சென்னை ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் இளங்கனி. இவர் அரியவகை நோயான ’பெஹ்செட்டால் பாதிக்கப் பட்டவர். அதற்காக அவர் சிகிச்சை எடுத்துவருகிறார். இந்தியாவி லேயே இதுவரை மொத்தம் 48 பேர்தான் இந்த பெஹ்செட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது புள்ளிவிபரம். இளங்கனி 49-ஆவது நபர். இவர் ஒரு பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விநோத நோய், முதலில் தொடர்பில்லாத பல அறிகுறி களை வெளிப்படுத்தும். வாய்ப் புண்கள், கண் எரிச்சல், தோல் வெடிப்பு, அந்தரங்கப் பகுதி என பல இடங்களிலும் புண்கள் போன்றவற்றை ஏற்படுத்துமாம். சென்னை அப்பல்லோ மற்றும் சிம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்துவந்த இளங்கனி, பின்னர் தன் பெற்றோர் ஊரான சேலத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற நிலையில் தொடைப்பகுதியில் அதிகமாகப் புண்கள் ஏற்பட்டதால், அங்கே சீலநாயக்கன்பட்டியில் உள்ள அகிதா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த டாக்டர் சாமிகிருஷ்ணன், சிறந்த முறையில் சிகிச்சை கொடுத்திருக் கிறார். சென்னைக்குத் திரும்பி வந்த பிறகும், அதே டாக்டரிடம் ஆன்லைன் மூலம் சிகிச்சையைத் தொடர்ந்திருக்கிறார்.
இதில் தொடைப்பகுதி புண் குணமாக, அந்த நிலையில் அவரது தொடைப்பகுதியின் படத்தை அனுப்பச் சொல்லி யிருக்கிறார் டாக்டர் சாமிகிருஷ் ணன். அதன்படி இளங்கனியும் படத்தை அனுப்பினார். அப் போது, "இது போதாது. உங்கள் முழு உடலையும் வெளிப்படை யாகப் படம் எடுத்து எனக்கு அனுப்புங்கள்' என்று அந்த டாக்டர் சொல்ல... இதனால் சந்தேகம் அடைந்த இளங்கனி, "எதற்காக முழு படத்தையும் கேட்கறீங்க?'' என்று கேட்டுள் ளார். அதற்கு டாக்டர் சாமி கிருஷ்ணன், "ஒரு பெண்ணின் அழகை ரசிக்காத எவனும் ஆண் இல்லை. உண்மையிலேயே நீ அழகி'' என்று வழிந்திருக்கிறார்.
இதனால் கோபமடைந்த இளங்கனி, "ஒரு பேஷண்டிடம் இப்படி தவறாக நடக்கலாமா? உங்களை அறிமுகப்படுத்திய டாக்டரிடமும், என் கணவரிடமும் இதைச் சொல்லிவிடுவேன்''” என்று கூறியுள்ளார். அதற்கு டாக்டர் சாமிகிருஷ்ணன், "சாரி, நான் உண்மையைத்தான் சொன்னேன்''’என்று சிரித்திருக்கிறார். அதோடு விடாமல், மீண்டும் அவரைத் தொடர்புகொண்ட டாக் டர் சாமிகிருஷ்ணன், "எங்கே உங்கள் முழு நிர்வாணப் படம்? அனுப்பச் சொன்னேனே?''ன்னு சொல்ல, இளங்கனியோ, "உங்க ளுடைய வயதிற்கு மரியாதை கொடுத்துதான் இதுவரை அமைதியாக இருந்தேன். இனி மரியாதை தரமாட்டேன்'' என்ற படியே, அன்னதானப்பட்டி போலீசுக்கும் தகவல் கொடுத்தார். எனினும் எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால், அவசர எண் 100-ஐ தொடர்புகொண்டு அவர் பேச... அன்னாதனப்பட்டி எஸ்.ஐ. சுப்பிரமணி வழக்கைப் பதிவு செய்யாமல், "அந்த டாக்டரை எச்சரிச்சிட்டேன்' என்று கூறியுள்ளார். "வழக்கைப் பதிவு செய் யுங்கள்'' என்று இளங்கனி சொல்ல, "அப்படின்னா, நேரில் வந்து புகார் கொடுங்க''’என்றார் எஸ்.ஐ. அடுத்து அந்த ஸ்டேசன் ரைட்டரான கந்தசாமியும் இளங்கனியைத் தொடர்புகொண்டு, "இந்த விவகாரத்தை இதோடு விட்டுடுங்க''ன்னு சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து பேசிய இளங்கனி, "டாக்டர்களைக் கடவுளாகப் பார்க்கும் இந்த மண்ணில், இப்படியும் சிலர் இருக்காங்க. அந்த டாக்டர் சாமிகிருஷ்ணனின் நக்கல், மன அழுத்தத்தை தருது. டாக்டரான என்னிடமே அவர் இப்படி நடந்துக்கிறார் என்றால், திருச்சியில் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி தலைமை மருத்துவராக இருக்கும் இவர், அங்கே மாணவிகளிடமும், நோயாளிகளிடமும் எப்படி நடத்திருப்பார்? அதனால், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கணும், அதேபோல் அவருக்கு உடந்தையா இருக்கும் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கணும்” என்றார்'' ஆவேசம் அடங்காமல்.
இது தொடர்பாக டாக்டர் சாமிகிருஷ்ணனிடம் நாம் கேட்டபோது, பதில் சொல்ல முடியாமல் தவித்தவர், "நான் வாகனம் ஓட்டிக்கிட்டிருக்கேன், பிறகு பேசுகிறேன்''’என துண் டித்தார். அதன்பிறகு பலமுறை அழைத்தும் அவர் அழைப்பை ஏற்கவில்லை. இன்ஸ்பெக்டர் ரமேஷோ, "“இது ஆன்லைன் வழக்கு. நிச்சயம் அதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்போம்''’என்றார் பதட்டமாக.
"ஒரு டாக்டரிடமே இப்படியா? காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது' என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.