"வெறும் ஆயிரம் எண்ணிக் கையில் இருந்த இ-சேவை மையங் கள், இப்பொழுது 20 ஆயிரத்தை கடந்து விட்டன. மக்களின் மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்படுகின்றது. கோரிக்கை நிறைவேற்றப் படுகின்றது'' என பெருமை யாகக் கூறியிருந்தார் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். ஆனால், கடந்த 2016 முதல் 2021 மே வரை நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மட்டுமே 40,84,656. அதன்மூலம் அரசுக்கு கிடைக்கப்பெற்ற தொகை ரூ.21,89,43,820. ஆனால், அதிகாரிகளுக்கு கிடைத்ததோ இதனை விட பல நூறு மடங்கு தொகை. இப்பொழுதும் ஊழல் நடைபெற்று வருவதுதான் வேடிக்கை என ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள் அரசை அதிரவைத்துள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் இன்னும் பல்வேறு வகையான சான்றிதழ்களைப் பெற கிராம நிர்வாக அலுவலரைத்தான் முதலில் அணுகவேண்டிய சூழ்நிலை இருந்தது. அதன் பிறகு வருவாய் அலு வலர், வட்டாட்சியர் என ஒவ்வொரு அலுவலகத் திலும் பலமணி நேர காத்திருப்பிற்குப் பிறகுதான் அவர்களிடம்
"வெறும் ஆயிரம் எண்ணிக் கையில் இருந்த இ-சேவை மையங் கள், இப்பொழுது 20 ஆயிரத்தை கடந்து விட்டன. மக்களின் மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்படுகின்றது. கோரிக்கை நிறைவேற்றப் படுகின்றது'' என பெருமை யாகக் கூறியிருந்தார் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். ஆனால், கடந்த 2016 முதல் 2021 மே வரை நிராகரிக்கப்பட்ட மனுக்கள் மட்டுமே 40,84,656. அதன்மூலம் அரசுக்கு கிடைக்கப்பெற்ற தொகை ரூ.21,89,43,820. ஆனால், அதிகாரிகளுக்கு கிடைத்ததோ இதனை விட பல நூறு மடங்கு தொகை. இப்பொழுதும் ஊழல் நடைபெற்று வருவதுதான் வேடிக்கை என ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள் அரசை அதிரவைத்துள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு தேவைப்படும் சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் இன்னும் பல்வேறு வகையான சான்றிதழ்களைப் பெற கிராம நிர்வாக அலுவலரைத்தான் முதலில் அணுகவேண்டிய சூழ்நிலை இருந்தது. அதன் பிறகு வருவாய் அலு வலர், வட்டாட்சியர் என ஒவ்வொரு அலுவலகத் திலும் பலமணி நேர காத்திருப்பிற்குப் பிறகுதான் அவர்களிடம் கையொப்பம் பெறமுடியும். அதில் அந்த கிராமத்தின் ஊராட்சித் தலைவர் மற்றும் இடைத்தரகர்கள் என பல பரிந்துரைகள் இருந்தால் மட்டுமே மக்கள் சான்றிதழ் பெறும் சூழ்நிலை நிலவிவந்தது. இந்த சிரமங்களுக்கெல்லாம் முடிவாக முற்றுப்புள்ளி வைக்கத்தான் எவ்வித அலுவலகத்திற்கும் அலைந்து திரியாமல் இருப்பதற்காகவே கொண்டு வரப்பட்டது இ சேவை மையங்கள்.
