தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இந்திய பிரதமர் மோடி தொடங்கிவைத்த, உலக சதுரங்க கூட்டமைப்பின் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஆகஸ்டு 9-ஆம் தேதி நிறைவுக்கு வந்திருக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப் பட்ட இந்திய அணி வெண்கலத்துடன் ஆறுதலடைய, உஸ்பெகிஸ்தான் அணி தங்கமும், அர்மீனியா அணி வெள்ளியும் வென்று சாதனை படைத்திருக்கின்றன.
மகளிர் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது. மகளிர் அணி வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். தனிநபர் பிரிவில்தான் இந்தியா செல்வாக்கு செலுத்தியது. இந்தியா இதில் 2 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றுள்ளது. ஆரம்பம் முதல் 9 சுற்று வரை அசத்திய குகேஷும், நிஹால் சரினும் தங்கம் வென்றனர். அர்ஜூன் எரிகைசி வெள்ளிப்பதக்கம் வென்றார். அதிகம் எதிர்பார்க்கப் பட்ட பிரக்ஞானந்தா, வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
போட்டியில் வென்ற அணிகளுக்கும் சிறப்பாக ஆட

போட்டியில் வென்ற அணிகளுக்கும் சிறப்பாக ஆடிய ஆட்டக்காரர்களுக்கும் நேரு அரங்கில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கௌரவித்தார்.
செஸ் ஒ-ம்பியாட் சிறப்பாக அமைந்திட ஏற்பாடுகளைச் செய்த அமைச்சர்கள் எ.வ.வேலு, சிவ.வீ.மெய்ய நாதன், மதிவேந்தன், தலைமைச் செய லாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகளை முதல்வர் வழங்கி னார். பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு உதயநிதி ஸ்டா-ன் பரிசுகளை வழங்கினார். நிறைவுவிழாவில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளை அனைவரும் வியக்கும் வகையில் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் நடத்தி, பாராட்டுகளைப் பெற்றார்.
விழாவில் கவனம் ஈர்த்த ஆட்டக்காரர்கள்!
சென்னை ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வந்த போட்சுவானா நாட்டு கிராண்ட் மாஸ்டரை, போட்டிக்குப் பார்வையாளராகச் சென்றிருந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி வீழ்த்தியது பலரது புருவத்தையும் உயர்த்த வைத்திருக்கிறது. உடையார்பாளையம் சரவணன் -அன்புரோஜா ஆகியோரின் மகள் ஷர்வானிகா. இரண்டாம் வகுப்பு படித்துவரும் இவர், பெற்றோர் ஊக்குவித்ததால் 4 வயது முதலே செஸ் ஆடிவரு கிறார். மாநில, தேசிய அளவிலும் பதக்கங்களை வென்றுவருகிறார். விரைவில் ஆசிய அளவிலான போட்டியொன்றிலும் கலந்துகொள்ள உள்ளார்.
ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கான போட்டிகள் முடிந்த நிலையில் போஸ்வானா நாட்டைச் சேர்ந்த டிங்க்வென் பார்வையாளர்களிடம் உரை யாடிக்கொண்டிருந்தார். அப்போது உற் சாகமான மனநிலையில் பார்வையாளர் களைப் பார்த்து, “"உங்களில் யாரும் என்னு டன் விளையாடத் தயாரா?''’எனக் கேட் டார். ஷர்வானிகா அந்த சவாலை ஏற்றுக் கொண்டு அவருடன் விளையாட அமர்ந் தார். விளையாட அமர்ந்த நிலையில் குறைந்த நகர்த்தல்களில் ஷர்வானிகா, டிங்க்வெனை வென்றுகாட்ட, "உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது''’எனப் பாராட்டியுள்ளார்.
அண்டை நாடான இஸ்ரேலுடனான மோத லால், எப்போதும் குண்டுகளையும் கணைகளையும் எதிர்கொள்ளும் பாலஸ்தீனத்திலிருந்து வந்திருக்கும் ராண்டா, ஐந்து வயதிலேயே தன் தந்தையிட மிருந்து செஸ் கற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டார். இந்த செஸ் ஒலிம்பியாட்டில் கலந்துகொள்ளும் சிறுவயது ஆட்டக்காரர் என்ற பெருமையும் இவருக்குண்டு. தற்போது இவரது வயது 8 தான்.
இரண்டாவது சுற்றில் கோமோராஸ் வீராங்கனை பஹிமா அலியை வென்ற ராண்டா, இறுதிக் கட்டத்தில் ஜொலிக்காதபோதும் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். ராண்டாவின் தந்தை செடாருக்கு ஐந்து குழந்தைகள். இவற்றில் நான்கு பேருக்கு செஸ் விளையாடத் தெரியும். இந்த செஸ் ஒலிம்பியாட்டில் ராண்டாவின் சகோதரன் முகமது செடாரும் கலந்துகொண்டுள்ளான்.
இந்த செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியாவின் நம்பிக்கை, தமிழக வீரர் பிரக்ஞானந்தா மீது குவிந்திருந்தது. காரணம், சமீபத்திய ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் ஆட்டக்காரர் கார்ல்சனையே திணறடித்திருந்தது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக பிரக்ஞானந்தாவின் ஆட்டம் சுமாராகவே இருந்தது. மாறாக, மற்றொரு ஆட்டக்காரரான குகேஷின் ஆட்டம் பலரை வியக்க வைத்திருக்கிறது.
குகேஷ், பிரக்ஞானந்தாவைவிட 9 மாதங்கள் இளையவன். எப்போதும், சிந்தனைவயப்பட்டது போல அமைதியாகவே இருக்கும் சுபாவம். இதுவரை நடந்த 11 ஆட்டங்களில் 9 புள்ளிகள் பெற்றிருக்கும் குகேஷ், உலகில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் கருவானா வுடனான ஆட்டத்தில் பெற்ற வெற்றி பலரையும் திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. முதல் பாதி வரை ஆட்டம் கருவானாவின் கையிலேயே இருந்தது. ஒருகட்டத்தில் ஆட்டம் ட்ராவை நோக்கி நகரத்தொடங்க, இதற்கு முந்தைய ஆட்டங்களில் தோற்றிருந்த கருவானாவுக்கு வெற்றிபெற்றாகவேண்டிய நிலைமை. வெற்றியே இலக்காகக் கொண்டு ஆடிய கருவானாவை தனது சாதுர்ய ஆட்டத்தால் ட்ராவை நோக்கி இழுத்துச் சென்றதை உலகமே வியப்புடன் பார்த்தது. ஒரு சாம்பியனாக குகேஷ் உருவாகிக்கொண்டி ருக்கிறான்.
செஸ் ஒலிம்பியாட்டில் ஓபன் பிரிவில் முதல் 10 இடங்களிலுள்ள அணிகள் எந்தப் பதக்கத்தையும் வெல்லாதது விநோதமாக இருந்தது. பதினான் காவது இடத்திலுள்ள உஸ்பெகிஸ்தான் தங்கம் வென்றது. எனினும் இந்திய மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்று கணக்கைத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறிதான்.