சென்னை! களைகட்டிய உலக பதிப்பாளர்களின் சந்தை! -எழுத்தாளர் பீர்முகமது அஜீஸ்

ss

து ஒரு மகத்தான தருணம். மூத்த தமிழ் மொழி தனது ஆயிரமாண்டுக் கனவுகளை நனவாக்கிய தருணம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் மூன்றாம் ஆண்டு விழாதான் இந்தப் பொன் தருணம். தமிழின் குரலை உலகமெல்லாம் கொண்டு செல்கிற பங்காளிகளை தமிழ் இனம் அடையாளம் கண்ட நிகழ்வு இது. விழாவின் இயக்குநரும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பொ.சங்கர் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கார்த்திக் ராம் மனோகரனின் பெரியார் நூலை சிறப்பு விருந்தினரும் எழுத்தாளரும் எம்.பி.யுமான சசிதரூரிடம் தந்தபோது, தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மொழியாக் கப் பணிகளைப் புகழ்ந் தார் தரூர். மலையாளத்தில் வெளியான கலைஞரின் குறளோவியத்தைத் தந்தபோது நெகிழ்ந்தார்.

முதலமைச்சர் முன் னிலையில் நிறைவுவிழாவில் திருக்குறளை ஆங்கிலத் தில் கவிதையாகவே இசைக் கூறுகள் மாறாமல் மொழி பெயர்த்த தாமஸ் ஹிடோஷி புருயிக்ஸ்மா...

"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்'’-குறளை (648)

ராகமாகப் பாடினார். When one attains sweetness and order in words #the world Rushes to listen என்ற தனது மொழியாக்கத்தையும் ஆங்கிலத்தில் பாடிக்காட்டி பலத்த கைத்தட்டலைப் பெற்றார்.

ii

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்னிலையில் தொடக்கவிழாவில் ஆன்லைனில் பேசிய பொலோனியா குழந்தைகள் புத்தகத் திருவிழாவின் இயக்குநர் எலினா பஸோலி தமிழுக்கு முதல் அகராதி செய்த ஜோசப் கான்ஸ்டன்டின் பெஸ்கி என்ற வீரமாமுனிவரின் கதையைச் சொல்லி அமைச்சரை நெகிழச் செய்தார்.

ஒவ்வொரு புத்தகத் திருவிழாவுக்கும் ஆன்மாவே எழுத்தாளர்கள்தான். இமையம், சாரு நிவேதிதா, அம்பை, மாலன், ஷோபாசக்தி, ஆ.இரா.வேங்கடாசலபதி, மனுஷ்யபுத்திரன், குட்டி ரேவதி, ராஜன் குறை கிருஷ்ணன், அஜயன் பாலா, சண்முகானந்தம், சுகிர்தராணி, பெருந்தேவி, வெயில், விஜயலட்சுமி, யெஸ்.பாலபாரதி, மீனாகந்தசாமி, ஆர்.பாலகிருஷ்ணன், ஜெ.ஜெயரஞ்சன், ஈரோடு தமிழன்பன், சுபாஷினி, ஆயிஷா நடராசன், வெ.இறையன்பு, ஏ.எஸ்.பன்னீர்செல்வன், கரன்கார்க்கி, நிவேதிதா லூயிஸ் என்றொரு

து ஒரு மகத்தான தருணம். மூத்த தமிழ் மொழி தனது ஆயிரமாண்டுக் கனவுகளை நனவாக்கிய தருணம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழாவின் மூன்றாம் ஆண்டு விழாதான் இந்தப் பொன் தருணம். தமிழின் குரலை உலகமெல்லாம் கொண்டு செல்கிற பங்காளிகளை தமிழ் இனம் அடையாளம் கண்ட நிகழ்வு இது. விழாவின் இயக்குநரும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான பொ.சங்கர் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கார்த்திக் ராம் மனோகரனின் பெரியார் நூலை சிறப்பு விருந்தினரும் எழுத்தாளரும் எம்.பி.யுமான சசிதரூரிடம் தந்தபோது, தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மொழியாக் கப் பணிகளைப் புகழ்ந் தார் தரூர். மலையாளத்தில் வெளியான கலைஞரின் குறளோவியத்தைத் தந்தபோது நெகிழ்ந்தார்.

முதலமைச்சர் முன் னிலையில் நிறைவுவிழாவில் திருக்குறளை ஆங்கிலத் தில் கவிதையாகவே இசைக் கூறுகள் மாறாமல் மொழி பெயர்த்த தாமஸ் ஹிடோஷி புருயிக்ஸ்மா...

"விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்'’-குறளை (648)

ராகமாகப் பாடினார். When one attains sweetness and order in words #the world Rushes to listen என்ற தனது மொழியாக்கத்தையும் ஆங்கிலத்தில் பாடிக்காட்டி பலத்த கைத்தட்டலைப் பெற்றார்.

ii

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் முன்னிலையில் தொடக்கவிழாவில் ஆன்லைனில் பேசிய பொலோனியா குழந்தைகள் புத்தகத் திருவிழாவின் இயக்குநர் எலினா பஸோலி தமிழுக்கு முதல் அகராதி செய்த ஜோசப் கான்ஸ்டன்டின் பெஸ்கி என்ற வீரமாமுனிவரின் கதையைச் சொல்லி அமைச்சரை நெகிழச் செய்தார்.

ஒவ்வொரு புத்தகத் திருவிழாவுக்கும் ஆன்மாவே எழுத்தாளர்கள்தான். இமையம், சாரு நிவேதிதா, அம்பை, மாலன், ஷோபாசக்தி, ஆ.இரா.வேங்கடாசலபதி, மனுஷ்யபுத்திரன், குட்டி ரேவதி, ராஜன் குறை கிருஷ்ணன், அஜயன் பாலா, சண்முகானந்தம், சுகிர்தராணி, பெருந்தேவி, வெயில், விஜயலட்சுமி, யெஸ்.பாலபாரதி, மீனாகந்தசாமி, ஆர்.பாலகிருஷ்ணன், ஜெ.ஜெயரஞ்சன், ஈரோடு தமிழன்பன், சுபாஷினி, ஆயிஷா நடராசன், வெ.இறையன்பு, ஏ.எஸ்.பன்னீர்செல்வன், கரன்கார்க்கி, நிவேதிதா லூயிஸ் என்றொரு பெரும் எழுத்தாளர் பட்டாளமே இறங்கி இந்த விழாவைக் கொண்டாடித் தீர்த்தது.

தமிழ்நாடு அரசு வாயிலாக பயிற்சி பெற்ற இலக்கியத் தூதுவர்கள், தமிழ்ப் பதிப்பாளர்கள், இந்தியா முழுவதுமிருந்து வந்த பதிப்பாளர்கள், உலகம் முழுவதுமிருந்து 64 நாடுகளிலிருந்து வந்த பதிப்பாளர்கள், ஜனவரி 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நூல் உரிமைகளை வாங்கும், விற்கும் வணிகத்தில் ஈடுபட்டார்கள்.

ii

முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் நீரை மகேந்திரன், திராவிட நூல்கள் பலவற்றையும் உலக மொழிகளுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான உரையாடலைத் தொடங்கி வைத்திருக்கிறார். நக்கீரன் பதிப்பகத்தின் வழக்கறிஞர் ஆர்.வி.சாருமதியும் தங்களது இதழியல் ஆவண நூல்களை பல இந்திய மொழிகளுக்கும், உலக மொழிகளுக்கும் கொண்டுசெல்வதற்கான பேச்சுவார்த்தைகளைச் செய்துள்ளார். எதிர் வெளியீட்டின் அனுஷ், தடாகம் பதிப்பகத்தின் பால் அமுதரசன், கவிமுரசு பதிப்பகத்தின் பொ.கந்தசாமி, காலச்சுவடு பதிப்பகத்தின் கண்ணன் சுந்தரம், கிழக்கு பதிப்பகத்தின் மருதன், கவிதா பதிப்பகத் தின் கவிதா, கண்ணதாசன் பதிப்பகத்தின் முரளி, எமரால்டு பதிப்பகத்தின் ஒளி வண்ணன் கோபாலகிருஷ்ணன், பதிப்பா ளர் கார்ல் மார்க்ஸ் சித்தார்த்தர், ஆழி பதிப்பகத்தின் செந்தில்நாதன் உள்ளிட்ட ஏராளமான பதிப்பாளர்கள் நூல் வணிக ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறார்கள்.

தமிழின் இரட்டைக் காப்பியங் களான சிலப்பதிகாரம், மணிமேகலையை பாரசீக, துருக்கி மொழிகளுக்குக் கொண்டு செல்லும் ஒப்பந்தம் உள்ளிட்ட ஓராயிரத் துக்கும் மேலான ஒப்பந்தங்களை இந்தத் திருவிழா கண்டது. “"வெற்றி... வெற்றி'! "சக்சஸ்... சக்சஸ்!'’என்கிற சொற்றொடர் மட்டுமே இந்த விழாவைச் சரியாக பிரதி பலிக்கும். "மிக அழகாக ஒருங்கிணைக்கப் பட்ட விழா இது. இந்த விழா சென்னையை புத்தகச் சந்தைக்கான உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்துவிட்டது' என்கிறார் மதிப்புறு விருந்தினராக இத்தாலியிலிருந்து வந்த பொலோனியா குழந்தைகள் புத்தகத் திருவிழாவின் இயக்குநர்களில் ஒருவரான ஜேக்ஸ் தாமஸ்.

ஆசியான் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஷேக் ஃபைஸல் பின் மன்சூரும், ஆப்ரிக்க பதிப்பாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் லாரன்ஸ் கிபாராவும் புதிய நூல்களின் வணிகப் பரிமாற்றத்துக்கான புரிந்துணர்வை அடைந்தார்கள். ”"உலகப் பதிப்பாளர்களுக்கான சந்தையாக, களமாக சென்னையை உருவாக் கிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி!'’என்று பொலோனியா குழந்தைகள் புத்தகத் திருவிழாவின் இயக்குநர் எலினா பஸோலி கூறு கிறார். 1964 முதல் 62 ஆண்டு களாக 100 நாடுகளைச் சார்ந்த 1500 பதிப்பாளர்களுடன் உலகிலேயே மிகப்பெரிய குழந்தைகள் புத்தகத் திருவிழாவை நடத்தும் இயக்கு நரின் இந்தச் சொற்கள், தமிழ்நாடு அடைந்துள்ள புதிய உயரத்துக்குச் சான்று.

நிறைவு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு பாடநூல் கழகம் மற்றும் கல்வியியல் கழகம் பதிப்பித்த 75 நூல்கள், மொழி பெயர்ப்பு மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப் பட்ட 30 நூல்களை வெளியிட்டார்.

ii

இந்த ஆண்டு நடைபெற்ற சென்னை பன் னாட்டு புத்தகக் கண்காட்சியில் 1125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு 1005 ஒப்பந்தங் களும், பிற மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

விழாவில் கலந்துகொண்ட பதிப்பகங்களை யும் ஆளுமைகளையும் ஊக்குவிக்கும் பொருட்டு "சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா தூதர் விருது', "உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தகக் கண்காட்சி விருது', "பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது', "நவீன தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது, கூட்டு வெளியீட்டு கூட்டாண்மை விருது', "பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருதுகள்' முதல்வரால் வழங்கப்பட்டன.

செம்மொழியாம் தமிழுக்கு உலகெங்கும் கூட்டாளிகள் உருவாகியிருக்கிறார்கள். தமிழ் வேர்ச்சொல்லின் வலிமையை உலகுக்குச் சொல்லும் கு.அரசேந்திரனின் வேர்ச்சொல் அகராதிகளை ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி பிரஸ் பதிப்பகம் வெளியிடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. நிறைவுநாளில் முதலமைச்சர் அரங்குகளைப் பார்வையிட்டபோது பெருமாள் முருகன், இமையம், ஷோபாசக்தியை பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்த லெற்றிஷியா இபனெஷ் “"நீங்களே நேரில்வந்து பார்த்தது மகிழ்ச்சி. மிகச்சிறப்பாக, அழகாக இந்தப் புத்தகத் திருவிழாவைச் செய்து கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி!''’என்று முதல்வரிடம் சொன்னார்.

இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர் ஐ.ஏ.எஸ். மற் றும் இணை இயக்குநர் சங்கர சரவணன், பொது நூலக இணை இயக்குனர் இளங்கோ ஆகியோரை வெகுவாகப் பாராட்டலாம்.

சமூக நீதியைப் பேணும் திராவிட மாடல் அரசுக்கு உலகெங்கும் பரந்துள்ள எழுத்துலகமும், பதிப்புலகமும் அளித்திருக்கும் பாராட்டு மடலில் ஒரு துளி இது.

_______________

தி.மு.க. சுறுசுறுப்பு! நா.த.க.வுக்கு எதிர்ப்பு! -ஈரோடு கிழக்கு நிலவரம்

ss

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் நாளுக்குநாள் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக உருவாகியுள்ளது. தி.மு.க., நாம் தமிழர் என இருமுனைப்போட்டி உருவாகியுள்ளது. மொத்தம் 55 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் மூன்று மனுக்கள் நிராகரிக்கப் பட்டு, இறுதியாக 52 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த நிலையில் 12ஆம் தேதியே பிரச்சாரத்தை தொடங்கிய தி.மு.க., தொடர்ந்து தொகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் மாவட்ட அமைச்சரான முத்துசாமி தலைமையில் வேட்பாளர் சந்திரகுமார், தி.மு.க. நிர்வாகிகள் புடைசூழ வீதி வீதியாக, வீடு வீடாக நடந்தே சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.

அமைச்சர் முத்துச்சாமி உடன் செல்வதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. நீண்டகால அரசியல்வாதியான அவரை சந்திக்கும்போது தொகுதி மக்கள் உற்சாகமாகி பழைய நினைவுகளை அவரோடு பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு சில பகுதிகளில் அவர்களின் தேவைகளை மக்கள் கூறுவதும், அதை அவர்கள் கண்முன்பே குறித்துவைத்து "தேர்தல் முடிந்ததும், நானே நேரில் வந்து நீங்கள் கூறிய குறைகளை சரிசெய்து கொடுக்கிறேன்' என அமைச்சர் வாக்குறுதி கொடுப்பதும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களாகிய மக்களுக்கு நம்பிக்கையை தருகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த நான்கு ஆண்டுகாலமாக தி.மு.க. அரசு செயல்படுத்திய மக்கள்நலத் திட்டங்கள், அதனால் ஏற்பட்ட பயன்களை மட்டுமே பிரச்சாரமாக தி.மு.க.வினர் வைத்து வருகிறார்கள்.

மறுபுறம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்து மனுவின் பரிசீலனை வரை ஒருவிதப் பதட்டத்தோடேயே இருந்தார். அவரோடு இணைந்து செயல்பட பெரும்பாலான நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களுக்கு விருப்பமில்லை என்றே கூறப்படுகிறது. அதற்குக் காரணம், தந்தை பெரியார் பற்றி கட்சியின் தலைவரான சீமானின் இழிவான விமர்சனமே. பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் பெரியாரை சிறுமைப்படுத்துகிற சீமானுக்கு துணைபோகக் கூடாது, அவரது கட்சியின் சார்பாக வேட்பாளராக ஈரோட்டில் போட்டியிட வேண்டாம் என சீதா லட்சுமியின் பெற்றோர் மற்றும் அவரது குடும்பத்தினர் மொத்தமும் அவரிடம் கேட்டுக்கொண்டார்கள். இதனால் வரலாற்றில் மிகப்பெரிய பிழை ஏற்படும் என்று குடும்பத்தினர் கூறியும், யாருடைய பேச்சையும் நான் கேட்கப்போவதில்லை என்று தனித்து நிற்கிறார் சீதாலட்சுமி.

இந்த நிலையில் தி.மு.க. தரப்பிலிருந்து பேரம் பேசியதாகவும், களத்திலிருந்து விலகிக்கொள் என்று கூறியதாகவும் நாம் தமிழர் கட்சியே ஒரு வதந்தியைப் பரப்பிவிட்டது. இதற்கு பதிலளித்த வேட்பாளர் சீதாலட்சுமி "அப்படியெல்லாம் யாரும் என்னிடம் பேசவில்லை... அது பொய்'' என்று அவரே கூறினார்.

இது ஒருபுறமிருக்க, தந்தை பெரியார் திராவிட கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு தமிழ் தேசிய அமைப்புகள், பகுத்தறிவுத் தந்தை பெரியாரைப் பற்றி அருவருப்பான சொற்களால் விமர்சிக்கிற சீமான், பெரியார் பிறந்த ஈரோட்டில் அவரை மேலும் கேவலப்படுத் தக்கூடும். இதனால் சமூகப் பதட்டம் ஏற்படும், வன்முறை உருவாகும் சூழல் வரும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும். எனவே, சீமான் ஈரோட்டு பிரச்சாரத்துக்கு வராமல் தடை விதிக்க வேண்டும்'”என தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடபட காவல் துறை உயரதிகாரிகளுக்கு புகார் கொடுத்துள்ளார்கள்.

தேர்தலில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்த அ.தி.மு.க. வைச் சேர்ந்த செந்தில்முருகன் என்பவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, இதன் மூலம் பா.ஜ.க. ஆதரவுபெற்ற நாம் தமிழர் சீமானுக்கு மறை முகமாக தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.

தி.மு.க. அமைச்சர்கள் எ.வ.வேலு, செந்தில்பாலாஜி ஆகியோர் 20ஆம் தேதி முதல் தேர்தல் களத்தில் இறங்கி யிருப்பது உடன்பிறப்புகளை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

-ஜீவா

nkn220125
இதையும் படியுங்கள்
Subscribe