ற்றைத் தலைமை குறித்து அ.தி.மு.க.வில் எதிரொலித்த கலகக்குரல்களை சாதுர்யமாக தடுத்ததில் மகிழ்ச்சியடைந்திருக்கும் எடப்பாடி பழனிச்சாமியை, டெல்லியிலிருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்ட கட்டளைகள் அவரை தூங்கவிடவில்லை என்கிறார்கள் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக கவர்னர் பன்வாரிலாலும், தமிழக அமைச்சர்கள் தங்கமணி-வேலுமணியும் ஒருநாள் இடைவெளியில் அடுத்தடுத்து சந்தித்த நிகழ்வுகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பில் நடந்த விவாதங்களை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

oo

Advertisment

இந்த சந்திப்புகள் குறித்து மத்திய உளவுத்துறை யுடன் நெருக்கமாக இருக்கும் தமிழக உள்துறை வட்டா ரத்தில் விசாரித்தபோது, ""அமித்ஷா-பன்வாரிலால் சந்திப் பில் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலவரம், தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து அமித்ஷா கேட்டபோது, "தமிழகத்தில் அரசு என ஒன்று இருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. குறிப்பாக, தற்போது தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சனை குடிநீர். எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரச்சனை மிக மோசமாக இருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு இயந்திரம் சுத்தமாக இயங்கவில்லை. அதேபோல சட்டம் ஒழுங்கை பாதிக்கும் அத்தனை கிரிமினல்தனங் களும் தடையின்றி நடக்கிறது. அவற்றை தடுப்பதில் அமைச்சர்களோ அதிகாரிகளோ அக்கறை காட்டுவ தில்லை. முதல்வர் தொடங்கி ஒவ்வொரு அமைச்சரும் டெண்டர் விவகாரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். தலைமைச்செயலகம் வரும் அமைச்சர்கள், தங்கள் சீட்டில் உட்கார்ந்ததுமே காண்ட்ராக்ட் விசயத்தில்தான் தீவிரம் காட்டுகின்றனர். ஊழல்கள் அதிகரித்து விட்டன. ஆட்சியாளர்களுக்கு இணையாக உயரதிகாரிகளும் ஊழல்களில் கில்லாடி களாக இருக்கிறார்கள். தமிழக அரசு இயந்திரத்தின் எதார்த்த நிலை இதுதான்' என விவரித்திருக்கிறார் கவர்னர்.

a

இதனை உன்னிப்பாக கவனித்த அமித்ஷா, "எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொடுத்த ஊழல் பட்டியல்களின் உண்மைத்தன்மை குறித்து ஒரு ரிப்போர்ட் வேண்டுமென கடந்த காலங்களில் கேட்டிருந்தோம். நீங்களும் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். அது தற்போது உங்களிடம் இருக்கிறதா?' என கேட்க, இருப்பதாக சொன்ன கவர்னர், சென்னையிலிருந்து எடுத்து வந்திருந்த கோப்புகளின் நகல்களை அமித்ஷாவிடம் கொடுத்திருக்கிறார். மொத்தம் 36 துறைகளில் 24 துறைகள் சார்ந்த ஊழல்கள் விரிவாக அதில் விவரிக்கப்பட்டிருந்தன. அப்போது, "எடப்பாடி அரசை உன்னிப்பாக கவனித்து வாருங்கள். வெளிநாடு சென்றுள்ள பிரதமர் டெல்லி திரும்பியதும் சில அசைன்மெண்ட்டுகள் கொடுக்கப்படும்' என்றிருக்கிறார் அமித்ஷா.

Advertisment

இதனைத் தொடர்ந்து, "7 பேர் விடுதலையில் நீதிமன்றம் நிறைய கேள்விகளை எழுப்புவதால், சில விளக்கங்களை அரசு தரப்பிலிருந்து கேட்கின்றனர்' என கவர்னர் சொல்ல, "அந்த விவகாரத்தில் பாசிட்டிவ் சிக்னல் தரும் சூழல் இருக்கிறது. ஆனால், உள்துறை அதிகாரிகள் சில காரணங்களைச் சொல்லி எதிர்மறையாக விவாதிக்கிறார்கள். அதனால், பிரதமரிடம் ஆலோசித்த பிறகு உங்களுக்கு அறிவுறுத்தப்படும்' என்றிருக்கிறார் அமித்ஷா. இதனையடுத்து, பொதுவான அரசியல் சூழல்களை விவாதித்துவிட்டு அனுப்பி வைக்கப்பட்டார் கவர்னர்'' என்கின்றனர் கோட்டை அதிகாரிகள்.

""அமித்ஷா - பன்வாரிலாலின் சந்திப்பில் நடந்ததை அறிந்து கொள்ள துடியாய் துடித்துள்ளார் எடப்பாடி. அதேசமயம், கவர்னரின் சந்திப்பை அடுத்து மறுநாள் டெல்லிக்கு விரைந்தனர் அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும். அமித்ஷாவை இவர்கள் சந்திப்பதற்கு முன்பு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க அறி வுறுத்தப்பட்டனர். அதன்படி சந்திப்பு நடந்தது. தமிழக அரசை கவனிக்கும் பொறுப்பு பியூஷ் கோயலிடம் இருப்பதாலேயே அவரை முதலில் சந்திக்க சொல்லியுள்ளனர். (டெல்லியில் பியூஷ் கோயலை அ.தி.மு.க. விவகாரத்துறை அமைச்சர் என செல்லமாகச் சொல்கிறார்களாம்). தமிழக திட்டங்களை குறித்தும், கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் வீடிழந்தவர்களுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவது குறித்தும் பிரதமரிடம் வலியுறுத்தும் கோரிக்கை மனுவை பியூஷ்கோயலிடம் தந்தார் தங்கமணி.

கோரிக்கை மனுவை வாங்கி சம்பிரதாயத்துக்காக சில பக்கங்களைப் புரட்டி பார்த்து விட்டு, அவர்களிடம், "தேர்தலில் பா.ஜ.க. தோல்விக்கு நீங்கள்தான் (அ.தி.மு.க.) காரணம் என கோபத்தி லிருக்கும் அமித்ஷா, பா.ஜ.க. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் என்ன நடந்தது என முழுமையான ரிப்போர்ட்டை எடுத்து வைத்திருக்கிறார். அவரை நீங்கள் ஏமாற்ற முடியாது. எங்களுக்கு நீங்கள் துரோகம் செய்திருக்கிறீர்கள்' என கடுமையாக சொல்ல, பல உதாரணங்களைச் சொல்லி அவரை சமாதானப்படுத்த தங்கமணியும் வேலுமணியும் முயற்சித்தனர். ஆனால், பியூஷ் கோயல் சமாதானமாகவில்லை'' என்கின்றனர் டெல்லி சோர்ஸ்கள்.

ve

பியூஷ்கோயலை தொடர்ந்து அமித்ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்பு தான் தங்கமணிக்கும் வேலுமணிக்கும் உண்மையான அரசியலை புரிய வைத்திருக் கிறது. இது குறித்து நம்மிடம் பேசிய டெல்லி தொடர்பாளர்கள், ’""பல்வேறு கோரிக்கைகள் சார்ந்த மனுவை அமித் ஷாவிடம் தந்தனர். அதைப்பார்த்த அமித்ஷா, "மத்திய அரசு ஒதுக்கிய நிதி முறையாக செலவிடப்படுவதில்லைங்கிற குற்றச்சாட்டு உங்க அரசு மீது இருக்கிறது. கூடுதல் நிதி கொடுத்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும். மக்களுக்கு என்ன பயன்? மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை ஒழித்துவிட்டுத்தான் கூடுதல் நிதி கொடுப்பதாக திட்டம். அதனால் கூடுதல் நிதி இப்போதைக்கு கிடையாது' என அழுத்தமாக சொல்லிவிட்டாராம் அமித்ஷா. மேலும், "உங்க ளுடைய தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம்' என உங்க அமைச்சர் ஒருவர் பொதுக் கூட்டத்திலேயே பேசியிருக்கிறார். இதுதான் உங்க நாகரீகமா? உங்கள் ஆட்சியை காப்பாத்திக்க எடுத்த நடவடிக்கையில் ஒரு சதவீதம் கூட பா.ஜ.க. வெற்றிக்கு நீங்கள் உழைக்கவில்லை. இதுதான் உங்களின் கூட்டணி தர்மமா? ப.சிதம்பரத்துடன் நீங்கள் கடைசி நேரத்தில் நட்பு பாராட்டுவதாகத்தான் முதலில் எனக்கு சொல்லப்பட்டது. ஆனா, காங்கிரஸின் வெற்றிக்கு தேர்தல் நிதியையும் சிதம்பரத்திடம் கொடுத்திருக்கிறீர்கள். இது துரோகம்தானே!

இதில் உங்கள் முதல்வருக்கு எதிராக ஊழல் ரிக்கார்டுகள் நிறைய இருக்கிறது. அதனால், ஊழல்களுக்கு இடமளிக்காமல் ஆட்சி நடத்தச் சொல்லுங்கள். கவர்னர் உங்களை கண்காணித்தபடிதான் இருக்கிறார்' என காட்டமாகப் பேச, பதில் பேச முடியாமல் திணறியிருக்கிறார்கள் அமைச்சர்கள் இருவரும்.

