Advertisment

முதல்வர் - கவர்னர் சந்திப்பு! அலறும் மாஜிக்கள்!

ss

தி..மு.க. அரசுக்கும் ராஜ்பவனுக்கும் தொடர்ந்து மோதல்கள் வெடித்து வந்த நிலையில், கவர்னர் ரவியை சந்தித்து விவாதித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் அனுமதி தராமல் நிலுவை யில் வைத் திருப்பதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையிட் டார் ஸ்டாலின். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், "கவர்னரும், முதல்வரும் சந்தித்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும்' என அறிவுறுத்தியது.

cc

இதனால் முதல்வரை அழைத்து கவர்னர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது குறித்து கவனம் செலுத்தாமல் இருந் தார் கவர்னர். அதேசமயம், ஆண்டின் தொடக் கத்தில் கூட்டப்படும் முதல் சட்டமன்ற கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கப்படுவது மரபு. "கடந்தாண்டு கவர்னர் உரையின்போது அவருக்கு எதிராக ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வு களால், இந்தாண்டு கூட்டப்படும் கூட்டத்தில் உரையாற்ற கவர்னர் வருவாரா? புறக் கணிப்பாரா?' என்கிற விவாதம் அரசு தரப்பிலும் எழுந்தது.

இந்த நிலையில் விடுமுறை முடிந்து ஜனவரி 2-ந் தேதி உச்ச நீதிமன்றம் திறக்கப்பட விருப்பதால், முதல்வர் ஸ்டாலினை 30-ந் தேதி அழைத்து விவாதித்தார் கவர்னர் ரவி. அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா சகிதம் கவர்னரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை சுட்டிக்காட்டி அதற்கு ஒப்புதலளிக்க வலியுறுத்தினார்.

இதுகுறித்து அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், ரகுபதி ஆகியோர் பேசியபோது, ""’கவர்னரால் அரசுக்கு திருப்ப

இதுகுறித்து அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், ரகுபதி ஆகியோர் பேசியபோது, ""’கவர்னரால் அரசுக்கு திருப்பி அனுப்பட்ட மசோதாக்களை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தால் அதற்கு ஒப்புதலளிக்கப்பட வேண்டும். ஆனால், மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் கவர்னர். இதனை முதல்வர் சுட்டிக்காட்டியபோது, "மசோதா தொடர்பான பொருள், மத்திய அரசு பட்டியலில் ஏழாவது அட்டவணையில் இருந்ததால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்ததாக' கவர்னர் தெரிவித்தார். இதனை எங்களிடம் தெரிவித்திருந்தால் அதற்கான விளக்கம் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் என்பதை விவரித்தோம்.

வேளாண் விளைபொருள் சட்ட மசோதா, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது விசா ரணை நடத்த அனுமதிகோரும் 2 சட்ட மசோதாக்கள் ஆகியவை பல மாதங்களாக நிலுவையில் இருப்பதையும், இது குறித்து கவர்னர் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விளக்கங்களை அரசுத் தரப்பில் கொடுக்கப் பட்டிருப்பதையும் சொல்லி அவைகளுக்கு ஒப்புதளிக்க கேட்டுக்கொண்டார் முதல்வர்.

அதேபோல, "நீண்ட வருடங்களாக சிறையில் இருக்கும் சிறைவாசிகளை முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களை நியமிக்கும் மசோதாவுக்கும் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளோம். இதுகுறித்த விரிவான கோரிக்கை மனுவை கவர்னரிடம் முதல்வர் கொடுத்திருக்கிறார். தீர்வு எப்படி வருகிறது என பார்ப்போம்''’’ என்கின்றனர்.

Advertisment

cc

அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ""சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள், கோப்புகள் மீது காலதாமதம் செய்யாமல் அனுமதி வழங்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்றம் கூறிய அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டு உரிய காலத்தில் ஒப்புதலளிக்க வேண்டும், அரசு நிர்வாகத்துக்கும் மக்களின் நலன்களுக்கும் பலனளிக்கும் வகையில் அரசியல் சாசன விதிகளின்படி கவர்னர் இயங்க வேண்டும், மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் காலதாமதம் தவிர்க்கப்பட வேண்டும்'' என்றெல் லாம் கவர்னரிடம் வலியுறுத்தினார் முதலமைச்சர்.

அரசியல் சாசன அமைப்புகளின் மீது தனக்கு உயரிய மரியாதையும் மதிப்பும் இருப்பதை விவரித்த முதல்வர், ""தேவையின்றி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களை திரும்ப பெற வேண்டும்'' எனவும் கவர்னரை கேட்டுக்கொண் டார். அதற்கு கவர்னர் ரவி, ""தமிழக மக்கள் மீது எனக்கு முழு ஈடுபாடு இருக்கிறது. அரசியலமைப்பு சட்ட நெறிகளுக்கு உட்பட்டு மாநில அரசுக்கு எனது ஒத்துழைப்பு தொடர்ந்து கிடைக்கும். மக்க ளின் நலன்களுக்காக இத்தகைய சந்திப்புகள் அடிக் கடி நடக்கவேண்டும்'' என்பதை தெரிவித்தார்.

