உதயசந்திரன் உள்ளிட்ட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் மாற்றத்தைத் தொடர்ந்து 16 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன்மூலம் கோட்டையை சுத்தப்படுத்த துவங்கியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முதல்வரின் முதன்மைச் செயலாளராக இருந்த உதயசந்திரனின் மாற்றம் குறித்த விவாதங்கள் இன்னமும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் குறையவில்லை.
உணவு இடைவேளையின்போது சந்தித்துக் கொள்ளும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், "திராவிட மாடல் அரசின் தலைமைச் செயலகத்தை ஆர்.எஸ்.எஸ்.வாதிகளின் கோட்டை யாக மாற்றிவிட்டார் உதயசந்திரன். அவரே ஒரு ஆர்.எஸ். எஸ்.தான். டெல்லி சொல்லும் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றும் நபராகவே ரகசியமாக இயங்கியிருக்கிறார். அதற்கேற்ப முதல்வரை சாதுர்யமாக ஆக்ரமித்திருந்திருக்கிறார் உதயசந்திரன். இதனையெல்லாம் மறைக்கத்தான் அவ்வப்போது திராவிட பெருமை பேசுகிறார்' என்று விவாதிக்கின்றனர்.
திராவிட சிந்தனையுள்ள அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, "தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக்கொள்கையை உருவாக்கு வதற்காக அமைக்கப்பட்ட மாநில உயர்நிலை கல்விக்குழுவின் ஒருங்கிணைப் பாளர் ஜவஹர்நேசன், உதயசந்திரனின் அதிகார மிரட்டலுக்கு எதிராக வெளிப்படையாக முதல் குரல் எழுப்பினார். அந்த குரல் மூலம்தான் உதய சந்திரனின் ஆர்.எஸ்.எஸ். முகமூடி அம்பலமானது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலினை அமைச்சர்கள் பலரும் சந்தித்தப் பிறகுதான், உதயசந்திரனை மாற்றும் முடிவுக்கே வந்தார் ஸ்டாலின். குறிப்பாக, உயர்கல்வி அமைச்சர் பொன்முடியின் சந்திப்புதான் இதில் மிக முக்கியமானது.
முதல்வரிடம் நிறைய விசயங்களைப் பேசிய பொன்முடி, "தேசிய கல்விக் கொள்கையை நாம் ஏற்கவில்லை. அதற்கு மாற்றாகத்தான் மாநில கல்வி கொள்கையை உருவாக்க உயர்நிலை கல்வி கமிட்டியை அமைத்தோம். ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான அந்த கமிட்டியிலுள்ள 12 உறுப்பினர்களில் இராமானுஜம், ஜெயஸ்ரீ, அருணாரத்தினம், விஸ்வநாதன் ஆனந்த், டி.எம்.கிருஷ்ணா ஆகிய 5 பேரும் பிராமணர்கள். இவர்கள் 5 பேரும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர்கள். இவர்களை உறுப்பினர்களாக சேர்த்தது உதயச்சந்திரன்.
தமிழகத்தில் எந்த அரசு வந்தாலும் அதில் மிக அழுத்தமாக ஆதிக்கம் செலுத்துபவர் இராமானுஜம். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் மூளையாக செயல்படுபவர். அப்பட்டிப்பட்டவரை தமிழகத்துக்கென ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கும் கமிட்டியில் சேர்த்தது எப்படி? இவரை வைத்துக் கொண்டு தமிழகத்துக்கென தனித்துவமான கல்விக் கொள்கை யை உருவாக்கிவிட முடியுமா? ஆனால், அவரை உறுப்பினராக சேர்த்திருக்கிறார் உதயசந்திரன்.
அதேபோல, பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கொள்கையை நிலைநிறுத்துவதற்காகவே கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பல குழுக்களில் இருந்தவர் அருணாரத்தினம். டெல்லியின் உத்தரவின்படி எடப்பாடி அரசை வழி நடத்தியவர். எந்த ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தாலும் பெண் கல்விக்கும் பட்டியிலின மக்களுக்கும் எதிராக பேசு பவர். "பெண்களும், தலித்துகளும் நல்லா முன் னேறிட்டாங்க. அவங்களுக்காக வெல்லாம் நாம் பேசக் கூடாது' என வெளிப்படையாகவே சொல்பவர். அப்படிப்பட்ட இவரை கமிட்டியில் எதற்காக உதயசந்திரன் சேர்க்க வேண்டும்?''
-இப்படி ஒவ்வொருவரை பத்தியும் முதல்வர் ஸ்டாலினிடம் விரிவாகச் சொல்லிய அமைச்சர் பொன்முடி, "கமிட்டி உறுப்பினர்கள் 12 பேரில் உருப்படியாக தமிழுணர்வுடன் இயங்கிய ஒரே நபர் ஜவஹர் நேசன்தான். மாநிலத்துக்கான தனித்துவ கல்விக் கொள்கையை உருவாக்க கடுமையாக உழைத்தார். அதற்காக கனமான கொள்கையையும் வகுத்திருந்தார். இதனையறிந்த காவி கூட்டம், ஒரு ஆலோசனைக் கூட்டத்தில், "தேசிய கல்விக் கொள்கையிலுள்ள ஷரத்துகளையும் இணைத்து மாநில கல்வி கொள்கையை உருவாக்குங்கள்' என ஜவஹர்நேசனை நிர்ப்பந்தித்தனர்.
அதனை ஏற்க மறுத்தார் ஜவஹர். இதனால் கமிட்டியிலுள்ள ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகள், உதயசந்திரனை சந்தித்து முறையிட்டனர். உடனே ஜவஹர் நேசனை வரவழைத்த உதயச்சந்திரன், "தனித்துவ கல்விக் கொள்கை கிள்கையெல்லாம் நீ பேசிக்கிட்டு இருக்ககூடாது. கமிட்டி யிலுள்ள அந்த 5 பேரும் என்ன சொல் றாங்களோ அதைத்தான் மாநில கொள்கையாக நீ கொடுக்கணும். அவங்க சொல்றபடி நடந்துக்கோ, இல்லைன்னா உன்னை தொலைச்சிடுவேன்... கமிட்டியையும் கலைச்சிடுவேன்' என மிரட்டி யிருக்கிறார்.
ஆக, உதயசந்திரன் யாருக்கான ஆள்? நம்முடைய அரசுக்கான நபரா? அல்லது ஒன்றிய அரசின் நபரா? இவரை உங்களின் முதன்மைச் செயலாளராக வைத்துக்கொண்டால் நீங்கள் உருவாக்க நினைக்கும் திராவிட மாடல் அரசை நிர்மாணிக்க முடியாது' என தனக்கேயுரிய பாணி யில் பல விசயங்களை ஸ்டாலினிடம் விவரித்துச் சொல்லியிருக்கிறார் பொன்முடி. அதன்பிறகே உதயச்சந்திரனை மாற்றும் முடிவுக்கு வந்தார் முதல்வர்''” என்று பின்னணிகளை விவரிக்கிறார்கள் திராவிட சிந்தனையுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
இந்த நிலையில்தான், கோட்டையை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் இடமாற்றம் செய்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இது குறித்து நம்மிடம் மனம் திறந்த சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், "ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் மாற்றுவதற்குப் பதிலாக உதயசந்திரன், முதல்வரின் 4 செயலாளர்கள், துறையில் நீண்டகாலமாக கோலோச்சும் 5 செயலாளர்கள் என 10 பேரை மட்டும் கோட்டையிலிருந்து அப்புறப்படுத்தினாலே போதும்... தலைமைச் செயலகம் சுத்தமாகும். இல்லையெனில், பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பிடியில்தான் கோட்டை இருக்கப்போகிறது. அதன் விளைவு…புதிய தலைமைச் செயலாளராக ஒரு சங்கி வரப்போகிறார். அதற்கான காய்களை நகர்த்தி வைத்திருக்கிறது உதயசந்திரன் டீம். அதன் ஆபத்து திராவிட மாடல் அரசுக்கு பேரிடியாக இருக்கும்''’என்று சுட்டிக்காட்டு கிறார்கள்.