Advertisment

செஸ் புகாரில் பல்கலைக்கழகம்! அதிரடியாக நீக்கப்பட்ட பதிவாளர்! -அதிர்ச்சியில் உயர் கல்வித்துறை!

ss

மிழக அரசின் ஆசிரியர் கல்வியியல் (பி.எட்.) பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் முறைகேடுகளைத் தொடர்ந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார் பதிவாளர் ராமகிருஷ்ணன். இவர் மீதான நடவடிக்கையின் பின்னணிகளை விசாரித்தபோது ஏகத்துக்கும் பகீர் தகவல்கள் !

Advertisment

தமிழகத்தில் அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் என 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் சென்னையிலுள்ள தமிழக அரசு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தற்போது, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்தி வருகிறது பல்கலைக்கழகம்.

Advertisment

dd

இந்த நிலையில், பி.எட். இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்காக கடந்த புதன்கிழமை நடைபெறவிருந்த, "படைப்புத்திறனும் உள்ளடக்கக் கல்வியும்' பாடத்தின் வினாத்தாள் லீக்கான விவகாரம், உயர்கல்வித்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அந்த தேர்வுக்கு மாற்று வினாத்தாள் அனுப்பி தேர்வை நடத்தி முடித்தது உயர்கல்வித்துறை. ஒரு வினாத்தாளுக்கு 2000 ரூபாய் பெற்றுக்கொண்டு அதனை பல்கலைக்கழக தரப்பிலிருந்தே லீக் செய்யப்பட்டதாகவும் பரபரப்பு கிளம்பியது.

வினாத்தாள் லீக் ஆன விவகாரம் தமிழக கல்வித்துறை வட்டாரங்களில் தீ போல பரவிய நிலையில், பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர் ராமகிருஷ் ணன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பு பதிவாளராக ராஜசேகரை நியமித்திருக்கிறது உயர்கல்வித்துறை. முறைகேடுகள் நடந்தது என தெரிந்ததுமே உடனடியாக நடவடிக்கை எடுத்தோம் பாரீர் என்கிற பிம்பத்தை உருவாக்கவும், தவறு செய்தவர்கள் மீது தயவு தாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளோம் என காட்டவும் இந்த நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், உண்மையில் நடந்து என்ன? இந்த விவகாரத்தின் பின்னணியில் வேறு வில்லங்கங்கள் இர

ஆனால், உண்மையில் நடந்து என்ன? இந்த விவகாரத்தின் பின்னணியில் வேறு வில்லங்கங்கள் இருப்பது நமது புலனாய்வில் தெரிய வந்தது. அந்த வில்லங்கங்களை மூடி மறைக்கவே கேள்வித்தாள் லீக் என்கிற விசயம் பரப்பப்பட்டிருக்கிறது.

உயர்கல்வித்துறை, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் நாம் விசாரித்தோம். நம்மிடம் மனம் திறந்து பேசிய பேராசிரியர்கள், ”"இந்த பல்கலைக்கழகத்தில் ஊழல் முறைகேடுகள், லஞ்ச விளையாட்டுகள், பாலியல் குற்றச்சாட்டுகள், நிதி இழப்புகள் என ஏகப்பட்ட வில்லங்கங்கள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.

இதில் அதிகமாக அதிர்ச்சியளிக்கக்கூடிய விசயம், பாலியல் வில் லங்கங்கள் தான். பணிபுரியும் பெண் பேராசிரியர் களுக்கும், ஆராய்ச்சி மாணவிகளுக்கும் இங்கு பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது. பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டதிலிருந்தே பெண் பேராசிரியர்கள் அச்சத்தில்தான் இருந்தனர்.

tt

பெண் பேராசிரியர்களை செக்ஸ் வார்த்தைகளால் வர்ணிப்பது, அவர்களிடம், தனியாக வரலாமே, ஏன் எப்போது பார்த்தாலும் துணையுடனேயே வருகிறீர்கள் எனச் சொல்வதில் ஆரம்பித்து பாலியல் ரீதியாக அணுகுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

பல்கலைக்கழகத்தில் பல நிகழ்ச்சிகள் நடக்கும். அப்போது, ராமகிருஷ்ண னுக்கு ஆண், பெண் பேரா சிரியர்கள் வாழ்த்துகள் சொல்வதும், பொக்கே கொடுப்பதும், சால்வை வழங்குவதும் என மரியா தை செய்வார்கள். அவ ருடன் க்ரூப் ஃபோட்டோ வும் எடுத்துக்கொள்வார் கள். அந்த ஃபோட்டோ வில் தனக்கு பிடித்தமான பெண் பேராசிரியர் மட்டும் தன்னுடன் இருக்கிற மாதிரி மற்றவர்களை கட் பண்ணிடுவார். அப்படி அவர் ரெடி செய்யும் போட்டோவை சம்பந்தப்பட்ட பெண் பேராசிரி யையிடம் காட்டி தனது ஆசையை வெளிப்படுத்து வார் ராமகிருஷ்ணன். மேலும், அந்த போட்டோ வை பலருக்கும் அனுப்பி, தானும் அவரும் நெருக்கமாக இருப்பதாகக் காட்டிக்கொள்வார்.

