மாநில உரிமைகளுக்கு எதிராக ஒன்றிய அரசின் சார்பாக எந்த சட்டமோ திட்டமோ கொண்டுவரப்பட்டால் அதை எதிர்க்கக்கூடிய முதல் மாநிலமாக தமிழ்நாடு இருப்பது வரலாறு. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள் கைக்கு எதிர்ப்பு எனப் பல உதாரணங்களைக் காட்டலாம். சமீபத்தில், பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.), துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில உரிமைகளைப் பறிக்கும் விதமாக விதிமுறையில் திருத்தம் செய்துள்ளது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலை. மானியக்குழு அறிவித்த புதிய விதிமுறைகளின்படி, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும். நான்கு ஆண்டு கலை/அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்களை எம்.டெக்., அல்லது எம்.இ., படிப்புகளைத் தொடர அனுமதிக்கலாம். கல்வித் துறை சாராதவர்
மாநில உரிமைகளுக்கு எதிராக ஒன்றிய அரசின் சார்பாக எந்த சட்டமோ திட்டமோ கொண்டுவரப்பட்டால் அதை எதிர்க்கக்கூடிய முதல் மாநிலமாக தமிழ்நாடு இருப்பது வரலாறு. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, புதிய கல்விக் கொள் கைக்கு எதிர்ப்பு எனப் பல உதாரணங்களைக் காட்டலாம். சமீபத்தில், பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.), துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில உரிமைகளைப் பறிக்கும் விதமாக விதிமுறையில் திருத்தம் செய்துள்ளது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலை. மானியக்குழு அறிவித்த புதிய விதிமுறைகளின்படி, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறப்பட்டிருந்தது. மேலும், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும். நான்கு ஆண்டு கலை/அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்களை எம்.டெக்., அல்லது எம்.இ., படிப்புகளைத் தொடர அனுமதிக்கலாம். கல்வித் துறை சாராதவர்களையும் துணைவேந்தர்களாக நியமிக்கலாம் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தது. இந்த விதிமுறைகள், கல்வித்துறையில் மிகமோசமான சீரழிவை ஏற்படுத்துவதோடு, இந்துத்வா சார்ந்தவர்களை நுழைத்து, முழுக்க முழுக்க காவிமயமாகக் கல்வித்துறையை மாற்ற வழிவகுக்குமென்றும், இதுநாள் வரை மாநில அரசுக்கு இருந்த உரிமையை பறிப்பதாக இருப்பதையும் தமிழ்நாடு அரசும், தமிழக எதிர்க்கட்சிகளும் குறிப்பிட்டு, தங்கள் எதிர்ப்புக்களைப் பதிவுசெய்திருந்தார்கள்.
இதையடுத்து, யு.ஜி.சி. விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு எதிராகக் கடந்த ஜனவரி 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை தமிழக முதல்வர் நிறைவேற்றி னார். தனித்தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக சட்டப் பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "எல்லோரும் படித்து, எல்லோரும் வேலைக்குப் போய், எல்லோரும் தலைநிமிர்வது பிடிக்காதவர்களால் தொடர்ச்சியாகக் கல்வித் துறையில் தடுப்பணைகள் கட்டப்படுகின்றன. பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் முயற்சியை ஒன்றிய அரசு தொடங்கிவிட்டது. துணைவேந்தரை தேர்வு செய்ய அமைக் கப்படும் தேர்வுக் குழுவை ஆளுநரே தீர்மானிப்பார் என்று யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறை வகுத்துள்ளது. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநர் கையில் கொடுப்பது, பல்கலைக்கழகங்களைச் சிதைக்கும் காரியமாகத்தான் முடியும்.
கல்வியையும், மக்களையும் காக்க, எதிர்காலத் தலைமுறையைக் காக்க, தமிழக சட்டமன்றத்தில் ஒட்டுமொத்தமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியாக வேண்டும். இந்தத் தீர்மானத்தை ஏற்று ஒன்றிய அரசு மனம் மாறாவிட்டால் மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் நாடுவோம்''’எனக்கூறி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் முன் மொழிந்தார். அதையடுத்து, யு.ஜி.சி. வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், இதேபோன்ற தீர்மானங்களை டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா ஆகிய இந்தியா கூட்டணியைச் சேர்ந்த சட்டமன்றப் பேரவைகளிலும் நிறைவேற்றி, ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டுமென்று அம்மாநில முதல்வர்களுக்கு கடந்த 20ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இதை ஏற்றுக்கொண்ட கேரள முதல்வர் பினராய் விஜயன், யு.ஜி.சி.யின் வரைவு விதிகளுக்கு எதிராக, ஜனவரி 21ஆம் தேதி கேரள சட்டசபையில் தீர்மானத்தை தாக்கல் செய்தார். அத்தீர்மானம் பெரும்பான்மை பலத் துடனும், ஒருமித்த கருத்துடனும் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாட்டிற்கு அடுத்ததாக கேரளாவில் யு.ஜி.சி.க்கு எதிரான தீர்மானம் நிறை வேற்றப்பட்ட நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
தெலங்கானாவில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் திறந்த நிலை பல்கலைக்கழகத்தில், அம்பேத்கர் சிலையைத் திறந்துவைத்துப் பேசிய அவர், "மாநிலப் பல்கலைக் கழகங்களைக் கட்டுப் படுத்தும் யு.ஜி.சி.யின் புதிய விதிமுறைகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்'' என்று காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து ரேவந்த்ரெட்டி பேசுகை யில், "76வது குடியரசு தினத்தன்று, பிரதமர் நரேந்திர மோடியை நான் வலியுறுத்து கிறேன். நீங்கள் மாற்ற விரும்பும் யு.ஜி.சி. விதிமுறைகளை, மாநிலங்களின் மீதான தாக்குதலாகவும், இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகவும் நாங்கள் பார்க் கிறோம். மாநிலங்களின் மீதும், மாநில உரிமைகளின் மீதும் படையெடுப்பு நடத்தப் பார்க்கிறீர்கள். உங்களுடைய அதிகாரங்களை வைத்துக்கொண்டு மாநிலங்களின்மீது நீங்கள் படையெடுத்தால் அது உங்களுக்கு நல்ல பலனைத் தராது!'' என்று கடுமையாகச் சாடினார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் தொடர் முயற்சிகளால், தமிழ் நாட்டைத் தொடர்ந்து, கேரளா, தெலுங் கானாவிலும் பரவியுள்ள எதிர்ப்பு, இன்னும் பல மாநிலங்களிலும் தொடரு மென்று எதிர்பார்க்கப் படுகிறது.