சாக்லேட்-ஆல்கஹால் கொடுத்து வசியம்! சிவசங்கர் பாபாவிடம் சிக்கிய மாணவிகளின் பகீர் வாக்குமூலம்!

ss

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இன்டர்நேஷ னல் பள்ளி, சாமியார் சிவசங்கர் பாபாவின் நிர்வாகத்தில் உள்ளது. இங்கு பாலியல் கொடுமைகள் நடப்பது பற்றி வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளது. இது குறித்து கடந்த இதழில் விரிவாக எழுதியிருந்தோம். இந்நிலையில், 20 ஆண்டுகளாக இத்தகைய கொடூரத்தை சிவசங்கர் பாபா செய்துவருவதையும், மாணவியர் பலர் பாதிக்கப்பட்டி ருப்பதையும் பற்றி சாமியாரிடம் சிக்கிய முன்னாள் மாணவிகளே பகீர் வாக்குமூலமாக வெளிப் படுத்தி வருகின்றனர்.

வாக்குமூலம்-1

"சுஷில்ஹரி இன்டர் நேஷனல் ரெசிடென்ஷியல் ஸ்கூலின் நிறுவனர் சிவசங்கர் பாபாவின் பாலியல் குற்றங்கள் கடந்த 20 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கின்றன. சின்னச்சின்ன மாணவிகளை இவர் தங்கியிருக்கும் இடத்துக்கு அழைத்து வந்து நிறைய சாக்லேட்டுகள், மதுபானப் பொருட்களை பரிசாக அள்ளிக்கொடுத்து அவர்களைத் தனது பாலியல் இச்சைக்கு உடன்படச் செய்ய தீவிர முயற்சியெடுப்பார்.

ssbaba

அவர்தான் லார்ட் கிருஷ்ணா என்றும், இந்த மாணவிகள்தான் கோபியர் பெண்கள் என்றும், இவ ரோடு செக்ஸ் வைத்துக்கொண்டால் தான் இந்த பிறவி முழுமையடையு மென்றும் மூளைச்சலவை செய்வார். அவருக்கு உடன்படவில்லையென்றால் அவரது நிர்வாகத்திலிருந்தும், அவரிடமிருந்தும் மிகக்கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி யிருக்கும். அதன்பின் அந்தப் பள்ளி யில் தாக்குப்பிடிப்பதே கடினமாகி விடும். பள்ளியை விட்டு பாதியி லேயே அனுப்பிவிடுவோமென்று மிரட்டுவார்கள். போர்டு எக்ஸாம் தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பாக, எக்ஸாம் எழுதக்கூடா தென்று மிரட்டுவார்கள். நடத்தை குறித்து மோசமாகப் பேசுவார்கள். யாரேனுமொரு பையனோடு தொடர்பு படுத்தி அசிங்கமாகப் பேசுவார்கள். இதேபோல பெற்றோரிடமும் சொல்லுவோமென்று மிரட்டுவார்கள்.

அந்த சின்ன வயதில், மாணவி களை வழிநடத்த வேண்டிய ஆசிரியைகளே மூளைச் சலவை செய்து, சிவசங்கர் பாபா வோடு செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டுமென்று தூண்டுவார்கள். அங்குள்ள அவரது பக்தர்களும்கூட சிவசங்கர்பாபா என்ன சொன்னாலும் அதைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டுமென்றே கூறுவார்கள்.

ss

உலகெங்குமுள்ள பாபாவின் பக்தர்கள், அவரைச் சந்திக்க வரும்போது விலையுயர்ந்த மது பானங்களை பரிசாக வழங்கு வார்கள். அவற்றையெல்லாம் மிஸ்யூஸ் பண்ணுவார். மாணவி களை வேண்டுமென்றே கட்டி யணைப்பது, இரட்டை அர்த்த ஜோக்குகளைப் பேசுவது, முத்தமிடுவது என இன்னும் வார்த்தையால் சொல்ல முடியாத மோசமான செயல்களையெல்லாம் செய்வார். இதைப் பல ஆண்டு களாகச் செய்து வருகிறார். இவரால் பாதிக்கப் பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்புவரைகூட இப்படி யான செயல்கள் நடந்துகொண்டிருந்தது எனக்குத் தெரியும். இப்போதுதான் இ

