திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் கடைக்கோடியிலுள்ளது செய்யாறு சட்டமன்றத் தொகுதி. விவசாயம், நெசவு முக்கிய தொழில்களாக இருந்தன. செய்யாறு தொகுதியில் 2006-ல் தி.மு.க. ஆட்சியில் சிப்காட் கொண்டுவரப்பட்டபின் பன்னாட்டு தொழிற்சாலைகள் அதிகரித்ததால் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளன. தொகுதியில் வன்னியர்கள், முதலியார்கள், பட்டியல் சமூகத்தினர், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். கட்சிரீதியாக பார்த்தால் தி.மு.க.வின் கோட்டையாகவே இத்தொகுதி இருந்துவருகிறது.

Advertisment

1962 முதல் 1977 வரை நான்கு சட்டமன்ற தேர்தல்களில் புலவர் கோவிந்தன் தொடர்ச்சி யாக வெற்றிபெற்று, தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகராக இரண்டுமுறை இருந்துள்ளார். 1984, 1991-ல் அ.தி.மு.க.வும், 1988, 1996-ல் தி.மு.க.வும், 2001-ல் பா.ம.க., 2006-ல் காங்கிரஸ், 2011, 2016-ல் அ.தி.மு.க.வும் வெற்றிபெற்றது. 2006, 2011, 2016 தேர்தல்களில் இங்கு தி.மு.க. நிற்காமல் கூட்டணிக் கட்சிக்கே ஒதுக்கியதால் தி.மு.க. வினர் அதிருப்தியில் இருந்தனர். இதனால் 2021-ல் தி.மு.க.வைச் சேர்ந்த செய்யாறு ஒன்றிய முன்னாள் சேர்மனும், ஒ.செ.வுமான ஜோதி வேட்பாளராக்கப்பட்டார். 

Advertisment

தேர்தலின்போது, "செய்யாறில் மகளிர் கல்லூரி, வேளாண்மை கல்லூரி கொண்டுவர முயற்சிசெய்வேன், நகரி -திண்டிவனம் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பேன், செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப் படும், வெம்பாக்கம் ஊராட்சி பேரூராட்சியாக தரமுயர்த்தப்படும், மாவட்ட தலைநகரான திருவண்ணாமலைக்கு 140 கி.மீ. தூரம் என்பதால் செய்யாறு மாவட்டம் உருவாக்க முயற்சிப்பேன்'' எனச் சொல்லியிருந்தார். 

அதோடு, செய்யாறு டூ காஞ்சிபுரம் சாலை இன்னும் ஒருவழிச் சாலையாகவே உள் ளது. இந்த சாலையில் தினமும் ஊழியர் களை அழைத்துச்செல்ல பன்னாட்டுக் கம்பெனிகளின் 400-க்கும் அதிகமான பேருந்துகள் வருகின்றன. அதேபோல் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் பயணிக்கின்றன. இச்சாலையை அகலப்படுத்த முயற்சிக்க வில்லை. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கூட்டுறவு சர்க்கரை ஆலையான செய்யாறு ஆலை மேம்படுத்தப்படும், எத்தனால் தயாரிக்கும் யூனிட் அமைக்கப் படும் என வாக்குறுதி தந்திருந்தார், அதையும் செய்யவில்லை. 

Advertisment

அதேநேரத்தில், காஞ்சிபுரம் டூ செய்யாறு வரும் சாலையில் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டவேண்டுமென்கிற நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. செய்யாறில் புதிய பேருந்து நிலைய கட்டுமானம், புதிய மார்க்கெட் கடைகள் ஏலம் போகாமல், எம்.எல்.ஏ.- சேர்மன் மோதலால் நிற் கின்றன. 

செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்காக நிலங் களை அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கையகப் படுத்தியது. அந்த இடத்தை தி.மு.க. ஆட்சி அமைந்தபின் எடுக்கும்போது எதிர்ப்புக்காட்டி தொடர்ந்து போராட்டம் நடத்தியதால், போ ராட்டம் நடத்திய விவசாய சங்கப் பிரதிநிதி களை குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்தது அதிருப்தியை உருவாக்கியது. இதனைச் சரி செய்ய எம்.எல்.ஏ. எடுத்த முயற்சிகள் பெரியள வில் கைகொடுக்கவில்லை. அதே நேரத்தில் மக்கள் மத்தியில் தன்மீது பெரியளவில் அதிருப்தி யில்லாததால் மீண்டும் சீட் பெறவேண்டும் என சிட்டிங் எம்.எல்.ஏ. ஜோதி, அமைச்சர் வேலுவை வலம்வருகிறார்.  பசை பார்ட்டியான அயலக அணியின் வடக்கு மாவட்ட துணையமைப் பாளர் ஏழாச்சேரி கார்த்திகேயனுக்கு சீட் ஆசை காட்டி களத்தில் இறக்கிவிட்டுள்ளது ஒரு கும்பல். வடக்கு மா.செ.வும் ஆரணி எம்.பி.யு மான தரணிவேந்தன், செய்யாறு தொகுதியை உனக்கு வாங்கித் தரவேண்டியது என்னோட பொறுப்பு எனச்சொல்லி கட்சிக்காகவும், தனக் காகவும் பல செலவுகளைச் செய்யவைக்கிறார். கடந்த தீபாவளியின்போது செய்யாறு தொகுதியிலுள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் தீபாவளிப் பரிசு தந்துள்ளார் கார்த்திகேயன்.  

மாவட்ட சேர்மனாக இருந்த பார்வதியின் கணவரும், வெம்பாக்கம் ஒ.செ.வுமான சீனிவாசன், மனைவியின் பதவியை வைத்தும், எம்.எல்.ஏ. ஜோதியின் ஆதரவிருப்பதாலும் குவாரி, கிரஷர் தொழிலை டெவலப் செய்ததில் தொகுதியில் பல இடங்களில் கற்குவாரிகள், பெட்ரோல் பங்குகள் உருவாகியுள்ளன. அவரும் எம்.எல்.ஏ. சீட் கேட்பாளர்கள் பட்டியலில் உள்ளார். கட்சியின் சீனியர்களான முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் போன்றவர்கள் மாவட்ட அரசியலில் ஓரம்கட்டி வைக்கப் பட்டிருப்பதால் தலைமையின் பார்வை தங்கள் மீது படுமா என காத்துக்கொண்டி ருக்கின்றனர். தி.மு.க. ஆட்சியமைந்ததும் அ.தி.மு.க.வி லிருந்து தி.மு.க.வுக்கு வந்து சேர்மன் பதவியை தக்கவைத்துக்கொண்ட மாமண்டூர் ராஜி, சீட் கேட்டால் கிடைக்குமா என தனது ஆதரவாளர் களிடம் ஆலோசனை நடத்திவருகிறார். 

அ.தி.மு.க. சார்பில் இந்தத் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றிபெற்று ஜெ. அமைச்சரவையில் 2011-2016 வரை அமைச்சராக இருந்த முக்கூர்.சுப்பிரமணி கடுமையாக முயற்சி செய்கிறார். அவருக்கு கிடைக்கவே கூடாது என மாவட்டச் செயலாளரும், அதே தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தூசி.மோகன் கங்கணம் கட்டிக்கொண்டு வேலைசெய்கிறார். இந்த இருவரைத் தாண்டி வேறுசிலர் சீட்டுக்காக முயற்சி செய்தாலும், இருவருக்குமிடையேதான் கடும் போட்டி. இ.பி.எஸ்.ஸின் கருணைப் பார்வை முக்கூர்.சுப்பிரமணி மீதே இருக்கிறது என்கிறார்கள்.

செய்யாறு சிப்காட் விவகாரத்தில் விவ சாயிகளின் பின்னால் பா.ம.க. இருந்துவருகிறது. அதனை ஊதிப் பெரிதாக்கிவருகிறது, விவசாயி கள் அதிருப்தி, சாதி பலம் போன்றவற்றால் அன்புமணி டீமைச் சேர்ந்த மாநில இளைஞ ரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமாரை நிறுத்தினால் எப்படி இருக்கும் என ஆலோசித்துள்ளனராம். பா.ஜ.க.வில் தொகுதிப் பொறுப்பாளர் வெங்கட்ராமன் முயற்சிசெய்கிறார்.