில்?

dd

ருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணமாக அமெரிக்காவுக்கு செல்கிறார். அதற்கான மத்திய அரசின் அனுமதி 24ஆம் தேதி வழங்கப்பட்டு விட்டது. பத்து நாட்கள் பயணமாக முதல்வரின் பயணத் திட்டம் அமைந்துள்ளது. முதல்வர் பத்து நாட்கள் பயணம் செல்வதால் பொறுப்பு முதலமைச்சரை நியமித்து விட்டு செல்லலாம் என ஒரு யோசனை முதலில் இருந்தது. ஆனால், இப்பொழுது அது தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டு, முதல்வர் போவதற்கு முன்பு இந்த மாத இறுதியிலேயே துணை முதல்வராக உதயநிதியை நியமனம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.

Advertisment

stalin

உதயநிதியின் நியமனம் கட்சியிலும் ஆட்சியிலும் பெரிய மாறுதல்களை கொண்டுவரப் போகிறது என்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அமைச்சரவையில் இருந்தவர்கள் கலைஞரை விட பத்துப் பதினைந்து வயது குறைந்த வயதுடையவர் கள். பேராசிரியர் அன்பழகன் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தார். ஆனால் இன்று அமைச்சராக இருப்ப

ருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பயணமாக அமெரிக்காவுக்கு செல்கிறார். அதற்கான மத்திய அரசின் அனுமதி 24ஆம் தேதி வழங்கப்பட்டு விட்டது. பத்து நாட்கள் பயணமாக முதல்வரின் பயணத் திட்டம் அமைந்துள்ளது. முதல்வர் பத்து நாட்கள் பயணம் செல்வதால் பொறுப்பு முதலமைச்சரை நியமித்து விட்டு செல்லலாம் என ஒரு யோசனை முதலில் இருந்தது. ஆனால், இப்பொழுது அது தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டு, முதல்வர் போவதற்கு முன்பு இந்த மாத இறுதியிலேயே துணை முதல்வராக உதயநிதியை நியமனம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது.

Advertisment

stalin

உதயநிதியின் நியமனம் கட்சியிலும் ஆட்சியிலும் பெரிய மாறுதல்களை கொண்டுவரப் போகிறது என்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அமைச்சரவையில் இருந்தவர்கள் கலைஞரை விட பத்துப் பதினைந்து வயது குறைந்த வயதுடையவர் கள். பேராசிரியர் அன்பழகன் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்தார். ஆனால் இன்று அமைச்சராக இருப்பவர்கள் பெரும்பாலும் சீனியர்கள். அவர்களிடம் முதல்வரால் கேள்வி கேட்கக்கூட முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படுகின் றன. சீனியர் அமைச்சர் ஒருவர் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோதே "நிறைய கட்சி மாநாடுகளை நடத்தியதால் எனக்கு 300 கோடி கடன் இருக் கிறது''’என்றார். மத்திய அரசின் நிதி 300 சதவிகிதம் புழங்கும் அவரது துறையைப் பற்றி இதுவரை யாரும் கணக்கே கேட்ட தில்லை. அவர் சவுக்கு சங்கருடன் பேசிய ஆடியோ டேப்புகளை கேட்ட முதல்வர் அதிர்ச்சி அடைந்தார். அவரை நாம் கேள்வி கேட்காமல் வைத்திருக்கிறோம். அவர் நம்மைப்பற்றி கேவலமாக பேசுகிறாரே என்பதுதான் முதல்வரின் அதிர்ச்சி.