"இ-சேவை மையத்தில் பொதுமக்களின் அசல் ஆவணங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கிராம நிர்வாக அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். அவர் சான்றிதழ்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் வருவாய் ஆய்வாளருக்கு பரிந்துரை செய்வார். அதன் பிறகு மண்டல துணை வட்டாட்சியர் அல்லது வட்டாட் சியர் சான்றிதழ் வழங்க ஆவன செய்வார். சான் றிதழ் ஏற்கப்பட்டது என்றால் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் தங்கள் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்தவுடன் அதே இ-சேவை மையத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டைக் கொடுத்து சான்றிதழ் பெறமுடியும். ஆவணங்கள் சரியாக இல் லாதபட்சத்தில், சான்றுகளுக்கான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி வரும். இதுதான் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் சான்றிதழ் தள்ளுபடி செய்ததை அறிந்த பொது மக்கள் மீண்டும் இ-சேவை மையத்தை அணுகி கேட்டால், "நீங்கள் கிராம நிர்வாக அலுவலரை பார்க்கவில்லையா?' என்கிற பதில்தான் வருகின்றது. பதிவு செய்தவுடன் நேரில் சந்தித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவிப்பார்கள். மீண்டும் பதிவு செய்யப்பட்ட ஒப்புகை சீட்டுடன் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்தால், "நாங்கள் எதற்கு இருக்கிறோம்?' என்று நேரடியாக கேள்வி கேட்டு திணறடித்துவிட்டு, காந்தி நோட்டை கண்ணில் காண்பித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு முன்னேறும். இந்தப் பணத்தை வி.ஏ.ஓ. முதற்கொண்டு தாசில்தார் வரை பிரித்துக் கொள்வதுதான் நிதர்சனம்'' என்கின்றார் விபரமறிந்த ஒருவர்.
ஆர்.டி.ஐ. மூலம் தகவல் பெற்ற பொள் ளாச்சியை சேர்ந்த முத்துகுமாரசுவாமியோ, "ஒரு சிலர் சுயலாபத்திற்காக பல்வேறு சான்றிதழ் களுக்காக பதிவு செய்த பொதுமக்களின் மனுக்களை நிராகரித்துவிடுகிறார்கள். இதனால் பொதுமக்களின் பணம் விரயமாவதோடு பொருளாதார இழப்பால் மன உளைச்சல் ஏற்படுகிறது. பொதுமக்களின் சான்றிதழ் நிராகரிக்கப்படும்போது சான்றிதழ்களுக்காக பெறப்பட்ட தொகை அதே இ-சேவை மையத்தின் மூலம் திருப்பி வழங்கப்பட வேண்டும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களிடம் 2017ஆம் ஆண்டு குறை தீர்ப்பு நாளில் புகார் கொடுத்திருந்தேன். அதன்பிறகு தமிழ்நாடு அரசு தகவல் தொழில் நுட்பவியல் துறை செயலாளருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு புகார் தெரிவித்திருந்தேன். மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தலைமை அலுவலகத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை பொதுமக்களால் பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களில், நிராகரிக்கப்பட்ட சான்றிதழ்களுக்காக பொதுமக்களிடம் பெறப்பட்ட மொத்த தொகை குறித்து மனு செய்திருந்தேன். மேற்கண்ட மனு குறித்து எவ்வித தகவலும் எனக்கு கிடைக்கப் பெறவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கும் பொதுமக்களின் பொருளாதார இழப்பை வெளிக்கொணர வேண்டி மேல்முறையீடு செய்திருந்தேன். மேல்முறையீட்டிற்கும் எவ்வித பதிலும் கிடைக்கப்பெறவில்லை. அதன்பிறகு தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்து ஆணையத்தின் விசாரணைக்குப் பிறகு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்குனருக்கு ஆணையத்தின் உத்தரவுக்கு பிறகு விவரங்கள் கிடைக்கப்பெற்றது.
தமிழக முதல்வர் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் "வருவாய் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பொதுமக்கள் சுமார் 89 லட்சம் சான்றிதழ்கள் பெற்று பயனடைந்துள்ளார்கள்' என்று தெரிவித்தார் ஆனால் பொதுமக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட மனுக்களின் மூலம் அரசுக்கு கிடைத்த வருவாய் எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை. வருவாய்த் துறையில் சுய லாப நோக்கத்தோடு செயல்படும் ஒருசில அலுவலர்கள், மக்களிடம் பெறப்படும் தொகை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து, இனிவரும் காலங்களில் ஒரு சான்றிதழை நிராகரிக்கும் முன்பு முழு விசாரணை செய்து, கூடுதல் கவனம் செலுத்தி சான்றிதழ்கள் கிடைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்'' என்கின்றார் அவர்.
-நா.ஆதித்யா