"ஹலோ தலைவரே, முதல்வ ரின் வெளிநாட்டுப் பயணம் பல தரப் பிலும் பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற் படுத்தி இருக்கு.''”
"ஆமாம்பா, வெளிநாட்டு நிறு வனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினால், நமது பொருளாதார வளம் பெருகும்ங்குற கனவோடு முதல் வர் ஃபாரின் டூர் கிளம்பி இருக்காரே!''”
"உண்மைதாங்க தலைவரே, இதனால் பல வகையிலும் தமிழகத்தின் வளர்ச்சி பெருகும்னு பொருளாதார நிபுணர்கள் கணிக்கறாங்க. வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்கான திட்டங் களோடுதான் 9 நாள் சுற்றுப்பயணத்தை முதல்வர் மேற் கொண் டிருக் கிறார். அதே சமயம் முதல் வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தின் மீது மோடியின் ஒன்றிய அரசு கண் வைத்திருக்கிறது. சிங்கப்பூரிலும் ஜப் பானிலும் முதல்வர் யாரையெல்லாம் சந்திக் கிறார்? தனிப்பட்ட முறையிலோ அல்லது ரகசியமாகவோ அவர் யாரையாவது சந்திக்க நினைக்கிறாரா? என்றெல்லாம் கண்காணித்து ரிப்போர்ட் கொடுக் கும்படி, இந்திய உளவு அமைப்பான ராவுக்கு உத்தரவு இடப்பட்டிருக் கிறதாம். அதனால் முதல்வரை ஒற்று பார்க்கும் வேலை கனகச்சிதமாக அங்கே நடக்கிறதாம்.''”
"கொள்கை ரீதியாக எதிர் நிலையில் இருக் கும் மாநில அரசின் முதல்வராச்சே? அத னால் ஏதாவது எதிர்மறைச் செய்திகள் கிடைக் குமான்னு பார்க்கத்தான் செய்வாங்க.''”
"இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலினும் உணர்ந்துதான் இருக்கிறார். அதனால் இதைப் பெரிதாக அவர் எடுத்துக்கலை. முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முதல்வரின் செயலாளர் கள் உமாநாத், அனுஜார்ஜ், தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், செய்தித்துறையின் இயக்குநர் மோகன் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சென்றுள்ளனர். இவர்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு மட்டும் சிங்கப்பூர் பயணத்தோடு சென்னைக்குத் திரும்பிவிடுகிறார். முதல்வருடன் அவரது முதன் மைச் செயலாளர் முருகானந்தமும் செல்வதாக இருந்ததாம். கடைசி நேரத்தில் அவர் பயணம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.''”
"அமலாக்கத்துறை உதய நிதியைக் குறி வைத்திருப்பதாக வந்த செய்தி குறித்து மாறுபட்ட தகவல் வருதேப்பா?''”
"நாமும் இதுகுறித்துப் போனமுறை பேசிக் கிட்டோம். ஆனால் உதயநிதியை அமலாக்கத் துறை குறிவைத்ததாகக் கிளப்பட்ட தகவலில் கொஞ்சமும் உண்மை இல்லையாம். இந்த செய்தியை பா.ஜ.க. தரப்புதான் கிளப்பிவிட்டதாம். லைகா உள்ளிட்ட திரைப்பட நிறுவனங்களில் நடந்த ரெய்டுகளின்போது, தி.மு.க. தரப்பில் யாரை யாவது சிக்கவைக்க முடியுமான்னு பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தும், வருமான வரித்துறை அதி காரிகளுக்கு ஏமாற்றம்தான் கிடைச்சிருக்கு. ஏற் கனவே ரெட் ஜெயண்ட் நிறுவனம் குறித்து கவர் னரிடம் புகார் போனபோது, மூன்று ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதி
"ஹலோ தலைவரே, முதல்வ ரின் வெளிநாட்டுப் பயணம் பல தரப் பிலும் பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற் படுத்தி இருக்கு.''”
"ஆமாம்பா, வெளிநாட்டு நிறு வனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கினால், நமது பொருளாதார வளம் பெருகும்ங்குற கனவோடு முதல் வர் ஃபாரின் டூர் கிளம்பி இருக்காரே!''”
"உண்மைதாங்க தலைவரே, இதனால் பல வகையிலும் தமிழகத்தின் வளர்ச்சி பெருகும்னு பொருளாதார நிபுணர்கள் கணிக்கறாங்க. வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்ப்பதற்கான திட்டங் களோடுதான் 9 நாள் சுற்றுப்பயணத்தை முதல்வர் மேற் கொண் டிருக் கிறார். அதே சமயம் முதல் வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தின் மீது மோடியின் ஒன்றிய அரசு கண் வைத்திருக்கிறது. சிங்கப்பூரிலும் ஜப் பானிலும் முதல்வர் யாரையெல்லாம் சந்திக் கிறார்? தனிப்பட்ட முறையிலோ அல்லது ரகசியமாகவோ அவர் யாரையாவது சந்திக்க நினைக்கிறாரா? என்றெல்லாம் கண்காணித்து ரிப்போர்ட் கொடுக் கும்படி, இந்திய உளவு அமைப்பான ராவுக்கு உத்தரவு இடப்பட்டிருக் கிறதாம். அதனால் முதல்வரை ஒற்று பார்க்கும் வேலை கனகச்சிதமாக அங்கே நடக்கிறதாம்.''”
"கொள்கை ரீதியாக எதிர் நிலையில் இருக் கும் மாநில அரசின் முதல்வராச்சே? அத னால் ஏதாவது எதிர்மறைச் செய்திகள் கிடைக் குமான்னு பார்க்கத்தான் செய்வாங்க.''”
"இதையெல்லாம் முதல்வர் ஸ்டாலினும் உணர்ந்துதான் இருக்கிறார். அதனால் இதைப் பெரிதாக அவர் எடுத்துக்கலை. முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா முதல்வரின் செயலாளர் கள் உமாநாத், அனுஜார்ஜ், தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், செய்தித்துறையின் இயக்குநர் மோகன் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சென்றுள்ளனர். இவர்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு மட்டும் சிங்கப்பூர் பயணத்தோடு சென்னைக்குத் திரும்பிவிடுகிறார். முதல்வருடன் அவரது முதன் மைச் செயலாளர் முருகானந்தமும் செல்வதாக இருந்ததாம். கடைசி நேரத்தில் அவர் பயணம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.''”
"அமலாக்கத்துறை உதய நிதியைக் குறி வைத்திருப்பதாக வந்த செய்தி குறித்து மாறுபட்ட தகவல் வருதேப்பா?''”
"நாமும் இதுகுறித்துப் போனமுறை பேசிக் கிட்டோம். ஆனால் உதயநிதியை அமலாக்கத் துறை குறிவைத்ததாகக் கிளப்பட்ட தகவலில் கொஞ்சமும் உண்மை இல்லையாம். இந்த செய்தியை பா.ஜ.க. தரப்புதான் கிளப்பிவிட்டதாம். லைகா உள்ளிட்ட திரைப்பட நிறுவனங்களில் நடந்த ரெய்டுகளின்போது, தி.மு.க. தரப்பில் யாரை யாவது சிக்கவைக்க முடியுமான்னு பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தும், வருமான வரித்துறை அதி காரிகளுக்கு ஏமாற்றம்தான் கிடைச்சிருக்கு. ஏற் கனவே ரெட் ஜெயண்ட் நிறுவனம் குறித்து கவர் னரிடம் புகார் போனபோது, மூன்று ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரிகளை வைத்து, அது குறித்து விசாரித்த அவர், அந்த நிறுவனத்திடம் எந்த முறைகேடும் இல்லை என்று க்ரீன் சர்டிபிகேட் கொடுத்திருக்கிறாராம். அதனால் ரெட்ஜெயண்ட் எது பற்றியும் கவலைப்படவில்லை. அதேநேரம் மக்கள் நீதி மய்யத் தலைவரான நடிகர் கமல் பற்றி, வருமான வரித்துறை அதிகாரிகள் நிறைய கிளறி வருகிறார்களாம். காரணம், அவர் ஒரே நேரத்தில் 4 படங்களை எடுப்பதாக வந்த செய்திதானாம். அவர் சிக்குவாரா? நழுவுவாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.''”
"கிரிக்கெட் டிக்கெட் மோசடி விவகாரத்தில் பிரபல நடிகைகளின் பெயர்கள் அடிபடுதே?''
"ஆமாங்க தலைவரே, சென்னையில் நடந்துவரும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடரில், சென்னை அணியும் குஜராத் அணியும் மோதிய அன்று, ரசிகர்ளுக்கு நேரடியாக டிக்கெட் விற்கமாட்டோம். எல்லாம் ஆன்லைன் விற்பனைதான் என்று அறிவித்தனர். இதைத் தொடர்ந்து அன்றைய போட்டியின் போது மூன்று கேலரிகளை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும், நடிகை சம்யுத்தாவும் சேர்ந்து புக் செய்துவிட்டார்களாம். அந்த டிக்கெட்டுகளை சினிமாத்துறை பிரபலங்கள் பலருக்கும் தலா 20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் விற்றுக் கல்லாக்கட்டி இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் நடந்த இந்த மோசடியில் சென்னை கிரிக்கெட் அசோசியேசன் நிர்வாகிகளுக்கும் பங்கு உண்டாம். இது பெரும் புகாராக எழுந்துவருகிறது. இந்த ஐஸ்வர்யா ராஜேஷ், திரைப்பிரபலங்கள் சிலரை, முன் அனுமதியின்றி ஸ்டேடியம் வந்த முதல்வர் ஸ்டாலின் அருகே அழைத்துச்சென்று புகைப்படம் எடுக்கவைத்த சர்ச்சையிலும் அண்மையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.''”
"பா.ஜ.க., அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. வின் துணைத் தலைவரே போராட்டம் நடத்தி இருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பின் பொறுப்பாளர்களாக இருந்த வழக்கறிஞர்கள் முகமது யூசூப், முகமது அப்பாஸ் ஆகியோரை சமீபத்தில் மதுரையில் கைது செய்துள்ளது மத்திய அரசின் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. முஸ்லீம் வழக்கறிஞர்களான இவர்கள் கைது செய்யப் பட்டிருப்பதைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க.வின் துணைத்தலைவரும் வழக்கறிஞருமான பால் கனகராஜே சென்னையில் கண்டன ஆர்ப்பாட் டத்தை நடத்தி, பலரையும் திகைக்க வைத் திருக்கிறார். ஒட்டுமொத்த வழக்கறிஞர் களுக்கான போராட்டமாக இதை அவர் முன்னெடுத்த போதும், இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சீனியர் அட்வகேட்டுகள் எவரும் கலந்து கொள்ளவில்லை. இந்தப் போராட் டத்தில் பேசிய பால்கனகராஜ், பொய் வழக்கைப் போட்டு வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட் டிருப்பதாக குற்றம்சாட்டிப் பேசியி ருக்கிறார்.''”
"இது சம்பந்தமா பா.ஜ.க.வின்
தேசியத் தலைமைக்கு புகார்கள் போயிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, மத்திய பா.ஜ.க. அரசின் என்.ஐ.ஏ.வை தமிழக பா.ஜ.க.வின் துணைத் தலைவர் ஒருவரே எதிர்ப்பதும், போராட்டம் நடத்துவதும் தமிழக பா.ஜ.க.வில் இருக்கும் வழக்கறிஞர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் இது குறித்து பா.ஜ.க. தேசிய தலைமைக்குப் புகார்களை அனுப்பியிருக்கிறார்கள். அதேபோல் தமிழக இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பா.ஜ.க. துணைத்தலைவரின் இது தொடர்பான பேச்சு, தேச பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது என அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பால்கனகராஜ் நடத்திய அந்த ஆர்ப் பாட்டம்தான் தமிழக பா.ஜ.க.வில் ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.''”
"காவல்துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர் நேருவுக்கும் உரசல்னு தகவல் வருதே?''”
"ஆமாங்க தலைவரே, அண்மையில் திருச்சி தில்லை கங்கா நகர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. இதில் உச்சநீதிமன்ற உத்த ரவுக்கு மாறாக கையில் கம்போடு சிறுவர்களும் கலந்துகொண்டார்கள். இந்த பேரணி ஆர்.எஸ்.எஸ். இளைஞரணி என்ற பெயரில் நடத்தப்பட்டதாம். இதற்கெல்லாம் காரணம், அனுமதி கொடுத்த கமிஷனர் சத்தியப் பிரியாதானாம். அவர் கணவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ப தால், கமிஷனருக்கும், ஆர்.எஸ். எஸ். மீது ஆர்வம் என்கிறார்கள். இதையறிந்த அமைச்சர் கே.என். நேரு, அதுபற்றி கமிஷனர் சத்யப்பிரியாவிடமே கேட்க, அவரோ, ’எதா இருந்தாலும் டி.ஜி.பி.யிடம் பேசிக்கொள் ளுங்கள்’ என்று சொல்லிவிட் டாராம். இதைத் தொடர்ந்து அமைச்சர் நேரு, டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடமே, ’என்ன இப்படி எல்லாம் காவல்துறை நடந்துகொண்டால் ஆட்சியைத் தானே விமர்சிப்பார்கள் என்று கடிந்துகொண்டாராம்.''”
"புகழ்பெற்ற என்.சி.பி.ஹெச். புத்தக நிலைய விவகாரத்தில் சுமுக நிலை எட்டப்பட்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பெற்ற புத்தக நிறுவனமான என்.சி.பி.ஹெச்.சில், அதன் முன்னாள் இந்நாள் நிர்வாகிகளின் பெயர்களில் இருந்த பலகோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை, தற்போதைய இயக்குநர்களான சண்முகம் சரவணன், இரத்தின சபாபதி ஆகியோர், தங்கள் பெயர்களுக்கு எழுதிக்கொண்டதாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரம் ’ என்.சி.பி.ஹெச். பங்குகளில் மோசடி! தோழர்கள் புகார்!’ என்ற தலைப்பில், கடந்த நக்கீரன் இதழில் விரிவான செய்திக் கட்டுரையாக வெளியாகி இருந்தது. இது தமிழகம் முழுக்க இருக்கும் தோழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில், என்,.சி.பி.ஹெச். சொத்துக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் பேச்சுவார்த்தையின் மூலம் சுமுக நிலை எட்டப்பட்டிருப்பதாக, சி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளரான தோழர் இரா.முத்தரசன் தெரிவித்தார். தன் பெயரிலான பங்குகளுக்கு நேர இருந்த ஆபத்தும் நீங்கியதில், கட்சியின் சீனியரான ஐயா நல்லகண்ணுவும் இப்போது நிம்மதிப்பெருமூச்சு விட்டிருக் கிறார். இதன்மூலம், புகழ்பெற்ற ஒரு புத்தக நிறுவனத்தின் மீது படிந்திருந்த கறை துடைக்கப்பட்டிருக்கிறது.''”
"கோவை கார் மோசடி விவகாரத்தை அம்பலப்படுத்திய நக்கீரனால், அங்குள்ள காவல்துறை பதட்டமாகி இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, கோவை கார் திருட்டுக் குற்றவாளிகளிடம் கைப்பற்றிய ரூ.12 லட்சத்தை, மாவட்ட குற்றப்பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி கமுக்கமாக அமுக்கியது குறித்து ஏற்கனவே நாம் பேசிக்கிட்டோம். இது கடந்த மே 20-23 தேதியிட்ட நக்கீரன் இதழின் ராங்கால் பகுதியில் பதிவாச்சு. இதைப் பார்த்த மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன், கடந்த புதன்கிழமை, அந்த அதிகாரியை விசாரித்திருக்கிறார். பின் சில ஆலோசனைகளுக்குப் பிறகு, நிபந்தனை ஜாமீனில் இருக்கும் முக்கிய குற்றவாளி வெங்கடேசனிடமிருந்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்ததாகக் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். அதேபோல் கைதான நேரத்தில் அவரிடம் வசூலித்த ரூ.70 ஆயிரத்தை அவரிடமே திரும்பக் கொடுத்தது போலவும் எழுதி வாங்கினர். இருந்தும், போலி ஆர்சி புத்தகம் தயார் செய்து கார்களை விற்ற முகமது சையது அன்சாரி, காதர் அப்துல் ரகுமான் ஆகியோர் மீது காவல்துறை இதுவரை வழக்கு போடவில்லையாம்.''”
"தினகரன் தரப்புக்கும் சசிகலா தரப்புக்கும் இடையே மோதல் அதிகரிச்சிருக்குன்னு தகவல் வருதே?''”
"உண்மைதாங்க தலைவரே.. சசிகலாவுக்கு நல்லது செய்வது போலவே நடித்து, அவரை அரசி யலில் தனிமைப்படுத்த முயற்சித்தாராம் தினகரன். அதோடு சசிகலாவின் ஏகப்பட்ட சொத்துக்களை நிர்வ கித்து வந்த தினகரன், அதை எல்லாம் சசிகலா திருப்பிக்கேட்டும் தர மறுக்கிறாராம். அதனால் தான் இவர்கள் இருவ ருக்கும் இடையே தொடர்ந்து உரசல் நடந்துவருகிறது. இந்த நிலையில் சசிகலாவுக்கு உதவியாக அவர் சகோத ரரான திவாகரன் இருந்து வருகிறார். பழையபடி இவர், சசிகலாவை அரசியலில் முன்னெடுப்பாரோங்கிற எரிச்சலில் இருக்கும் தினகரன் தரப்பு, திவாகரன் தரப்பு மீது பல்வேறு அவதூறுகளையும் சர்ச்சைகளையும் எழுப்பிக் கிட்டு இருக்குதாம்.''”