உதயநிதி துணை முதல்வரானால், இரண் டாகப் பிரிக்கப்பட்ட முக்கிய துறைகளை உதயநிதிக்கு அளிப்பதாக திட்டம் தீட்டப்பட்டுள் ளது. ஒன்றிய அரசு கொடுக்கும் நிதியில் 100 சதவிகிதத்தை கையாளும் துறையாக உதயநிதியின் துறை இருக்கும். துறை மாற்றத்தில் பாதிக்கப்படும் சீனியர் அமைச்சர்கள் இருவர் கட்சிக்குள் கலகக்குரல் எழுப்பி வருகிறார்கள். ஒன்றிய அரசும் இனிமேல் நிதியை மாநில அரசுக்கு கொடுக்காது. மாறாக நேரடியாக உள்ளாட்சித்துறை தலைவர் களுக்கு கொடுக்கின்ற வகையில் திட்டம் தீட்டி வருகிறது. அத்துடன், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள, முழுவதும் இளைஞர்கள் கொண்ட மாவட்டச் செயலாளர்கள் பதவியை உருவாக்க உதயநிதி திட்டமிடுகிறார். 2 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என உதயநிதி உருவாக்கும் புதிய படைக்கு தி.மு.க.வில் பெரும் ஆதரவு இருக்கிறது. உதயநிதி கட்சிக்குள் முக்கியப் பொறுப்புக்கு வரவேண்டும் அமைச்சரவையில் பங்கு பெற வேண்டும் என தி.மு.க.வில் 65 மாவட்டக் குழுக்கள் ஒருசேர தீர்மானம் நிறைவேற்றின.

Advertisment

sssஅதுபோல் கட்சியை 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கு தயார் படுத்த உதயநிதி பெரும் முயற்சி எடுக்கிறார். இன்னும் பல மாதங்கள் உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு இப்பொழுதே கட்சிக்குள் மாற்றங்களைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் தி.மு.க.விற்கு இருக்கிறது. நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தி.மு.க.வை இளைஞர்கள் கட்சியாக மாற்ற வேண்டிய நிர்பந்தத்துக்கு கொண்டு சென்றுள்ளது. அமைச்சரவையில் இளைஞர்கள் இடம்பெற வேண்டும். கட்சி நிர்வாகத்தில் இளைஞர்கள் பங்கெடுப்பு வேண்டும் என்பதை, இளைஞரணி மாநாட்டில் "நான் இளைஞரணிச் செயலாளராக இருப்பதையே பெருமையாகக் கருதுகிறேன் என உதயநிதி குறிப்பிடும் அளவிற்கு இளைஞர்களின் பங்கேற்புக்கு தி.மு.க. முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதை தி.மு.க.வில் உள்ள சீனியர்கள் ஏற்கவில்லை.

சமீபத்தில், ‘துணை முதல்வர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்’ என துரைமுருகன் அளித்த பேட்டி, தி.மு.க.வில் நடைபெறும் இளமை மாற்றங்களுக்கு எதிரான அவரது எண்ண ஓட்டத்தையே காட்டுகிறது என்கிறார்கள் தி.மு.க.வினர். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தை ஒட்டி 81 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டு ஆட்சி நிர்வாகம் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு திட்டத்துக்கும் அதைச் செயல்படுத்த அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ள னர். முதல்வரின் திட்டங்களுக் கான சிறப்பு அதிகாரியாக அமுதா ஐ.ஏ.எஸ். நியமிக்கப் பட்டுள்ளார்.

“ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிதிகளை ஒதுக்காத நிலையில், உதயநிதி ஏற்கக்கூடிய புதிய துறைக்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போடும் என எதிர்பார்ப்பு தமிழக அரசு நிர்வாகத்தில் நிலவி வருகிறது. அதனால் நிதி ஆயோக் திட்டத்தை தமிழக அரசு புறக்கணித்து விட்டது. இப்படி ஒன்றியம், கட்சி, ஆட்சி என அனைத்திலும் உதயநிதிக்கு எதிரான விசயங்கள் எழுந்து வந்தாலும் அவற்றை யெல்லாம் சமாளிக்க, 2026 தேர்தலில் நடிகர் விஜய்யை எதிர்கொள்ள ஒரு இளைஞர் படையை தயாரிக்கும் வேலையில் சீரியசாகவே தி.மு.க. திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது. எதிர்காலத் தில் என்ன வரும் என இப்பொழுதே திட்டம் தீட்டு வதுதான் அரசியல். விஜய் அரசியலுக்கு வந்தால் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளில் சில விஜய் பக்கம் போவதற்கும் வாய்ப்பு உண்டு. அதையும் கணக் கிட்டு தி.மு.க. திட்டம் தீட்டி வருகிறது” என்கிறார் கள் தி.மு.க. தலைமைக்கு நெருக்கமானவர்கள்.

nkn270724
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe