சுடச்சுட என்பார்களே, அது போல, இடைத்தேர்தல் முடிந்த கையோடு, ஏற்கெனவே அறிவித் ததுபோல் விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரத்தை உயர்த்திய அறிவிப்பு வெளி யாகியுள்ளது!
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளின் ஒன் றாக, விசைத்தறிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரம், ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்படும் என்றது. கஜானா காலியான சூழலிலும், கொரோனா உச்சகட்ட சூழலிலும் பதவிக்கு வந்த தி.மு.க. அரசு, ஒருபுறம் நிதி ஆதாரத்தைப் பெருக்கும் முயற்சியோடு,
சுடச்சுட என்பார்களே, அது போல, இடைத்தேர்தல் முடிந்த கையோடு, ஏற்கெனவே அறிவித் ததுபோல் விசைத்தறிகளுக்கு இலவச மின்சாரத்தை உயர்த்திய அறிவிப்பு வெளி யாகியுள்ளது!
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளின் ஒன் றாக, விசைத்தறிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரம், ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்படும் என்றது. கஜானா காலியான சூழலிலும், கொரோனா உச்சகட்ட சூழலிலும் பதவிக்கு வந்த தி.மு.க. அரசு, ஒருபுறம் நிதி ஆதாரத்தைப் பெருக்கும் முயற்சியோடு, இன்னொருபக்கம், தேர்தல் வாக்குறுதிப்படி, விசைத்தறியாளர்களுக்கு இலவச மின்சார வரம்பை உயர்த்தும் நடவடிக்கையில் இறங் கியது, இச்சூழலில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் வந்ததால், விசைத்தறிகளுக்கு கூடுதல் இலவச மின்சார அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி தடையாக நின்றார். இந்த அறிவிப்பை செயல்படுத்தவிடக்கூடாதென தேர்தல் ஆணையத்துக்கு அவர் கடிதமெழுதியதால், அரசின் அறிவிப்பாணையைத் தற்காலிகமாக தேர்தல் ஆணையம் நிறுத்திவைத்தது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரப் பணியிலிருந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விசைத்தறியாளர்கள் அமைப்பு நிர்வாகிகளை அழைத்து, விசைத்தறிகளுக்கு உறுதியாகத் தேர்தல் முடிந்ததும் கூடுதல் இலவச மின்சார அறிவிப்பு வரும் என்று நம்பிக்கையைக் கொடுத்தார். அமைச்சரின் உறுதிமொழியின் மீதான நம்பிக்கையால் இடைத்தேர்தலில் விசைத்தறி நெசவாளர்கள், தி.மு.க. கூட்டணிக்குத் தங்கள் ஆதரவைத் தந்து, தி.மு.க. கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவனை அமோக வாக்குகள் பெற்று வெற்றிபெற வைத்தனர்.
வெற்றிபெற்ற கையோடு, விசைத்தறியாளர் களுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றும்வித மாக, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பார்வைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டுசென்றார். அதையடுத்து 3-ஆம் தேதி மாலையே விசைத் தறியாளர்களுக்கு 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. அதோடு, விசைத்தறி களுக்கு ஆயிரம் யூனிட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு 70 காசுகள் மட்டுமே உயர்த்த வேண்டும் என்ற நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றும்விதமாக, 1001 யூனிட்டிலிருந்து 1500 யூனிட்டுகள் வரை அ.தி.மு.க. எடப்பாடி அரசு உயர்த்திய அந்த மின்சாரத்தை, யூனிட் ஒன்றுக்கு 35 காசுகள் குறைத்தும், அதேபோல் 1500 யூனிட் டிற்கு மேல் 70 காசுகள் குறைத்தும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பு, தமிழ்நாட்டி லுள்ள 10 லட்சம் விசைத்தறியாளர் களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக விசைத்தறியாளர்கள் சங்கத்தின் அமைப்புகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.