சந்திப்பு சுமூகமாக இருந்தாலும் கவர்னரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைப் பொறுத்தே அரசுக்கும் ராஜ்பவனுக்குமான உறவு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பது தெரியும். "இந்தாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்ற கவர்னர் வரவேண்டும் என்றும் முதல்வர் தரப்பில் சொல்லப்பட்டது'’என்று விவரிக்கிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

இதற்கிடையே, முதல்வர்-கவர்னர் சந்திப்பு அ.தி.மு.க. தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்கிற தி.மு.க. அரசின் அழுத்தமான வலியுறுத்தலை உன்னிப்பாக கவனித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. வழக்கில் தொடர்புடைய மாஜிக்கள் வீரமணியும், கரூர் விஜயபாஸ்கரும் எடப்பாடியிடம் இதுகுறித்து பதட்டத்துடன் விவாதித்ததாகச் சொல்லப்படுகிறது.

அதாவது, முன்னாள் அமைச்சர்கள் வீரமணி மற்றும் கரூர் விஜயபாஸ்கர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. இவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அனுமதி கோரி கவர்னருக்கு கோப்புகளை அனுப்பி வைத்தது தி.மு.க. அரசு. ஆனால், வீரமணிக்கு எதிரான கோப்புகள் 15 மாதங்களாகவும், விஜயபாஸ்கருக்கு எதிரான கோப்புகள் 7 மாதங்களாகவும் கவர்னரிடம் நிலுவையில் இருக்கிறது.

"அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறவு இருந்ததால் இந்த கோப்புகளுக்கு அனுமதி தராமல் நிலுவையில் வைத்திருந்தது ராஜ்பவன். ஆனால், தற்போது கூட்டணி உறவு முறிந்துள்ள நிலையில் இந்த கோப்புகளுக்கு அனுமதி தர அழுத்தம் தந்தால், கவர்னர் அனுமதி தந்துவிடுவார் என்கிற கோணத்தில் தி.மு.க. அரசு அழுத்தம் தந்திருக்கிறது. அதற்கேற்ப, கவர்னரும் அனுமதி தந்து விடுவார்' என எடப்பாடிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தான் அ.தி.மு.க. மாஜிக்கள் அலறத் தொடங்கியிருக்கிறார்கள்.

தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்கா தொடர்பான வழக்கு சி.பி.ஐ. விசாரணை யில் இருக்கிறது. இதில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் புதுக் கோட்டை விஜயபாஸ்கர், ரமணா ஆகியோர் மீது நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க தி.மு.க. அரசின் அனுமதியை சி.பி.ஐ. கேட்ட விவகாரத்தில் தி.மு.க. அரசும் அனுமதி தந்திருக்கிறது. கவர்னரும் அந்த கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். இது தவிர, மாஜிக்களான வளர்மதியும் காமராஜும் சில ஊழல் வழக்குகளை எதிர் கொண்டு வருகின்றனர்.

இதெல்லாம் அ.தி.மு.க. தரப்பை ஆட்டம்காண வைத்துக் கொண்டிருக்கும் நிலையில், "தற்போது வீரமணி மற்றும் கரூர் விஜயபாஸ்கருக்கு எதிரான கோப்பிற்கு கவர்னர் ஒப்புதல் தந்தால் அ.தி.மு.க.வுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும்' என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள்.

இந்த சூழலில், "மாஜிக்களுக்கு எதிரான கோப்புகளுக்கு கவர்னர் அனுமதி தந்தால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும்' என சட்ட நிபுணர்களிடம் ஆலோசிக்கவும் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர், கவர்னர் சந்திப்பு அ.தி.மு.க.வில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் அதேசமயம், தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிரான சூமோட்டோ வழக்குகளும் இனி சூடுபிடிக்கும் என்பதால், அவ்வழக்குகள் பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

ஏற்கனவே, செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காமல் இருப்பதிலும், பொன்முடிக்கு எதிரான வழக்கில் அவருக்கு தண்டனை கிடைத்திருப்பதிலும் தி.மு.க. வழக்கறிஞர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். சமீபத்தில் நடந்த ஆலோசனையின்போது, இந்த அதிருப்தியை முதல்வரும், சம்மந்தப்பட்ட அமைச்சர்களும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கோபமான சில வார்த்தைகள் கூட அந்த ஆலோ சனையில் தெறித்ததாக தி.மு.க. வழக்கறிஞர்கள் தரப்பில் வட்டமடிக்கின்றன.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த ஆலோசனையின் முடிவில், ""நம் அமைச்சர்கள் ஒருவர் கூட இனி நீதிமன்றத்தால் தண்டிக்கப்படக் கூடாது. வழக்குகளை சரியான கோணத்தில் வாதிட்டு நம்மிடம் தவறில்லை என்பதை நிரூபியுங்கள்'' என்கிற அட்வைஸுடன் கூட்டத்தை முடித்துக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

இனிவரும் நாட்கள் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கு எதிரான வழக்குகள் சூடு பிடிக்கும் என்பதால் இரண்டு கட்சிகளிலுமே பதட்டம் அதிகரித்தபடி இருக்கிறது.

nkn030124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe