Advertisment

கலவர பீதியில் சென்னை! -கைகோக்கும் ரவுடிகள்!

chennai1


சென்னை ரவுடிகளின் ஆதிக்கத்தை அவர்களது பாஷையில் புரியவைத்து சென்னை கமிஷனர் தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவந் தார். இந்தச் சூழலில் சில முக்கிய ரவுடிகளான நாகேந்திரன், காக்காத்தோப்பு பாலாஜி, ஆற்காடு சுரேஷ், சீசிங் ராஜா, முத்துசரவணன் போன்ற ரவுடிகளின் மறைவும், மீதமுள்ள எண்ணூர் தனசேகரன் அச்சத்தில் திருந்தி வாழ்வதாக தகவல் வருவதாலும், தலைமறைவான சம்பவ செந்திலாலும் வடசென்னை தற்காலிகமாக அமைதியாகியிருக்கிறது. ஆனாலும் மத்திய சென்னை யார் கையில் என்பதில் ரவுடிகளுக் கிடையே மோதல் உண்டாகியுள்ளது. 

Advertisment

அதில் டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த ரவுடி தட்சிணாமூர்த்திக்கும், நாகேந்திரன் கூட்டாளியு மான அரும்பாக்கம் ராதாவுக்கும், பினுவின் வலதுகரமான கனகுவுக்கும் இடையிலான உரசலால் மத்திய சென்னை பற்றியெரியப்போகிறது. 

Advertisment

chennai

யார் இந்த ராதா? ரவுடி பினுவின் சிஷ்யப்பிள்ளையாக இருந்தவர் அரும்பாக்கம் ராதா. பினுவைவிட்டு வெளி யில்வந்து செய்த முதல் க


சென்னை ரவுடிகளின் ஆதிக்கத்தை அவர்களது பாஷையில் புரியவைத்து சென்னை கமிஷனர் தன்னுடைய கட்டுக்குள் கொண்டுவந் தார். இந்தச் சூழலில் சில முக்கிய ரவுடிகளான நாகேந்திரன், காக்காத்தோப்பு பாலாஜி, ஆற்காடு சுரேஷ், சீசிங் ராஜா, முத்துசரவணன் போன்ற ரவுடிகளின் மறைவும், மீதமுள்ள எண்ணூர் தனசேகரன் அச்சத்தில் திருந்தி வாழ்வதாக தகவல் வருவதாலும், தலைமறைவான சம்பவ செந்திலாலும் வடசென்னை தற்காலிகமாக அமைதியாகியிருக்கிறது. ஆனாலும் மத்திய சென்னை யார் கையில் என்பதில் ரவுடிகளுக் கிடையே மோதல் உண்டாகியுள்ளது. 

Advertisment

அதில் டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த ரவுடி தட்சிணாமூர்த்திக்கும், நாகேந்திரன் கூட்டாளியு மான அரும்பாக்கம் ராதாவுக்கும், பினுவின் வலதுகரமான கனகுவுக்கும் இடையிலான உரசலால் மத்திய சென்னை பற்றியெரியப்போகிறது. 

Advertisment

chennai

யார் இந்த ராதா? ரவுடி பினுவின் சிஷ்யப்பிள்ளையாக இருந்தவர் அரும்பாக்கம் ராதா. பினுவைவிட்டு வெளி யில்வந்து செய்த முதல் கொலை கர்ணா கொலைதான். இந்தக் கொலையை ஹரி குபி தம்பி சேகர் சொல்லி ராதா செய்துள்ளார். வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கர்ணன், தீனன் இருவரும் சேர்ந்து ரவுடி புளியந்தோப்பு சின்னாவின் வலது கையாக இருந்த ஹரி குபியை கொலைசெய்தனர். அதற்குப் பதிலடியாக சின்னா, தீனனைக் கொலைசெய்தான். சிலகாலம் பொறுத்து, தன் அண்ணனைக் கொலைசெய்த கர்ணன் மட்டும் உயிரோடு இருக்கிறானே, அவனை எப்படி யாவது கொலை செய்யவேண்டுமென ஹரிகுபி யின் தம்பியான சேகர் பணத்தைக் கொடுத்து ராதாவிடம் கொலை செய்யச் சொல்லவே, ராதாவும் இந்த கொலையை செய்து முடிக்கிறான். இதன்பிறகு கர்ணன் சம்பந்தமான வழக்கிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ரவுடி நாகேந்திர னிடம் அடைக்கலமாக... அதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட நாகேந்திரன், ராதாவை வைத்து மத்திய சென்னையிலும், வடசென்னை யிலும் பல கொலைகளைச் செய்கிறார். அதில் கோயம்பேடு கென்னட், வியாசர்பாடி கூட்செட் பாளையம் ஆகியோரை கனகச்சிதமாக செய்து முடித்து நாகேந்திரனின் விசுவாசியாக வலம் வந்துள்ளார். தற்போது மாயாவரம் கேபிரியலுடன் கைகோர்த்துக்கொண்டு அடுத்தடுத்த காய்களை நகர்த்தத் தயாராகிவருகிறார்.  

பினுவிடமிருந்து ராதா விலகி யதும், ரவுடி கனகு அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொண்டார். பினுவின் பிறந்தநாளில் கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடிய காரணத்திற்காக பினுவை போலீசார் கைதுசெய்தனர். அந்த நிகழ்ச்சி கனகு தலைமையிலே நடந்தது. அதனைத் தொடர்ந்து கனகு அயனாவரம் கொலை, ராதா கூட்டாளி உமர் கொலை என அடுத்தடுத்து செய்து முடித்து பினுவின் நம்பிக்கைக்குரிய நபராக வளரத்தொடங்கினான்.  ராதா சிறையிலிருந்த சூழ்நிலையில் பினுவும் கனகும் சேர்ந்து ராதா வீட்டை எரித்தனர். இதனால் ராதவுக்கும் கனகுக்கும் பகை உண்டானது. 

ரவுடி ஜெயபாலு சிஷ்யப்பிள்ளை தான் தட்சிணாமூர்த்தி. தனது குருவான ஜெயபாலு இறந்தபிறகு அந்த இடத்திற்கு தட்சிணாமூர்த்தி வருகிறார். ஜெயபாலுவின் தம்பியான ஜெயராஜ் அண்ணனின் இடத்தை நிரப்ப நினைக்க தட்சிணாவுக்கும் ஜெயராஜுக்குமிடை யே யார் பெரியவர் என்ற மோதல் உரு வானது. தட்சிணா, தீச்சட்டி முருகனை வைத்து ஜெயராஜை கொலைசெய்தான். இதையடுத்து ஜெயராஜுடன் இருந்த வர்கள் ராதாவுடன் இணைந்துசெயல் படத் தொடங்கினர். இந்தநிலையில் புழல் சிறையிலே தட்சிணாவும் தீச்சட்டியும் ராதாவை அழைத்து "தேவையில்லாத வேலையெல் லாம் செய்யாத, புரியுதா?' என மிரட்ட... "உங்களால் என்ன முடியுமோ பார்த்துக்கோங்க' என தில்லாகப் பேசிச்சென்றுள்ளான் ராதா. சிறையிலிருந்து தீச்சட்டி வெளியில் வந்தவுடன் சிறைக் குள்ளிருந்தபடியே ராதா, தனது டீம் உமர், ரோகித், மதுரை பாலா ஆகியோரைவைத்து, தீச்சட்டி முருகனைக் கொலைசெய்தார். இதிலிருந்து தட்சிணாவுக்கும் ராதாவுக்கும் பகை தீவிரமானது. 

சிறையிலிருந்தபடியே தனது குருவான நாகேந்திரன்போல உமர், ரோகித், மதுரை பாலா போன்ற வர்களை வைத்துக்கொண்டு மயிலாப்பூர் சிவகுமார், ராயப் பேட்டை அப்பாஸ், காக்காத்தோப்பு பாலாஜி ஆட்களான ஆறுமுகம் என இப்படி பல கொலைகளைச் செய்துவந்தனர். ராதாவுடனிருந்த ரோகித்தின் நண்பரான உமரை, பினுவின் விசுவாசியான கனகு கொலை செய்தபோது, ராதா எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், ராதாவிடமிருந்து பிரிந்து மதுரை பாலாவிடம் இணைந்து செயல்பட ஆரம் பித்தான் ரோகித். 

இந்த சூழ்நிலையில் தற்போது சேலம் சிறையிலிக்கும் ராதாவின் விசுவாசியாக இருந்த ரோகித் தையும், மதுரை பாலாவையும் தன் கையில் எடுத்து, ரவுடி ராதாவை கொலைசெய்ய தட்சிணா தலை மையிலான டீம் திட்டமிட்டுள்         ளது. தற்போது ராதாவிற்கு வெளி யிலிருந்து சகலமும் செய்துவரும் ஆர்ச்சி வினோத், மெர்வின், அப்பாஸ், ராதாவின் அண்ணன் ராமகிருஷ்ணன் ஆகியோரை கொலை செய்யவும் திட்ட மிட்டுள்ளனர்.  

மறுபுறம் தட்சிணாமூர்த்தி, ராதாவைப் போட்டுத் தள்ள திட்டமிட்ட விஷயம் கசிந்து ராதாவுக்குத் தெரியவர, ராதாவும் தட்சிணாவைக் குறிவைத்து வருகிறாராம். இந்த பிரச்சனையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற வகையில் ராதாவை கொலைசெய்ய தட்சிணாவுடன் கனகும் கைகோர்த்துள்ளார். 

-சே

nkn201225
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe