ராங்கால் சீனியர் மந்திரிக்கு பிரேக் போட்ட முதல்வர்! உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா?

ss

"ஹலோ தலைவரே, இங்கே பல தரப்பிலும் அதிரடிக் காட்சிகள் அரங்கேறிவருகின்றன.''”

"உண்மைதான்பா, முதல்வர் ஸ்டாலினுக்கும் துரைமுருகனுக்கும் இடையில் பனிப்போர் நடக்குதுன்னு கூட கோட்டைப் பக்கம் இருந்து தகவல் கசியுதே?''”

"ஆமாங்க தலைவரே, கட்சியின் சீனியர் என்பதால் அமைச்சர் துரைமுருகன் விசயத்தில் முதல்வர் ஸ்டாலின், இவ்வளவு நாள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தார். ஆனால் துரைமுருகனோ தனது சீனியர் தகுதியால், முதல்வரின் மனநிலைக்கு எதிராக நடக்கவும் துணிந்தார். இதுதான் பிரச்சினையை உண் டாக்கியிருக்கிறது. இந்த நிலையில், சிங்கப்பூரில் உலகளாவிய பொருளாதார உச்சி மாநாடு கடந்த 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் அமைச்சர்களான துரைமுருகன், டி.ஆர்.பி.ராஜா, ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. அதிலும் அந்த மாநாட்டை துரைமுருகன் தொடங்கிவைப்ப தாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக துரைமுருகன் உள்ளிட்டவர்களுக்கு விமான டிக்கட்டுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் சம்மந்தப்பட்டவர்கள் சிங்கப்பூருக்குப் புறப்பட ஆயத்தமான கடைசி நேரத்தில், துரைமுருகனையும் ஜெகத் ரட்சகனையும் அந்த மாநாட்டுக் குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டார் ஸ்டாலின். இதில் துரைமுருகன் பலத்த அப்செட்டாகிவிட்டாராம்.''”

"அடடே, பிறகு?''”

sta

"துரைமுருகன் அப்செட் ஆனதைப் பார்த்த ஸ்டாலின், "நானும் உதயநிதியும் தமிழகம் முழுவதும் டூர் போய்க்கிட்டிருக்கோம். நீங்க கட்சி வேலையைப் பார்க்கணும். அதனால்தான் உங்க சிங்கப்பூர் டூரை நிறுத்தச் சொன்னேன்' என்று காரணம் சொன்னாராம். ’இது பொருத்தமான காரணமாகத் தெரியலையே... கட்சிப்பணியைப் பார்க்க நான் மட்டும்தான் இருக்கேனா?’ என்று மேலும் திகைத்துப்போன துரைமுருகன், யாரிடமும் இது தொடர்பாகப் பேசுவதைத் தவிர்த்துவருகிறாராம். இது குறித்து அறிவாலயத் தரப்பில் விசாரித்த போது, துரை மற்றும் ஜெகத்தின் சிங்கப்பூர் வருகையை சிலர் விரும்பவில்லை. அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகத்தான் முதல்வர் அவர்கள் இருவரையும் சிங்கப்பூர் போகாதபடி பிரேக் போட்டு நிறுத்திவிட்டார். இதில் துரைமுருகனின் மீது ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுக்கு அதிருப்தி இருந்தது. அது இப்போது பனிப்போராக மாறியிருக்கிறது என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.''”

"ஸ்டெர்லைட் ஆலையை ஒருவழியாக நிரந்தரமாக மூடச்சொல்லிவிட்டார்க

"ஸ்டெர்லைட் ஆலையை ஒருவழியாக நிரந்தரமாக மூடச்சொல்லிவிட்டார்களே?''”

"ஆமாங்க தலைவரே, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி, 2018 மே 22-ல் vதூத்துக்குடி மக்கள் போராடியபோது, அவர்களுக்கு எதிராக எடப்பாடி ஆட்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டையும், அதில் 13 பேர் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப் பட்டதையும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. 94-ல் இந்த ஆலை தொடங்கப்பட்டபோதே மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அனைத்துக் கட்சிகளும் சமூகநல அமைப்புகளும் மக்களோடு களமிறங்கிப் போராடின. அதற்கு முன்பே, சுற்றுச்சூழல் அமைப்பினர் இந்த ஆலையை மூடச்சொல்லி, நீதிமன்றம் சென்றபோது ம.தி.மு.க.வும் அந்த வழக்கில் தன்னை இணைத்துக்கொண்டது. அந்த வழக்கில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவே நேரடியாக ஆஜராகி வாதாடியதையும் மறக்க முடியாது. இந்த நிலையில் ஸ்டெர்லைட்டை மூடச்சொல்வதும், அதை எதிர்த்து ஆலைத் தரப்பு நீதிமன்றம் செல்வதுமாக நீதித்துறையை மையமாக்கி ஒரு கண்ணாமூச்சு ஆட்டம் நடந்துகொண்டே இருந்தது. இதன் எதிரொலியாக கடந்த 16 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, பொதுமக்களின் ஆரோக் கியத்தைக் கருதி ஸ்டெர்லைட் ஆலையின் மறுசீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து, அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான வழிவகையைச் செய்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை வரவேற்று உற்சாக அறிக்கையை வெளியிட்டிருக்கும் வைகோ, ‘"கால்நூற்றாண்டு கால போராட்டத்திற்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி இது' என்று தெரிவித்திருக்கிறார்.''”

"சரிப்பா, தி.மு.க. அரசு உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகி வருகிறதே?''”

"உள்ளாட்சித் தேர்தலை நடத்த தி.மு.க. அரசு தயாராகிவருவது உண்மைதாங்க தலைவரே. தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக, தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் அர்ச்சனா பட்நாயக்கிற்கு, தேர்தலை நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், தி.மு.க.வுக்கு எதிரான அலை வீசுகிறது என்றும், அதனால் அது உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது என்றும் இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் நடந்துவருகிறது. ஆனால் அறிவாலயத் தரப்போ, வாக்காளர்கள் சேர்ப்பு முகாமை அரசு நடத்துவதே, அது தேர்தலுக்கு ரெடியாகிறது என்றுதான் அர்த்தம். எதிர்க்கட்சிகள்தான் அதிருப்தி என்று கூப்பாடு போடுகின்றன. தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்கள் மத்தியில் வெகுவாகப் பேசப்பட்டு வருகின்றன. எனவே எதிர்க்கட்சிகளின் பூச்சாண்டிகள் எதுவும் பயன்படாது என்கிறது. புதிய வாக்காளர் சேர்ப்பு குறித்த புள்ளிவிபரங்களை விசாரித்த போது, தி.மு.க. , அ.தி.மு.க. தரப்பினர் தலா 40 சதவீதமும், நாம் தமிழர் கட்சியினர் 8 சதவீதமும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் 5 சதவீதமும் புதிய வாக்காளர்களைக் கொண்டுவந்து குவித்திருப்பது தெரியவந்தது. இது வரும் சட்டமன்றத் தேர்தல் எந்த அளவிற்கு அதிரடியான விறுவிறுப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.''”

"விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் அர்ஜுன்ரெட்டி அப்செட்டில் இருக்கிறாரே?''”

rr"உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசியலில் சில அதிரடிக் காட்சிகளை உருவாக்கும் முடிவோடு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான அர்ஜுன்ரெட்டி களமிறங்கியிருக்கிறார். அதன்படி, அ.தி.மு.க. கூட்டணிக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைக் கொண்டு செல்லவேண்டும் என்பதிலும் அவர் குறியாக இருந்தார். இதற்காக மணல் பிசினஸில் கொடிகட்டிப் பறந்த எஸ்.ஆர்.குரூப் இல்லத் திருமண நிகழ்ச்சியில், எடப்பாடியும் திருமாவும் சந்திப்பதற்கான முயற்சியையும் அவர் எடுத்தாராம். அதன்படி அந்த நிகழ்ச்சியில் திருமாவை சந்திக்க எடப்பாடி காத்திருந்த நிலையில், திருமாவோ, "நாங்கள் தி.மு.க. கூட்டணியில்தான் இருப்போம்'’என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தன் மனஉறுதியை அழுத்தமாக வெளிப்படுத்திவிட்டு, அந்த சந்திப்பைத் தவிர்த்துவிட்டார். எனினும், அந்த நிகழ்ச்சிக்கு வந்த மேற்குவங்க பா.ஜ.க. பிரமுகர் சுவேந்து அதிகாரியை எடப்பாடியுடன் சந்திக்க வைத்திருக்கிறார் ஆதவ். மோடிக்கு நெருக்க மான அவரோ, எடப் பாடியிடம், "எந்த நிலையிலும் அ.தி.மு.க. மீது இனி டெல்லி நடவடிக்கை எடுக்காது. அதற்கு நான் உத்தர வாதம் என்றாராம். ஆனால் அதையும் தாண்டி அ.தி.மு.க. தரப்பு மீது டெல்லி நடவடிக்கை எடுத்து வருவதோடு, ஆதவைக் குறிவைத்தும் அண்மையில் ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது அந்த ரெட்டி தரப்பையே அப்செட்டாக்கிப் புலம்ப வைத்திருக்கிறது என்கிறார்கள்.''”

"பா.ஜ.க.வின் தேசியத் தலைமையிலேயே குழப்பம் நிலவுகிறது என்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வின் தேசிய தலைவராக இருந்த ஜே.பி. நட்டா, ஒன்றிய அரசில் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டதால், அவரது கட்சிப் பதவி காலியாக இருக்கிறது. எனவே பா.ஜ.க.வின் அடுத்த தேசியத் தலைவராக யாரை நியமிப்பது என்கிற குழப்பம் அங்கே நிலவுகிறது. இந்தப் பதவியில் தங்கள் கொள்கையில் தீவிர ஆர்வம்கொண்ட ஒருவரைத்தான் உட்கார வைக்கவேண்டும் என்று அக்கட்சி மீது அதிகாரம் செலுத்திவரும் ஆர்.எஸ்.எஸ். கருதுகிறது. குறிப்பாக, பா.ஜ.க.வின் தேசிய தலைவராக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யாவை நியமிக்கவும், அவருக்குப் பதில் உ.பி. முதல்வராக வேறு ஒருவரை நியமிக்கவும் ஆர்.எஸ்.எஸ். திட்ட மிடுகிறதாம். இதன் அடிப் படையில் வரும் டிசம்பர் இறுதிக்குள் பா.ஜ.க.வின் புதிய தலைவரை நியமித்துவிடவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், பா.ஜ.க.வின் தேசிய தலைவராக யோகியை நியமிக்க மோடியும் அமித்சாவும் எதிர்ப்பு காட்டுகிறார்களாம், இதனால் அங்கே இழுபறி நீடிக்கிறதாம்.''

"நடிகர் விஜய்யின் கூட்டணி தொடர்பான மனநிலையை அவர் கட்சியினரே மாற்றி யிருக்கிறார்களே?''”

"அ.தி.மு.க.வுடன் தேர்தல் நேரத்தில் கூட் டணி வைக்க நேரும் என்றுஎண்ணியிருந் தார் த.வெ.க. கட்சித் தலைவரான நடிகர் விஜய். அதனால், அ.தி.மு.க. ஆட்சிக்கால ஊழல்களைப் பற்றி பேசாமல் அவர் மௌனம் சாதித்துவந்தார். அதோடு, அவர் நடத்திய விக்கிரவாண்டி மாநாட்டில்கூட யாரும் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யக்கூடாது என்று பேச்சாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், அவரது கட்சி நிர்வாகிகள் பலரும் அ.தி.மு.க.வை எதிர்த்துக் கடுமையாகப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது தமிழகம் முழுக்கவே நடப்பதை அறிந்த விஜய், தொண்டர்கள் எண்ணத்தை மீறி நடந்தால் வேலைக்காகாது என்பதைப் புரிந்துகொண்டு, இப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கமாட்டோம். சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதியிலும் நாம் தனித்துப் போட்டி யிடுவோம் என்று தன்னைச் சந்திக்கும் நிர்வாகிகளிடம் சொல்ல ஆரம்பித்திருக் கிறாராம். இதையொட்டி பகிரங்கமாகவே, எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்கமாட்டோம் என்கிற ரீதியில் நடிகர் விஜய் பகிரங்க அறிக்கை கொடுக்கலாமா? என்றும் யோசித்துவருகிறாராம்.''”

"காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகளால் இந்துத்துவா தரப்பு ஆடிப்போயிருக்கிறதே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே, ஆன்மீகத்தின் பேரில் ஜக்கி வாசுதேவ் நடத்திவரும் ஆபாச சேட்டைகளையும், அவரது ஈஷா மையத்தில் சிறுமிகளுக்கு நடந்த ஆபாச சித்திரவதைகளையும் நமது நக்கீரன் ஆசிரியர் ஆதாரங்களோடு தொடர்ந்து பகிரங்கப்படுத்தி, அவர்கள் தரப்பை அதிரவைத்தார். இந்த நிலையில் ஜக்கி தரப்பிற்கு ஆதரவாகக் களமிறங்கிய இந்துமுன்னணி, கோவையில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அதில் அடாவடியாகப் பேசி மிரட்டல் விடுத்த அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜியை, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் கைது செய்ததோடு, கிரைம் எண் எழுதப்பட்ட சிலேட்டுப் பலகையையும் அவர் கையில் கொடுத்து, அதிரடி காட்டியது. அதேபோல், தெலுங்கு பேசும் பெண்களைப் பற்றி இழிவாகப் பேசிய நடிகை கஸ்தூரி, போலீஸுக்குத் தண்ணி காட்டினார். தனது முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பு எப்படி வருகிறது என்று, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் புர்கா அணிந்து முகத்தை மறைத்தபடி காத்திருந்த அவருக்கு, முன் ஜாமீன் கிடைக்கவில்லை. அதனால் பதட்டமான கஸ்தூரி அங்கிருந்தே பேருந்தில் ஏறி, அதே புர்காவோடு ஆந்திராவுக்குத் தப்பிச் சென்றார். அங்கே படத்தயாரிப்பாளர் பாலகிருஷ்ணா என்பவர் வீட்டில் கட்டிலுக்கடியில் பதுங்கினார். அவரது மாற்று போன் நம்பரையும் டிரேஸ் செய்த எழும்பூர் போலீஸ் டீம், ஆந்திராவுக்கே போய் அவரை அள்ளிவந்து அதிரடி காட்டியது. இவை எல்லாம் இந்துத்துவா தரப்பிற்கு ஹைவோல்ட் அதிர்ச்சி யைக் கொடுத்திருக் கின்றன.''”

ss

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந் துக்கறேன். வரும் ஜனவரி 26 அன்று குடியரசு தின விழாவில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை தகுதியானவர்களுக்கு வழங்க இருக்கிறது. அதில், "கோட்டை அமீர்' பெயரில் உள்ள மத நல்லிணக்க விருதை, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான குணங்குடி அனீபாவுக்கு வழங்க தி.மு.க. அரசு தீர்மானித்தது. இது குறித்து சென்னை ஆட்சியர் சார்பாக பெரம்பூர் வருவாய்துறை அதிகாரி தேன்மொழி கடந்த வாரம் அனீபாவைச் சந்தித்து இந்தத் தகவலைத் தெரிவித்திருக் கிறார். அனீபாவோ, விருதை ஏற்க மறுத்துவிட்டாராம். இது குறித்து அனீபாவிடம் கேட்டபோது, முஸ்லிம் பெரியவர் பெயரிலான நல்லிணக்க விருதை, முஸ்லீம் அல்லாத சமுக ஆர்வலர் ஒருவருக்கு வழங்குவதுதான் சரியாக இருக்கும். இதுகுறித்து அரசுக்கு விளக்கக் கடிதம் எழுதி யிருக்கிறேன். பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் எனக்கு கோட்டை அமீர் தவிர்த்து, மகாத்மா காந்தி விருது உள்ளிட்டவற்றில் ஒன்றை முதல்வர் எனக்கு வழங்கினால் பெற்றுக் கொள்வேன்’ என்றார்.''

nkn201124
இதையும் படியுங்கள்
Subscribe