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி இன்டர்நேஷ னல் பள்ளி, சாமியார் சிவசங்கர் பாபாவின் நிர்வாகத்தில் உள்ளது. இங்கு பாலியல் கொடுமைகள் நடப்பது பற்றி வந்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளது. இது குறித்து கடந்த இதழில் விரிவாக எழுதியிருந்தோம். இந்நிலையில், 20 ஆண்டுகளாக இத்தகைய கொடூரத்தை சிவசங்கர் பாபா செய்துவருவதையும், மாணவியர் பலர் பாதிக்கப்பட்டி ருப்பதையும் பற்றி சாமியாரிடம் சிக்கிய முன்னாள் மாணவிகளே பகீர் வாக்குமூலமாக வெளிப் படுத்தி வருகின்றனர்.

வாக்குமூலம்-1

"சுஷில்ஹரி இன்டர் நேஷனல் ரெசிடென்ஷியல் ஸ்கூலின் நிறுவனர் சிவசங்கர் பாபாவின் பாலியல் குற்றங்கள் கடந்த 20 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கின்றன. சின்னச்சின்ன மாணவிகளை இவர் தங்கியிருக்கும் இடத்துக்கு அழைத்து வந்து நிறைய சாக்லேட்டுகள், மதுபானப் பொருட்களை பரிசாக அள்ளிக்கொடுத்து அவர்களைத் தனது பாலியல் இச்சைக்கு உடன்படச் செய்ய தீவிர முயற்சியெடுப்பார்.

ssbaba

அவர்தான் லார்ட் கிருஷ்ணா என்றும், இந்த மாணவிகள்தான் கோபியர் பெண்கள் என்றும், இவ ரோடு செக்ஸ் வைத்துக்கொண்டால் தான் இந்த பிறவி முழுமையடையு மென்றும் மூளைச்சலவை செய்வார். அவருக்கு உடன்படவில்லையென்றால் அவரது நிர்வாகத்திலிருந்தும், அவரிடமிருந்தும் மிகக்கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி யிருக்கும். அதன்பின் அந்தப் பள்ளி யில் தாக்குப்பிடிப்பதே கடினமாகி விடும். பள்ளியை விட்டு பாதியி லேயே அனுப்பிவிடுவோமென்று மிரட்டுவார்கள். போர்டு எக்ஸாம் தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பாக, எக்ஸாம் எழுதக்கூடா தென்று மிரட்டுவார்கள். நடத்தை குறித்து மோசமாகப் பேசுவார்கள். யாரேனுமொரு பையனோடு தொடர்பு படுத்தி அசிங்கமாகப் பேசுவார்கள். இதேபோல பெற்றோரிடமும் சொல்லுவோமென்று மிரட்டுவார்கள்.

அந்த சின்ன வயதில், மாணவி களை வழிநடத்த வேண்டிய ஆசிரியைகளே மூளைச் சலவை செய்து, சிவசங்கர் பாபா வோடு செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டுமென்று தூண்டுவார்கள். அங்குள்ள அவரது பக்தர்களும்கூட சிவசங்கர்பாபா என்ன சொன்னாலும் அதைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்ற வேண்டுமென்றே கூறுவார்கள்.

ss

உலகெங்குமுள்ள பாபாவின் பக்தர்கள், அவரைச் சந்திக்க வரும்போது விலையுயர்ந்த மது பானங்களை பரிசாக வழங்கு வார்கள். அவற்றையெல்லாம் மிஸ்யூஸ் பண்ணுவார். மாணவி களை வேண்டுமென்றே கட்டி யணைப்பது, இரட்டை அர்த்த ஜோக்குகளைப் பேசுவது, முத்தமிடுவது என இன்னும் வார்த்தையால் சொல்ல முடியாத மோசமான செயல்களையெல்லாம் செய்வார். இதைப் பல ஆண்டு களாகச் செய்து வருகிறார். இவரால் பாதிக்கப் பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்புவரைகூட இப்படி யான செயல்கள் நடந்துகொண்டிருந்தது எனக்குத் தெரியும். இப்போதுதான் இதுகுறித்த செய்திகள் நிறைய வெளியில் வரத்தொடங்கியுள்ளன.

இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென் றால், அப்பள்ளியைச் சேர்ந்தவர்கள் சிலர் அவரைப் பாதுகாக்கப் பார்க்கிறார்கள். அவர்களுக்கு மனசாட்சியே இல்லையா? அவர்களுக்கு குழந்தைகள் இல்லையா? அவரைப் பாதுகாப் பதற்காக சமூக வலைத் தளங்களில் அவருக்கு சாதகமாக எழுதுகிறார்கள். அந்தப் பள்ளியும், எங்கள் பள்ளியை வந்து பாருங்கள் என்று கூறுகிறார்கள். அந்தப் பள்ளியைச் சென்று பார்த்தால் அவ்ளோ அழகா இருக்கும். பச்சைப் பசுமை யாக இருக்கும். அந்த சுற்றுச் சூழல் மிகவும் அமைதியானது போல இருக்கும். மூலைக்கு மூலை கோவில் போன்றெல்லாம் வைத்திருப்பார்கள். இதையெல்லாம் வைத்துதான் இச்சமூகத்தையே ஏமாற்றுகிறார்கள். இது எதுவுமே உண்மை கிடையாது. ஆன்மீகம் என்பது அங்கே சுத்தமாகக் கிடையாது. ஆன்மீகம், கடவுள் என்ற பெயரில் நிறைய பெண்களின் வாழ்க்கையை அவர் சீரழித்துள்ளார். இது குறித்து பேசிய மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டார்கள்.

ssss

பெற்றோர்களே, இந்தப் பள்ளியில் உங்கள் பிள்ளைகளைச் சேர்த்திருந்தால் தயவுசெய்து அப்பள்ளியிலிருந்து மாற்றி டுங்க. இனிமேல் அந்த பள்ளி யில் சேர்க்க வேண்டாம். இப்பள்ளி முழுக்க பாதுகாப் பற்றது. இங்கே, வலுக்கட்டாய மாக செக்ஸ் வைக்கவும், குரூப் செக்ஸ் வைத்துக்கொள்ளவும் மூளைச்சலவை செய்வார். செக்ஸ் வீடியோக்களைப் பார்க்கவைத்து செக்ஸ் ஆசையைத் தூண்டுவார். செக்ஸ் டெஸ்ட் வைப்பார். இதெல்லாம் எந்த வகையில் ஆன்மிகம் என்று எனக்குப் புரியவில்லை. பள்ளிக்கூட வாழ்க்கை என்பது எவ்வளவு உன்னதமான ஒன்று. ஆனால் எங்களுடைய பள்ளி வாழ்க்கையையே அழித்துவிட்டார். எங்களைப்போல அடுத்த தலைமுறையும் இத்தகைய சூழலை எதிர்கொள்ளக்கூடாது.

பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளின் பள்ளியில் என்ன நடக்கிறது என்று கேளுங்கள். ஏனென்றால், அந்தப் பள்ளியில், பெற்றோரிடம் சொல்லக்கூடாதென்று மிரட்டி வைத்திருக்கிறார்கள். தயவுசெய்து அந்த பள்ளியில் உங்கள் குழந்தைகளைச் சேர்க்காதீர்கள். இந்தப் பள்ளியில் சில நல்ல ஆசிரியைகளும் இருக்கிறார்கள்தான். ஆனால் அவர்களை வைத்து பள்ளியைக் கணக்கிட வேண்டாம். அப்பள்ளியின் 10-வது, 12-வது வகுப்பு மதிப்பெண்களை வைத்தும் எந்த முடிவுக்கும் வர வேண்டாம். ஏனென்றால் இந்த மதிப்பெண் களுக்குப் பின்னாலும் பெரிய கதை இருக்கிறது. ஒழுக்க நெறிமுறை என்ற பெயரில் இந்தப் பள்ளியில் தவறான கருத்துக்களைத்தான் கற்றுத்தருகிறார்கள். தயவுசெய்து உங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்காதீங்க! இதில் ஏன் இவ்வளவு காலமாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலைன்னு எங்களைக் கேட்காதீங்க. இவர்களின் பல்வேறு டிராமாக்களைக் கடந்துதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை காதுகொடுத்து கேளுங்கள். அனைத்தும் முழுக்க முழுக்க உண்மை. அந்தப் பள்ளியின்மீது நடவடிக்கை எடுத்து, பள்ளியை மூடுங்கள். அந்தப் பள்ளிக்கூடம் நம் சமூக நலனுக்கேற்றது அல்ல.

வாக்குமூலம்-2

உங்கள் வீடியோவை பார்த்தேன். அதில் நிறையக் குற்றச்சாட்டுகள் உண்மையே. நான் அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர். இதுபோல எனக்கு நடந்தது. நானும் எனது குடும்பமும் அவரின் பக்தர்களாக இருந்தோம். நான் சில தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக அவரது ஆலோசனையைப் பெற அவரை பார்க்கச் சென்றிருந்தேன். அப்போது அவர் தனது ஓய்வறைக்கு என்னைக் கூப்பிட்டார். என்னை ஆறுதல் படுத்துவதாகக் கூறி, இனிமையாகப் பேசிய அவர், என்னை அருகில் அழைத்து அவர் மேல் சாய்த்துக்கொண்டார். திடீரென அவர் என் உதட்டில் முத்தமிட்டார். அவர் தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டிருக்கும் போதே, என் மார்பின் மீது ஏதோ நகர்வதாக உணர்ந்தேன். நான் நடுங்கிப் போய், என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்துப்போனேன். நான் இங்கு நடந்ததைக் கூறினாலும், பக்தியால் குருடாகிப் போயிருக்கிற எனது பெற்றோர் உட்பட அங்கிருக்கும் யாரும் இதனை நம்பப்போவதில்லை என உணர்ந்து, அங்கிருந்து அச்சத்தில் மௌனியாகவே வெளியேறிவிட்டேன். அந்தச் சம்பவத்தை நினைத்து நான் இன்றுவரை என்மீதே வெறுப் படைகிறேன். அவரின் செயல்கள் குறித்து வெளியே தெரிய ஆரம்பித்து, மக்கள் இவ்விவகாரத்தில் குரலெழுப்பத் துவங்கியுள்ளனர். இனி என்னால் நிம்மதியா உறங்க முடியுமென நினைக்கிறேன்.

ss

வாக்குமூலம்-3

நான் சுஷில்ஹரி பள்ளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர். நான் ஒரு dayscholarஎன்பதால், அப்போது இதுகுறித்து எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால், எதுவாக இருந் தாலும் அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை. அப்போது அவர் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் எடுத்து வந்தார். கடவுளின் பெயரால் நாங்கள் அவரை கட்டிப்பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அது எங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும்கூட, நாங்கள் அதனை செய்ய கட்டாயப்படுத்தப்பட் டோம். இந்த விஷயம் குறித்து யாரிடம் சென்று முறையிடுவது என்பதுகூட எங்களுக்கு அப்போது தெரியவில்லை. ஒருவேளை, இவற்றை வெளியே யாருடனாவது பகிர்ந்துகொண்டால் பள்ளியை விட்டு நீக்கிவிடுவார்களோ என்ற பயமும் இருந்தது. பெற்றோரும் அப்போது இதனைப் புரிந்துகொள் ளும் நிலையில் இல்லை.

என்ன நடந்தாலும், அவரது பெயருக்கு களங்கம் ஏற்படுவதை அவரது பக்தர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

நாங்கள் படித்தபோது சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அவ்வளவாக இல்லாததால், இதுபோன்றவர்கள் நடத்தும் பள்ளியில் படித்தால் ஆங்கிலம் உள் ளிட்டவற்றை நன்றாக கற்கலாம் என நாங்களும், எங்கள் பெற்றோரும் நினைத்தோம். எங்களுக்கு நடந்ததுபோல மீண்டும் யாருக்கும் நடக்கக்கூடாது.

இதில் உஹஹ் ள்ஸ்ரீட்ர்ப்ஹழ் பெண்களைவிட அதிகம் பாதிக்கப்படுவது, விடுதியில் இருக்கும் பெண்கள் தான். அதிலும் அழகாக இருப்பதாகச் சொல்லப் படும் பெண்கள். பள்ளிகள் அரசாங்க கட்டுப்பாட் டில் இருக்க வேண்டும். கடவுள் மீதான நம்பிக்கை யை மூலதனமாக வைத்து, இப்படிப்பட்டவர்கள் கல்வித்துறையையே நாசம் செய்கின்றனர். எங்களது அடையாளங்கள் ரகசியம் காக்கப்படும் என்ற தங்களின் உறுதியளிப்பால் எனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளேன். அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ட்விட்டரில் மறுப்பு தெரிவிப்பவர்கள் எல்லாம் அவரது பக்தர்கள் மட்டும்தான்.

வாக்குமூலம்-4

நான் அப்பள்ளியின் முன்னாள் மாணவர். உங்கள் வீடியோவை பார்த்த பிறகுதான் தைரியத்துடன் நான் குரல் கொடுக்க முடிவு செய்தேன். நான் அங்கு படிக்கும்போது, எனக்கும் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது. காலையில் 6 மணி முதல் 8 மணிவரை எங்களுக்கு ஸ்டடி டைம் இருக்கும். இதற்காக நாங்கள் அவரது ஓய்வறையை தாண்டித்தான் படிக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும்.

s

பொதுவாக நான் எனது நண்பர்களுடன் தான் படிக்கும் அறைக்கு செல்வேன். ஆனால், ஒருநாள் நான் வருவதற்கு தாமதமாகிவிட்டதால், என் நண்பர்கள் முன்கூட்டியே படிக்கும் அறைக்குச் சென்றுவிட்டனர். எனவே, நான் தனியாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். நான் அவரது ஓய்வறையை கடக்கும்போது, செய்தித்தாள் எடுப்பதற்காக வெளியே வந்த அவர், என்னைப் பார்த்துவிட்டு அவரது அறைக்கு அழைத்தார். அங்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து எனக்குத் தெரியாததால், நானும் அவருடன் சென்றேன். உள்ளே சென்றதும், திடீரென எனது கன்னங்களிலும், உதட்டிலும் அவர் முத்தமிடத் துவங்கினார். நான் அதிர்ந்துபோனேன்.

பின்னர் அவர் என்னிடம், பூஜை அறைக்குச் சென்று பூஜை செய்யச் சொன்னார். என்ன செய்வதென்று தெரியாத நான், அவரது படுக்கை யறை வாசலின் அருகே உள்ள பூஜை அறைக்குச் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு, அங்கிருந்து வெளியே நடந்தேன். உடனடியாக மீண்டும் என்னை அழைத்த அவர், "நான் உன்னைப் போகச் சொல்லவில்லையே'' என்று கூறினார்.

அவ்வாறு கூறிக்கொண்டே என்னை உள்ளே அழைத்துச் சென்ற அவர், கதவைப் பூட்டினார். மீண்டும் என்னை உதட்டில் முத்தமிட ஆரம்பித்தார். நான் நடுங்கிப்போனேன். அவர் என்னிடம் "சற்று அதிகமாகச் செல்லலாமா'' எனக் கேட்டார். அந்த நேரத்தில் அதன் பொருளை நான் அறிந்திருக்கவில்லை. எனவே நான் அதற்கு எதுவும் கூறவே இல்லை. அப்போது, "செல்லலாம், வேண்டாம், எனக்கு புரியவில்லை'' எனத் தேர்ந்தெடுக்கும் வகையில் மூன்று விரல்களை என்னை நோக்கி நீட்டினார். "எனக்குப் புரியவில்லை' என்ற விரலை நான் தொட்டேன். ஆண்டவன் அருளால், அன்று அவர் என்னை எதுவும் செய்யாமல் கதவுகளைத் திறந்துவிட்டுவிட்டார்.

அந்தநாள் என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு கொடுங்கனவைப் போல மாறிவிட்டது. ஒருவேளை அன்று அந் நாளில் வேறு மாதிரி எதாவது நடந்திருந்தால், எனது பள்ளி வாழ்க்கையே நரகமாக மாறியிருக்கும். எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே, அவரது பக்தர்கள் அவருக்கு ஆதரவளிப்பதுதான், என்னை இவ்விஷயத்தில் குரல்கொடுக்கத் தூண்டியது. இந்த விவகாரம் சரியான அரசு அதிகாரிகளுக்குச் சென்ற டைந்து, இளம் பெண்கள் பாதுகாக்கப்படும் வரை தொடர்ந்து குரல் கொடுப்போம்.

வாக்குமூலம்-5

நான் சுஷில்ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவன். பெண்களுக்கு எதிராக பல அநீதிகள் அங்கு நடைபெற்று வருகின்றன. பெண் பிள்ளைகளிடம் பாலியல் அத்துமீறல் செய்யும் ஒரு போக்கு அங்கு நீண்ட நெடிய காலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதற்கு ஆசிரி யர்களே உடன்பட்டு நிற்கின்றார்கள். அவர் பக்தர்களின் பிள்ளைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார். அதற்கு சில பெற்றோர்களும் உடந்தையாக நிற்கிறார்கள்.

நான் ஐந்தாம் வகுப்பு பயிலும்போது ஆசிரியர் ஒருவரே எனது தோழியிடம், "பாபா முத்தமிட்டாரா, கட்டிப் பிடித்தாரா?" என்று கேள்வி எழுப்பினார். இது அங்கு வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது ஒவ்வொரு மாணவிகளிடமும். இந்த எல்லாவற்றுக்கும் காரணம் சிவசங்கர் பாபாதான். அவர் வீட்டிலேயே பெண் பிள்ளைகளுக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. ஆசிரியருடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வது, கவர்ச்சிகரமான சொற் களால் மாணவியிடம் பேசுவது போன்ற பல செயல்கள் அங்கு நடை பெற்று வருகின்றன. முதலில் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். முதல்முதலாக இதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் பேசியதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்...

பத்மசேஷாத்ரி பள்ளி யைவிட ஒரு கேவலமான போக்கு இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுத்து, பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் இவரைக் கைது செய்யவேண்டும்.

வாக்குமூலம்-6

நான் சுஷில்ஹரி பள்ளியின் முன்னாள் மாணவர். உங்கள் காணொளியில் சொல்லியிருக்கக்கூடிய எல்லா விஷயங்களும் உண்மைதான். நானும் அந்தப் பள்ளியின் விடுதியில்தான் தங்கி படித்தேன். நான் எட்டாம் வகுப்பில் படிக்கும்போது, ஒருநாள் இரவு 9 மணியளவில் நான் இரவு உணவை முடித்து விட்டு பள்ளியில் நடந்து கொண்டிருந்தேன். அப்போது, அந்த பாபா ஒரு பெண்ணின் உடலைத் தொட்டுக்கொண்டிருந்தார். நான் அந்தப்பக்கம் சென்றதைப் பார்த்த பாபா, என்னைக் கூப்பிட்டு சாக்லேட் கொடுத்து, விடுதிக்குப் போகச்சொன்னார்.

"நான்தான் கடவுள்'' என்று சொல்லி இந்த மாதிரி பல பெண்களை நம்ப வைத்திருக்கிறார். இதற்கு அவர்களின் பெற்றோரும் ஒருவகையில் காரணம்.

-அரவிந்த்

nkn090621
இதையும் படியுங்கள்
Subscribe