ஒரு கட்டத்தில் தமிழக அமைச்சர் களுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்தபோது, "இந்த ஆட்சி உங்களுக்கானது. பா.ஜ.க.வுடன் தொடர்ந்து பயணிக்கவே நாங்கள் விரும்புகிறோம்' எனச் சொல்லி அமித்ஷாவை அமைதிப்படுத்தியிருக்கிறார்கள். அமித்ஷாவின் கோபம் மெதுவாக தணிந்ததை உணர்ந்து, ‘"ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கிறது. ஆனாலும், ஆட்சியை கவிழ்க்க மிகக் கடுமையாக திட்டமிடுகிறது தி.மு.க. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வளைக்க குதிரை பேரம் பேசுகிறார்கள். அதனை தடுத்து நிறுத்தும் வகையில், தி.மு.க.வுக்கு பா.ஜ.க.தான் பாடம் புகட்ட வேண்டும்' என அமைச்சர்கள் சொல்ல, "தி.மு.க.வை டிஸ்டர்ப் பண்ண முடியாது. தற்போதைய சூழல் அவர்களையும் நாங்கள் நட்பாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது. எதிர்க்கட்சின்னா எல்லா தந்திரங்களையும் பயன்படுத்தத்தான் செய்வார்கள். அதனால் ஆட்சியை காப்பாத்திக்கிறது உங்கள் பொறுப்பு. நீங்கள் தான் முயற்சிக்க வேண்டும். இதில் எந்த உதவியையும் டெல்லியிலிருந்து எதிர்பார்க்க வேண்டாம். எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கத் தெரியாதவர்களால் ஆட்சி செய்ய முடியாது'' என அட்வைஸ் செய்திருக்கிறார் அமித்ஷா.

மத்திய அரசை வைத்து தி.மு.க.வை மிரட்டலாம் என கணக்குப் போட்டிருந்த தமிழக அமைச்சர்களுக்கு அமித்ஷாவின் பேச்சு ஏமாற்றமளித்திருக்கிறது. அதேபோல, அ.தி.மு.க.வின் உள்கட்சி விவகாரங்கள் குறித்து பேச்சு எழுந்த போது, ஓ.பி.எஸ்.சின் நடவடிக்கைகளை பற்றி அமைச்சர்கள் அதிருப்தி தெரிவிக்க, "ஆரம்பத்திலிருந்தே அவருக்குரிய முக்கியத்துவத்தை நீங்கள் தரவில்லை என்பது எங்களுக்கு தெரியும். இது குறித்து ஒருமுறை பிரதமரும் உங்களிடம் கடிந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் ஓ.பி.எஸ்.சை நீங்கள் மதிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பது போல கட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற எடப்பாடி நினைக்கிறார். இது தவறானது. எங்களது பேச்சை நம்பி அ.தி.மு.க.வில் இணைந்த அவரது அபிலாசைகளை நாங்கள் புறந்தள்ளி விட முடியாது.

அதனால், ஆட்சியிலும் கட்சியிலும் இப்போதுள்ள இரட்டை தலைமையை ஒப்புக்கொண்டு இருவருக்குமான அதிகாரப் பகிர்வுகளை எடப்பாடி பழனிச்சாமியை செய்யச் சொல்லுங்கள். இல்லையெனில், கட்சியின் பொதுச்செயலாளராக ஓ.பி.எஸ்.சை நியமியுங்கள். எடப்பாடி முதலமைச்சராக மட்டும் இருக்கட்டும். மாறாக, பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி ஆசைப்பட்டால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்லுங்கள்' என அமித்ஷா கட்டளையிட, மீண்டும் பதில் பேச முடியாமல் திணறியிருக்கிறார்கள் அமைச்சர்கள். இப்படி அட்வைசும் கட்டளையுமாக இருந்துள்ளது அமித்ஷாவுடனான அமைச்சர்களின் சந்திப்பு''’ என சுட்டிக் காட்டுகிறார்கள் டெல்லி தொடர்பாளர்கள்.

டெல்லியிலிருந்தபடியே அமித்ஷா சந்திப்பில் நடந்ததை எடப்பாடியிடம் அமைச்சர்கள் விவரிக்க, ஏகத்துக்கும் அதிர்ந்து போனார் எடப்பாடி. உடனே ஓ.பி.எஸ்.சை தனது இல்லத்துக்கு வரவழைத்து டெல்லியில் நடந்ததை சொல்லாமல் சமாதானம் பேசிய எடப்பாடி, நாளைக்கு நடக்கும் நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் யாரையும் பேச அனுமதிக்க வேண்டாம். வழக்கம் போல தலைமையிலுள்ள ஐவர் மட்டும் பேசிவிட்டு கூட்டத்தை முடித்து விடலாம். சட்டமன்ற கூட்டம், ராஜ்யசபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகிய இந்த மூன்றும் முடியட்டும். அதன்பிறகு எல்லாவற்றுக் கும் தீர்க்கமான முடிவெடுப்போம். அதுவரையில் எந்த பிரச்சனையும் வேண்டாம்'' என சமாதானம் பேச, அதனை ஒப்புக்கொண்டிருக் கிறார் ஓ.பி.எஸ்.! அதன்படி மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தினை எந்த சச்சரவுமில்லாமல் முடித்த எடப்பாடியை அமித்ஷாவின் கட்டளைகள் பதட்டத்திலேயே வைத்திருக்கின்றன.

-இரா.இளையசெல்வன்

படங்கள் : அசோக்