"இது தொடர்பாக நானும் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கறேன். திவாகரனின் மகன் பப் ஒன்றில் தகராறில் ஈடுபட்டுத் தாக்கப்பட்டதாகவும், அவரைத் தாக்கியவர்கள் மீது கூலிப்படை ஏவப்பட்டதாகவும் கடந்தமுறை நாமும் நம் காதுக்கு வந்த தகவல்களின் அடிப்படை யில் செய்தி பரிமாறிக்கொண்டோம். அது உண்மையான தகவல் இல்லையாம். இது புனைந்து கட்டிய கட்டுக்கதை என்று மறுப்பு சொல்கிறது திவாகரன் தரப்பு.''
__________
திருச்சி கூத்து
தமிழக முதல்வர் ஒருபக்கம் கள்ள லாட்டரி, கஞ்சா உள்ளிட்டவற்றைத் தடுக்க வேண்டுமென்று தொடர்ந்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறார். இருந்தும் போதைப் பொருட்கள் ஒழிந்தபாடில்லை. அதற்குக் காரணம் மாவட்டத்திற்கு ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி அவர்களைக் காப்பாற்றி வருவதுதானாம்.
சமீபத்தில் திருச்சி மாவட்டத்தில் சூதாட்டம் நடப்பதாக ஸ்பெஷல் டீமுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விசாரணை நடத்தி சூதாட்டக் குழுவின் தலைவனை போலீஸ் டீம், உயரதிகாரியிடம் குறிப்பிட்டுள்ளது. இதையறிந்து பதறிப்போன உயர் அதிகாரி, "யோவ் அவர் மாதம் தவறாமல் நமக்கு கப்பம் செலுத்திவருகிறார்'’என்று கூறியதுடன், அந்தத் தலைவனிடம் "நான் எல்லாருக்கும் கொடுத்து சரி செய்துவிட்டேன்' என்று கூறி ஆறுதல்படுத்தி யிருக்கிறார்.
இது மட்டுமல்ல திருச்சி மாவட்டத்தில் கள்ள லாட்டரி, கஞ்சா, மசாஜ் சென்டர், போன்றவை தடைபடாமல் செயல்படுவதற்கு மாதம் தவறாமல் பணம் வசூலித்துக் கொடுப்பதற்காகவே மாநகரில் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றி வருகிறார்களாம்
இதையடுத்து தமிழகத்திலுள்ள ஐ.பி.எஸ். அதிகாரிகளில் குற்ற நடவடிக்கைகளுக்கு உறுதுணை யாக உள்ளவர்கள் யார் என்று அரசுத் தரப்பில் ஒரு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாம். அந்த பட்டியலில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு காவல்துறை ஐ.பி.எஸ். அதிகாரி பெயர் முதலில் இருக்கிறதாம்.
-மகேஷ்
கடுப்பான எம்.எல்.ஏ!
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம் பேட்டை பகுதியிலுள்ள குடமுருட்டி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் பழுதடைந்ததால், பழைய பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டு வதற்கான அடித்தளம் போடும் பணி கள் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில் எதிர்பாராத விதமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சாலையின் ஒரு பகுதி முற்றிலும் சரிந்துள்ளது. பழைய பாலத்தை வாகன ஓட்டிகள் பயன் படுத்தி வந்த நிலையில், சாலை சரிந்த பிறகு யாரும் கடந்துசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹி ருல்லா கடந்த புதனன்று, சரிந்து விழுந்த சாலையைப் பார்வையிட் டார். அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் "இந்த சாலை சரிந்துவிழுந்து 15 நாட்களாக 5 கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது' என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
அதனைக் கேட்ட எம்.எல்.ஏ. சாலையின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக, "அதிகாரிகள் யாரும் இருக்கிறீர்களா?' என்று கேட்க... யாரும் அந்த இடத்தில் இல்லாததால், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. கடுகடுப்பு காட்டியிருக்கிறார்.
-துரை.மகேஷ்