Advertisment

முதலமைச்சர் நீதி வழங்கவேண்டும்! -மருந்தாளுநர்கள் கோரிக்கை

mm

"எங்களுக்கான வேலைவாய்ப்புகளை தட்டிப் பறிச்சிட்டாங்க. இனி எங்களுக்கு வேலையே கிடைக்காது, அப்படி இருக்கறப்ப எதுக்காக அந்த படிப்பை அரசாங்கம் வச்சி ருக்கணும், தனியார் கல்லூரி முதலாளிகளுக்காக எங்க வாழ்க்கையோடு விளையாடியது நியாயமா?'' என குமுறுகிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள ஒரு லட்சம் டிப்ளமோ பட்டதாரிகள்.

Advertisment

mm

தமிழ்நாடு அனைத்து பட்டய மருந்தாளுநர் ஒருங் கிணைப்புக் குழுவின் மாநில துணைச் செயலாளர் கடலூர் பலராமன், “அரசு மருத்துவமனை கள், தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் எதுவாக இருந் தாலும் மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்தை வழங்கும் மருந்தாளுநர் பணியானது, இந்தியா முழுவதும் டி.பார்ம் என்கிற டிப்ளமோ பார்மஸி படித்தவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. அதற்காக 2 ஆண்டுகள் படிக்கிறோம், அரசு மருத்துவமனைகளில் 3 மாதம் பயிற்சி எடுத்துக்கொள்கிறோம். டி.பார்ம் படித்தவர்கள் மருந்து வழங்குநர் பணி மற்றும் மருந்து விற்பனைக் கடை வைக்கலாம். அவ்வளவுதான் அவர்களுக்கான வேலைவாய்ப்பு.

Advertisment

தமிழ்நாடு அரசு இதில்தான் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது "இ

"எங்களுக்கான வேலைவாய்ப்புகளை தட்டிப் பறிச்சிட்டாங்க. இனி எங்களுக்கு வேலையே கிடைக்காது, அப்படி இருக்கறப்ப எதுக்காக அந்த படிப்பை அரசாங்கம் வச்சி ருக்கணும், தனியார் கல்லூரி முதலாளிகளுக்காக எங்க வாழ்க்கையோடு விளையாடியது நியாயமா?'' என குமுறுகிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள ஒரு லட்சம் டிப்ளமோ பட்டதாரிகள்.

Advertisment

mm

தமிழ்நாடு அனைத்து பட்டய மருந்தாளுநர் ஒருங் கிணைப்புக் குழுவின் மாநில துணைச் செயலாளர் கடலூர் பலராமன், “அரசு மருத்துவமனை கள், தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் எதுவாக இருந் தாலும் மருத்துவர்கள் எழுதித் தரும் மருந்தை வழங்கும் மருந்தாளுநர் பணியானது, இந்தியா முழுவதும் டி.பார்ம் என்கிற டிப்ளமோ பார்மஸி படித்தவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படுகிறது. அதற்காக 2 ஆண்டுகள் படிக்கிறோம், அரசு மருத்துவமனைகளில் 3 மாதம் பயிற்சி எடுத்துக்கொள்கிறோம். டி.பார்ம் படித்தவர்கள் மருந்து வழங்குநர் பணி மற்றும் மருந்து விற்பனைக் கடை வைக்கலாம். அவ்வளவுதான் அவர்களுக்கான வேலைவாய்ப்பு.

Advertisment

தமிழ்நாடு அரசு இதில்தான் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது "இனி மருந்தாளுநர் வேலைக்கு பி.பார்ம், எம்.பார்ம், பார்ம்லிடி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்' எனச் சொல்லி விண்ணப்பிக்க வைத்து எங்கள் வேலை வாய்ப்பைத் தட்டிப் பறித்துள்ளனர்''” என்றார்.

நம்மிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் தஞ்சாவூர் முரளிதரன், "2019 மார்ச் மாதம் அ.தி.மு.க. ஆட்சியில், காலியாக இருந்த 335 மருந்தாளுநர் பணி யிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மருத்துவ தேர்வாணையம் வெளியிட்டது. அப்போது வேலூரைச் சேர்ந்த நவீன்குமார் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தார். அதில் பி.பார்ம் படித்த எங்களையும் அந்த தேர்வில் கலந்துகொள்ள வைக்கவேண்டும் என்றார். "இவர்களும் பார்மஸி கல்லூரி யில்தானே படித்துள்ளார்கள். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இதை அனுமதிக்கும் போது, இங்கும் அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யுங்கள்' என தீர்ப்பளித்தது நீதிமன்றம். அப்போதைய மருத்துவ இயக்குநர் குருநாதன், ஒரு அறிக்கையை அரசுக்கும், நீதிமன்றத்துக்கும், தேர்வு வாரியத்துக்கும் அனுப்பினார். அதில், டி-பார்ம் என்பது பார்மஸிக்கான படிப்பு. பி.பார்ம் என்பது மருந்து தயாரிப்புக்கான படிப்பு, இரண்டுக்குமான வேறுபாடுகள் அதிகம். இரண்டு பாடத்திட்டமும் பொருந்தாது. மருந்தாளுநருக்கான தகுதி டி-பார்ம் தான் என விளக்கமாக கடிதம் எழுதினார்.

மருந்தாளுநர் வேலைக்கு பி.பார்ம், எம்.பார்ம் படித்தவர்களை போட்டித் தேர்வு எழுதவைக்கக் கூடாது என 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நாங்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தினோம். அப்போது எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், "போராட்டத்தை வாபஸ் வாங்குங்கள், மருந்தாளுநர் வேலை வாய்ப்பில் டிப்ளமோ படித்தவர்களுக்கு 60%, டிகிரி படித்தவர்களுக்கு மீதி 40% தருகிறோம்'' என வாக்குறுதி தந்தார். அப்போது வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பினை ரத்துசெய்தார்கள். நாங்களும் சரியென ஒப்புக்கொண்டோம். அதனையும் மீறி அரசாணை 5 வெளியிடப்பட்டுள்ளது. இதனை வெளியே அறிவிக்கவில்லை.

கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் காலியாகவுள்ள 986 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப் பட்டது. 2023-ஆம் ஆண்டு தேர்வெழுதினோம். இதில், பி.பார்ம், எம்.பார்ம், பார்ம்-டி அதாவது மருந்தக ஆராய்ச்சியாளர் என 6 வருடம் படிப்பு படித்தவர்கள் எல்லாம் வந்து தேர்வெழுதினார்கள். தேர்வெழுதிய எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதாவது, 5-ஆம் வகுப்பு மாணவர்களான எங்களுடன் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, கல்லூரி முடித்தவர்கள் வந்து எழுதுவதுபோல் இருந்தது. 2023 நவம்பர் மாதம் ரிசல்ட் வந்தது. ரிசல்ட் வெளிவந்தபோது தேர்ச்சி பெற்றவர்களில் 98 சதவிகிதம் பி.பார்ம், எம்.பார்ம், பார்ம்-டி படித்தவர்கள். டிப்ளமோ படித்தவர்கள் இந்த தேர்வில் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே''’என்றார்.

mm

மாநிலச் செயலாளர் கமுதி ஜோதிராமன் நம்மிடம், "டிப்ளமோ படித்தவர்களுடன் ஆராய்ச்சி படிப்பு படித்தவர்கள் வந்து கலந்துகொண்டு தேர்வெழுதுவது எப்படி சரியாகும்? நாங்கள் மருந்தாளுநர் பணிக்கு 60% ஒதுக்குங்கள், 40% அவர்களுக்கு ஒதுக்குங்கள் என்கிறோம். இந்த அரசோ, கடந்த ஆட்சியாளர்கள் அப்படி செய்து வைத்துள்ளார்கள், நாங்கள் மாற்றமுடியாது என்கிறார்கள். இந்த வேலைவாய்ப்புக்கான அறி விப்பில் எந்தவித இடஒதுக்கீடும் பின்பற்றவில்லை. இதுபற்றி கேட்டபோது, அறிவிப்பு வெளிவந்த போது ஏன் சொல்லல, ரிசல்ட் வந்துடுச்சி ஒன்னும் செய்யமுடியாதுன்னு சொல்றாங்க. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10,000 பேர் டி-பார்ம் படித்துவிட்டு வருகிறார்கள். அவர்கள் ஒவ் வொருவரின் அரசுப் பணி கனவையும் வாழ்க்கை யையும் அழிக்கிறது இந்த நடைமுறை. இதுபற்றி முறையிட துறை அமைச்சர், முதலமைச்சரை சந்திக்க முயற்சித்தோம், எங்களைச் சந்திக்க மறுக்கிறார்கள்''’என்றார்.

தமிழ்நாட்டில் பார்மஸி கல்லூரிகள் அதிகரித்துவிட்டன. இதனை நடத்தும் அரசியல் பெரும்புள்ளிகள், பி.பார்ம் படித்தால் அரசு வேலை இருக்கிறது, மருந்தாளுநராகலாம் என பொய்சொல்லி அட்மிஷன் போட்டார்கள். படித்துவிட்டு வெளியே வந்தபோது, இந்த படிப்புக்கும் அதற்கும் சம்பந்தமில்லை எனத்தெரிந்ததும் சிக்கல்கள் எழுந்தது. தங்கள் பொய் வெட்டவெளிச்சமானதைத் தொடர்ந்து இந்த படிப்பில் யாரும் சேரமாட்டார்கள் என்பதை உணர்ந்து, கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், நீதிமன்றம் பரிசீலனை எனச் சொன்னதை, உத்தரவு எனச் சொல்லி எங்கள் வாழ்க்கையோடு விளை யாடிவிட்டார்கள். முதலமைச்சர் ஸ்டாலின்தான் இதனை விசாரித்து எங்களுக்கு சரியான நீதி வழங்கவேண்டும்'' என்றார்கள்.

nkn070824
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe