Advertisment

ஏமாற்றப்பட்ட பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை! மோசடி புகாரில் சேலம் ராணி!

chinnapillai

துரை சின்னப்பிள்ளைக்கு அறிமுகம் தேவையில்லை. 2001-ல் மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விருது விழாவில், "ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார்' விருது வழங்கியபோது, அன்றைய பிரதமர் வாஜ்பாய், தன்னைவிட வயதில் இளையவரான சின்னப் பிள்ளையின் காலில் திடீரென்று விழுந்தார். ஆசி பெற்று விட்ட நெகிழ்ச்சியுடன் அந்த மேடையில் பேசிய போது ‘""மதுரை சின்னப்பிள்ளையின் வடிவத்தில் நான் சக்தியைப் பார்க்கிறேன்''’என்று பெருமிதப்பட் டார். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

Advertisment

chinnapillai

தேசமே திரும்பிப் பார்த்த சின்னப்பிள்ளை, எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதால், ‘""பத்மஸ்ரீ விருது பெறும் உங்களுக்கு பாராட்டு விழா நடத்து கிறோம்''’என்று அழைத்து, 2019 பிப்ரவரி 9-ஆம் தேதி, "ஏஸ் பவுண்டேஷன்' என்ற புதிய அமைப்பை, அவரது கையாலேயே குத்துவிளக்கு ஏற்றி தொடங்க வைத்து, படு விவரமாக ஏமாற்றியுள்ளனர். பின்னாளில், தனக்கு நேர்ந்ததை அறிந்த சின்னப்பிள்ளை, தனது தலைமையில் ‘களஞ் சியம்’ மகளிர் குழுவினரைத் திரட்டிக்கொண்டு, ஏஸ் பவுண்டேஷனின் தலைமை நிர்வாகி சிவராணி மீதான நூறு கோடி ரூபாய் மோசடி புகார் குறித்து விசாரணை நடத்தக்கோரி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்ற போது, அங்கு நடந்த லோக்கல் பாலிடிக்ஸால், கைதாக நேரிட்டது.

தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஏஸ் பவுண்டேஷனை நடத்திவரும் தலைமை நிர்வாகி சிவராணி ஒரு மோசடி பேர்வழியா? விசாரித்தறிய களமிறங்கினோம்.

Advertisment

chinnapillai

மதுரையில் உள்ள தானம் அறக்கட்டளை அலுவலகத்தில், களஞ்சிய இயக்க ஆலோசனைக்குழு தலைவி சின்னப்பிள்ளை, தானம் அறக்கட்டளை

துரை சின்னப்பிள்ளைக்கு அறிமுகம் தேவையில்லை. 2001-ல் மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விருது விழாவில், "ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார்' விருது வழங்கியபோது, அன்றைய பிரதமர் வாஜ்பாய், தன்னைவிட வயதில் இளையவரான சின்னப் பிள்ளையின் காலில் திடீரென்று விழுந்தார். ஆசி பெற்று விட்ட நெகிழ்ச்சியுடன் அந்த மேடையில் பேசிய போது ‘""மதுரை சின்னப்பிள்ளையின் வடிவத்தில் நான் சக்தியைப் பார்க்கிறேன்''’என்று பெருமிதப்பட் டார். இது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

Advertisment

chinnapillai

தேசமே திரும்பிப் பார்த்த சின்னப்பிள்ளை, எழுதப் படிக்கத் தெரியாதவர் என்பதால், ‘""பத்மஸ்ரீ விருது பெறும் உங்களுக்கு பாராட்டு விழா நடத்து கிறோம்''’என்று அழைத்து, 2019 பிப்ரவரி 9-ஆம் தேதி, "ஏஸ் பவுண்டேஷன்' என்ற புதிய அமைப்பை, அவரது கையாலேயே குத்துவிளக்கு ஏற்றி தொடங்க வைத்து, படு விவரமாக ஏமாற்றியுள்ளனர். பின்னாளில், தனக்கு நேர்ந்ததை அறிந்த சின்னப்பிள்ளை, தனது தலைமையில் ‘களஞ் சியம்’ மகளிர் குழுவினரைத் திரட்டிக்கொண்டு, ஏஸ் பவுண்டேஷனின் தலைமை நிர்வாகி சிவராணி மீதான நூறு கோடி ரூபாய் மோசடி புகார் குறித்து விசாரணை நடத்தக்கோரி, சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கச் சென்ற போது, அங்கு நடந்த லோக்கல் பாலிடிக்ஸால், கைதாக நேரிட்டது.

தன்னார்வத் தொண்டு நிறுவனமான ஏஸ் பவுண்டேஷனை நடத்திவரும் தலைமை நிர்வாகி சிவராணி ஒரு மோசடி பேர்வழியா? விசாரித்தறிய களமிறங்கினோம்.

Advertisment

chinnapillai

மதுரையில் உள்ள தானம் அறக்கட்டளை அலுவலகத்தில், களஞ்சிய இயக்க ஆலோசனைக்குழு தலைவி சின்னப்பிள்ளை, தானம் அறக்கட்டளை திட்ட தலைவர் சாந்தி மதுரேசன், சுகம் அறக் கட்டளை முதன்மை நிர்வாகி ராஜபாண்டியன், தலைவி ஒச்சம்மாள், பொருளாளர் அன்னபாக்கியம் போன்றோரை சந்தித்தோம். சுய நலமும், அதிகார எண்ணமும் மேலோங்கி, மக்களாட்சி தத்துவத்தைக் குலைக்கும் வகையில், அந்தப் பகுதி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவரும் சிவராணியின் மோசடி பக்கங்களைப் புரட்டினார்கள்.

""கடந்த 30 வருடங்களாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம், அசாம், ஒடிசா, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம் ஆகிய 14 மாநிலங்களில் 450 பணியாளர்களையும், 2500 மக்கள் பணியாளர்களையும், சமுதாயத்தில் நிலவும் வறுமையை ஒழிக்கும் சேவையில் ஈடுபடுத்தி, 158 களஞ்சிய வட்டாரங்களை உருவாக்கி, 11.12 லட்சம் களஞ்சிய மக்களோடு கைகோர்த்து செயல்படுகிறது, மதுரையில் உள்ள தானம் அறக்கட்டளை. 1999-ல் சேலம் மாவட்டத்தில், தனது சமுதாய வங்கித் திட்டத்தினை ஆரம்பித்த தானம் அறக்கட்டளையில், 2001-ல் இருந்து பணியாற் றத் தொடங்கிய சிவராணியால், சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளராக முடிந்தது. தனது 18 ஆண்டுகால அனுபவத்தை மட்டுமே வைத்து, தனியாக ஒரு தொண்டு நிறுவனத்தை அவர் ஆரம்பித்திருந்தால், ஒரு பிரச்சனையும் இருந்திருக்காது. அவரோ, சேலத்தில் தானம் அறக்கட்டளையின் ஒரு அங்கமாக இயங்கிவரும் களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுக்களில், 10 வட்டாரங்களைக் கையகப்படுத்தி, தனது புதிய அமைப்போடு சேர்த்துக்கொண்டார்.

சிவராணி தரப்பினர், ‘நாங்களும் களஞ்சியம்தான்’ என அனைத்து வட்டாரங்களுக்கும் உரிமை கொண்டாடுவது சட்டத்திற்குப் புறம்பா னது என்பதால், வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் உத்தரவு பிரகாரம், மதுரை மாநகர் மத்திய குற்றப் பிரிவு, சிவராணி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு (54/2020) பதிவு செய்துள்ளது. கோடிகளில் பணம் புரள்வதால் சிவராணி மீதான புகாரை சேலம் காவல்துறை கண்டு கொள்ளவே இல்லை. கோர்ட் மூலம் வழக்கு பதிவாகி மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. மதுரை மாநகர் மத்திய குற்றப் பிரிவு போலீசாரும், இந்த வழக்கில் ஆர்வம் காட்டாமலே இருக்கின்றனர். கைதாகி சிறையில் கம்பி எண்ண வேண்டிய சிவராணி, செல்வாக்கான ஒரு பின்புலத்தில் தப்பித்தபடியே இருக்கிறார்''’என புகார்தாரர் தரப்பு புலம்பியதை, அப்படியே மதுரை மாநகர் மத்திய குற்றப் பிரிவு சார்பு ஆய்வாளர் ராதா மகேஷிடம் ‘ரிபீட்’ செய்தோம்.

chinnapillai

""நீங்க எதுக்கு கேட்கிறீங்க?'' என்று முதலில் காவல்துறை பாணியில் குரலை உயர்த்தினார். பிறகு ""அதுவந்து சார்... மொதல்ல இது எங்க ஜூரிஸ்டிக் ஷனே கிடையாது. சேலத்தில் நடந்த குற்றங்களை விசாரிக்க வேண்டுமல்லவா? முதலில் விபரங்கள் கிடைக்கவில்லை. தற்போது விசாரித்துக்கொண்டி ருக்கிறோம்''’என்று சமாளித்தார்.

d

""சேமிப்பு வைப்புத் தொகையை பல்லவன் கிராம வங்கியில் வைத்திருக்கிறார். கடனை இந்தியன் வங்கியில் வாங்கியிருக்கிறார். ஏன் இந்த முரண்பாடு? சேமிப்பு கடன் விபரங்கள் தெளிவில்லாத வகையில் இருப்பதால், அந்தப் பகுதி மக்கள் மனஅழுத்தத்தில் உள்ளனர். தனிப்பட்ட பொருளாதார ஆதாயத்துக்காக, பச்சையம் மாள், சிவகாமி, கோவிந்தம்மாள், லோகேஸ்வரி போன்றோரை கூட்டு சேர்த்துக் கொண்டு, நம்பிக்கை மோசடி செய்து, அறக்கட்டளையை ஏமாற்றி, களஞ்சியத்தின் சுகம் மருத்துவமனை மூலதன நிதி ரூ.77 லட்சத்தை வேறு அறக்கட்டளைக்கு மாற்றியிருக்கிறார்''’என, தானம் அறக் கட்டளை தரப்பு அடுக்கடுக்காக சிவராணிமீது புகார் வாசித்தது.

ஏஸ் பவுண்டேஷன் தலைமை நிர்வாகி சிவராணியை தொடர்பு கொண்டோம். ““""சின்னப்பிள்ளை கூறுவதெல்லாம் பொய்யான புகார். தானம் அறக்கட்டளையிலும் கோடிகளில் மோசடி நடக்கிறது. ஆரம்பத்தில் தானம் அறக்கட்டளை நல்லவிதத்தில்தான் செயல்பட்டது. தற்போது, அதன் நடவடிக்கையில் நேர்மை இல்லை. நான் அப்பாவாகவும் ஆசானாகவும் மதித்த தானம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வாசிமலை, விதிமீறலாக பல காரியங்களைச் செய்து வருகிறார். அதனால் தான் வெளியேறினேன். புதிய அமைப்பொன்றை துவங்கினேன்''’என்று விளக்கம் அளித்தவரிடம், ‘""உங்கள் மீது பண மோசடி வழக்கு பதிவாகியிருக்கிறதே?''’என்று கேட்டபோது, “""நான் ஒன்றும் தலைமறைவாக வாழவில்லை. புகாரில் தொகையைக் குறைத்துச் சொல்லியிருக்கிறார்கள்''’என்று சிரித்தார்.

sநாம் தானம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வாசிமலையை தொடர்புகொண்டோம்.

""பிள்ளைகளைப் படிக்க வைப்பது, அவர்களின் திருமணக் கடமையை நிறைவேற்றுவது, கணவரின் தொழிலுக்கு பக்கபலமாக இருப்பது, கணவரை இழந்தபின் குடும்பப் பொறுப்பைச் சுமந்து முன்னேறிச் செல்வது என களஞ்சியம் சுய உதவிக்குழு பெண்கள் பன்முகத்தன்மை கொண்டவர்கள். தானம் அறக்கட்டளையின் நிறுவன நாளான அக்டோபர் 2-ஆம் தேதி, இதுவரை பதினான்கு மாநிலங்களில் 5 லட்சத்து 13 ஆயிரத்து 366 குடும்பங்கள், தாங்களாகவே முன்வந்து ‘நாங்கள் ஏழ்மையிலிருந்து விடுபட்டோம்..’ என்று சுயப்பிரகடனம் செய்துள்ளனர். தான் செய்த குற்றத்திலிருந்து தப்பிப்பதற்காக சிவராணி எதுவும் சொல்வார். உயரிய நோக்கத்தோடு செயல்படும் தானம் அறக்கட்டளை மீது சேறு வாரியிறைப்பது வேதனையளிக்கிறது'' என்றார்.

தொண்டு நிறுவனம் நடத்துபவரால் மக்களின் பணம் கொள்ளைபோவதும், அதுபற்றி வழக்குகள் பதிவாகியும் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கொடுமையல்லவா?

______________

""கணவர்கள் அடிக்கின்றனர்...''’ -பாதிக்கப்பட்ட பெண்கள் கதறல்!

ccசேலம் மண்டல களஞ்சியத்தினரான மல்லிகா, பூர்ணிமா, சாந்தி போன்றோர் “"நாங்கள் கூலிவேலை செய்து கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சிவராணி கும்பல் கொள்ளையடித்துவிட்டது. மக்களின் குழு பணத்தை சிவராணி தரப்பினர் மோசடியாகப் பயன்படுத்தி, சேலம் முள்ளுவாடி கேட் அருகில் ஒரு கட்டிடத்தை ரூ.5 கோடியே 5 லட்சத்துக் கும், வாழப்பாடியில் 75 சென்ட் நிலத்தை ரூ.1கோடிக்கும், அயோத்தியா பட்டணத்தில் ஒரு இடத்தை ரூ.50 லட்சத்துக்கும் வாங்கியிருக்கின்றனர். கிராமங்களில் வசிக்கும் படிப்பறிவில்லாத பாமர மக்களை ஏமாற்றியும், அடியாட்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள். வங்கியில் நாங்கள் செலுத்திய பணத்தை, சிவராணி தலைமையில் இயங்கும் கொள்ளைக்கூட்டம், மோசடி செய்து எடுத்துச்சென்றதால், கணவர்களிடம் அடிவாங்கி அவஸ்தைப்படுகிறோம். களஞ்சியம் கொள்கையில், வீட்டு பத்திரங்கள், நில பத்திரங்கள் வாங்கக்கூடாது. இந்த விதிகளையெல்லாம் மீறியிருக்கிறார் சிவராணி. அதனால், வங்கி மேலாளர்கள், "வீட்டை ஜப்தி செய்துவிடுவோம்' என்று மிரட்டுகிறார்கள். சிவராணியால் பாதிக்கப்பட்டதோடு, பயத்திலும் வாழ்கிறோம்''’என்றனர் பீதியோடு.

-சுப்பு

nkn230121
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe