"ஹலோ தலைவரே, தமிழகத்தில் மீண்டும் மொழிப் போருக்கான சூழல் உருவா குதே?''”
"ஆமாம்பா, வடக்கு நம் மீது திணிக்க நினைக்கும் இந்திக்கு எதிரான போர்க் குரல் டெல்லிவரை இப்போது எதிரொலிக்குதே?''”
"உண்மைதாங்க தலைவரே, மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியைத் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, தி.மு.க. கூட் டணிக் கட்சிகள் நடத்திய கண்டன போராட்டம், தேசிய அளவில் டெல்லி வரை எதிரொலித்திருக் கிறது. துணை முதல்வர் உதயநிதி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பேசிய அத்தனை பேச்சையும் வரி விடாமல் நோட் செய்து டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறது ஒன்றிய உளவுத்துறை. அவர்களின் பேச்சில் இந்திய இறையாண் மைக்கு எதிராக ஏதேனும் இருக்கிறதா என்பதை டெல்லி ஆராய்ந்து வரு கிறதாம். இதற்கிடையே, இந்த கண்டன போராட்டத்திற்கு முதல் நாள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவ ரிடமும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தாய் மொழியான தமிழுக்கு ஆபத்து சூழ்ந்திருக்கிறது, அதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது' என்று உணர்வுப்பூர்வமாக சொன்னாராம். முதல்வரின் இந்த பேச்சுத்தான், ஆர்ப்பாட்டத்தில் பலரையும் ஆர்ப்பரிக்கச் செய்திருக்கிறது என்கிறார்கள்.''”
"டி.ஜி.பி. மீது முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்கிறார்களே?''”
"தமிழகத்தில் ஒரே நாளில் பல பாலியல் சம்பவங்கள் நடந்திருப்பதாக எடப்பாடி எழுப்பிவரும் குற்றச்சாட்டு முதல்வர் ஸ்டா லினை சற்று சங்கடப்படுத்தியிருக்கிறது. மேலும் கொலை உள்ளிட்ட க்ரைம் சம்பவங் களும் இப்போது அதிகரித்திருப்பதுபோல் சொல்லப்படுவதும், அவரைக் கவலையுறச் செய்திருக்கிறது. காவல்துறை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் இது பற்றியெல்லாம் பெரிதாக அலட் டிக்கொள்ளவில்லையே என்கிற ஆதங்கமும் அவரை வாட்டுகிறதாம். இந்த நேரத்தில், அவர் ஏ.டி.ஜி.பி. தேவஆசிர்வாதத்தை சுதந்திரமாக இயங்கவிடாமல் தடுத்து வைத்திருப்பதால்தான் இப்படிப்பட்ட க்ரைம் ரேட்டுகள் அதிகரிக்கக் காரணம் என்கிற கருத்தும் முதல்வரின் காதுக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது. அதனால் டி.ஜி.பி. மீது அதிருப்தியில் இருக்கிறார் ஸ்டா லின். டி.ஜி.பி.யின் பதவிக் காலமான இரண்டு ஆண்டுகள் வரை அவரை மாற்ற முடியாது. அதாவது வரும் ஜூன் மாதம் வரை அவர் பதவிக்காலம் இருக்கிறது. அதேபோல் அவர் ஓய்வுபெறும் வயது வரும் அக்டோபரில் வருகிறது. அதனால் அவரை டி.ஜி.பி. பதவியி-ருந்து ஜூனில் மாற்றுவதா, அல்லது அக்டோபரில் மாற்றுவதா என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம் ஸ்டாலின்.''
"மாநில பா.ஜ.க. நிர்வாகியின் சவாலை காவல்துறை சீரியசாக கவனிக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தின்போது, "யார் அந்த சார்'’என அ.தி.மு.க. வினோதமான போராட்டத்தை முன்னெடுத்தது. அந்த விவகாரத்தில் கைதாகியிருக்கும் பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கும் அமைச்சர் ஒருவருக்கும் நெருக்கமான நட்பு உள்ளதாக, பா.ஜ.க. மாநில நிர்வாகி குற்றம்சாட்டி வருவதோடு, ஞானசேகரனின் கால்ஹிஸ்ட்ரியில் இருந்து அமைச்சருடன் அவர் பேசிய விபரங்களை எல்லாம் எடுத் திருப்பதாகவும், அதை விரைவில் வெளியிடப்போவதாக வும் சவால்விட்டு வருகிறார். ஆனால் உண்மையிலேயே அப்படி அவர் கால்ஹிஸ்டரியை எடுத்தாலும், அதை வெளியிடுவது என்பது எளிதல்ல. அப்படி வெளியிட்டால், சம்பந்தப்பட்ட தொலை பேசி நிறுவனங்கள் தங் கள் கஸ்டமரின் தனிப் பட்ட உரிமைகளை அம்பலப்படுத்தியது போலாகிவிடும். அதனால் அந்த பா.ஜ.க. நிர்வாகி அந்த லிஸ்ட் டை வெளி யிட்டால், அவர் மீது வழக்கைப் பதிவு செய்து, கடுமையாக நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள்.''”
"தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யை மாற்றவேண்டும் என்று இங்கிருக்கும் அக்கட்சியின் 30 மாவட்டத் தலைவர்கள் வரிந்துகட்டுகிறார்களே?''”
"தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எதிராக மாவட்டத் தலைவர்கள் 30 பேர் ஓரணியில் திரண்டிருக் கிறார்கள். இந்த அதிருப்தி கோஷ்டிக்கு, காங்கிரஸ் எம்.பி.யும் செல்வப்பெருந்தகை யின் எதிர்ப்பாளருமான மாணிக்கம்தாகூர் ரகசியமாகத் தலைமை தாங்கிவருகிறார். சமீபத்தில் டெல்லி சென்ற செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து, மாவட் டத் தலைவர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் கிடைக்காமல் மாணிக்கம்தாகூர் தடுத்துவருகிறார் என்று புகார் சொன்னதோடு, அவருக்கு எதிராகக் கடுமையான பல குற்றச்சாட்டு களையும் சொல்லிவிட்டுத் திரும்பியிருக் கிறார். அடுத்து அவரது ஆலோசனை யின்படி, சம்மந்தப்பட்ட 30 மாவட்ட தலைவர்களும் ஓரணியாக டெல்லிக்கு பறக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இவர்கள் டெல்லியில் கார்கே மற்றும் கே.சி.வேணுகோபாலைச் சந்தித்து, செல்வப்பெருந்தகைக்கு எதிராகப் புகாரளிக்க இருப்பதோடு, அவரை மாற்றியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தவும் திட்டம்போட்டு வருகிறார்களாம்.''”
"மீனவர்களை முன்னிறுத்தி ஒரு அரசியல் கட்சி உதயமாகி இருக் கிறதே?''”
"சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு வர இருக்கும் நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க, தமிழக மீனவர்களுக்காக, நெய்தல் மக்கள் கட்சி என்கிற புதிய கட்சி உதயமாகி இருக்கிறது. இந்த கட்சியை முறைப்படி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள 2 கோடிக்கும் அதிகமான மீனவ மக்களுக்காக இந்த புதிய கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக, மீனவ மக்களின் உரிமைகளுக்காக கடந்த 30 ஆண்டுகளாக போராடி வரும் புரட்சி கயல் பாரதி என்பவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த கட்சியின் முதல் கூட்டம் கடந்த 17ஆம் தேதி சென்னையில் நடந்தது. அதில், பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் சமூகப் பட்டியலில் இணைக்க வேண்டும், சென்னை நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரை கட்டப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை மீனவர்களுக்கு நியாயமான விலையில் வழங்கிட வேண்டும், மீனவர் மகளிர் கூட்டுறவு சங்கங்களில் மீனவ மக்களின் வாரிசுகளை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி யுள்ளனர்.''”
"மணல் மாஃபியாக்களை அதிகாரிகள் தரப்பு அதிரவைத்திருக்கிறதே?''
"கோவை மாவட்டத்தில் மணல் மாஃபியாக் களின் குவாரிகளில் இருந்த இருவரை, விசாரணை டீம் ஒன்று அள்ளிச் சென்றிருக்கிறது. வந்தவர்கள் அமலாக்கத்துறையினரா? இல்லை வருமான வரித்துறையினரா? என மணல் தரப்பு குழம்பி வருகிறதாம். கூடவே, அந்த நபர்கள் கைவசம் இருந்த 5 கோடி ரூபாயையும் எடுத்துச் சென்றிருக்கிறார்களாம். இந்தப் பணம் மணல் மும்மூர்த்திகளில் யாருடைய பணம் என்கிற தகவலும் இன்னும் வெளியாகவில்லை. விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் என்ன வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் என்கிற பதட்டமும் மணல் தரப்பிடம் இருக்கிறதாம்.''”
"தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் டெல்லிப் பணிக்கு செல்கிறாரே?''”
"’தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரான ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ்., ஒன்றிய அரசுப் பணிக்குச் செல்கிறார். அருக்கு அங்கு மனித வள மேம்பாட்டுத்துறையில் கல்வி சார்ந்த பணிகளை கவனிக்கும் வகையில் பொறுப்பு கொடுக்கப்பட்டி ருக்கிறது. அதாவது, தேசம் முழுவதும் நவோதயா பள்ளிகளை அமல்படுத்துவது, செயல்பாட்டில் இருக்கும் நவோதயா பள்ளிகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை இவர் கவனிக்க இருக்கிறாராம். டெல்லிக்குச் செல்லும் முன்பாக, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப்பெற்றிருக்கிறார் ராஜேஷ் லக்கானி.''”
"நானும் ஒரு தகவலை பகிர்ந்துக்கிறேன். தமிழக சட்டமன்ற பா.ஜ.க. தலைவர் நயினாருக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த கராத்தே தியாகராஜன் எழுப்பிய போர்க்குரல் பற்றியும், நயினார், தி.மு.க.வுடன் அண்டர்டீலிங் வைத்திருப்பதாக கராத்தே எழுப்பும் புகார் பற்றியும் கடந்தமுறை நாம் பேசிக்கிட்டோம். இந்த நிலையில், கராத்தேவின் புகார் முழுவதையும் மொழி பெயர்த்து தமிழக பா.ஜ.க.வினர் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே விவகாரம் டெல்லியின் கவனத்துக்குப் போய்விட்டதால், அது குறித்து மேற்கொண்டு பேசவேண்டாம் என்று கராத்தேவிடம் கேட்டு வருகிறாராம் அந்த தமிழக பா.ஜ.க. நிர்வாகி.''”
___________
இறுதிச்சுற்று!
மார்ச் 1. முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்! அவரது பிறந்த நாளை முன்னிட்டு "அமுத கரங்கள்' திட்டத்தை வியாழக்கிழமைத் தொடங்கிவைத்தார் துர்கா ஸ்டாலின். முதல்வரின் தொகுதியான கொளத்தூரில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டத்திற்கான முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தார் அமைச்சர் சேகர்பாபு. இந்த திட்டத்தின் மூலம், பிப்ரவரி 20, 2025 முதல் பிப்ரவரி 19, 2026 வரையிலான 365 நாட்களும், தினமும் 1000 பேருக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
வட இந்திய மாநிலங்களிலிருந்து சென்னைக்குவரும் முன்பதிவு ரயில்களின் இருக்கைகளை, முன்பதிவு செய்யாத வட மாநில பயணிகள் ஆக்கிரமித்துக்கொள்வதால் தமிழர்கள் சொல்லெணா சிரமங்களை சந்தித்துவருகின்றனர். இது குறித்து புகார்கள் கொடுக்கப்பட்டாலும், ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. இந்த நிலையில், வாராணாசியிலிருந்து சென்னை திருப்பும் பயணிகள் இந்த கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதில், தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளும் சிக்கியதில், வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரமுடியாமல் தவித்தனர்.
இந்த பிரச்சினையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் கவனத்துக்கு வியாழக்கிழமை (20-02-25) கொண்டு செல்லப்பட்டது. உடனே துரிதமாக ஆக்சன் எடுத்தார் உதயநிதி. தமிழகம் திரும்ப முடியாத விளையாட்டு வீரர்களை அழைத்து வருவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட துணை முதலமைச்சர், "வீரர்கள் அனைவரையும் விமானத்தில் அழைத்து வாருங்கள்' என்றும் கேட்டுக்கொண்டார். உடனே விமான டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டன. வீரர்கள் எந்த சிரமமும் இல்லாமல் சென்னைக்குத் திரும்பினர்.
"வாரணாசியில் சிக்கிய தமிழக விளையாட்டு வீரர்கள் எந்த சிரமமும் இல்லாமல் தமிழகம் வருவதற்கு 30 நிமிடத்தில் தீர்வு கண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்'' என்றனர் அரசு அதிகாரிகள்.
-இளையர்