ssசிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி, காட்டுமன்னார்கோவில் (தனி), சிதம்பரம், புவனகிரி, ஜெயங்கொண்டம், அரியலூர், குன்னம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. தனித்தொகுதியான இங்கே விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்தமுறை யும் போட்டியிடுவதால், இந்தத் தொகுதி தனது நட்சத்திர அந்தஸ்த்தைத் தக்கவைத்திருக்கிறது. திருமாவளவனின் சொந்த ஊரான அங்கனூர் இந்த தொகுதியில்தான் உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயில், பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவை இந்தத் தொகுதியின் பெருமையை உயர்த்துகின்றன. புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் பெட்ரோல் எடுக்கப்படுகிறது. ராகவேந்திரர் மற்றும் ராம-ங்க அடிகளார் பிறந்த திருத்தலங்களும் இங்கே உள்ளன. காட்டுமன்னார் கோயில் தொகுதியில் தமிழகத்தின் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியால் 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சென்னைக்கும் இங்கிருந்து குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.

dd

வி.சி.க. தலைவர் திருமாவளவனே இங்கு இந்தியா கூட்டணி சார்பில் களமிறங்குவதால் தொகுதி பரபரப்பாக இருக்கிறது. வி.சி.க. தொண்டர்கள் சுறுசுறுப்பாக ஓடியாடி பிரச்சாரப் பணிகளில் தீவிரம்காட்டி வருகின்றனர். அதேபோல் அ.தி.மு.க. சார்பில் அக்கட்சியின் இலக்கிய அணிப் பிரமுகர் மா.சந்திரகாசன் களமிறங்குகிறார். இவர், எம்.எல்.ஏ., எம்.பி. தேர்த-ல் இதுவரை போட்டி யிடாதவர். களத்துக்கு புதியவர். பா.ஜ.க. தலைமை யிலான கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுவதாகக் கூறிவந்த நிலையில், திடீரென 21ஆம் தேதி இரவு, சிதம்பரத்தில் பா.ஜ.க. போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதோடு, வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயரான கார்த்தியாயினி இங்கே வேட்பாளராக இறக்கப்பட்டிருக் கிறார். தொகுதிக்குப் புதியவரான அவர், விறுவிறுப்பாக வாக்கு கேட்டுக் களமிறங்கியிருக்கிறார். ஜெ. இருக்கும்வரை அ.தி.மு.க.வில் வலம் வந்த இவர், அவரது மறைவிற்குப் பிறகு பா.ஜ.க.வில் ஐக்கியமானார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஜான்சிராணி களத்தில் உள்ளார்.

Advertisment

இங்கு, தி.மு.க. தலைமையிலான வி.சி.க.வுக் கும் அ.தி.மு.க.விற்கும்தான் போட்டி என வாக்காளர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது. எனினும் அ.தி.மு.க.வின் சந்திரகாசனைவிட, திருமாவளவனைத்தான் தொகுதியின் இண்டு இடுக்கு வரை அறிந்துவைத்திருக்கிறார்கள். எனவே இவர் தரப்பில் கூடுதலாக உற்சாகம் தென்படுகிறது.

வருகின்ற 6ஆம் தேதி சிதம்பரம் அருகே லால்புரத்தில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட் டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா-ன் கலந்து கொண்டு சிதம்பரம், மயிலாடுதுறை வேட்பாளர் களை ஆதரித்து வாக்கு சேகரிக்க வுள்ளார். முதல்வர் பிரச்சாரம் செய்ய வுள்ள இடத்தை கடந்த ஞாயிறன்று, கடலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு, கட்சி நிர் வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

dd

Advertisment

பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர், "வருகிற 6ஆம் தேதி, மாலை 4 மணியளவில் சிதம்பரத்திலும், 5ஆம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து கடலூரிலும் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பேசவுள்ளார். இந்த கூட்டம் மாநாடு போல நடைபெறவுள்ளது. கடந்த தேர்த லைவிட இந்த தேர்த-ல் அதிக வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள். கடந்த முறை நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்க ளின் ஆதரவுடன் போட்டியிட்டோம். இப்போது மக்களின் ஆதரவு தி.மு.க. கூட்டணிக்கு பல மடங்கு பெருகியிருக்கிறது. தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனைகளும், பெண்களுக்கான திட்டங்களுமே அதற்கு காரணம். கடலூர் மாவட்டத்தில் 75 சதவீத பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வந்துகொண்டி ருக்கிறது. மகளிருக்கான இலவசப் பேருந்து மூலம் ஏராளமான பெண்கள் பயன்பெறுகிறார்கள். படித்த மாணவிகள் கல்லூரிக்கு செல்வதற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தி.மு.க. கூட்டணி, கொள்கைக் கூட்டணி. இன்றைக்கு தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த கூட்டணி தொடர்ந்து இருந்துவரு கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் மக்களுக்கு சேவை செய்தோம். இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போதும் மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறோம். இதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். இதுவே எங்களுக்கு கூடுதல் பலம். சுமார் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெறுவார். முதல்வரின் உழைப்பும், அனைத்து கூட்டணிக் கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பும் எங்களுக்கு கூடுதல் பலம். பெண்களுடைய வாக்குகள் அதிகமாக தி.மு.க. கூட்டணிக்கு வரும்'' என்றார் நம்பிக்கையுடன்.

-அ.காளிதாஸ்