இதனால் பெண் பேராசிரியர்கள் பலர் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்த விவகாரம் பல்கலைக்கழகத்தில் பெரும் பிரச்சனை யாகவே இருந்துவந்தது. இதே மாதிரியான பாலியல் டார்ச்சர்களை ஆராய்ச்சி மாணவிகள் சிலரும் எதிர்கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து, ராம கிருஷ்ணனுக்கு எதிராகவும், துணைப் பதிவாளர் மோகனுக்கு எதிராகவும் உயர்கல்வித் துறையின் மேலிடத்துக்கு பல புகார்கள் போயின. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவே இல்லை. இதனால் பெண் பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் அப்செட்டானார்கள்.

இந்த நிலையில்தான், தற்போதைய உயர் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்.சிடம் இதே புகார்கள் போயின. அதிர்ச்சியடைந்த அவர், புகாரை சீரியஸாக விசா ரிக்க ஆரம்பித்தார். புகார் உண்மை எனத் தெரிந்ததும், ராமகிருஷ்ணனை பதிவாளர் பொறுப்பிலிருந்து கடந்த 23-ந்தேதி நீக்கி உத்தர விட்டார். தனது நீக்கமும், அதற்கான பின்னணியும் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகவே கேள்வித் தாள் லீக் விவகாரத்தை ராம கிருஷ்ணனே உருவாக்கினார்''’என்று விவரித்தனர்.

உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் நாம் விசாரித்தபோது, "துறையின் செயலாளராக கார்த்தி ஐ.ஏ.எஸ். இருந்தபோது பெண் பேராசிரியர்களிட மிருந்து ராமகிருஷ்ணனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் வந்தன. ஒரு பெண் பேராசிரியர் இதுகுறித்து விளக்கமாகவே எழுதியிருந்தார். உயர் கல்வித்துறையில் பல்கலைக்கழக விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு, டெபுடி செக்ரட்டரி ஹென்றி இளங்கோவிடம் இருந்தது. பல்கலைக் கழகம் தொடர்பான அனைத்து விவாகரங்களும் இவர் வழியாகத் தான் துறையின் செக்ரட்டரிக்கு போகும். ராமகிருஷ்ணனுக்கு எதிராக பெண் பேராசிரியர்களின் பாலியல் புகார்களை படித்த ஹென்றி இளங்கோ, இதனை ராமகிருஷ்ணனுக்கும், சிண்டிகேட் உறுப்பினர் நாராயணனுக்கும் தெரிவித்திருக்கிறார். உடனே, ராமகிருஷ்ணனும் நாராயணனும் கோட்டைக்கு ஓடோடி வந்து ஹென்றியை சந்தித்து பெரிய அளவில் பேரம் பேசினார்கள். பேரம் படிந்தது.

உடனே துறையின் செயலாளர் கார்த்தியிடம் அவர்களை அழைத்துச் சென்றார் ஹென்றி. விவாதித்தனர். அதன் முடிவில், சிண்டிகேட்டில் வைத்து, ராமகிருஷ்ணனுக்கு எதிரான பாலியல் புகார்கள் பொய் என முடிவெடுத்து, புகாரை க்ளோஸ் பண்ணிவிடுங்கள் என யோசனை தெரிவிக்கப்பட்டது. அதன்படி சிண்டிகேட்டில் இந்த பாலியல் புகாரை க்ளோஸ் பண்ணினார் நாராயணன். பல்கலைக்கழக சிண்டிகேட்டில் 5 உறுப்பினர்களில் கவர்னர் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்த நடேசனும் இதற்கெல்லாம் உடந்தை.

சிண்டிகேட்டில் வைத்து தனக்கு எதிரான புகார்களை க்ளோஸ் செய்ததற்காக, நாராயண னுக்கு பெரிய விலை கொடுத்தார் ராமகிருஷ்ணன். அதாவது, தனியார் கல்லூரிகள் ஒவ்வொரு வருசமும் தங்களின் அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்கும் போது, கல்லூரிகளில் நேரடியாக ஆய்வு செய்து எல்லாம் சரியாக இருக்கும் நிலையில் புதுப்பிக்கும் அப்ரூவலை பல்கலைக்கழகம் கொடுக்க வேண்டும். ஆனால், நேரடி ஆய்வு நடத்தாமலே நாராயணன் கைகாட்டும் கல்லூரிகளுக்கெல்லாம் புதுப்பித்துக் கொடுத்தார் ராமகிருஷ்ணன். இதற்கு பலனாக, சம்பந்தப்பட்ட கல்லூரிகளிலிருந்து பெரிதாக வசூலித்துக் கொள்வார் நாராயணன்.

இப்படித்தான் ராமகிருஷ்ணனுக்கு எதிரான பாலியல் புகார்கள் க்ளோஸ் பண்ணப்பட்ட நிலையில், உயர்கல்வித்துறையின் செயலாளராக கார்த்தி மாற்றப்பட்டு பிரதீப்யாதவ் நியமிக்கப்பட்டதும் மீண்டும் இந்த புகார்கள் அவரிடம் சென்றது. பாலியல் குற்றச்சாட்டு என்பதால் சீரியஸ் காட்டினார் பிரதீப்யாதவ். அவரது விசாரணையில், குற்றச்சாட்டு உண்மை எனத் தெரிந்ததும் முதல் நடவடிக்கையாக, ஹென்றி இளங்கோவிடமிருந்து பல்கலைக்கழக விவகாரத்தை கவனிக்கும் பொறுப்பை பிடுங்கினார் பிரதீப்யாதவ். ரெண் டாவது நடவடிக்கையாக ராம கிருஷ்ணனை நீக்கினார். தற்போது பெண் பேராசிரியர்களுக்கு ஓரளவு நிம்மதி.

ஆக, ராமகிருஷ்ணன் நீக்கத்துக்கு காரணம் பாலியல் குற்றச்சாட்டுகள் தானே தவிர, கேள்வித்தாள் லீக் விவகாரம் கிடையாது. இந்த லீக் தான் காரணம் எனில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான கணேசன் தான் நீக்கப்பட்டிருக்க வேண்டும். அவர் ஜம்முன்னு பதவியில் இருக்கிறார். அந்த வகையில், ராமகிருஷ்ணனின் நாடகம்தான் எல்லாமே''’என்று விரிவாக பின்னணிகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள் அதிகாரிகள்.

பெண் பேராசிரியர்கள் சிலரிடம் பேசியபோது,”"பல்கலைக்கழகத்தில் நிறைய தவறுகள் நடக்கிறது. அதுபற்றிய புகார்கள் தெரிவிக்க வேண்டுமாயின் துணைவேந்தரிடம் சொல்லவேண்டும். ஆனால், துணைவேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாகவே இருக்கிறது.

சிண்டிகேட் உறுப்பினர்களும், ராமகிருஷ்ண னும் ஒரு கூட்டணி அமைத்துக்கொண்டு, துணைவேந்தர் பதவியை நிரப்பவிடாமல் பார்த்துக் கொண்டனர். சிண்டிகேட்டிலுள்ள கவர்னரின் நாமினியான நடேசன், ராஜ்பவனி லுள்ள தனது சோர்ஸ் மூலம் இதனை செய்துவந்தார்.

ராமகிருஷ்ணனுக்கு பதிலாக பொறுப்பு பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜசேகர், ராமகிருஷ்ணனின் சிஷ்யர்தான். அவர்தான் ராஜசேகரை கொண்டு வந்துள்ளார். பல்கலைக் கழகத்தில் முழுநேர பதிவாளர் நியமிக்கப்படுவ தில்லை. பதிவாளர் பொறுப்பு தான் வழங்கப்படு கிறது. பொறுப்பு பதவிக்கே, 5 கோடி வரை செலவு செய்கின்றனர். கோடிகளைக் கொட்டித்தான் பதவிகள் வாங்கப்படுகின்றன''’என்கிறார்கள் பெண் பேராசிரியர்கள்.

தவறு செய்தவர்களை பொறுப்பிலிருந்து நீக்குவது சரியான நடவடிக்கை இல்லை; மாறாக, அவர்கள் குறைந்தபட்சம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதை செய்ய மறுக்கிறது அரசு. பல்கலைக்கழகத்தை சுத்தப்படுத்த பிரதீப்யாதவ் முயற்சிக் கிறார். ஆனால், அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், அவரை மாற்றிக்காட்டுகிறோம் என்று சவால் விட்டு கவனிக்க வேண்டியவர்களை கவனிக்கத் தொடங்கியிருக்கிறது பல்கலைக்கழக சிண்டிகேட்.

nkn040924
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe