த.வெ.க. பொதுக்குழுவில் த.வெ.க. - தி.மு.க.வுக்கும்தான் போட்டி என விஜய் பேசியதும், தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என அண்மையில் தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் 2ஆம் இடம் பிடித் திருப்பதும் பல விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

இதுதொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆலோசகர், அரசியல் விமர்சகர் பொன்ராஜை சந்தித்தோம்...

p

அடுத்த முதலமைச்சர் யார் என நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய் 2ஆம் இடம் பிடித்திருக் கிறாரே?

மக்களை சந்தித்து கருத்துக் கணிப்பு நடத்தினார்களா என்று தெரியாது. மக்கள் மனதை வெல்லவேண்டும். அதனை விட்டுவிட்டு, கருத்து உருவாக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்று கனவு காண்பது தவறு. “இவருக்கு செல்வாக்கு இருக்கோ' என்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்க நினைக்கிறார்கள். இது உண்மையான பிம்பம் கிடையாது. எம்.ஜி.ஆர். நாடகத் துறை, சினிமா துறையில் உழைத்து பாட்டுக்களை செதுக்கி, வசனங்களை செதுக்கி, பொதுவுடைமை மற்றும் திராவிட சித்தாந்தங் களை மக்களிடம் விதைத்து 40 வருடங்கள் உழைத்திருக்கிறார்.

Advertisment

விஜய்யும் சினிமாவில் இருந்துதானே வருகிறார்?

சினிமா இவர்களுக்கு பிழைப்பு. பணம் காய்க்கக் கூடிய மரம். எம்.ஜி. ஆருக்கு அப்படி கிடை யாது, தனது கருத்துக் களை விதைக்கக்கூடிய ஒரு கருவியாக பயன் படுத்தினார். விஜய் போன்ற நடிகர்கள் மக்களை நல்வழிப்படுத்த படம் எடுத்தார்களா? இவர்கள் ஆடிய ஆட்டமும், பாடிய பாட்டும், விதைத்த வன்முறை யும், போதை கலாச்சாரங்களும், துப்பாக்கி கலாச்சாரங் களும், ரவுடித்தன ஹீரோயிசமும் எப்படிப்பட்ட சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறது. இவர்கள் ஒரு ஊய்ற்ங்ழ்ற்ஹண்ய்ங்ழ்ள். இன்று சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான ஊய்ற்ங்ழ்ற்ஹண்ய்ங்ழ்ள் இருக்கிறார்கள். அவர்களை பின்தொடர்பவர்கள் ஏராளம். அத னால் அவர்கள் ஆட்சியை பிடித்து முதல்வராகி விட முடியுமா? தமிழ்நாட்டு மக்களை அவ்வளவு குறைவாக எடை போடுகிறீர்களா? கிராமங்களில் இருக்கும் டீக்கடை ஒரு அரசியல் வகுப்பறை. மாலைநேர பல்கலைக்கழகங்களாக தி.மு.க. மேடைகள் இருந்தன. அப்படி அறிவை வளர்த்தது தமிழ்நாடு.

நீங்கள் இப்படிச் சொல்றீங்க. ஆனால் இதுவரை சந்திக்காத தேர்தலாக 2026 இருக்கும் என்கிறாரே விஜய்?

Advertisment

விஜய் அரசியலுக்கு வருகிறார் என்றவுடன் மாற்று சிந்தனையோடு வரட்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் பொதுக்குழு பேச்சைப் பார்த்தால் எந்த சரக்கும் இல்லை. அர்த்தமற்ற, காரணம் இல்லாத வன்மம்தான் கொட்டிக் கிடக்கிறது.

மாநாடு தொடங்கி பொதுக்குழு வரை தடைகளாகவே இருக்கிறது என்கிறார்கள்...

இது ஒரு தடையா? எந்தக் கட்சியினர் போனாலும் போலீசார், காவல்துறையின் விதிமுறைகளை சொல்லத்தான் செய்வார்கள்.

“"என் கட்சித் தொண்டர்களை சந்திக்க எனக்கே தடையா?''’என ஆவேசமாக பேசினாரே?

தொண்டர்கள் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு பனையூரில் இருக்கீங்க. தொண்டர்கள் வீட்டு கல்யாணத்திற்கு போயிருக்கிறீர்களா? உங்க மாநாட்டுக்கு வந்து திரும்பிய தொண்டர்கள் இறந் தார்களே, அவர்களைப் பார்க்கச் சென்றீர்களா? மூன்றுநாள் கழித்து போட்டோ வைத்து அஞ்சலி செலுத்தினீர்கள். பரந்தூருக்கு போனீங்களே, ஏன் வேனை விட்டு கீழே இறங்கவில்லை? ஒரு போராட் டக்காரரையாவது சந்தித்துப் பேசினீர்களா? உங்க மேல தவறை வைத்துக்கொண்டு ஏன் ஆளும்கட்சி மீது குறை சொல்கிறீர்கள். மக்கள் என்ன விவரம் இல்லாதவர்களா? நீங்கள் சொல்வதைக் கேட்டு ஆமாம் சாமி போடுவதற்கு. ஒரு கட்சியின் தலைவன் பேசினால், மக்களைக் கவர வேண்டும். மக்களோடு மக்களாக கலந்துரையாடணும். உன் கட்சித் தொண்டர்களுடனேயே கலந்துரையாட வில்லை. கதறல் சத்தம் கேட்குது எனச் சொல்லிவிட்டு, இவர்தான் பொதுக்குழுவில் கதறியிருக்கிறார். எழுதி கொடுத்தவனாவது உருப்படியா எழுதிக் கொடுத்தானா?

மக்கள் ஆட்சி என சொல்லிவிட்டு மன்னர் ஆட்சிபோல் இருக்கிறது என்கிறாரே?

ஸ்டாலின் செயல் தலைவரானது எப்போது என்று தெரியுமா உனக்கு. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அருப்புக்கோட்டை அருகில் தோணுகால் என்ற எனது கிராமத்திற்கு ஸ்டாலின் சைக்கிள் பயணம் வந்தார். எங்கள் ஊரில் உள்ள டீக்கடையில் டீ குடித்ததை நான் பார்த்திருக்கிறேன். களத்தில் இறங்கி பணியாற்றியவர். மேயராக, எம்.எல்.ஏ.வாக, அமைச்சராக, துணை முதல்வராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து... அதற்குப் பிறகுதான் தி.மு.க. தலைவராகிறார்.

ஊழல் இல்லாத கட்சிகளே இல்லை. தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்து எத்தனை நாள் ஆனது? அதற்குள்ளாகவே கட்சிப் பதவிக்கு 4 லட்சம், 5 லட்சம் பணம் கேட்கிறார்கள் என்ற புகார் பொது வெளியில் வந்ததே. உங்கள் பொதுச்செயலாளர் மேலேயே புகார். அவர் இல்லை என்று மறுப்பார். நீங்களும் அதனை நம்பி போய்விடுவீர்கள்.

இது தலைமைக்கு தெரி யாமல் நடந்திருக்க வாய்ப்புள்ளது தானே. விஜய்யை எப்படி குறை சொல்ல முடியும்?

கட்சிப் பதவிக்கு பணம் கேட்கிறார்கள் என்று பொது வெளியில் யூடியூப் சேனலில் வந்து பரவியது. யார் பணம் கேட்டது என்று தொண்டர் களை அழைத்துப் பேசினீர்களா? புகாரைப் பெற்று, பணம் கேட்டவர்களை கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்தீர்களா? ஏன் எடுக்கவில்லை. நீங்கள் எப்படி ஊழலை ஒழிப்பீர்கள். நெய் வேலியில் படப்பிடிப்பில் இருந்த போது வருமான வரித்துறை வந்ததே, கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணம் அப்போது தோன்றியதா? உங்க பட புரமோஷனுக்காவும், கட்அவுட்டுக்கு பால் அபிஷே கம் நடத்தவும், விளம்பரம் செய்யவும், தியேட்டருக்கு ரசிகர்களை அழைத்து வரவும் உங்கள் பணத்தை செலவு செய்தீர்கள். இதனை வருமான வரித்துறையினரிடமே தெரிவித்திருக்கிறீர்கள். படம் ஓடுவதற்காக இப்படி பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

pp

எதை வைத்து மன்னர் ஆட்சி என்று சொல்கிறீர்கள். மக்கள் ஓட்டு போட்டுத்தானே முதல்வராகியிருக்கிறார் ஸ்டாலின். நீங்க எப்படி வந்தீங்க? உங்க அப்பாவை வைத்துதானே வந்தீர்கள்? உங்க அப்பா சினிமாவில் இல்லையென்றால் நீங்கள் யார்? ரஜினி, அஜீத் போல் வந்தீர்களா? மன்னர் ஆட்சி என சொல்ல வைத்தது யார்? ஆதவ் அர்ஜூன். அவர் யார்? சுரண்டல் லாட்டரி அதிபரின் மருமகன். நீங்கள் குறை சொல்லுகிற கட்சிகளுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவரின் மருமகனை மட்டும் ஏன் கட்சியில் சேர்த்துக்கொண் டீர்கள். உங்கள் கட்சிக்கும் ஆயிரம் கோடி ரூபாய் கொடுப்பார் என்று கட்சியில் சேர்த்துக்கொண் டீர்களா? உங்கள் கட்சியின் பொதுச்செயலாளர், எம்.எல்.ஏ. சீட் வேணுமா? இரண்டரைக் கோடி ரூபாய் இருக்கா எனக் கேட்டிருக்கிறாரே? சட்டமன்ற தேர்தலில் ரூ.30 லட்சம் செலவு செய்யலாம் எனத் தேர்தல் ஆணையம் சொல்லும்போது இரண்டரைக் கோடி ரூபாய் இருக்கிறதா எனக் கேட்டால், ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் உங்களை எப்படி நம்புவது?

தி.மு.க.வை எதிர்த்து பேசினால் பா.ஜ.க.வின் பி டீம் என்பதா என கேள்வி எழுப்புகிறார்களே?

தி.மு.க.வை எதிர்த்து என்ன பேசினீர்கள். எல்லோரும் பேசியதை பேசுவதற்கு எதற்கு விஜய்? தி.மு.க. நிர்வாகத்தை எதிர்ப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. ஒரு காரணத்தை தெளிவாகச் சொல்ல முடியுமா?

பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தி.மு.க. செய்துள்ளதாகச் சொல்கிறீர்கள். ஆனால் பெண்களால்தான் தி.மு.க. தோல்வியைச் சந்திக்கும் என்கிறார் விஜய்..

இப்படிப் பேசுங்க என்று மண்டபத்தில் யாராவது எழுதிக் கொடுத்திருப்பார்கள். பெண்களுக்கு உரிமைத் தொகை, பெண்கள் விடியல் பயணம், படிக்கும் மாணவிகளுக்கு உதவித் தொகை என செயல்படுத்திவிட்டது தி.மு.க. அரசு. ஜெயலலிதா தொடங்கிவைத்த அம்மா உணவகத்தை இன்றும் நடத்திவருகிறார் ஸ்டாலின். தாமிரபரணி -கருமேனியாறு -நம்பியாறு இணைப்புத் திட்டம் தி.மு.க. ஆட்சியில் வந்தது என்று ஜெயலலிதா நிறுத்தினார். ஸ்டாலின் முதல்வரானதும் அத்திக்கடவு -அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்தியிருக்கிறார். ஆட்சி செய்யக்கூடிய முதல்வர் பதவியில் இருப்பவர் தலைவருக்கான பண்புகளுடன் இருக்கணும். சந்திக்கும் முதல் தேர்தலிலேயே முதல்வராவேன் எனச் சொல்லும் விஜய் ஏன் நாலாந்தர பேச்சாளர்போல் பேசுகிறார்.

த.வெ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும்தான் போட்டி என்கிறாரே?

தேர்தல் வியூக வகுப்பாளர்கள் 3 பேரை வைத்துள்ளார். த.வெ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் தான் போட்டி எனப் பேசி முடிக்கும்போது சொல்லுங்கள் என எழுதிக் கொடுத்திருப்பார்கள். எப்படி செட் ஆகும்... இன்னும் நீ களத்துக்கே போகல.

அ.தி.மு.க.வை டச் பண்ணாமலேயே பேசுகிறாரே?

வந்தவன் போனவன் எல்லாம் அ.தி.மு.க. ஓட்டை பிரிக்கப் பார்க்கிறான். ஒரு பக்கம் பா.ஜ.க., இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். மூலமா சீமான், இந்த பக்கம் அ.தி.மு.க.வை டச் பண்ணாமலேயே "நான்தான் அடுத்த எம்.ஜி.ஆர்.' என்கிறார் விஜய். இது தெரியாமல் எடப்பாடி கனவில் மிதக்கிறார்.

அண்ணா, எம்.ஜி.ஆர்., விஜய் என்கிறாரே ஆதவ்அர்ஜுன்?

அண்ணாவுக்கு நிகரான ஒரு தலைவர் உண்டா? அந்த அண்ணாவை ஏற்றவர்கள்தான் கலைஞரும், எம்.ஜி.ஆரும். அண்ணா தனக்கான ஒரு பாதையை வகுத்தார். நீ என்ன செஞ்ச? ஆரம்ப காலங்களில் நீ நடித்த படமெல்லாம் கவர்ச்சியின் உச்சம். கடைசியில் போதையின் உச்சம். இப்படி நடித்துவிட்டு, கடைசியாக "ஜனநாயகன்' என்ற பெயரில் நடித்துவிட்டு லாட்டரியில் கொள்ளை யடித்த பணத்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஊழலற்ற ஆட்சியை கொடுப்போம் என்று சொன்னால் அதனை நம்ப தமிழ்நாட்டு மக்கள் என்ன இளிச்சவாயர்களா? உனக்காக போஸ்டர் ஒட்டிய ஒருவரை மேடையில் உட்கார வைத்தீர்களா? தனக்குத்தானே முதல்வர் என போஸ்டர் ஒட்டிய புஸ்ஸி ஆனந்தை மேடையில் உட்கார வைத்திருக்கிறீர்கள். தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கும் சிறுபான்மையின வாக்குகளை பிரிப்பதற்காகவும், எல்லா கட்சியிலும் உள்ள தனது ரசிகர்களை இழுப்பதற்காகவும் பா.ஜ.க.வால் இறக்கிவிடப்பட்ட நபர்தான் விஜய். இப்படித்தான் இவரது நடவடிக்கைகள் தெரிகிறது.

சந்திப்பு: -வே.ராஜவேல்